• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

  எனது 300-வது பதிவு


  நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. பணி நேரம் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருந்த போதும், கிடைக்கும் நேரத்தில் பதிவுகளை எழுதி, உங்களை தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறேன். 299 பதிவு கடந்து போனதே தெரியவில்லை. இது 300-வது பதிவு. 

  இது பெரிய சாதனை இல்லைதான் என்றாலும், கிடைக்கும் குறைவான நேரம் இதை சாதனை போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நேரம் இல்லாத காரணத்தினாலே பல அனுபவங்கள், பயணக் கட்டுரைகள், வித்தியாசமான மனிதர்களின் பேட்டிகள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது.   

  நான் ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்திருக்கும் சில தகவல்களை மட்டுமே அவ்வப்போது பதிவிடுகிறேன். இந்த பதிவுகள் எனக்கு அத்தனை திருப்தி தரவில்லை என்றாலும் அய்யா ஜிஎம்பி சொன்னதுபோல் மூன்று நாட்களுக்கு மேல் நாம் வலைப்பக்கம் வரவில்லை என்றால் வலையுலகம் நம்மை மறந்துவிடும் என்ற இணைய இலக்கணத்திற்கேற்ப எனது இருப்பைக் காட்ட அவ்வப்போது பதிவிடுகிறேன். 


  பெரும்பாலும் பயணமே எனது நேரத்தை தின்றுவிடுவதால் நண்பர்களின் பதிவுகள் பலவற்றை மொபைலில் மட்டுமே வாசிக்கிறேன். அதிலுள்ள குறை என்னவென்றால் கருத்திட முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது கணினியில் வாசித்து கருத்திட்டாலும் தமிழ்மணம் தகராறு செய்வதால் பல பதிவுகளில் வாக்களிக்க முடிவதில்லை. இதனால் நண்பர்களுக்கும் எனக்குமான நட்பில் கொஞ்சம் இடைவெளி அதிகரித்தது போல் உணர்கிறேன். 

  என்னால் கருத்திட முடியாவிட்டாலும், வாக்களிக்க முடியாவிட்டாலும் இனிய நண்பர்கள் சிலர் அவற்றையெல்லாம் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துரைகளை தந்து, வாக்கும் அளித்து சிறப்பு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும், கருத்து தெரிவிக்காவிட்டாலும் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! 

  தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டி நிற்கும்..


  அன்பன் 

  எஸ்.பி.செந்தில் குமார்.  26 கருத்துகள்:

  1. மிகப்பெரிய சாதனைக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

   முன்னூறுமே ஒவ்வொன்றும் முத்தான சத்தான பதிவுகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  2. தாங்கள் ஊடகவியலாளர் என்பதால்
   தங்கள் பதிவுகளும்
   கனதியாக இருக்கக் காண்கின்றேன்...
   வலைப்பக்கம் வருவது குறைவு என்றாலும்
   செந்தில்குமாரின் கனதியான பதிவுகளை
   படிக்க வருவோர் குறையமாட்டார்கள்...
   உலகில் பலர்
   வலைப்பூ நடாத்திப் புகழ்பெற
   நம்ம தமிழாளுகள்
   முகநூலில் சுழியோடிப் பழகுவதால்
   சிலகாலம் வலைப்பக்கம் வருவது குறையலாம்...
   எத்தடை வரினும் அத்தனையும் கடந்து
   வலைப்பூவில் நிலைத்து வெல்லலாம்
   நண்ப, தொடருங்கள் - நானும்
   தங்களைத் தொடருவேன்...
   முந்நூறு என்ன
   முப்பதாயிரம் பதிவுகளும் இடலாம்
   தன்னம்பிக்கையுடன் தொடருங்கள்
   வாழ்த்துக்கள் ஐயா!
   அச்சு ஊடகங்களைப் போல - தாங்கள்
   வலை ஊடகங்கத்திலும் (வலைப்பூவிலும்)
   வெற்றிநடை போட வாழ்த்துகிறேன்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. 300 ஆவது பதிவிற்கு மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!

    நீக்கு
  4. மனமார்ந்த நல்வாழ்த்துகள் செந்தில். பதிவுகள் தொடரட்டும்....

   பதிலளிநீக்கு
  5. வலையுலகில் வலைய வலைய வந்து 300 ஆவது பதிவினைத் தொட்டு சாதனை நிகழ்த்திட்ட நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.
   தமிழ்மணத்தின் பதிவுகளை செல்போனில் படிப்பதில், நானும், உங்கள் நிலையில்தான் இருக்கிறேன். உடனுக்குடன் பின்னூட்டங்கள் எழுத முன்புபோல நேரம் இருப்பதில்லை. தமிழ்மணத்தில் ஓட்டு போடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. எனவே தமிழ்மணம் ஓட்டு எண்ணிகையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்போதும் போல எழுதுங்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  6. வாழ்த்துகள் செந்தில் ஜி
   மூவாயிரம் பதிவுகளை கடக்க முன் தேதியிட்ட வாழ்த்துகள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முன்தேதியிட்ட வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  7. வாழ்த்துகள். அரிய தகவல்களை அறியத் தருபவர் நீங்கள். தொடரட்டும்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  8. 300 விரைவில் 3000 த்தை தொட வாழ்த்துகள் நண்பரே
   த,ம, 7

   பதிலளிநீக்கு
  9. எண்ணிக்கை மட்டுமல்ல வாழ்த்த, ஒவ்வொரு பதிவும் அருமையானவை... பயனுள்ளவை.. வாழ்த்துக்கள் தொடர்க....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  10. தங்களின் பணிசுமைக்கு நடுவில் தொடர்ந்து எழுதிவருவதற்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் செந்தில்!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்