ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ராபர்ட் ஸ்வான் என்ற ஆராய்ச்சியாளர். இவர் துருவப் பகுதியை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரை 'ஐஸ் மேன்' என்று சூழலியல் வல்லுநர்கள் அழைக்கிறார்கள்.
ராபர்ட் ஸ்வான் |
இவர் வாழ்வின் பெரும்பகுதியான நாளை மைனஸ் 73 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே கழித்திருக்கிறார். அந்த கடுமையான குளிர் கண்களில் உள்ள கண்ணீரைக் கூட பனிக்கட்டியாக மாற்றிவிடும் தன்மைக் கொண்டது. அதனால் கண்களால் எதையும் பார்க்கமுடியாது. பற்களில் கூட பிளவுகள் ஏற்பட்டுவிடும் என்று கூறுகிறார்.
விஞ்ஞானிகள் கூறுவதை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இரண்டு மீட்டர் கடல் மட்டம் உயர்ந்தால் கூட உலகில் உள்ள பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும். இது குறித்து நிறைய பிரச்சாரம் செய்து வருகிறார் ராபர்ட்.
இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.
மேலும் ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தான் இதற்கான முக்கிய காரணம். துருவ பகுதியில் இவர் நடந்துக் கொண்டு ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த போது, கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்க ஆரம்பித்தன அதற்கு காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை. அதன் வழியாக ஊடுருவிய சூரியக் கதிர்கள் தான் இந்த பாதிப்புக்கு காரணம்.
இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் தங்கியிருந்து, சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அப்போது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளது ஸ்வானின் ஆய்வுக்குழு.
உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே பெரும் காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.
சிந்திக்கவேண்டிய விடயம்!
ஆஹா உடனே சென்னை ஜோர்ஜ் கோட்டையை விற்று விட்டு தேவகோட்டையில் இடத்தை வாங்கி போடணுமே...
பதிலளிநீக்குத.ம.2
தேவகோட்டை முழுவதுமே உங்கள் சொத்துதானே, நீங்கள் வாங்குவதற்கு இன்னும் இடங்களை விட்டு வைத்திருக்கிறீர்களா ஜி?!
நீக்குவருகைக்கு நன்றி!
மனிதன் இயற்கையை அழிக்காமல் விடப்போவதில்லை..... படங்கள் அழகு.
பதிலளிநீக்குத.ம. +1
கண்டிப்பாக..!
நீக்குவருகைக்கு நன்றி ஜி!
பயமுறுத்தும் தகவல்கள். ஆனால் பேராசைக்கார மனிதன் என்னவோ திருந்தப் போவதில்லை.
பதிலளிநீக்குஉண்மைதான்..!
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
தம +1
பதிலளிநீக்குத ம வாக்குக்கும் நன்றி!
நீக்குராபர்ட் 'ஸ்வான்'வாத்தாக கத்தினாலும் நாடு திருந்தாது :)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குசென்னை மூழ்கிவிடும் என்பதை விடத் தங்கள் உயிரையும் உடல்நலத்தையும் எதிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் இப்படி உலகுக்காக ஆராய்ச்சி செய்யும் இராபர்ட்டு சுவானும் அவருடைய குழுவினரும்தாம் என்னை மிகவும் வியக்க வைக்கிறார்கள். இப்படி உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள். வாழும் கடவுள்களாக! வாழ்க சுவானும் குழுவினரும்! வெல்க அவர்தம் நோக்கம்!
பதிலளிநீக்குகண்டிப்பாக இவர்களின் பணி ஈடிணையில்லாதது.
நீக்குதங்களின் வருகைக்கும் அற்புதமான கருத்துக்கும் நன்றி நண்பரே!
அருமையான தகவல்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குஎன்ன ஒரு ஆராய்ச்சி நமக்கு எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி அந்தப் பனியிலும்! வியக்க வைக்கிறார் விஞ்ஞானி. ஆனால் மனிதன் இத்தனை அறிந்தாலும் திருந்துவான் என்று நினைக்கிறீர்களா.. நிச்சயமாக இல்லை. பேராசை....
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு!!
வியக்க வைத்த விஞ்ஞானிதான் அவர்!
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
கருத்துரையிடுக