முன்பை விட ஆணும், பெண்ணும் நெருங்கிப் பழகும் சூழல் தற்போது அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் பெண்கள் நம் அருகில் நிறைந்து இருக்கிறார்கள். எப்போதையும் விட இப்போது அவர்களிடம் சகஜமாக பழக முடிகிறது. பாலியல் சம்பந்தமாகக் கூட பாகுபாடில்லாமல் பேச முடிகிறது.
ஆனாலும், காதல் என்று வந்து விட்டால் இன்னமும் கூட தயக்கம் நம் தொண்டைக்குழியை அடைத்து நிற்கிறது. முந்தைய காலத்தில் நண்பர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தார்கள். காதல் என்றால் கதறியடித்து ஓடிவந்து உதவுவார்கள். இன்றைய நண்பர்கள் ஃபேஸ்புக்கிலும், வாட்சாப்பிலும் கடல் கடந்து தூரமாக இருக்கிறார்கள். அவர்களால் கமெண்டுகளும், லைக்குகளும் மட்டுமே போடமுடியும். நேரடியாக உதவ முடியாது.
அதனால் தான் முன்பு நண்பர்கள் செய்த வேலையை இன்று 'புரபோஸல் பிளானார்கள்' செய்கிறார்கள். நீங்கள் காதலில் விழுந்த கதையை அவர்களிடம் சொன்னால் போதும். காதலை தயக்கம் இல்லாமல் சொல்ல, அவர்கள் உங்களுக்காக யோசித்து, சரியான தருணத்தில், கச்சிதமாக காய் நகர்த்தி, சொல்ல வைப்பார்கள். இதற்காக சில ஆயிரங்களை சேவைக் கட்டணமாக பெற்றுக் கொள்வார்கள்.
'புரபோஸல் பிளானர்' என்பது மேல்நாட்டு கலாசாரம்தான். கண்ணை மூடிக்கொண்டு அவர்களின் கலாசாரத்தை பின்பற்றும் நம்மவர்கள் இப்போது இதையும் பின்பற்றுகிறார்கள். காதலைச் சொல்ல சரியான தருணத்தை உருவாக்கித் தருவது, பிரிந்த காதலர்களைச் சேர்த்து வைப்பது, காதலன் தன் காதலிக்கு வித்தியாசமான முறையில் திருமணத்தை 'புரபோஸ்' செய்ய வைப்பது போன்றவைதான் புரபோஸல் பிளானர்களின் வேலை.
இவர்கள் செய்வதெல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுக்கும். சர்பிரைஸ் ஏற்படுத்தும் அம்சங்களும், புத்தம் புதிய ஐடியாக்களும்தான். அதுமட்டுமல்லாமல் இந்த சர்பிரைஸ் நிகழ்வு எதுவும் காதலிக்கு தெரிந்து விடாமல் பாதுகாக்க செய்கிறார்கள். இவர்கள் ஒரு இயந்திரம் போல் தொடர்ந்து ஐடியாக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த திறமையெல்லாம் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஒரு புரபோஸல் பிளானாராக மாறலாம்.
ஒரு புரபோஸல் பிளானர் எப்படி செயல்படுகிறார் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவம் ஒரு உதாரணம்.
- அது அடுத்த பதிவில்
லூசுப்பயலுக அத்தை மகளை விரும்புறோம் இதை சொல்ல இன்னொரு மூணாம் மனுசன் எதுக்கு ? இதை சொல்ல முடியாதவன் எவளையுமே விரும்ப முடியாது இதுக்கு பணமா ? அவன் பக்குவமாக பேசி நகட்டிக்கொண்டு போய் விட்டால் இன்னொரு பிளானர்காரனை பிடிக்கணும் போலயே...
பதிலளிநீக்குஇலுப்பக்குடி இருளப்பன் ஒபாமா மகளை விரும்பினால் சேர்த்து வச்சுருவாங்களா...?
நானெல்லாம் இதுக்கு மூணாம் மனுசனை எதிர் பார்ப்பது இல்லை நண்பரே அபுதாபியில் பல அரபி பெண்களிடம் நேரடியாக சொல்லி (வாங்கி) கட்டியிருக்கினறேன்.
நண்பரே, இதெல்லாம் நமக்கில்லை. வீடு முழுக்க பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று இருப்பவர்களுக்குத்தான். தனக்காக மற்றவர்கள் வேலை செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு...
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
அட, சந்தானம், விவேக் வேலை!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி
நீக்குஇதற்கெல்லாம் கூடவா ‘சேவை’ செய்வோர் இருக்கிறார்கள்? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அந்த உண்மைச் சம்பவத்தை அறிய தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம், இன்றைக்கு எல்லா வேலைகளுக்கும் சேவையாளர்கள் வந்துவிட்டார்கள்.
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி அய்யா!
காதலைச் சொல்ல இதெல்லாம் வேண்டுமா? டிஜிட்டல் காதல்>>
பதிலளிநீக்குஐடியா கொடுப்பதோடு நின்றுவிட்டால் சரிதான்...
இப்படியும் மாறிவிட்டார்கள் எனப்துதான் உண்மை.
நீக்குகாதலுக்கும் தரகரா
பதிலளிநீக்குகோடிக் கணக்கில சீதனம் வேண்ட
கலியாணப் பேச்சில தான்
தரகர் 7% தரகென வருவரே!
வருகைக்கு நன்றி!
நீக்குக்கும்... இப்படியுமா....?!!!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி!
நீக்குஇது எனக்குத் தெரிந்த வட்டத்திலே நடக்கிறது. எல்லாம் கல்லூரி இளசுகள்தான். அதாவது இது இலவச ப்ரொப்போஷனல் ப்ளானர்!!!!
பதிலளிநீக்குநாம் கல்லூரி படிக்கும் காலத்தில் இது போன்று நம் நண்பர்கள் மத்தியில் அவர்கள் நண்பர்கள் கூட்டம் இருக்குமே தூது செல்ல என்று கடிதம் பரிமாற, டூ விட்டவர்களைச் சேர்த்து வைக்க, அவனோ அவளோ வருவதை நோட்டம் விட்டுச் சொல்ல என்று! தமிழ்ப்படங்களில் வராத நண்பேண்டா கூட்டமா என்ன??!!!!! அதுவே இப்போது ப்ரொஃபஷனல் ஆகியிருக்கிறது போலத்தான் தெரிகிறது..
என்னிடம் கூட சில இளசுகள் வந்து ஆலோசனை கேட்டது...எல்லாம் நாம தோழி போல பழகுவதால் ஹிஹிஹி....ஆனால் நான் அந்த இருவரிடமும் பேசி உண்மையான காதலா என்று அறிய முற்பட்ட போது அது சும்மா ஈர்ப்பு, டைம் பாஸ் போலத் தெரிந்ததால், அவர்களிடமே வெளிப்படையாகச் சொல்லி...அதற்கானக் காரணங்களையும் சொல்லி....இப்போது அப்பெண்ணிற்குக் கல்யாணமும் நடந்துவிட்டது!!! இதோ உண்மைச் சம்பவத்தை அறிய அடுத்த பதிவிற்கு....
கீதா
கருத்துரையிடுக