மனிதன் ஏன் அடிக்கடி களைப்படைகிறான் என்பதற்கு ஜேன் பிராடி என்ற மருத்துவ அறிஞர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். கடுமையான உழைப்பினால் கரியமிலவாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவனை விரைவில் களைப்படையச் செய்கின்றன என்பதுதான் அது.
ஜலதோஷம், நீரிழிவு, புற்றுநோய் இவை சிறிது இருந்தாலும் அவை உடலை களைப்படையச் செய்துவிடும். உணர்ச்சி வசப்படுவதாலும் மனத்தளர்ச்சியினாலும், அதிகமான எதிர்பார்ப்புகளாலும் களைப்பு ஏற்படுவதுண்டு. அவசரமாக உண்பதாலோ, சரிவர உண்ணாமல் இருப்பதாலோ உடலில் சர்க்கரை சத்துக்குறைவு ஏற்பட்டு களைப்பு உண்டாகிறது. அதிகமான உடற்பயிற்சி குறைந்த உறக்கம் போன்றவையும் களைப்பின் காரணங்களாகும்.
மிகச் சமீபத்தில் மற்றொரு ஆச்சரியமான கண்டுபிடிப்பும் வெளிவந்துள்ளது. குறைப் பிரசவத்தில் அதாவது ஏழு, எட்டு மாதங்களில் பிறந்தவர்கள் வெகு எளிதில் களைப்படைந்து விடுகிறார்கள்.
அடிக்கடி களைப்பு, தொண்டைக் கமறல், கண் எரிச்சல், உடலில் சோர்வு, லேசான நடுக்கம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் எல்லாம் நம்மிடம் வந்து சேர்ந்து விட்ட அழையா விருந்தாளியான ஜலதோஷத்தைக் குறிக்கிறது. இந்த ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு எளிதாக பிற பெரிய நோய்களும் தாக்கக்கூடும்.
ஆகவே, இந்த தொல்லை தரும் ஜலதோஷத்தை தடுப்பது எப்படி? இதற்கு மிகச் சரியான மருந்து ஒருவகை அமிலம்தான். இதன் பெயர் 'அஸ்கார்பிக் அமிலம்' ஆகும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இந்த அமிலம் 60 மில்லி கிராமும், கருவுற்ற பெண்களுக்கு 80 மில்லி கிராமும், தாய்மார்களுக்கு 100 மில்லி கிராமும் தேவைப்படுகிறது. இந்த அளவு குறைந்தால் நோய்கள் மிக எளிதில் தொற்றிக்கொள்ளும். களைப்பும் ஏற்படும். இந்த அமிலத்திற்கு மற்றோரு பெயரும் உண்டு. அதன் பெயர் வைட்டமின் 'சி'. இது குறைந்தாலும் களைப்பு ஏற்படும். கோடைக்காலத்தில் மிக அதிக அளவில் களைப்பு ஏற்படும்.
அருமையான தகவல்
பதிலளிநீக்குகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
வருகைக்கு நன்றி நண்பரே! விரைவில் கருத்து மோதலில் பங்குகொள்கிறேன்.
நீக்குநல்ல தகவல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குநல்லபதிவு பயன் தரும்!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குகோடைக்காலத்தில் எலுமிச்சை பழ ரசம், அல்லது எந்த விட்டமின் சி பழ ரசம் எடுத்துக் கொள்வதும் நல்லது என்று சொல்லப்படுவதும் இதனால் தான். நமக்கு அயர்ன் சத்துக் குறைபாடு இருந்தாலும் களைப்பு தோன்றும். அனீமிக்காக இருத்தல். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள இரும்புச் சத்து உடலில் சேர வேண்டும் என்றால் இந்த விட்டமின் சி மிக மிகத் தேவை. இல்லை என்றால் களைப்பு, சோர்வு ஏற்படும். உடல் பரிசோதனைகள் எல்லாம் சரியாக இருந்தாலும் களைப்பு சோர்வு ஏற்படுவது மனச் சோர்வு ஏற்பட்டாலும் ஏற்படும் நீங்கள் சில்லியிருப்பது போல்...
பதிலளிநீக்குநல்ல தகவல்கள்.
வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி சகோ!
நீக்குதெரியாத தகவல்
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழத்துக்கள்
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அய்யா!
நீக்குகருத்துரையிடுக