• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், நவம்பர் 08, 2016

  அன்று எழுதினேன்.. இன்று நடந்தது..!


  அழிக்கப்பட வேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுகள்   ந்த தலைப்பு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனாலும் உண்மை அதுதான். அழிக்கப்பட வேண்டிய நோட்டுக்களாகத்தான் 500 மற்றும் 1000 நோட்டுகள் இருக்கின்றன.

  ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க வேண்டுமா? அல்லது சீரழிக்க வேண்டுமா? வேறொன்றும் செய்ய வேண்டாம், கொஞ்சம் கள்ள நோட்டுக்களை அச்சடித்து மக்கள் மத்தியில் புழங்க விட்டால் போதும். அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு விடும். நிதிநிலை சரிந்து விடும்.

  அதனால்தான் பகை நாடுகள் எதிரி நாட்டின் கரன்சியை தங்கள் நாட்டில் அச்சடித்து விநியோகிக்கின்றன. அப்படிதான் பாகிஸ்தானில் இருந்து எராளமான 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இந்தியாவிற்குள் வருகின்றன.

  எப்போதும் ஒரு நாட்டின் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளே கள்ளப் பணமாக அச்சடிக்கப் படுகின்றன. இதற்கு காரணமும் இருக்கிறது. கள்ள நோட்டை ஒவ்வொரு முறை மாற்றும் போதும் அதில் நிறைய 'ரிஸ்க்' உள்ளது. 500 ரூபாய் என்றாலும் 50 ரூபாய் என்றாலும் ஒரே 'ரிஸ்க்'தான்.

  கீழேயுள்ள இணைப்பை சொடுக்கி முழுமையாக படிக்கவும்...

  அழிக்கப்பட வேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுகள்


  இந்தக் கட்டுரையை 2011-ல் 'தினத்தந்தி'யில் எழுதினேன். 5 வருடங்கள் கழித்து இன்று நிறைவேறியுள்ளது.


  36 கருத்துகள்:

  1. எப்படியோ நாட்டில் நல்லது நடந்தால் சரி. நாட்டின் பொருளாதாரம் காக்கப்பட்டால் சரி. இப்போதவது இதுபோன்ற அதிரடி நடவடிக்கை, திடீரென்று, அதுவும் இரவோடு இரவாக அமுலுக்கு வருவது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தீவிரவாதிகள் மூலம் ஏற்கனவே பரவவிடப்பட்ட கள்ள நோட்டுகள், கருப்பு பணமாக பதுக்கிவைக்கப்பட்ட பணம் போன்றவற்றால் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தீவிரவாதிகள் ஏராளமான கள்ள நோட்டுகளை இந்தியாவில் கலந்து விட்டதாக அதிகாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  2. நீங்க அன்று எழுதியது இன்று நடந்துவிட்டது. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்களிடம் உள்ள பெரிய நோட்டான 500 யூரோ நோட்டை 2018 ஆண்டுடன் ஒழித்துவிட முடிவு செய்துள்ளார்களாம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆனால் இந்தியாவில் இனி புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 ரூ.2000 நோட்டுக்களை அரசு கொடுக்க போகிறதாமே!

    நீக்கு
   2. கொடுத்தாலும் இப்போது இருக்கும் கருப்பு பணத்திற்கு இதுவொரு பெரிய அடித்தான். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் மேன்மையடையும்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  3. உங்கள் பழைய பதிவினைப் படித்து இருக்கிறேன்.

   பதிலளிநீக்கு
  4. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  5. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  6. இதன் பலனை பொருத்து இருந்துதான் பார்க்கணும் :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  7. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  8. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  9. நீங்கள், சுஜாதா, இயக்குநர் சசி போன்றோர் கூறிய அருமையான திட்டத்தைத்தான் இன்று அரசு செயல்படுத்தியிருக்கிறது. ஆனால், அதை நீங்கள் எல்லாரும் சொன்னது போலப் பயனுள்ள முறையில் செய்லபடுத்தவில்லை. நல்ல தலைவன் என்பவன் ஒன்று, மக்களுக்கு நேர்மையாக நடந்து நாட்டின் பெரும் பண முதலைகளைப் பகைத்துக் கொள்வான். அல்லது, பெரும் பண முதலைகளோடு நட்பு வைத்துக் கொண்டு மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பான். ஆனால், பெரும் பணக்காரர்களையும் பகைத்துக் கொள்ளாமல் மக்களிடமும் நல்ல பெயர் வாங்கி விட்டார் மோடி! அதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்பட்டிருக்கிறது. மற்றபடி, இந்த அறிவிப்பால் பெரிதாக எந்த வகையிலும் கருப்புப் பணம் ஒழிந்து விடப் போவதில்லை என்பது நீங்கள் அறிந்ததே!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. 25 கோடியோடு ஒருவரும் 5 கோடியோடு மற்றொருவரும் 1 கோடியோடு இன்னொருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் மதுரையில். சென்னை, மும்பை, பெங்களூரில் அதிகமான பேர் அல்லாடுகிறார்கள். பூனை வெளியே வந்திருக்கிறது. பலன் தந்திருக்கிறது.

    என்னவொரு வேதனை என்றால் மீண்டும் 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தி கருப்பு பணத்திற்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள் என்பதுதான்.

    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
   2. நீங்கள் சொல்வது உண்மை நண்பரே! இப்படிச் சிலர் விழி பிதுங்கி நிற்பதை நானும் பார்க்கிறேன். ஆனால், இவர்கள் எல்லாரும் யார்? நீங்களே கூறுவது போலச் சின்னச் சிறு பூனைகள்தாம். ஆனால், உண்மையான பெரும் பண முதலைகள் தப்பி விட்டனவே! சுவிசு வங்கிகளில் முதலீடாகவும், இன்ன பிற நாடுகளில் பனாமாத் தாள்களாகவும் இலட்சக்கணக்கான கோடிகளை முடக்கி வைத்திருக்கும் தன் நண்பர்கள் யாருக்கும் ஒரு சிறு கீறல் கூட ஏற்படாமல் சிறு வணிகர்கள், பிள்ளைகள் திருமணத்துக்காக நிலத்தை விற்றுக் கருப்புப் பணமாக வாங்கி வைத்த அப்பாவிகள் போன்றவர்கள்தாமே இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

    நீக்கு
   3. கடைசி வரிகள் தவறு. மீண்டும் கீழே, சரியாக.

    //சுவிசு வங்கிகளில் முதலீடாகவும் இன்ன பிற நாடுகளில் பனாமாத் தாள்களாகவும் இலட்சக்கணக்கான கோடிகளை முடக்கி வைத்திருக்கும் தன் நண்பர்கள் யாருக்கும் ஒரு சிறு கீறல் கூட ஏற்படாமல் சிறு வணிகர்கள், பிள்ளைகள் திருமணத்துக்காக நிலத்தை விற்றுக் கருப்புப் பணமாக வாங்கி வைத்த அப்பாவிகள் போன்றவர்கள் மட்டும் மாட்டிக் கொள்ளும்படியாகத்தானே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மோடி?//

    உங்களுக்கே தெரியும்; நம் நாட்டில் எளிய மக்கள் தங்கள் குடும்பத்தில் வரும் மிகப் பெரிய செலவுகளைச் சமாளிக்க வைத்திருக்கும் ஒரே வழி நகைகளிலும் நிலங்களிலும் கை வைப்பதுதான். நகைகளை விற்பது உடனடித் தேவைக்கு. ஆனால் திருமணம், மேல்படிப்பு போன்ற பெரிய செலவினங்களுக்கு இவர்கள் நம்பியிருப்பது நிலங்களைத்தாம். நாட்டில் இப்பொழுது யார் நிலம், வீடு வாங்கினாலும் பெரும்பாலும் கருப்புப் பணத்தில்தான் வாங்குகிறார்கள். அது எழுதப்பட்டாத நடைமுறை விதியாகவே ஆகி விட்டது. ஏன், நிலத்தை நீங்கள் எவ்வளவுக்கு வாங்குகிறீர்களோ அந்த மொத்தத் தொகையையுமே பத்திரத்தில் குறிப்பிட வேண்டியதுதானே என்று யாராவது அந்நியன் அம்பி போலக் கேட்டால் கேட்பவனை ஏதோ கிறுக்குப் பயலைப் பார்ப்பது போலப் பார்க்கிறார்கள். இப்படி எல்லாருமே கருப்புப் பணத்தில்தான் இடத்தை வாங்குவேன் எனும்பொழுது யாரிடம் தேடிக் கொண்டு போய் நிலத்தைச் சட்ட மீறல் இன்றி விற்க இயலும்? எனவே, அதுவரை கறைபடாத கரமாக வாழ்ந்த பலரும் கூடக் கருப்புப் பணத்துக்குத்தான் இடத்தை விற்கிறார்கள். இன்று இந்த அதிரடி அறிவிப்பால் மாட்டியிருக்கும் பெரும்பாலானவர்கள் இந்த வகையினர்தாம். ஆனால், தங்களுக்கென தணிக்கையாளர் குழுவே வைத்து நடத்தும் அம்பானிகளும் அதானிகளும் இதனால் அணுவளவும் பாதிக்கப்படப் போவதில்லை.

    நீக்கு
   4. ஓ! நீங்கள் இறுதி வரியில் சொன்ன கருத்துக்குப் பதிலளிக்க மறந்து விட்டேன்.

    இரண்டாயிரம் உரூபாய்த் தாளை அறிமுகப்படுத்தியிருப்பது மீண்டும் கருப்புப் பணப் பதுக்கலுக்கு வழி வகுக்கும் என நீங்களுமா நினைக்கிறீர்கள்? இல்லையே நண்பரே! அதில்தான் மீநுண் தொழில்நுட்பச் சில்லு (Nano technological chip) பொருத்தப்பட்டுளதே! எனவே, இனி பணத்தை இப்படி வெறும் கட்டுகளாகப் பதுக்கி வைக்க இயலாதே!

    நீக்கு
   5. பல விவரங்களை தந்திருக்கிறீர்கள் நண்பரே. பாராட்டுக்கள். உண்மைதான் நண்பரே, நாம் நம் அளவிற்கு கருப்பு பணத்தை உருவாக்குகிறோம் என்றால் பெரிய மனிதர்கள் அவர்கள் அளவிற்கு கருப்பு பணத்தை உருவாக்கி பதுக்கிக்கொள்கிறார்கள். சிறிய அளவு பூனைகளை அடக்கி விட்டார்கள். அடுத்த கட்டமாக பெரிய புலிகளை பிடிக்கிறார்களா என்று பார்ப்போம். ஆனால், கள்ளப்பணம் ஒழிந்து விட்டது என்பது உண்மை.
    கடைசியாக 2000 ரூபாய் நோட்டில் எந்த சிப்பும் இல்லை. அது சமூக ஊடகங்கள் பரவவிட்ட வதந்தி.
    தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    நீக்கு
   6. //கள்ளப்பணம் ஒழிந்துவிட்டது என்பது உண்மை// - ஆம்! அஃது உண்மைதான். எல்லாரும் கட்டாயமாக 500, 1000 ரூபாய்த் தாள்களை மாற்றித்தான் ஆக வேண்டும் எனும்பொழுது, கள்ளப்பணம் பெரும்பாலும் இந்த மதிப்புள்ள பணத்தாள்களாகத்தான் அச்சிடப்படுகிறது என்பதால் மிகப் பெரிய அளவில் கள்ளப்பணம் இந்நேரம் ஒழிந்து விட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இவையெல்லாம் நிலையானவை அல்ல. 2000 ரூபாய்த்தாளை வெளியிட்டிருப்பதால் முன்பை விடக் கருப்புப் பணப் பதுக்கல் இன்னும் பன்மடங்கு கூடுதலாகப் போகிறது. மேலும், புதிய ரூபாய்த்தாளை வெளியிட்ட மூன்றே நாட்களில் அதே மாதிரி கள்ளப்பணத்தையும் அச்சிட்டு விட்டார்கள் என்பதைக் கண்டோம். ஆகவே, கள்ளப்பணமாவது ஒழிந்ததே எனவும் நாம் ஆறுதல் கொள்வதற்கில்லை. இன்னும் மிகச் சில நாட்களில் கள்ளப்பணமும் புதிதாக வந்துவிடும். அதுவும், மக்கள் பணத்துக்காகப் பேயாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கள்ளப்பணத்தைப் பரப்புவது எளிது. தவிர, இனி கள்ளப்பணம் அச்சடிப்பவர்கள் 500, 1000, 2000 மதிப்புள்ள தாள்களை அச்சிட மாட்டார்கள். மக்கள் சில்லரைக்குத்தான் மிகவும் அல்லாடுகிறார்கள் என்பதால் இனி மதிப்புக் குறைவான - அதாவது 100, 50, 20 - ரூபாய்த்தாள்களைத்தான் கள்ளப்பணக் கும்பல்கள் அச்சிடும். மதிப்புக் குறைவான தாள்களாக இவை இருப்பதால் 500, 1000 ரூபாய்த்தாள்களில் இருந்த கள்ளப்பணத்தை ஒழித்தது போல ஒரே அறிவிப்பில் இவற்றை ஒழித்துவிடவும் இனி இயலாது. சுருங்கச் சொன்னால், கள்ளப்பணப் புழக்கம், கறுப்புப் பணப் பதுக்கல் என இந்தத் திட்டத்தால் எந்தக் கேடுகளெல்லாம் ஒழியும் என்று சொன்னார்களோ அவை அனைத்தும் முன்பை விடப் பன்மடங்கு பெருகத்தான் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.

    (மேற்படி பதிலை உங்களுக்கு அனுப்பிய பிறகுதான் நான் 2000 ரூபாய்த்தாளையே பார்த்தேன். அதில் அப்படி ஏதும் சில்லு இருப்பதாகத் தெரியவில்லையே என்று ஐயுற்றேன். பின்னர், எதிர் வீட்டுத் தம்பியுடன் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, உலகிலேயே மிகச் சிறிய Nano GPS சில்லு இதுதான் என்று இணையத்தில் எடுத்துக் காட்டினான். அது ரூபாய்த்தாளை விட மிகவும் கனமாக - அதுவும் உலோகத்தில் செய்யப்பட்டு - நகம் அளவுக்கு இருக்கிறது. அப்படி ஒன்றை தாளில் வைப்பது இயலாது. அப்படியே வைக்க முடியும் என ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் புதிய ரூபாய்த் தாள்களில் அஃது இல்லை என்பதே கண்கூடு).

    நீக்கு
  10. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  11. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  12. தவறான திட்டமிடல்....மக்கள் தடுமாறுகிறார்கள்....கிரெடிட் டு PM , டெபிட் டு FM....இது ஒரு அரசியல் சதுரங்கம்....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தவறான திட்டமிடல் என்று முழுமையாக ஒதுக்கிவிட முடியாது. சமூக ஊடகங்கள் அப்படியொரு பிம்பத்தை பரப்பி வருகின்றன. நன்மைகள் சில மாதம் கழித்துதான் தெரியும்.
    தங்கள் கருத்துக்கு நன்றி!

    நீக்கு
   2. சரியாக சொன்னீர்கள். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை வைத்து சயன்ஸ் பிக்ஷன் கதை மாதிரி எல்லாம் எழுத தொடங்கிவிட்டார்கள். ஒருவர் எழுதுகிறார் இன அழிப்புக்கு அரசு ரெஸ்ட் எடுக்ககிறதாம்.

    நீக்கு
  13. இப்படிச் செய்ததில் கண்டிப்பாக நன்மை உண்டு. பதுங்கியது வெளியில் வந்தது கண் கூடு.

   கீதா: நான் அறிந்தே பலர் பதுக்கிய பணத்தை எப்படி வெளியில் கொண்டு வருவது என்று அறியாமல் அதுவும் கோடிக் கணக்கில் நீங்கள் சொல்லியிருப்பது போன்று. வீட்டிலேயே வைத்திருந்தார்கள்.

   நீங்கள் சொல்லியிருப்பது போல் 2000 ரூபாய் நோட்டு கொண்டுவந்திருப்பதும், சாலையோர ஏழை வியாபாரிகளின் வருமானம், மற்றும் கார்ட் தேய்க்கும் வசதி இல்லாத பலசரக்குக் கடைக்காரர்களின் வருமானம் குறைந்துள்ளது. இப்போது பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் கார்ட் தேய்ப்பதால் அவர்களக்கு வருமானம் பாதிப்பில்லாமல் போகிறது. அதனால் இப்போது சாதாரணப் பலசரக்குக் கடைக்காரர்களும் கார்ட் தேய்க்கும் வசதிக்கு மாறுகிறார்கள். இது ஒரு வகையில் நன்மையே பணம் பட்டுவாடா எல்லாம் கணக்கிற்குள் வரும். தினக்கூலிக்காரர்கள் கார்ட் தேய்க்க வழியில்லை..பணப்புழக்கம் இல்லை என்றால் விலவாசி குறைய வேண்டும் என்பதே பொருளாதாரம் சொல்லும் பாடம். ஆனால் விலை வாசி குறைந்ததாகத் தெரியவில்லை. பல கருத்துக்கள், விவாதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்றாலும் நல்லது நடக்கிறதா என்று பார்ப்போம்...

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்