புதிதாக திருமணமான மணப்பெண்கள் மிகச்சுலபமாக அந்த அவஸ்தையில் சிக்கிக்கொள்கிறார்கள். அதற்கு பெயர் கூட அப்படிதான் வைத்திருக்கிறார்கள். 'ஹனிமூன் சிஸ்டைடிஸ்' என்பதுதான் அதன் பெயர். கொஞ்சம் புரியும்படி சொல்வதென்றால் 'யூரினரி இன்பெக்க்ஷன்' எனலாம். இது புதுமணப் பெண்களுக்கும், நீண்ட கால இடைவெளிக்குப் பின் உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கும் ஏற்படுகிறது. அதிலும் அதிகம் பாதிக்கப்படுவது புதுப்பெண்கள்தான்.
ஏன் இப்படி? என்ற கேள்வியோடு மருத்துவர்களை அணுகினால் அவர்கள் ஏராளமான விளக்கம் கொடுக்கிறார்கள். நமது மண்ணை வளப்படுத்துவதற்காக மண்புழுக்கள் மற்றும் சில பாக்டீரியா போன்ற உயிரினங்களை இயற்கை உருவாக்கியிருப்பது போல், மனித உடலிலும் வாய், பிறப்புறுப்பு போன்ற சில இடங்களில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவைகள் ஒரு காவலாளியைப் போல நோய்க்கிருமிகள் உடலுக்குள் போய்விடாமல் பாதுகாக்கின்றன. தீமை செய்யும் பாக்டீரியாக்களை இவைகள் உள்ளே அனுமதிப்பதில்லை.
இப்படி தீமை செய்யும் பாக்டீரியாக்கள் ஆசனவாய் பகுதியில் குடியிருக்கின்றன. ஆசனவாய் பகுதியும் சிறுநீர் பாதை பகுதியும் பெண்களுக்கு மிக அருகில் இருக்கிறது. ஆணுறுப்பு மற்றும் கை விரல்கள் மூலம் இந்த பாக்டீரியாக்கள் இடம் மாறுகின்றன. பெண்ணுறுப்பு பாதைக்குள் நுழையும் தீமை பாக்டீரியாக்களை எதிர்த்து போராட அங்கே நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அதனால் அவற்றால் பாதிப்பு ஏற்படாது. ஆனால், பெண்ணின் சிறுநீர் பாதை அப்படியல்ல.
அங்கே தீமை செய்யும் பாக்டீரியாக்களை தடுக்க யாரும் இல்லை. அதனால், தீமை பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை வழியாக சுலபமாக நுழைந்து சிறுநீர்ப்பையை அடைகின்றன. அங்கு அவைகளுக்கு சாதகமான சூழல் இருப்பதில்லை. எனவே, அமிலம் போன்ற ஒன்றை தொடர்ந்து சுரக்கின்றன. இந்த அமிலம்தான் சிறுநீர் பாதையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதனைத்தான் 'நீர்க்கடுப்பு' என்கிறோம். இது எரிச்சல் மட்டுமல்லாமல் பல்வேறு பாதிப்புகளை பெண்ணுக்கு தருகிறது.
சரி, இந்த தேனிலவு அவஸ்தை ஆணுக்கு ஏற்படாத என்றால், ஏற்படும் மிக அபூர்வமாக..! அதற்கு காரணம் சிறுநீர் பாதையின் அமைப்புதான். பெண்ணின் சிறுநீர்ப்பாதை அதிகபட்சமாக 2 அங்குல நீளம்தான் இருக்கிறது. ஆணுக்கோ 10 அங்குல நீளம். இதனால் தீமை பாக்டீரியாக்கள் ஆணின் சிறுநீர்ப்பையை அடைவது இயலாத காரியமாகிவிடுகிறது. அதனால் ஆண் இந்த அவஸ்தையிலிருந்து தப்பி விடுகிறான்.
கருத்தடை மாத்திரை, ஜெல்லி, வேறு சில சாதனங்களை உபயோகிக்கும் பெண்களுக்கும் இந்த அவஸ்தை சுலபமாக தொற்றிக்கொள்ளும். இத்தகைய கருத்தடை சாதனங்களை உபயோகிக்கும்போது அவற்றுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை புரியும் பாக்டீரியாக்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா பாக்டீரியாக்களையும் அவை கொன்று .விடுகின்றன.
அதன்பின் தீமை பாக்டீரியாக்கள் அங்கு வரும்போது அதை விரட்டியடிக்க அங்கே நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதில்லை. எனவே கிருமிகள் சட்டென்று தொற்றிக்கொள்கின்றன.இதனால்தான் புதிதாக திருமணம் ஆன பெண்கள் அடிக்கடி இந்த அவஸ்தையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்த அவஸ்தையை எப்படி கண்டுபிடிப்பது? குளிர் ஜுரம், காய்ச்சலில் உடல் நடுங்கிக் கொண்டே இருப்பது, அடி வயிற்றில் வலி, முதுகுத்தண்டின் இரண்டு பக்கங்களிலும் வலியோடு கூடிய காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பால் மற்றும் கஞ்சி போன்று சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் ரத்தம் வருதல், சிறுநீரில் இருந்து அதிகமான துர்நாற்றம் வருதல் போன்ற எல்லாமே இந்த யூரினரி இன்பெக்க்ஷன் இருப்பதற்கான அறிகுறிகள்.
இந்த அவஸ்தை வராமல் தடுப்பதற்கு உடலுறவு முடிந்தவுடன் சிறுநீர் கழித்துவிட்டு பிறப்புறுப்பை சுத்தப்படுத்திவிடுவது ஒரு வழி. மற்றொன்று நிறைய நீர் அருந்துவது, காபி, டீ, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது போன்றவை 'ஹனிமூன் சிஸ்டைடிஸ்' வராமல் தடுக்கும். அதையும் மீறி வந்துவிட்டால் வேறுவழியில்லை டாக்டரை பார்த்துவிட வேண்டியதுதான்.
பொறுமைசாலிகளான பெண்களுக்குத்தான் இயற்கையிலேயே எத்தனை எத்தனை அவஸ்தைகள் வைக்கப்பட்டுள்ளன !
பதிலளிநீக்குஇதில் இந்தத் ‘தேனிலவு அவஸ்தை’யுமா !!
விழிப்புணர்வு அளிக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குநல்ல தகவல்கள். தம +1
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே !
நீக்குஅருமையான தகவல்கள் நண்பரே
பதிலளிநீக்குதம +1
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே !
நீக்குநல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே !
நீக்குபயனுள்ள அரிய தகவல்கள் நண்பரே நன்றி
பதிலளிநீக்குத.ம.6
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே !
நீக்குஎங்கிருந்துதான் இந்த அரிய தகவல்களைத் தேடிப்படிக்கிறீர்களோ....அந்தத் தேடலுக்கே பாராட்டவேண்டும்....பயனுள்ள தகவல்கள் ஒவ்வொரு பெண்ணும் படித்து அறிந்து கொள்ளவேண்டும்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !
நீக்குஇளவல் ஹரிஹரனின் வியப்புதான் எனக்கும்.
பதிலளிநீக்குஅருமை.
கோ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !
நீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குசிறந்த உளநல வழிகாட்டல்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !
நீக்குபெண்களுக்கு இயற்கையும் இப்படி சதி செய்கிறதே !
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே!
நீக்குநல்லதொரு பயன்மிக்க பதிவு. வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குகருத்துரையிடுக