மனிதர்கள் வாழ்வதற்கும் அவர்களின் வாரிசுகள் வாழ்வதற்கும்தான் பொதுவாக வீடுகளைக் கட்டுவார்கள். ஆனால், இங்குவொரு பெண் பேய்கள் வசதியாக வாழ்வதற்காக மிகப் பெரிய பிரமாண்டமான மாளிகையையே கட்டியிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் சாரா என்பது. கி.பி.1840-ல் அமெரிக்காவில் பிறந்தவர். 1862, செப்டெம்பர் 30-ல் வில்லியம் விர்ட் வின்செஸ்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சாரா பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். கணவரோ ராணுவத்திற்கு போர்க்கருவிகளை தயாரித்துக் கொடுக்கும் நிறுவனத்தை வைத்திருப்பவர்.
சாரட் வண்டியில் சாரா |
இந்த தம்பதிகளுக்கு 1866 ஜூன் 15-ல் அனி பார்டீ என்ற பெண் குழந்தை பிறந்தது. ஒரே மாதத்தில் அந்த குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது. அதன்பின் அவர்களுக்கு குழந்தை உருவாகவேயில்லை. அடுத்தடுத்து வீட்டில் துன்பமே சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் 1881-ல் அவரது கணவரும் இறந்து போனார். கணவரின் போர்க்கருவிகள் தயாரிக்கும் கம்பெனியின் வருமானமாக ஒரு நாளைக்கு 1,000 அமெரிக்க டாலர்கள் வருமானமாக அந்தக் காலத்திலேயே வந்து கொண்டிருந்தது.. இன்றைய கணக்கீட்டின் படி அது 25,000 அமெரிக்க டாலர்களுக்கு சமமானது. என்னதான் பணம் கோடி கோடியாக கொட்டினாலும் வீட்டில் நிம்மதி என்பது இல்லை. எப்போதும் வீட்டில் சோகமும் துன்பமுமே குடிகொண்டிருந்தது.
சாரா வின்செஸ்டர் |
இதற்கு என்ன காரணம் என்பதை அறிய ஒரு பாதிரியாரை சந்தித்து நடந்தவைகளை ஒன்று விடாமல் கூறினார் சாரா. அதைக் கேட்ட பாதிரியார், "உனது கணவர் தயாரித்த 'விண்செஸ்டர் துப்பாக்கி' மூலம் நாடுகளுக்கிடையே நடந்த பல்வேறு யுத்தகங்களில் ஏகப்பட்ட போர்வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் ஆவிகள் எல்லாம் உன் வீட்டில் இருக்கின்றன. அவர்கள்தான் உன் குடும்பத்தை நிம்மதியில்லாமல் செய்கிறார்கள். அவர்களை மகிழ்வித்தால் இந்த துன்பம் உன்னை விட்டு விலகும். அதற்கு நீ தொடர்ந்து வீடு கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஆவிகள் வந்துபோவதற்கு வசதியாக நிறைய கதவுகள் ஜன்னல்கள் வைக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் வீடு கட்டுவதை நிறுத்தவே கூடாது." என்றார்.
தற்போதைய சாரா வின்செஸ்டர் மாளிகை |
உடனே மேற்கு கலிபோர்னியாவில் இருந்த ஒரு பண்ணை வீட்டை விலைக்கு வாங்கி சாரா கட்டத்தொடங்கினார். அந்தப் பண்ணை 161 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அதில் 8 அறைகளைக் கொண்ட ஒரு சிறிய வீடு ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டை புதுப்பித்து அதனுடன் சேர்ந்து பல அறைகளைக் கட்டத்தொடங்கினார். 24 மணி நேரமும் வேலை நடந்தது வருடத்தின் 365 நாளும் மாளிகை வளர்ந்தது. 1922-ல் சாரா இறக்கும் வரை இந்த கட்டுமானம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட 38 வருடங்கள் தொடர்ந்து எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் கட்டப்பட்ட மாளிகை இதுவாகத்தான் இருக்கும். 1906-ம் ஆண்டில் பெரிய நிலநடுக்கம் ஒன்று இந்தப் பகுதியில் ஏற்பட்டது. அப்போது மட்டும் ஒருசில நாட்கள் கட்டுமானம் நின்றது. அதன்பின் மீண்டும் கட்டுமானம் தொடங்கியது.
1906-ம் ஆண்டு நிலநடுக்கத்திற்கு முன் இருந்த மாளிகை |
இந்த மாளிகையில் 160 அறைகள் இருக்கின்றன. 8 மாடிகள் கொண்ட இந்த மாளிகையில் மூன்று லிப்ட்டுகள் உள்ளன. சில அறைகள் மிகப் பெரியதாகவும். சில அறைகள் மிகச் சிறியதாகவும் இருக்கின்றன. 2 ஆயிரம் கதவுகளும் 10 ஆயிரம் ஜன்னல்களும் ஆவிகள் எளிதாக வந்து போவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆவிகளுக்கு மிகவும் பிடித்த எண்ணாக வெளிநாடுகளில் கருதப்படும் 13 என்ற எண்ணிக்கையில் நிறைய வடிவங்கள் உள்ளன. 13 கழிவறைகள், 13 குளியறைகள், 13 சாண்ட்லியர் விளக்குகள், ஒவ்வொரு ஜன்னல் கதவிலும் 13 வளைவுகள் கொண்ட டிசைன்கள் என்று எல்லாமே 13 மாயம்தான். மாடிப்படிகள் எங்கே போகிறதென்றே தெரியாது. சாளரங்கள் வெற்றுச் சுவரை நோக்கி இருந்தன. பல மைல்கள் நீளத்துக்கு ரகசியப் பாதாளப் பாதைகள், கூடங்கள். எல்லாம் எங்கு செல்கின்றன என்பதே தெரியவில்லை. சாரா கட்டடக்கலை வல்லுநர் கிடையாது. அவர் மனம் போனபோக்கில் இந்த மாளிகையை தொடர்ந்து கட்டியிருக்கிறார்.
மாளிகையின் உட்புறம் |
இன்று சாரா வின்செஸ்டர் மாளிகை ஒரு சுற்றுலாத் தலமாக செயல்படுகிறது. இந்த மாளிகையைப் பார்ப்பதற்காக உலகின் பலப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
சரி ,இந்த மசளிகையில் யாராவது ஆவியைப் பார்த்துள்ளார்களா:)
பதிலளிநீக்குநம்மை விட வெளிநாடுகளில் ஆவிகள் சம்பந்தமாக ஏராளமான கதைகள் உண்டு. இங்கு ஆவிகளை பார்த்ததாகவும் கதைகளுண்டு.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
ஆவி என்றவுடன் பயந்துவிட்டேன். ஆனால் செய்தியைப் படித்ததும் வித்தியாசமாக இருந்தது.
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா !
நீக்குஉலகெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் பல்வேறு நாட்டு ஆவிகளும், இங்கு விருப்பத்துடன் வந்து போவதற்குத் தகுந்தவாறு, சுற்றுலாத்தளமாக மாற்றியுள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்குவிசித்திரமான செய்திகளுடன் கூடிய இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குஅதிசய தகவல்தான் காரைக்குடியில் 1000 ஜன்னல் வீடு இருக்கின்றது நண்பரே
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஇவ்வளவு பெரிய மாளிகையின் உள்ளே சுற்றுலா பயணிகள் போனால் எளிதாக வெளியே வரமுடியுமா? தகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅதற்கான வழிகாட்டிகளும் வழிகாட்டல்களும் இருப்பதால் பிரச்சனை இல்லை.
நீக்குவருகைக்கு நன்றி அய்யா!
இனிய தீபாவளி வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குஆவிகளுக்கு மாளிகையா? மிகவும் புதுமையான தகவல். இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி செந்தில்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
நீக்குஎப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள்.... யாருமே தங்காத - ஆவிகளுக்கு மட்டும் என்றே உருவான வீடுகள்..
பதிலளிநீக்குவித்தியாசமான பெண்மணியாக இருந்திருக்கிறார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
நீக்குகருத்துரையிடுக