Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்

ஹாலிவுட் ஆகட்டும், பாலிவுட் ஆகட்டும், அங்கெல்லாம் புகழின் உச்சத்தில் இருக்கும் இரண்டு பெரும் நடிகர்கள் ஒரே சினிமாவில் சேர்ந்து நடிப்பது சாதாரண விஷயம். தமிழ் சினிமாவிற்கு மட்டும் இந்த கொடுப்பினை இல்லை போலும். இங்கிருக்கும் பெரிய நடிகர்கள் எப்போதும் துருவங்களாக விலகியே நிற்கிறார்கள். அவர்கள் இணைந்து நடிப்பதில்லை. 


அப்படி தமிழ் சினிமா உலகில் இருபெரும் ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'. இது 1954-ம் ஆண்டு வெளிவந்தது. மில் தொழிலாளர்களான இரண்டு இளைஞர்களை பற்றிய கதை இது. இருவரும் இணைபிரியாத நண்பர்கள். ஒரு இளைஞனின் காதலி சந்தர்ப்ப வசத்தால் நண்பனின் மனைவியாகிறாள். நண்பனின் மனைவி ஆன பின்னரும் தனது காதலியை அவன் மறக்கவில்லை. அவளை தொடர்ந்து காதலிப்பது மட்டுமின்றி அடையவும் துடிக்கிறான். அதெல்லாம் தெரியாத நண்பன் அவனை தன் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறான். அதனால் ஏற்படும் பிரச்சனைதான் படத்தின் கதை. 

படத்தில் அன்றைய தொழிலாளர்களின் நிலைமைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. புரட்சியான கருத்துக்கள் படம் நெடுக இருந்தது. ஒருகாட்சியில் குழந்தை அழும் பக்கத்து வீட்டுப் பெண் 'செல்வி, குழந்தை அழுகிறது. கொஞ்சம் பால் கொடேன்..!' என்று வரும். அதற்கு 'மாடுகூட தீனி போட்டால்தான் பால் கொடுக்குது..!' என்று பட்டினியால் வாடும் தனது நிலையை எடுத்துச் சொல்லியிருப்பாள் அந்த பெண்.

பொதுவாக தொழிலாளர்கள் பிரச்சனை, புரட்சிக் கருத்துக்கள் போன்றவற்றை அதிகமாக கொண்ட படங்கள் தோல்வி பட்டியலில்தான் இடம் பெறுகின்றன. அதற்கு 'கூண்டுக்கிளி'யும் விதிவிலக்கல்ல. அதுவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அதன் விநியோகஸ்தர் சோர்ந்துவிடவில்லை. காத்திருந்தார். 


பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இணைந்தார். சிவாஜி கணேசன் காங்கிரசில் இணைந்தார். இருவரும் சினிமாவிலும் அவரவர்கள் இணைந்த கட்சியிலும் பிரபலமாகிக்கொண்டே போனார்கள். 'கூண்டுக்கிளி'யை வாங்கி டப்பாவில் வைத்திருந்த விநியோகஸ்தருக்கு அது சிறந்த காலக்கட்டமாகப் பட்டது. மக்கள் திலகமும், நடிகர் திலகமும் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் என்று விளம்பரம் செய்தார், படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறை படம் வசூலை அள்ளியது. விண்ணைத் தொட்டது. காரணம் அப்போது இருவரும் இரு துருவங்களாக வெகு தொலைவில் விலகியிருந்தார்கள்.

விநியோகஸ்தரின் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. பிரச்சனைகள் எழுந்தன. இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேலம் அருகே இருந்த வாழப்பாடி என்ற ஊரில் இருந்த ராஜா தியேட்டரில் இரண்டு ரசிகர்களுக்கும் இடையே முதல் முறையாக மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டர்களில் எல்லாம் மோதல் வெடிக்க தொடங்கியது. 


தியேட்டர் சிலைடிலும், பேப்பர்களிலும் ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று பெருமளவு விளம்பரம் செய்யப்பட்டன. ஆனால், எந்தப் பலனும் இன்றி மோதல் மிகவும் முற்றியது. மீண்டும் படம் பெட்டிக்குள் முடங்கியது. அதன்பின் திரையிடப்படவில்லை. கூண்டுக்கிளி நிரந்தரமாக கூண்டில் அடைக்கப்பட்டுவிட்டது.

நீங்கள் விரும்பினால் கூண்டுக்குள் அடைந்த கூண்டுக்கிளியை இங்கே பார்க்கலாம்.

கூண்டுக்கிளி திரைப்படம்



33 கருத்துகள்

  1. இந்தப் படத்தை பற்றி வீட்டில் அம்மாவும் அப்பாவும் பேசிகொண்டிருந்தது நினைவில் இருக்கு ..
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் காலத்தில் இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் கூட நண்பர்களாக இருக்க மாட்டார்கள். அப்படி மோதிக்கொண்ட காலம். அதனால் இதுவொரு பெரிய நிச்சயமாகவே இருந்தது. அதனால் இதை பற்றி பேசுபவர்கள் அதிகம்.
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. கூண்டுக்கிளி படம் பற்றி இத்தனை விபரங்களும் இப்போது தான் தெரிந்து கொன்டேன். படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது!

    பதிலளிநீக்கு
  3. நான் சிறுவயதில் பார்த்த படம் ....நினைவலைகளை எழுப்பியது..

    பதிலளிநீக்கு
  4. கூண்டுக்கிளி என்று பெயர் வைத்ததால் இந்த நிலையோ :)

    பதிலளிநீக்கு
  5. அறியாத செய்திகளுடன்
    அப்படத்தினையும் விருந்தாய் படைத்துள்ளீர்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

      நீக்கு
  6. ஆம். இதை பற்றி படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

      நீக்கு
  7. ஆகா.. அரிதான திரைப்படம் பற்றிய அரிதான தகவல்களுடன் அப்படத்தையும் இணைத்துத் தந்த நண்பரே! பாராட்டுகளுடன் பிடியுங்கள் த.ம.6
    இப்படத்தில் வரும் -
    “ராத்திரி பூவாவுக்கே லாட்டர! - வாழ்க்கை
    லைட் எரிய பணம்தானே பேட்டரி?” எனும் பாடல் வரிகளை நான் மேடையில் எடுத்துப் பேசுவதுண்டு! நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ராத்திரி பூவாவுக்கே லாட்டரி - வாழ்க்கை
      லைட் எரிய பணம்தானே பேட்டரி?” - என்று (ர வை ரி யாகத் திருத்திக்கொள்ள வேண்டுகிறேன், தவறுக்கு மன்னிக்கவும்)

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !
      நீங்கள் சொல்லாமலே அந்த 'ர'வை 'ரி'யாக மாற்றிக்கொண்டோம்.
      வாக்குக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  8. பள்ளி நாள்களில் கூண்டுக்கிளி படம் பார்த்துள்ளேன். சிவாஜிகணேசனுக்கு எதிர்மறை கதாபாத்திரம் என்ற நினைவு எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் நினைவிருக்கிறது. பள்ளியில் படிக்கும்போது சிவாஜி கெட்டவருடா.. கூண்டுக்கிளில அப்படிதான் நடித்திருப்பார். எம்.ஜி.ஆர். எப்போதும் நல்லவர்தாண்டா.. எல்லா படத்துலயும் அவர் நல்லவராதான் வருவார். என்று சொல்வார்கள். திரை பிம்பத்தை நிஜம் என்று அப்படியே நம்பிய காலம் அது.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  9. இணைய முடியாத இரு துருவங்கள் அதிசயமாக இணைந்து நடித்த ஒரே படம். இனி எந்த இரண்டு நட்சத்திர நாயகர்கள் சேர்ந்து நடித்தாலும், கூண்டுக்கிளி போல வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தியமான வார்த்தை.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  10. பார்க்காத படம்...
    கேள்விப்படாத விஷயம்.....இருவரும் நடித்த படம் கூண்டுக்குள் கிளி என தெரியும்.
    தம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்காத படத்தை பார்த்துவிடுங்கள்.
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  11. இருவரும் இணைந்து நடித்த ஒரேபடம் என்பது மட்டும் தெரியும்! மற்ற தகவல்கள் புதியவை சுவாரஸ்யமானவை! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. ஆம் இதைப் பற்றி வாசித்திருக்கிறோம். மலையாளத்தில் கூட மோகன்லாலும் மம்முட்டியும் அடுத்த தலைமுறை கூட சேர்ந்து நடிக்கின்றார்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல்...இங்குதான்...இப்படி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

      நீக்கு
  13. கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.

    படம் பார்க்கும் அளவிற்குப் பொறுமை இல்லை!

    பதிலளிநீக்கு
  14. நான் பிறந்த ஆண்டு வெளிவந்துள்ளது. என் 20 வயதில் இப்படத்தை பழைய படங்கள் பார்க்கும் ஆர்வத்தில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !

      நீக்கு
  15. வெகு நாட்களாக பார்க்க நினைத்தப் படம்
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    படம் பற்றியப் பதிவு மிக மிகச் சிறப்பு
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா !

      நீக்கு
  16. எங்கள் குழுவின் ஒரு இயக்குனரின் படைப்பு
    https://m.youtube.com/watch?v=RBo9QJhQTkM
    Here is the link pls do watch and support us...give ur valuable
    comments....hope you I'll like it...share it.....thank you.....

    பதிலளிநீக்கு
  17. கூண்டுக்கிளி பற்றித் தெரியும்...
    இவ்வளவு பிரச்சினைகளா...?

    பதிலளிநீக்கு
  18. கேள்விப்பட்டதுண்டு.

    இரு பெரும் நடிகர்கள் நடிக்க மாட்டார்கள் என்பதல்ல நடிக்க வைக்க மாட்டார்கள் என்பதே உண்மை. இதில் பொருள் செலவு அதிகம்மட்டுமல்ல வருமானமும் பெருமளவில் பாதிக்கும் தயாரிப்பாளர்களுக்கு.

    பெரும் செலவில் இருபெரும் நடிகர்களை வைத்து எடுத்தாலும் ரசிகன் ஒரு முறைதான் பார்ப்பான் அதனால் ஒரு வருமானம்தான். அதையே இரண்டு படங்களாக எடுத்து வெளி இடும்போது ரசிகர்கள் இரண்டு படங்களையும் தனித்தனியாக பார்ப்பார்கள், வரவும் இரட்டிப்பாகும்.

    கூண்டுக்கிளி பார்த்ததில்லை உங்கள் பதிவு மூலம் விடுமுறை தினத்தன்று பார்க்க போகிறேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை