• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, நவம்பர் 25, 2016

  சனி வளையம் ஒரு புரியாத புதிர்


  சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் சனி கிரகம் ஆறாவதாக இருக்கிறது. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு முறை சூரியனை சுற்றி வர 29 ஆண்டுககளை எடுத்துக் கொள்கிறது. தன்னனைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி நேரம் ஆகிறது.


  சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனி கோளினுள் சரியாக 763 பூமிகளை உள்ளடக்கிவிடலாம். அவ்வளவு பெரியது. இருந்தாலும் சனியின் எடை பூமியை விட 95 மடங்கு தான் அதிகம். இதிலிருந்து சனி ஒரு பெரிய வாயுக் கோளம் என்பதையும், கடினமாய் இருக்கும் உட்பகுதி மிகச் சிறியது என்பதயும் ஓரளவு அறிந்து கொள்ளலாம். சனியின் சராசரி அடர்த்தி 0.71 எனக் குறைவாக இருக்கிறது.

  சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்குதான் அதிகம். பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் சனியில் 82 கிலோ இருப்பான். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சனியின் சராசரி வெப்பநிலை மிக மிகக்குறைவாகவே இருக்கிறது. சனியின் காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால் கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாய்க் காணப்படுகின்றது.


  பிறகோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் கோளின் நடுப்பகுதியை சுற்றி உள்ளது என்பதும் சனியின் சிறப்பாகும். சனியைப்பற்றிய பல புதிர்களில் அதன் வளையம் தான் மிக முக்கியமானது. வியாழனுக்கும், யுரேனசுக்கும் இது போன்ற வளையம் உள்ளது. ஆனாலும் சனிக்கு இருப்பதைப்போல குறிப்பிடும் படியாய் இல்லை.

  சனி வளையங்கள் பற்றிய உண்மைகளை 1981 'வாயேஜர்' விண்கலம் மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறியதும் பெரியதுமாய் சனியை துணைகோள்கள் போலச் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்கள் தோன்றுகின்றன என்பதும், அப்படி ஆயிரக்கணக்கான வளையங்கள் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.


  சனியின் துணைக்கோள் ஓன்று வெடித்துச் சிதறியதால் இந்த வளையங்கள் ஏற்படிருக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. சனிக்கு அருகில் உள்ள வளையங்கள் வட்ட வடிவமாகவும், தள்ளி உள்ளவை முட்டை வடிவமாகவும் காணப்படுகின்றன. சனி வளையத்தின் கட்டமைப்பை சீர்குலைக்காமல் கோடிக்கணக்கான  துகள்கள் எப்படி சீராக ஒரு குறிப்பிட்ட வளையத்தினுள் இயங்கி வருகின்றன என்பது இன்னும் கூட புரியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இதற்கும் விடை கொடுக்கும்.
  16 கருத்துகள்:

  1. சனி கிரஹத்தைப்பற்றி மிகவும் ஆச்சர்யமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
  2. எத்தனை எத்தனை தகவல்கள்..... பிரபஞ்சத்தில் இப்படி எத்தனை அதிசயங்கள்... செய்திகள் தொகுப்பு தொடரட்டும்.

   பதிலளிநீக்கு
  3. வியத்தகு தகவல்கள்! பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  4. நல்ல அற்புதமான தகவல்கள்!

   கீதா: அருமை சகோ! பல தகவல்கள் அறிந்திருந்தாலும் எழுதத் தெரியாமல், எழுத நினைக்கும் போது அதற்கான நேரம் இல்லாமல், ஏதோ நுனிப் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றேன்.!!!! தாங்கள் எழுதுவதைக் கண்டு மகிழ்ந்து வியக்கின்றேன். மிக அழகாக எழுதுகின்றீர்கள்! நல்ல பதிவு.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்