Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நாட்டு மாடுகளின் பாலே நல்லது


மிழ் மொழியை எப்படி நமது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி விட்டார்களோ.. அப்படியேதான் நமது பாரம்பரிய செல்வங்களான நாட்டு இன மாடுகளையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.  


பொதுவாக நமது நாட்டில் நாம் அருந்தும் பாலில் 60 சதவீதம் வரை ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி போன்ற பல இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் ஆகும். இந்த இறக்குமதி இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலில் நமக்கு ஒத்துக் கொள்ளாத சில அம்சங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று ஏ-1 பீட்டா-காஸெய்ன் என்ற புரதத் துணுக்கு. இது இயற்கையான, பாரம்பரிய மரபணுவைக் கொண்ட புரதத் துணுக்கு அல்ல. இது பிறழ்ந்த மரபணுவைக் கொண்டதாகும் .

இந்தப் பாலை தொடர்ந்து அருந்தும்போது நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்திலும் நாளமில்லா சுரப்பிகளிலும் நோய் தடுப்பு மண்டலத்திலும் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. அதனால் ரத்தக்குழாயில் படலம் படிதல், ரத்தக்குழாய் அடைப்பு, இதய நோய், மனச்சிதைவு, மதி இறுக்கம், முதல் நிலை வகை நீரிழிவு போன்ற நோய்களை உண்டுபண்ணுகிறது. 

காங்கேயம் காளை
மேலும் குழந்தை இறப்பையும் அத்துடன் மனித உடல் இயற்கையாகவே பெற்றுள்ள நோய் எதிர்ப்பு திறனில் குறைபாட்டையும் ஏற்படுத்துகின்றன. பசுவின் பாலுக்கு அமிர்தம் என்ற பெயருண்டு. அமிர்தத்திற்கு நஞ்சு போக்கும் பொருள் எனவும் அர்த்தமுமுண்டு. ஆனால் நாம் அமிர்தம் என்ற பெயரில் நஞ்சை அருந்துகின்றோம்.

பிரச்சினைக்குரிய இந்த ஏ-1 பிறழ்வு புரதம் இந்திய மண்ணுக்கே உரிய நாட்டு மாடுகளில் இருப்பதில்லை. மாறாக எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஏ-2 இணை மரபணு புரதம் மட்டுமே காணப்படுகின்றது.


எனவேதான் நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே அருந்த வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் சொல்லத்தொடங்கியுள்ளார்கள். அந்த மாடுகளுக்கும் ஹார்மோன் ஊசிகள், ஊக்க மருந்து ஊசிகள் எதுவும் போடாமல், மாட்டுத் தீவனங்களைத் தவிர்த்து, இயற்கையான உணவு அளித்து அதன் மூலம் கிடைக்கும் பாலே நல்ல ஆரோக்கியம் கொண்டது. 

இயற்கை உணவு என்பது நெல்லின் உமி, தவிடு, வைக்கோல், கோதுமையின் உமி, தவிடு, கோ-4 என்ற புல்வகை, வேலி மசாலா, சோளத்தட்டை, சோள மாவு, அகத்திக்கீரை, கடலைப் பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை பிண்ணாக்கு போன்றவைதான். இப்படி இயற்கையான நல்ல தீவனங்களை கொடுப்பதன் வழியாக மட்டுமே பாலின் தரத்தை மேம்படுத்த முடியும். 


இயற்கை முறையில் தயாராகும் பாலுக்கு விலையும் கூடுதலாக கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் ரூ.65-க்கும் மேல் விற்பனை ஆகிறது. நல்ல தரமான பொருட்களுக்கு மக்கள் கூடுதலான விலை கொடுக்க தயாராக இருப்பதால் விவசாயிகளுக்கும் நாட்டு மாடுகளை வளர்ப்பது லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. ஒரு சராசரி நாட்டு மாட்டின் விலை ரூ.35,000. உயர் ரக நாட்டு மாட்டின் விலை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை விலைக்கு கிடைக்கிறது. 

அதுமட்டுமல்லாமல், மாட்டின் சிறுநீர், சாணம் போன்றவை மருத்துவ குணம் கொண்டவை என்று அவற்றை காலகாலமாக பயன்படுத்தி வருகிறோம். இதிலும் கூட நாட்டு மாடுகளின் சாணமும் சிறுநீருமே சிறந்தது கலப்பின மாடுகளின் கழிவுகள் நல்லதல்ல என்கிறார்கள். 

இந்திய நாட்டு காளைகளின் படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை அழிக்கத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன. 

நாட்டு மாடுகளை வளர்த்து நம் பாரம்பரியத்தை காப்போம்!


21 கருத்துகள்

  1. பிரமிப்பான கூடவே கவலை அளிக்கும் விடயமும் தகவலுக்கு நன்றி நண்பரே....
    த.ம. + 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. சுத்தமான பால் போன்ற சுவையான தகவல்களாகக் கொடுத்துள்ளீர்கள்.

    சிலவற்றை நினைக்கவே மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.

    [கீழிருந்து இரண்டாம் பத்தியில், கடைசியிலிருந்து இரண்டாம் சொல்லான ‘காலத்தில்’ என்பது ’களத்தில்’ என இருந்தால் இன்னும் சரியாக இருக்குமோ என்னவோ.]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த தவறை அப்போதே நிறுத்திவிட்டேன் அய்யா!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. நல்ல தகவல்கள். நாட்டு முட்டை என்று முட்டையைத் தேநீர் டிகாக்ஷனில் முக்கி விற்பார்களாம். அது போல இதிலும் போலி இல்லாமல் இருக்கவேண்டும்!!
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு தெரிந்தவர்கள் வளர்க்கும் நாட்டு மாட்டில் இருந்து அவர்கள் முறையைப் பற்றி தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது. அப்படி கிடைப்பது அபூர்வம்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. வணக்கம்.

    கண்கெட்ட பிறகுதான் நமக்கு சூரிய நமஸ்காரம் பற்றி அறிவு வருகிறது.

    இல்லையா நண்பரே!

    அரிய தகவல்களுடன் எப்பொழுதும் போல அறிய வேண்டிய பதிவு.

    தொடர்கிறேன்

    த ம

    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தகவல்கள். எல்லாவற்றிலும் கலப்படம்... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பது புரிகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  7. நாம் சாப்பிடுவது தான் நஞ்சு என்றால், குடிப்பதிலும் நஞ்சா? அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது டாக்டர்கள் பாலை அருந்த வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் பால் அருமையான சத்துமிக்க பானம். இன்று அதுவே நஞ்சு.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. மிகவும் வேதனையான செய்தி. ஒவ்வொரு நிலையிலும் நாம் சுயத்தையும், மண்ணின் பெருமைகளையும், முக்கியத்துவத்தையும் இழந்துகொண்டுவருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நம் பாரம்பரியத்தை நாம் தொலைத்துக்கொண்டே இருக்கிறோம்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  9. நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே எனது மகனும் கால்நடை மருத்துவனாயிற்றே...ஆனால் நடை முறையில் நாட்டு மாடு வளர்ப்பவர்கள் இயற்கையான உணவைத் தருவது குறைவுதான். மட்டுமல்ல மாடு மேயும் இடங்களில் புல்லை விட சில வேண்டாதச் செடிகளும், நெகிழியும் இருக்கின்றன. பல நாட்டு மாடுகள் காகிதங்களையும் உண்கின்றன. நேரடியாவாகவே பார்த்ததுண்டு நெகிழிகள் கூட மாட்டின் வயிற்றில் இருந்ததாக என் மகன் சொல்லியதுண்டு.

    நம் பாரம்பரியம் தொலைகின்றதுதான்..நல்ல பதிவு சகோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று எல்லாமே கலப்படம்தான்.
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  10. நாட்டு பசும்பாலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. தற்பொழுது எல்லாமே மருந்து கலக்கப்பட்ட நஞ்சாக மாறக்கூடிய பால்தான் கிடைக்கிறது. அதையும் வேறு வழியின்றி குழந்தைகளுக்கு வாங்கி புகட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. நாட்டு மாடுகள் மீண்டும் நம் நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல தூய்மையான பால் கிடைக்கும். நல்லதொரு பயன்மிக்க பதிவு. வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை