• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், நவம்பர் 28, 2016

  ஹாலிவுட்டுக்கும் சென்ஸார் உண்டு


  மது இந்தியத் திரைத்துறையில் தவிர்க்கமுடியாத ஒரு தலைவலி என்று தணிக்கைத் துறையினரை திரைப்பட துறையினர் சொல்வது வழக்கம். இந்த தலைவலி ஏதோ இந்தியாவுக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. தாராளமான ஆபாசக் காட்சிகளுக்கு பெயர்பெற்ற ஹாலிவுட்டிலும் இந்த சென்ஸார் போர்ட் தொந்தரவு இருக்கிறது. 

  'தி கிஸ்' (1896)
  நூறாண்டு சரித்திரம் கொண்ட ஹாலிவுட் சரித்திரத்தில் ஆரம்ப காலங்களில் சென்சாரே கிடையாது. ஆனால், 1896-ம் ஆண்டு 'தி கிஸ்' என்ற படம் வெளிவந்தது. அதில் ஒரு ஆணும் பெண்ணும் உதடு பிரியாமல் உதடோடு உதடாக முத்தமிட்டதை பார்த்து பலர் பதறிப்போயினர். அப்போதே சினிமாவுக்கு கடிவாளம் போடவேண்டுமென்ற வாதங்கள் எழுந்தன. அதன்பின் 1919-ல் 'டோன்ட் சேன்ஜ் யுவர் ஹஸ்பெண்ட்' என்ற படத்தில் சிவப்பு விளக்கு பெண்ணிடம் சென்று வியாதியை பெற்று வருவதாக கதை. இதில் ஏகப்பட்ட ஆபாச காட்சிகள் இருப்பதாக மக்கள் நொந்துப்போயினர். 1920-ல் 'அவுட் சைட் தி லா' என்ற படம் ஏராளமான வன்முறைக் காட்சிகளை கொண்டதாக வெளிவந்தது. அதைப்பார்த்தும் கிறிஸ்துவ பாதிரியார்கள் கொதித்துப் போனார்கள். அதோடு நின்று விடாமல் நீதிமன்ற கதவையும் தட்டினார்கள். 

  'டோன்ட் சேன்ஜ் யுவர் ஹஸ்பெண்ட்' (1919)
  அதன் எதிரொலியாக 1921-ல் 'மோஷன் பிக்ஸர் கமிஷன்' என்ற அமைப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. ஆனால் இது  பெயரளவில் மட்டுமே இருந்தது. விரசமான காட்சிகள் நிறைந்த பல படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. மீண்டும் சென்ஸார் கெடுபிடிகளை அதிகமாக்க வேண்டும் என்ற வேண்டுகோள் நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கியது. 

  'அவுட் சைட் தி லா' (1920)
  அமெரிக்க அரசு 'புரொடக்ஷன் கோட்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, சினிமாவில் எதைக் காட்டலாம், எதைக் காட்டக்கூடாது என்ற விதிமுறைகளை உருவாக்கியது. அப்படியும் விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டன. இந்தநிலையில் 1967-ல் 8 பெரிய ஸ்டுடியோக்கள் ஒன்று சேர்ந்து 'மோஷன் பிக்ஸர் அசோசியேஷன் ஆப் அமெரிக்கா' என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தின. அரசின் பழைய 'புரொடக்சன் கோட்'-யை தூக்கி எறிந்துவிட்டு 'ரேட்டிங் சிஸ்டம்' என்ற புதிய விதிமுறைகளை இவர்கள் கொண்டு  வந்தார்கள்.


  அதில் 'ஜி', 'பி.ஜி.', 'ஆர்' என்ற மூன்று வகையான சர்டிபிகேட்டுகளை கொண்டு  வந்தார்கள். 'ஜி' என்றால் 'ஜெனரல்'. அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். 'பி.ஜி.' என்றால் 'பேரன்ட்ஸ் கைடன்ஸ்' என்று பொருள். அதன்படி சிறுவர்களுடன் பெற்றோர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு மாதிரியான காட்சிகள் வந்தால் பிள்ளைகளின் கண்களை மூடிவிட்டு பெற்றோர்கள் மட்டும் பார்க்கலாம். 'ஆர்' என்றால் 'ரெஸ்ரிக்டட்' என்று அர்த்தம். அதாவது சிறுவர் சிறுமியர்கள் பார்க்கக் கூடாத படம் என்று அர்த்தம். 


  இதில் 1984-ல் மேலும் சில விதிமுறைகளை சேர்த்தார்கள். அதன்படி 'ஆர்' என்றால் 17 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கக்கூடாது என்றும், இந்த 'ஆர்'-ருடன் 'பி.ஜி.-13' என்ற ஒன்றை சேர்த்தால் 13 வயது நிரம்பியவர்கள் பெற்றோருடன் சேர்ந்து படம் பார்க்கலாம் என்றும் கொண்டுவந்தார்கள். இது பெற்றோர்களை எச்சரிக்கை செய்வதற்காக தரப்பட்டது. இதுபோக 'என்.சி.-17' என்ற ஒன்றும் தரப்பட்டது. இந்த சான்றிதழ் பெற்ற படத்தை 17 வயதுக்கும் குறைவானவர்கள் பார்க்கக் கூடாது என்பது பொருள். 

  இப்படி ஏகப்பட்ட பிரிவுகளில் சான்றிதழ்களை கொடுத்தாலும் சென்சார் போர்டுக்கே படங்களை அனுப்பாமல் வெளியிடவும் செய்யலாம். அப்படிப்பட்ட படங்களை 'என்.ஆர்.' என்று சொல்வார்கள். அதாவது 'நான்-ரேட்டட்'. 


  ஹாலிவுட்காரர்கள் 'ஜி' சர்டிபிகேட்டை அவ்வளவாக விரும்புவதில்லை. இதற்காகவே நல்ல படங்களில் கூட ஒன்றிரண்டு காட்சிகளை மோசமாக எடுத்துவிட்டு 'பி.ஜி.-13' என்று வாங்குவதையே விரும்புகிறார்கள். இல்லையென்றால், நிர்வாணப்படம் என்று 'ஆர்' சான்றிதழ் கொடுங்கள் என்கிறார்கள். இத்தகைய படங்களுக்குத்தான் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறதாம். சரி, இந்த சான்றிதழ்களின் படிதான் படம் பார்க்க அமெரிக்க தியேட்டர்கள் அனுமதிக்கின்றனவா..? என்றால் எதையும் யாரும் கண்டுகொள்வதில்லை என்பதுதான் பதில். எந்தப் படத்தையும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதுதான் நிதர்சனம்.    12 கருத்துகள்:

  1. யாரும் எதையும் மதிப்பதில்லை என்றால் அப்புறம் எதற்கு சர்டிபிகேட் எல்லாம்! நல்ல தகவல்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எல்லா நாடும் நம்மைப் போலத்தான் இருக்கிறது.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்