ஃபோரெஸ்ட் மார்ட்டன் பேர்ட் என்பதுதான் அவரின் பெயர். 1921 ஜூன் 9-ல் பிறந்தார். அவரொரு விமானி. தனது தந்தையின் விருப்பத்தினால் 14-வது வயதிலேயே விமானம் ஓட்ட கற்றுக்கொண்டார். விமானம் ஓட்டுவதில் அதீத திறமையும் ஈடுபாடும் அவருக்கிருந்தது. அதனால் இவரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் விமான ஓட்டிகளுக்கும் விமானங்களுக்குமான தொழில் நுட்ப வல்லுனராக நியமித்தனர். இந்த வேலை மூலம் பேர்டுக்கு பல்வேறு விமானங்களை ஒட்டிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நவீன ரக விமானங்கள் சில மிக உயரத்தில் பறக்கும் விதமாக வடிவமைக்கப் பட்டிருந்தன. உயரம் செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறையும் என்பது இயற்கை நியதி. அதனடிப்படையில் இத்தகைய விமானங்களை இயக்கும் விமானிகள் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும் போது மூச்சு விடுதலில் சிரமமும், மூச்சுத் திணறலும் ஏற்படுவதாக கூறினார்கள். அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அவர் சிந்தனையில் உருவானதுதான் செயற்கை சுவாசக் கருவி.
அந்தக் கருவியை கண்டுபிடிப்பதற்கு முன் மனிதனின் சுவாச அமைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தார். விமானியாக இருந்து கொண்டு இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியாது என்பதால் தான் வகித்த மிக உயர்ந்த பதவியை துறந்து, மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவராக சேர்ந்தார்.
அதன்மூலம் மனித உடல் இயங்கும் முறையையும் அது சுவாசிக்கும் முறையையும் அப்படி சுவாசிக்க தேவையான வேதியல் பொருட்களையும் கற்றுக்கொண்டார். அதன் விளைவாக செயற்கை சுவாசக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு 'பேர்ட்' என்ற தனது பெயரையே வைத்தார். ஆனாலும் இந்தக் கருவியை சோதனை முறையாக பயன்படுத்திப் பார்க்க எந்த விமானியும் முன்வரவில்லை. அதனால் மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்ட செயற்கை சுவாசம் கொடுத்தால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என்ற நிலையிலுள்ள தீவிரமான நோயாளிகளுக்கு பயன்படுத்திப் பார்த்தார்கள். பரிசோதனை முயற்சியே பிரமாண்ட வெற்றி. முதல் சோதனையிலே ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மூச்சுத் திணறலால் உயிரை விட இருந்த பல நோயாளிகள் மீண்டும் வாழ்க்கை பெற்றார்கள்.
விமானிகளின் மூச்சுத்திணறலை சரிசெய்ய உருவாக்கப்பட்ட செயற்கை சுவாசக் கருவி உயிர் காக்கும் கருவியாக மாறியது. 1967-ல் 'பேர்ட் ஆக்சிஜன் பிரீத்திங் எக்யுப்மென்ட்' என்ற பெயரில் சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, தனது கருவியை சந்தைப் படுத்தினார். 1972 இல் பிறந்த உடனே மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துபோகும் குழந்தைகளின் உயிரைக்காக்கும் அளவிற்கு அவரது இயந்திரம் மேம்படுத்தப்பட்டது.
1980-களில் தொடர்ச்சியாக மேற்கொண்ட பல ஆய்வுகளின் விளைவாக மேம்படுத்தப்பட்ட 'நவீன வென்டிலேட்டர்' சாதனம் உருவாக்கப்பட்டது. இது செயற்கை சுவாசத்திற்கு மட்டுமல்லாமல், அசுத்த ரத்தத்தை சுத்திகரிக்கும் கருவியாகவும் பயன்பட்டது. மருத்துவ உலகில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்ட கருவிகளில் பேர்டின் வெண்டிலெட்டரும் ஒன்று.
மனிதர்களின் சுவாசப் பிரச்சனைக்கு தீர்வு கண்டதால் இவருக்கு 'செயற்கை சுவாசத்தின் தந்தை' என்று பட்டம் மருத்துவ துறையால் வழங்கப்பட்டது. மூன்று மனைவிகள் மற்றும் ஒரு மகளுடன் பிரமாதமாக வாழ்ந்த பேர்ட், தனது 94-வது வயதில் 2015 ஆகஸ்ட் 2-ல் மரணமடைந்தார்.
சிறந்த கருப்பொருள் கொண்ட
பதிலளிநீக்குஅறிவியல் பதிவு - இப்பதிவு
மாணவர்களுக்குச் சிறந்தது.
அறிவியல் வரலாறு
எல்லோரும் அறிந்திருப்பது நன்று
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்கு#மூன்று மனைவியுடன் பிரமாதமாக வாழ்ந்த பேர்ட் #
பதிலளிநீக்குஉங்களுக்கேன் இந்த பொறாமை ?பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிட்டு போகட்டுமே :)
புகழ், பணம், பெருமை, விருது என்று எல்லாமே வாழும்போதே ஒரு கண்டுபிடிப்பாலருக்கு கிடைப்பது கொஞ்சம் அபூர்வம். இவருக்கு எல்லாமே கிடைத்திருக்கிறது. அதைதான் பிரமாதம் என்று சொன்னேனே தவிர மூன்று மனைவிகளை அல்ல. அதுவொன்றும் பெரிய சாதனையும் இல்லை.
நீக்குவருகைக்கு நன்றி!
பேர்ட் கண்டுபிடித்த கருவியால் பலரின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டதில் மகிழ்ச்சி! சிறந்த பதிவு! நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே !
நீக்குஅரிய தகவல்தான் நண்பரே
பதிலளிநீக்குமூன்று மனைவிகள் இருந்தும் ஒரு மகள்தானா ?
த.ம.வ.போ
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குஅருமையான ஒரு கண்டுபிடிப்பு.. அதற்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் இம்மாமனிதர்.. பேர்ட் பற்றிய அரிய தகவல்களை அறியத் தந்த உங்களுக்கு மிகவும் நன்றி செந்தில்.
பதிலளிநீக்குமாமனிதர்தான். ராணுவத்தில் உயர் பதவியை அடைந்து, அதை துறந்து, அதன்பின் டாக்டருக்குப் படித்து, அதன்பின் கண்டுபிடிப்பாளரானது, அதிலும் பணம் சம்பாதித்து பெரும் புகழ் அடைந்தது என எல்லாமே சாதனைதான்.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!
எத்தனை பேருக்கு அவர் கண்டுபிடிப்பு பயன்படுகிறது...... நிச்சயம் சாதனை மனிதர் தான்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி!
நீக்குஉண்மையில் இவருக்கு ‘உயிர் காத்த உத்தமர்’ என்ற பட்டம் தரலாம். அருமையான தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான தகவல். எத்தனை பேருக்கு இன்று உதவிக் கொண்டிருக்கின்றது. அபாரமான சாதனை வெற்றி...
பதிலளிநீக்குகருத்துரையிடுக