• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, அக்டோபர் 15, 2016

  கார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..!


  கர்ப்புறங்களில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் எல்லாம் நைட்ரஜன் காற்று என்று தனிவகை காற்று வைத்திருப்பார்கள். கார்களின் டயர்களில் நிரப்புவதற்காக..! இந்த காற்று சாதாரண காற்றை விட சிறந்தது என்கிறார்கள். அப்படியென்னதான் இருக்கிறது நைட்ரஜன் காற்றில்..?


  நாம் வழக்கமாக நமது கார் டயர்களில் நிரப்பும் சாதாரண காற்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்டது. இந்த மூலக்கூறு மிகவும் சிறிய நுண்துகள்களை கொண்டது. வாகனம் வேகமாக போகும்போது டயர்கள் மிக வேகமாக வெப்பமடையும். அந்த வெப்பம் டயரைக் கடந்து அதனுள் இருக்கும் டியூப்பை அடையும்போது அங்கிருக்கும் காற்றும் வெப்பத்தால் விரிவடையும். இப்படி விரிவடையும் காற்று ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டும்போது டயர் வெடித்து போகும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்து ஆக்சிஜன் காற்று நிரப்புவதில் இருக்கிறது. 


  மேலும் ஆச்சிஜன் மிகவும் நுண்ணிய துகளாக இருப்பதால் டியூப்பில் இயல்பாக இருக்கும் நாம் அறிய முடியாத கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய துகள்கள் வழியாக மிக மிக மெதுவாக கணக்கிடமுடியாத அளவில் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். இதனால் காற்று அழுத்தம் குறையம். குறைவான காற்றோடு வாகனத்தை இயக்கும்போது இன்ஜினுக்கு கூடுதல் பளு ஏற்படும். எரிபொருள் செலவும் அதிகமாகும். 

  நைட்ரஜன் காற்றை நிரப்பும் போது இந்த குறைகள் எல்லாம் களையப்படுகின்றன. நைட்ரஜன் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும், 21 சதவீதம் ஆக்சிஜனும், கார்பன்-டை-ஆக்ஸைடு, நீர், நியான் மற்றும் ஆர்கான் வாயுக்கள் எல்லாம் சேர்ந்து 1 சதவீதம் இருக்கின்றன. நைட்ரஜன் அணுத்துகள் ஆக்சிஜனைவிட பெரியது என்பதால் இந்த பல நன்மைகள் கிடைக்கின்றன.

  துகள்களின் ஒப்பீடு
  நைட்ரஜனின் பெரிய துகள் டியூப்பில் இருக்கும் நுண்ணிய துளை வழியாக நுழைந்து வெளியேற முடியாது. இதனால் கார் டயர்களில் காற்று எப்போதும் இறங்காமல் இருக்கும். அப்படியே இறங்கினாலும் அது மிக மெதுவாக இருக்கும். அதனால் நைட்ரஜன் காற்று நிரப்பட்ட டயர்கள் கொண்ட வாகனங்கள் வெகுதொலைவுக்கு ஓடினாலும் சூடாவதில்லை. இதனால் டயர் வெடிக்கும் அபாயம் மிக மிகக் குறைவு. டயர்கள் வெப்பம் அடையாமல் இருப்பதால் அதன் ஆயுள் காலமும் கூடுகிறது. 

  ஆக்சிஜன் காற்றில் இருக்கும் மற்றொரு பாதகம் லேசான ஈரப்பதம். அது எப்போதும் டயரில் இருந்துகொண்டே இருக்கும். இந்த ஈரப்பதம் டயர்களின் ஓரத்தில் இருக்கும் இரும்புக் கம்பியை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும். நைட்ரஜனில் இத்தகைய ஈரப்பதம் இருப்பதில்லை. அதனால் இணைப்புக் கம்பி சேதமடையாமல் டயரின் ஆயுட்காலம் கூடுகிறது. 


  நைட்ரஜன் காற்று டயரில் குறையாமல் இருப்பதால் ஓட்டுநருக்கு நல்ல கட்டுப்பாடு கிடைக்கும். டயர் வெடித்தாலும் கூட ஆக்சிஜன் காற்றைப்போல நைட்ரஜன் காற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் ஓட்டுநருக்கு கூடுதல் நன்மை உண்டு.  

  நைட்ரஜன் நிரப்பட்ட டயர் பஞ்சர் ஆவதற்கு 50 சதவீத வாய்ப்பு குறைவு. எரிபொருளும் 5 முதல் 6 சதவீதம் மிச்சப்படுகிறது. அதனால் நைட்ரஜன் காற்று வாகனங்களுக்கு மிக மிக நல்லது. அதையே உங்கள் காருக்கு உபயோகப்படுத்துங்கள்.

  24 கருத்துகள்:

  1. இவ்வளவு நன்மை இருக்கா ?என் ,டூ வீலரிலும் நிரப்பிக் கொள்கிறேன் :)

   பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள விரிவான தகவல்கள். தங்களின் பதிவுகள் மூலம் ஏராளமான புதுப்புது விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  3. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  4. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  5. நல்ல - பயனுள்ள தகவல். இனி நைட்ரஜன் என்காருக்கு நைட்ரஜன் காற்றைக் கேட்டு வாங்கி அடைப்பேன். ஆமாம் இது இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்தானே? அந்த விவரங்கள் இன்னும் கூடுதலான பலனாகுமே?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலான பெட்ரோல் பம்புகளில் கார்களுக்கு மட்டுமே நைட்ரஜன் காற்றை தருகிறார்கள். இருசக்கர வாகனங்களுக்கு தருவதில்லை. சாதாரண காற்றைவிட நைட்ரஜன் காற்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  6. பயனுள்ள தகவல் நன்றி. டியுப் இல்லா டயருக்கும் இது பொருந்தும் தானே ?

   M. செய்யது
   Dubai

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ட்யூப் இல்லாத டயர்களுக்கு காற்று பயன்படுத்துவதாக இருந்தால் நைட்ரஜன் காற்றை பயன்படுத்துவது நல்லது.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  7. வணக்கம்.

   நைட்ரஜன் வாயுவினை அடைப்பதற்கான காரணம் இவ்வளவு விரிவாகத் தெரியவில்லை என்றாலும் இருசக்கர வாகனம் வாங்கி புதிதில் நிரப்பி இருக்கிறேன்.

   இதன் குறை என்னவென்றால், எல்லா இடங்களிலும் இவ்வசதி இருப்பதில்லை.

   இது ஏற்றப்பட்ட சக்கரங்களில் காற்று குறையும் போது சாதாரண காற்றை நிரப்ப முடிவதில்லை.

   அப்படி நிரப்ப வேண்டுமானால், நைட்ரஜன் காற்றை முழுமையாக வெளியேற்றிய வேண்டிவரும்.

   அதனால் பின்பு தவிர்த்தேன்.

   பயனுள்ள தகவல்கள்.

   தம

   நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீங்கள் கூறும் குறைகள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. நைட்ரஜன் காற்று ஏற்கனவே டயர்களில் இருக்கும்போது சாதாரண காற்றை ஏற்ற முடியாது. அப்படி ஏற்ற வேண்டுமானால் முழு நைட்ரஜன் காற்றை வெளியேற்றி அதன் பின் சாதாரண காற்றை நிரப்ப வேண்டும். அதுவொரு குறையே!
    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  8. மிகப்பயனுள்ள, இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. யோசனைக்கு நன்றி.

   பதிலளிநீக்கு
  9. நன்கு ஆராய்ந்து வெளியிடப்பட்ட பயனுள்ள பதிவு. இத்தகு பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி. வாய்ப்பு அமையும் போதெல்லாம் நானும் என் காருக்கு நைட்ரஜனையே பயன்படுத்துகிறேன். துபாயில் இது மிகவும் பிரபலம், டயரின் ஆயுட்காலமும் அதிகரிப்பதாக அறிந்தேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  10. The benefits of nitrogen are extremely small for normal cars. All we need is to have proper air. N2 is good for race cars, heavy equipment and planes where the frictional heat generated is very high. Very small advantage for Nitrogen in terms of corrosion over the life time but the cost outweigh the benefits. These days luxury cars come with air tire monitoring, just regularly maintain the pressure.
   Rajan

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  11. பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்