Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இனி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டலாம்


ரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அந்த கட்டடத்தின் மொத்த வலிமையையும் அந்த அஸ்திவாரத்தையே நம்பி இருக்கிறது. ஆனால், இனி அஸ்திவாரமெல்லாம் தேவையில்லை. அந்த செலவை மிச்சப்படுத்துங்கள் என்கிறார் ஒரு கட்டடக் கலைஞர். இந்த வீடுகள் அல்லது கட்டடங்கள் மற்றவற்றை விட பலமாக இருக்கும் என்கிறார் அவர். அவரின் பெயர் யூரி விளாசங் என்பது. 

இந்த முறையை பயன்படுத்தி ரஷ்யாவில் உள்ள 'நோவோசிபிரிஸ்க்' என்ற இடத்தில் குடியிருப்புகளை இவர் ஏற்படுத்தியுள்ளார். களிமண்ணும் மணலும் நிரம்பிய அந்த இடத்தில்16 மீட்டர் ஆழம் தோண்டினால் மட்டுமே அஸ்திவாரம் அமைக்க முடியும் என்று தீர்மானித்தார். ஆனால், 11 மீட்டருக்கு மேல் தோண்ட முடியவில்லை. கடும் பாறைதான் இதற்கு காரணம். 


இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் 16 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டாமல் மண்ணை அழுத்தி கடினமாக்குவதன் மூலம் கட்டடம் உருவாக்கலாம் என்கிறார் விளாசங்.  மேலும், கட்டடம் மண்ணை அழுத்தும் போது மண் உறுதியாக இருந்து கட்டடத்தை தாங்கும் என்று தெரிவித்தார். 

விளாசங் கண்டுபிடித்த இந்த முறைப்படி 12 அல்லது 14 டன் எடைக் கொண்ட இரும்பு சிலிண்டரை 'கிரேன்' மூலம் தூக்கி வேகமாக கீழே விட வேண்டும். அப்படி செய்யும்போது 3 மீட்டர் ஆழத்திற்கு குழி ஏற்படும். அந்தக் குழியை மண் கொண்டு நிரப்ப வேண்டும். பின் மீண்டும் அந்த இடத்தில் கிரேன் மூலம் சிலிண்டரை தூக்கி கீழே இறக்க வேண்டும். இப்படி மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதால் மண் இறுகிவிடும்.

இந்த அதி அழுத்த சக்தியால் மண்ணின் கீழ் பரப்பில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிடும். மண்ணுக்கு அடியில் உள்ள நீரே கட்டடங்கள் பலவீனம் அடைய காரணம். அதிக அழுத்தத்தின் காரணமாக நன்றாக இறுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டினால் அந்த மண் 300 டன் எடை கொண்ட வீட்டையும் தாங்கும் வலிமை பெற்றுவிடும். இதனால் இனி அஸ்திவாரத்திற்கு என்று அதிகமாக செலவு செய்யும் அவசியம் இருக்காது. வருங்காலத்தில் இப்படிப்பட்ட அஸ்திவாரம் இல்லாத வீடு அதிகமாக கட்டப்படும் என்கிறார் விளாசங். 

எப்படியோ வீடு பலமாகவும் நமக்கு செலவும் குறைந்தால் நல்லதுதான்.

நோவோஸிபிரிஸ்கில் உள்ள பழமையான தேவாலயம்



21 கருத்துகள்

  1. உண்மைதான். வீடு பலமாகவும், செலவு குறைவாகவும் இருந்தால் நலமே.

    பதிலளிநீக்கு
  2. அஸ்திவாரம் தோண்டாமல் வீடு என்பது அதிசயம்தான். படத்தில் உள்ள பழமையான தேவாலயமும் இதே முறையில்தான் கட்டப் பட்டதா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே, அந்த தேவாலயம் அந்த நகரத்தில் மிகப் பிரபலமான தேவாலயம் அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அது இந்த தொழில்நுட்பத்தில் கட்டப்படவில்லை. நல்ல அஸ்திவாரத்தோடு அமைக்கப்பட்டதுதான்.

      நீக்கு
  3. புதிய தகவல். பகிர்வுக்கு மிக்க நன்றி. நிலநடுக்கம் வரும் இடங்களுக்கும் இது பொருந்துமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருந்தும். ஆனாலும் இன்னும் போகவேண்டிய தொலைவு அதிகம் இருக்கிறது.
      வருகைக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு
  4. புதுத் தகவல்... வீடு பலமாக அமைந்தால் அஸ்திவாரம் தேவையில்லைதான்.

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் சொல்வது ஊரை அடித்து உலையில் போடுபவர்களுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கும்...நண்பரே.......

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவல். இருந்தாலும் அப்படிக் கட்டப்படும் கட்டிடங்களின் ஸ்திரத் தன்மை எப்படி இருக்கும் என்பது சந்தேகமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை பிரச்சனையில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
      தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  7. பில்டிங் ஸ்ட்ராங்,பேஸ்மென்ட் வீக் என்று சொல்லும் படி ஆகி விடக்கூடாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுத்திருந்து பார்ப்போம்.
      தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  8. புதுமையாக உள்ளது!நண்பரே! முயன்று பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  9. வணாக்கம் தோழர். இங்கு இதை சொல்வதற்காக மன்னிக்கவும். கட்டுரையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் தோழர்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை