நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருவது யாவரும் அறிந்ததே. தற்போது பரவலாக எளிமையான வகையில் கடன் வசதிகள் அதிகமாகியுள்ள காரணத்தினால், மாதாந்திர தவணைகள் மூலம் பணம் செலுத்தி இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், சுற்றுப்புறச்சூழலை கருத்தில் கொண்டால் அதிகரித்து வரும் வாகனப்பெருக்கம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுவதும் இயல்பே. உள்நாட்டு வாகன சந்தையானது ஆசியாவிலேயே இரண்டாவது பெரியது என கூறப்படுகின்ற நிலையில், வரும் 2026 வரையில் கிட்டத்தட்ட 13 சதவிகிதம் வருடா வருடம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யர்னஸ்ட் & யங்க் அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.
2020 வாக்கில் வாகனப் பெருக்கம் 50 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. அதேநேரம் உள்நாட்டு வாகனக் கடன் சந்தை 2020ம் ஆண்டு 2.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக பிரம்மாண்டமாக வளரும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாகனக் கடன் சந்தையைப் பொருத்தவரையில் 1 சதவிகிதம் அளவுக்கே வாராக்கடன்கள் இருப்பதன் காரணமாக இத்துறையில் நிதி நிறுவனங்கள் பெருத்த ஆர்வம் காட்டுவதை உணரமுடிகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆட்டோமொபைல் தொழில்துறையைப் பொறுத்தவரையில், இத்தகைய மாதாந்திர தவணை அடிப்படையிலான கடன் வசதிகள் அதிகரித்த பின்னரே அத்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. பெருமளவு வேலை வாய்ப்புகளை வழங்கத்தக்க இத்துறைக்கு உள்நாட்டு வாகனக்கடன் சந்தை உதவிகரமாக இருந்து வருவதும் கண்கூடு.
குறிப்பாக இத்துறையில் கடனுக்கும், வாகன மதிப்புக்கான விகிதாச்சாரம் இந்தியாவில் 72 சதவிகிதமாக இருக்கிறது என்றும், இது வளர்ந்த நாடுகளுக்கு ஈடான சூழல் என்றும் யர்னஸ்ட் & யங்க் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது, வாகனக்கடன் சந்தைக்கான உட்கட்ட மைப்பு வசதிகளும், களச்சூழலும், வர்த்தக கட்டமைப்பும் இந்தியாவில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். 2010-ம் ஆண்டு 43 லட்சம் கோடியாக இருந்த இந்திய நுகர்வுச்சந்தை 2025ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகரித்து ரூ.110 லட்சம் கோடியாக இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, இந்தியர்கள் செலவழிக்கப்போகும் பணத்தின் மதிப்பு மிகப்பிரம்மாண்டமாக வளரப் போகிறது எனும் சூழலில், வாகனக் கடன் சந்தை மற்றும் வாகனங்களின் பெருக்கம் அபரிமிதமாக அதிகரிப்பதில் ஆச்சரியம் இருக்கமுடியாது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 40 சதவிகித வாடிக்கையாளர்கள் 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் வாகனங்களை மாற்றிவிடுவதாகவும், கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தினர் 2 முதல் 4 ஆண்டுகளுக்குள் வாகனங்களை மாற்றி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் வருடா வருடம் வாகன உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கத்தான் செய்யும். அதேநேரம், சென்னை போன்ற பெரு நகரங்களில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் வாழுகின்ற சூழலில், 40 லட்சம் வாகனங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது கலவையான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு இரண்டா யிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்னையில் இருப்பதாகவும், இந்த வாகன அடர்த்தியில் சென்னைதான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால், வரும் காலங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைப்பது பிரச்சினையாகும் என்பதோடு, சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு அதிகரிக்கும் என்பதும் ஆட்சியாளர்களுக்கு சவாலாக மாறக்கூடும்.
அதுமட்டுமல்லாமல், வாகனப் பெருக்கமானது கரியமில வாயுவை அதிகமாக வெளிப்படுத்தும் சூழலையும் ஏற்படுத்திவிடும் என்பதால், சுற்றுப்புறச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதையும் மறுக்க இயலாது. வாகனங்களின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி யின் நல்ல அறிகுறியே என்றாலும், இரண்டு பேருக்கு ஒரு வாகனம் என்கிற நிலை ஏற்படுவது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதகங்களை ஏற்படுத்தி விடும் என்பதையும் உணர்தல் நலம்.
மிகச்சவாலான இந்த சூழலை சமாளிப்பதற்கு தற்போதே சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக திட்டமிடுதலை துவக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
=========================================================
எனது யூ-டியூப் சேனலில்...
இன்றைய கல்விமுறை, பாடத் திட்டம், பெற்றோர்கள் மனநிலை, மாணவர்களின் பிரச்சனை, ஆங்கில மோகம் அதனால் ஏற்படும் பாதிப்பு, தனியார் பள்ளிகளால் கல்வி எப்படி வியாபாரமானது? அரசுப் பள்ளிகள்தான் நமது உரிமையின் அடையாளம் என அனைத்தையும் விரிவாக வெளிப்படுத்தும் காணொலி
ஆங்கில கல்வி முறைக்கும் தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சவுக்கடி
========================
'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' சேனலில் ஹம்பியில் உள்ள ஹேமகுடா மலையின் பாரம்பரிய கோயில்களை காணலாம்.
Travels Next
கல்விமுறை பாடத் திட்ட காணொளி - சவுக்கடி...
பதிலளிநீக்குஇன்றைய வாகனப்பெருக்கங்களும், நாளுக்கு நாள் அதன் அசுர வளர்ச்சிகளும், அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பற்றிய அருமையானதொரு அலசல்.
பதிலளிநீக்குபோதுமான கார் பார்க்கிங் வசதிகளும் இல்லாத நிலையில், சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகள் போல, கார் போன்ற வாகனங்கள் வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் மிகவும் நல்லது.
நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குகல்விமுறை ஒரு நல்ல படிப்பினை. அடுத்தடுத்து காணொளிகள். சளைக்காமல் பதிவிடுவதற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
பதிலளிநீக்குTamil News | Latest News | Business News
ஒரு கடன் பெறுவது பற்றி நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் சொந்த வியாபாரத்தை ஆரம்பிக்க அவசர கடனுதவி தேவைப்படுகிறதா? நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? இது உங்கள் விருப்பத்தை அடைவதற்கு உங்களுக்கு வாய்ப்பு, நாங்கள் தனிப்பட்ட கடன்கள், வணிக கடன்கள் மற்றும் கார்ப்பரேட் கடன்கள் மற்றும் அனைத்து வகையான கடனுதவிகளும் 2% வட்டிக்கு மின்னஞ்சல் மூலமாக (michealthiago5@gmail.com) தொடர்பு கொள்ளவும்.
பதிலளிநீக்குசிறந்த கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி, எங்களுடன் தொடரந்து இணைந்திருங்கள் Get Latest Tamil News
பதிலளிநீக்குகருத்துரையிடுக