விமானம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் சுருங்கிவிட்டது. மனித வாழ்க்கையும் வேகமெடுத்தது. இந்த வேகம் போதாது என்று நாளுக்குநாள் மனிதனின் வேகம் கூட்டிக்கொண்டே போகிறது. சாலை வாகனங்களின் வேகமும் கூடுகிறது. ரயிலின் வேகமும் கூடிகிறது.
அந்த வகையில் விமானமும் தனது வேகத்தை கூட்டிக் கொண்டே போகிறது. ஒலியை விட வேகமாக பறக்கக்கூடிய விமானம் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக இருந்தது. அந்தக் கனவையும் நிறைவேற்றினான். ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய விமானத்தை கண்டுபிடித்தான். இந்த விமானத்தின் கூர்மையான கழுத்தைப் பார்க்கும்போது ஒரு கொக்கின் கழுத்தைப் பார்ப்பது போல் இருக்கும். அதன் பின்னே இரட்டை முக்கோண இறக்கை சிறப்பான வடிவமைப்புடன் இருக்கும்.
இந்த விமானங்கள் சாதாரண ஓடுதளங்களில் இறங்கி ஏற முடியாது. அதனால் அவைகள் இறங்குவதற்கும் ஏறுவதற்கும் சிறப்பான ஓடுதளங்களை அமைத்தார்கள். 1969-ல் முதன்முறையாக இந்த விமானம் பறக்கத் தொடங்கியது. 1976 முதல் பொது மக்கள் உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. அது ஒலியைவிட வேகமாக பறந்தது. மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் உலகத்தில் இதுவரை (போர்விமானங்கள் இல்லாமல்) பொது மக்கள் உபயோகத்தில் இருக்கும் எந்தவொரு வாகனமும் விமானமும் செல்லாத வேகத்தில் பறந்தது. அந்த விமானத்தின் பெயர் கான்கார்டு.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய கான்கார்ட் விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து நியூயார்க் சென்று சேர்ந்தது. இதற்கு எடுத்துக் கொண்ட நேரம் மிகக் குறைவு. சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 3 மணி 30 நிமிடத்தில் கடந்தது. கான்கார்ட் விமானத்தை முதன் முதலாக ஒட்டிய விமான பைலட் பிரையன் ட்ராப்ஷா, தரை இறங்கியவுடன் கூறிய முதல் வார்த்தை "இது சாதாரண விமானம் இல்லை. மந்திரவாதி கையில் உள்ள மாய விமானம்" என்றார். மற்ற விமானங்களை விட இது இருமடங்கு வேகமாக பறந்தது. பயண நேரம் பாதியாக குறைந்தது. மற்ற விமானங்கள் மணிக்கு அதிகபட்சமாக 700 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்க, கான்கார்ட் விமானங்கள் 2,170 கி.மீ. வேகத்தில் பறந்து அசரடித்தன.
அதேபோல் சாதாரண விமானங்களைவிட கான்கார்ட் விமானத்தின் பயணக் கட்டணம் பல மடங்கு கூடுதல். மற்ற விமானங்களில் ரூ.40,000 கட்டணம் என்றால், கான்கார்டில் அதே தொலைவு பறக்க பயணக்கட்டணம் ரூ.5 லட்சம். இருந்தாலும் கூட பரவாயில்லை என்று உலக பணக்காரர்கள் ஒருமுறையாவது இதில் பயணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்று துடித்தார்கள். இந்த விமானப் பயணம் தங்கள் அந்தஸ்த்தின் அடையாளமாக பார்த்தார்கள். இதில் பறப்பதற்கு போட்டிப்போட்டார்கள். மொத்தம் 20 கான்கார்ட் விமானங்கள் மட்டுமே இருந்தன. இவைகள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க் மற்றும் வாஷிங்க்டன் டிசி-யிலிருந்து லண்டன் மற்றும் பாரிஸுக்கு தினமும் பறந்து கொண்டிருந்தன.
இந்த விமானத்துக்கு கிடைத்த மிதமிஞ்சிய வரவேற்பைப் பார்த்து பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாடுகள் மலைத்துப் போயின. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து எப்படியாவது ஒரு 400 விமானங்களையாவது உலகம் முழுவதும் பறக்கவிட வேண்டும் என்று கனவு கண்டு களத்தில் இறங்க முடிவெடுத்தன.
ஏராளமாக எரிபொருளை இந்த விமானம் குடிப்பதும், அதிகமான பயணிகள் ஏறிச் செல்ல முடியாததும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும் இதன் குறைகளாக வெளிவரத் தொடங்கின. அதனால் இந்த விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று சிலர் வாதிடத் தொடங்கினர்.
இந்த நிலையில் கான்கார்ட் விமானம் பாரீஸில் ஒரு விபத்தில் சிக்கியது. இதுதான் சாக்கு என்று அதுவரை மந்தமாக இருந்த எதிர்ப்பு மிகவும் தீவிரமடைந்தது. கான்கார்டின் 27 ஆண்டு பயண சரித்திரத்திற்கு சமாதி கட்டியது. 2003, அக்டோபர் 24-ல் கான்கார்ட் தனது வான் பயணத்தை நிறுத்திக் கொண்டது. இப்போது அதை மீண்டும் பறக்க விடுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தங்களிடமிருந்து பறந்து வந்துள்ள செய்திகள் யாவும்
பதிலளிநீக்குஎங்களைப் பதற வைக்கின்றன.
பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அசத்த வைக்கும் தகவல்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குமீண்டும் வரட்டும் நானும் தயார் :)
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குவியப்பிற்குரய தகவல்கள் நண்பரே
பதிலளிநீக்குஎந்தப் பயணத்தில்தான்ஆபத்து இல்லை
கான்கார்டு விரைவில் தன் பயணத்தைத் தொடர்ட்டும்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குவியப்பளிக்கும் தகவல்கள் சார்...
பதிலளிநீக்குஅறிந்து கொண்டேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஆச்சர்யாக இருக்கிறது. பயணம் தொடரும் நாளை எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குவியப்பான தகவல்கள். எத்தனை வேகம் இதில்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஎப்படிக் கண்களிலிருந்து தப்பியது இப்பதிவு?!!அறிந்தவை என்றாலும் அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு.
பதிலளிநீக்குகீதா: இதனை நானும் மகனும் ஊசி மூக்கு ப்ளேன் என்றும் கிளிமூக்குப் ப்ளேன் என்றும் சொல்லுவதுண்டு!!!இதன் இறக்கை சற்று வித்தியாசமாக விரிந்து பெரிதாக இருப்பதால் வௌவால் ப்ளேன் என்றும் சிலசமயம் குறிப்பிடுவதுண்டு!!!
காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 380 மீட்டர். அப்படியானால் மணிக்கு 1368 கிமீ.இவ்விமானத்தின் வேகம் 2170 கிமீ. உன்மையில் வியப்புதான்!!!! பதிவுக்கு நன்றி!!
பதிலளிநீக்குஇந்த அதிசய அதிவேக விமானம் கடைசியாக தனது பயணத்தை முடித்துக்கொண்டு அதன் பிறப்பிடமான பிரிட்டனின் பிரதான நகரமான பிரிஸ்டலில் உள்ள பில்டன் தளத்திற்கு திரும்பும் முன்னர் பிரிஸ்டல் நகரின் பிரசித்திபெற்ற தொங்கு பாலத்தின் மீது பயணித்த காட்சியை நேரில் பார்த்து பரவசமடைந்த பல்லாயிர கணக்கான மக்களுள் நானும் ஒருவன் என்ற பெருமிதம் உள்ளது. தரை இறக்கப்பட்ட இந்த விமானத்தை பலமுறை கண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநினைவூட்டியமைக்கு நன்றி.
கோ
கருத்துரையிடுக