• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, அக்டோபர் 23, 2016

  பெண்களுக்கு பிடிக்காத காதலர்கள்..!


  காதலர்கள் எப்படி என்று காதலிகளிடம்தானே கேட்க முடியும்? அப்படிதான் உலகம் முழுக்க உள்ள 15,000 காதலிகளிடம் கேட்டது ஒரு ஆய்வு நிறுவனம். அவர்கள் சொன்ன கருத்தை வைத்து எந்த நாட்டுக் காதலர்கள் மிகச் சிறந்தவர்கள் என்று ஒரு பட்டியலிட்டிருக்கிறது.

  ஸ்பெயின் காதலர்கள்

  அதன்படி மிகச் சிறந்த காதலர்களைக் கொண்ட நாடுகளை பட்டியலிட்டார்கள். அதில் முதலிடம் பிடித்திருப்பது ஸ்பெயின். 
  1. ஸ்பெயின் 
  2. பிரேசில் 
  3. இத்தாலி 
  4. ஃபிரான்ஸ்
  5. அயர்லாந்து 
  6. தென் ஆப்பிரிக்கா 
  7. ஆஸ்திரேலியா 
  8. நியூசிலாந்து 
  9. டென்மார்க் 
  10.கனடா  
  என்று சிறந்த காதலர்கள் இருக்கும் நாடுகளை கூறுகிறார்கள். 

  'பெஸ்ட்' என்று ஒன்றிருந்தால் 'வொர்ஸ்ட்' என்று ஒன்று இருக்குமல்லவா..! அப்படி உலகில் மிக மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளையும் அந்த சர்வே பட்டியலிட்டிருக்கிறது. அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறது. 


  மோசமான காதலர்கள் பட்டியலில் இருக்கும் முதல் நாடு; 
  ஜெர்மனி
  ஜெர்மனியில் எப்போதும் குளிர் வாட்டியெடுக்கும். அதனால் அங்கு குளிப்பது என்பது அரிதாக நடக்கும் விஷயம். அதனால் ஏற்படும் துர்நாற்றம் எங்களை காதலர்களிடம் இருந்து விலகி நிற்க வைக்கிறது என்று வேதனைப்படுகிறார்கள் ஜெர்மனி காதலிகள்.

  இரண்டாவது இடத்தில் 
  இங்கிலாந்து 
  இங்கிலாந்து காதலர்களின் எதிரி சோம்பல்தான். படுக்கையில் ஒன்று கூடி பிரிவது ஏழு ஜென்மம் எடுத்த மாதிரி என்று ஏக்கத்தோடு சொல்கிறார்கள் இங்கிலாந்து காதலிகள். 

  மூன்றாவது இடத்தில் 
  ஸ்வீடன் 
  ஸ்வீடன் நாட்டு காதலர்கள் இங்கிலாந்து காதலர்களுக்கு நேரெதிர். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எல்லாமே அதிரடி வேகம்தான். என்ன நடந்தது என்று புரிந்து கொள்வதற்குள் அடுத்து ஒன்று நடந்து கொண்டிருக்கும் என்று வேதனைப் படுகிறார்கள். வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஸ்வீடன் காதலிகள்.

  நான்காவது இடத்தில் 
  ஹாலந்து 
  ஹாலந்து காதலர்கள் தங்கள் காதலிகள் மீது அளவற்ற ஆதிக்கம் செலுத்துகிறார்களாம். இந்த சர்வாதிகார மனப்பான்மை ஹாலந்து காதலிகளுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம். 


  ஐந்தாவது இடத்தில் 
  அமெரிக்கா 
  அமெரிக்க காதலர்கள் பலான படங்களை இணையத்தில் பார்த்துவிட்டு, அதே பாணியை காதலியிடமும் செயல்படுத்தி பார்க்க முனைவார்களாம். இந்த கொடுமையை தாங்க முடியாத காதலிகள் தங்கள் காதலர்களை கொடூரமானவர்கள் என்கிறார்கள். 

  ஆறாவது இடத்தில் 
  கிரீஸ் 
  கிரீஸ் காதலர்களுக்கு குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல்தான் இவர்களிடம் மாட்டிக்கொண்டு காதலிகள் படும்பாடு. 

  ஏழாவது இடத்தில் 
  வேல்ஸ் 
  வேல்ஸ் நாட்டுக் காதலர்கள் சுயநலவாதிகள். தன்னுடைய சுகபோகத்தை பற்றியே அதிகமாக நினைப்பதால் இவர்களை காதலிகளுக்கு பிடிப்பதில்லை. 

  எட்டாவது இடத்தில் 
  ஸ்காட்லாந்து 
  ஸ்காட்லாந்து காதலர்கள் அதிகமாக கத்தி பேசும் ரகம். அதனாலே இவர்களை நாகரிகம் இல்லாதவர்களாக உலகம் பார்க்கிறது. எதற்கெடுத்தாலும் கத்தி கூச்சல் போடும் காதலர்களை பெண்களுக்கு பிடிப்பதே இல்லையாம்.!

  ஒன்பதாவது இடத்தில் 
  துருக்கி 
  துருக்கி வெப்பமான நாடு. அதனால் வியர்வையும் அதிகம். இந்த அதிகப்படியான வியர்வையே காதலிகளை இவர்களிடம் இருந்து விலக்கி வைத்து விடுகிறது. 

  பத்தாவது இடத்தில் 
  ரஷ்யா 
  ரஷ்ய காதலர்களை மோசமானவர்களாக காதலிகள் சொல்வதற்கு காரணம், இவர்கள் உடல் முழுவதும் இருக்கும் அடர்த்தியான ரோமங்கள் தான். இப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. அதனால் ரஷ்ய காதலர்களை காதலிகளுக்கு பிடிப்பதில்லை. 

  சரி, அப்படியென்றால் இந்திய காதலர்களை என்ன சொல்வது? என்ற கேள்விக்கு, இந்திய காதலர்களை நல்லவர்கள் என்று கொண்டாடவும் முடியாது. மோசமானவர்கள் என்று தள்ளிவைக்கவும் முடியாது. அவர்கள் இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். அதனால்தான் மோசமான 10 நாடுகளிலும் இந்தியா இல்லை. சிறந்த 10 நாடுகளிலும் இல்லை. 


  கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபமும், காதலை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் காதலையும் வெளிப்படுத்தும் முழுமையான காதலர்களாக இந்திய ஆண்கள் இருக்கிறார்கள் என்று இந்திய காதலிகள் சான்றிதழ் கொடுக்கிறார்கள். 

  நல்ல விஷயம்தானே..!
  17 கருத்துகள்:

  1. இதிலும் ,இந்தியா இரண்டும்கெட்டான் தானா :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இரண்டும் கெட்டானாக இருந்தாலும் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்களே..! அதுவே நல்லது தான்..!

    நீக்கு
  2. அழகான ஆய்வு
   அன்பு தானே காதல் - அந்த
   அன்பைப் பரிமாறுவதற்கு
   இத்தனை சிக்கலா?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  4. இந்தியா நடுநிலையானது பெருமைப்படுவோம் ஆனால் இது தற்காலம்தான் மீண்டும் மாறலாம்.

   இதில் ஜெர்மனி முன்னிலை வகிப்பதை நான் ஆமோதிக்கின்றேன் காரணம் நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் ஜெர்மனியக் கட்டுரை அதில் இதைக் குறித்தும் எழுதி இருக்கிறேன் நல்ல ஆய்வுதான்
   த.ம.+

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  5. காதலிகள் எப்படி என்று காதலர்களிடம்கேட்டிருந்தால் அது... எப்படி இருக்குமாே...?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதுவும் நடந்திருக்கிறது. அது இன்னொரு பதிவில்..!
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  6. பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் அக்ருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  7. எது எதெற்கெல்லாம் ஆய்வு நடத்துவது என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை போலும். அடுத்து ‘ஆண்களுக்கு பிடிக்காத காதலிகள்’ என்ற ஆய்வை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  8. ஆஹா.... எல்லாவற்றிற்கும் கணக்கெடுப்பு. அதிலும் இந்தியர்கள் இரண்டிலும் இல்லை! :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  9. இளைய சமுதாயத்துக்கு ஏற்ற கருத்து

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்