1639-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஆக்ராதன் மொகலாயர்கள் ஆண்ட இந்தியாவிற்கு தலைநகராக இருந்தது. அப்போது மன்னராக இருந்த ஷாஜஹான் தலைநகரை மாற்ற முடிவெடுத்தார். ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றினார்.
மொகலாய மன்னர்கள் யாருக்கும் இல்லாத அளவுக்கு கற்பனை சக்தி படைத்த ஷாஜஹானுக்கு ஆக்ரா நகரம் பிடிக்கவில்லை. பெரிய அளவில் ஊர்வலம் செய்ய வசதியான அகலமான வீதிகள்கூட இல்லை என்பது ஷாஜஹான் அலுப்புடன் சொல்லும் வாக்கியம். ஆக்ரா கோட்டையும், அரண்மனையும் மன்னருக்கு சிறியதாக தெரிந்தன. இந்தியாவின் தலைநகராக இயங்க தகுதியான இடம் டெல்லிதான் என்று கருதினார்.
ஆக்ரா கோட்டை |
டெல்லியில் யமுனை நதிக்கரையில் ஒரு புத்தம் புது நகரை உருவாக்குங்கள் என்று ஆணையிட்டார். பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்களின் உழைப்பில் ஒன்பதே ஆண்டுகளில் கம்பீரமாக உயிர் பெற்று எழுந்தது 'ஷாஜஹானாபாத்'. இன்றைக்கு இதன் பெயர் பழைய டெல்லி.
ஷாஜஹான் புதிய தலைநகரம் அமைக்க தேர்தெடுத்த இடம் பிரம்மாண்டமான காட்டுப்பகுதி.1639 ஏப்ரல் 29-ந் தேதி நல்ல நாளாகப்பார்த்து பிரம்மாண்டமான நகருக்கான பூமிபூஜை போடப்பட்டது. உஸ்தாத்ஹீரா, உஸ்தாத்ஹமீத் என்று இரண்டு கட்டிடத் தொழிலாளர்கள் முதலில் மண்வெட்டியை உயர்த்தி நிலத்தை வெட்டினார்கள். இவர்கள் தங்கியிருந்த குடிசை இருந்த பகுதி பின்னாளில் பெரிய தெருக்களாக உருவாக்கப்பட்டது. அந்த தெருக்களுக்கு இந்த தொழிலாளர்களின் பெயரே வைக்கப்பட்டது. இன்றைக்கும் பழைய டெல்லியில் அந்த தெருக்களின் பெயர்கள் மாறாமல் இருப்பதை காணமுடியும்.
வேலை தொடங்கிய இரண்டு வாரத்தில் புதிய அரண்மனைக்கான அடிக்கல்லை நாட்டினார் ஷாஜஹான். அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தில் மரண தண்டனைபெற்ற குற்றவாளிகளின் தலைகள் சீவப்பட்டு உடல்கள் பள்ளத்தில் வீசப்பட்டன. பலியிடப்பட்ட மனித உடல்கள் மீது மளமளவென்று கட்டிடம் எழுந்தது. 124 ஏக்கர் பரப்பளவில் அரண்மனை உயர்ந்தது.
சாந்தினி சவுக் |
நகரின் பிரம்மாண்டமான கடைவீதியான 'சாந்தினி சவுக்' ஷாஜஹானின் மகள் ஜஹனாராவின் நேரடி பார்வையில் உருவானது. அன்றைக்கே அந்த தெருவில் 1,560 கடைகள் இருந்தன.
1648 ஏப்ரல் 19-ம் தேதி ஷாஜஹான் யமுனை ஆற்றில் பயணித்து, செங்கோட்டையின் பின் பகுதியில் அமைக்கபட்டிருந்த முழு வெள்ளியால் ஆன கதவைத் திறந்து அரண்மனைக்குள் பிரவேசித்தார். நகரம் முழுவதும் ஆரவாரம், வாணவேடிக்கைகள், உற்சாகம் என்று கரை புரண்டு ஓடியது. புதிய அரண்மனையில் சக்கரவர்த்தி குடிப்பெயர்ந்ததை பத்து நாட்கள் மிகப்பெரிய திருவிழாவாக மக்கள் கொண்டாடினார்கள். ஊர்வலம், நாடகம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் என்று (பழைய) டெல்லி நகரமே அல்லோலகலப்பட்டது. இப்படியாகத்தான் இந்தியாவின் புதிய தலைநகரம் பிறப்பெடுத்தது.
பழைய டெல்லி ஜிம்மா மசூதியிலிருந்து |
நல்ல தகவல்கள். இன்றைக்கும் பழைய தில்லியின் சில சுவடுகள் அங்கே உண்டு. பெரும்பாலான கடைகள் மாறி விட்டன என்றாலும் சாந்த்னி சௌக் கடை வீதிகள் இன்றைக்கும் பெரும்பாலானவர்கள் செல்லுமிடம்.
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஅறிய விடயம் அறிந்தேன் நண்பரே நன்றி
பதிலளிநீக்குத.ம. 2
மிக்க நன்றி நண்பரே!
நீக்குஅறியத் தந்தீர்கள்...
பதிலளிநீக்குஅருமை.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!
நீக்குபழைய டெல்லி கதையினை அறிந்தேன். புதிய அரண்மனைக்கான அடிக்கற்களாக குற்றவாளிகளின் தலைகள் சீவப்பட்ட மனிதத்தலைகள் என்பதையறியும்போது சற்றே வேதனையாகவும் இருந்தது.
பதிலளிநீக்குவேதனைதான் அய்யா! வருகைக்கு நன்றி!
நீக்குஅருமையான தகவல்கள்! மிக்க நன்றி பகிர்விற்கு. சமீபத்தில் குடும்பத்துடன் டெல்லி பயணம் சென்றிருந்த போது பல பழைய சுவடுகளைக் காண முடிந்தது.
பதிலளிநீக்குகீதா: சாந்தினி சவுக் நான் டெல்லி போனால் கண்டிப்பாகப் போகும் இடம். பழைய தில்லியின் மிச்ச சொச்சங்கள் இப்போதும் இருக்கிறது. சில இடங்கள் ஆஹா இது மொஹலாயர் காலமா என்று எண்ண வைக்கும் அளவிற்கு சில கோட்டைகள் இடங்கள் தில்லியில் இருக்கின்றன..என்ன... ஒவ்வொரு கோட்டையும் பார்க்கும் போதும் இதன் அடியில் எத்தனை மனிதத் தலைகள் வெட்டப்பட்டுப் புதைக்கப்பட்டதோ என்று தோன்றும்
பாரம்பரியம் மிக்க மிகப் பெரும் நகரம்தான் டெல்லி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே !
நீக்குடெல்லி உருவான கதை அருமை! சுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குகருத்துரையிடுக