Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மலைக்க வைக்கும் மாருதியின் மயங்க வைக்கும் உத்திகள்


சாதாரண மக்களும் கார்களை வாங்கலாம் என்கிற கனவு நனவானதற்கு மாருதி நிறுவனமே காரணம் என்றால் அது மிகையாகாது.

குடும்ப கார் என அழைக்கப்பட்ட மாருதி 800 கார்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இந்தியாவில் விற்கப்பட்டது யாவரும் அறிந்ததே. மக்களின் கார் என  அழைக்கப்பட்ட மாருதி 800 கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், தற்போது புதிய பல பிரிவுகளிலும் மாருதி கார்கள் மகத்தான சாதனையை படைத்து வருவது வியக்கத்தக்கதாகும். விலை மலிவான கார்களுக்காகவே ஒரு காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட மாருதி சுசூகி நிறுவனம், இன்றைக்கு சிறிய வகை கார்கள் அல்லாத பிற வகை பிரிவுகளிலும் குறிப்பாக நடுத்தர செடான்கள், காம்பேக்ட் எஸ்யூவிக்கள் மற்றும் பிரிமியம் ஹேட்ச் பேக் மாடல்கள் என அனைத்து பயணிகள் கார் பிரிவுகளிலும் விற்பனையின் நாட்டில் முன்னிலை வகிப்பது பிரமிக்க வைப்பதாகவே உள்ளது.

2016 ஏப்ரல் முதல் 2017 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் நடுத்தர செடான் கார்களான சியாஸ் வகை கார்கள் 53,644 யூனிட்டுகளும், எஸ்யூவி வகையில் விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் 88,537 யூனிட்டுகளும், பிரிமியம் ஹேட்ச் பேக் வகையில் பலேனோ கார்கள் 96,720 யூனிட்டுகளும் விற்பனையாகி அந்தந்த பிரிவுகளில் போட்டியாளர்களை விட மகத்தான சாதனை புரிந்திருப்பதாக நான்கு சக்கர தொழில்துறை வட்டார புள்ளி விவரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே மற்ற போட்டி நிறுவனங்களான டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், ஹோண்டா போன்ற நிறுவனங்களின் ஏதோ ஒரு சில குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே அந்நிறுவனங்களுக்கு விற்பனையில் பெரு வெற்றியை அளிப்பதாக அமைந்துள்ள நிலையில், மாருதி சுசூகி தயாரிக்கும் கிட்டத்தட்ட அனைத்து வகை பிராண்டுகளுமே வாடிக்கையாளர் நன்மதிப்பைப் பெற்று மிகச்சிறப்பான விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்தும் தக்கவைத்து வருவது இந்திய கார் சந்தையை குறித்த மாருதி சுசூகி நிறுவனத்தின் புரிதல் மிகச் சரியானதாக அமைந்துள்ளது என்பதை காட்டுவதாகவே உள்ளது.

உற்பத்தி, உற்பத்திக்கு பிந்தைய மார்க்கெட்டிங் நடவடிக்கைகள், வாடிக்கையாளர் பர்சேஸ் அனுபவம், விற்பனைக்குப் பிந்தைய சேவை என எல்லா அம்சங்களிலும் மிகச்சிறப்பான தன்மைகளை தொடர்ந்தும் கொண்டிருத்தலே மாருதியின் மிக நீண்ட தொடர் வெற்றிகளுக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது.

சிறிய கார்கள் தயாரிப்பில் ஆல்டோ, வேகன் ஆர், ஸ்விப்ட், ஆம்னி போன்ற பிரபல பிராண்டுகளோடு செடான்கள், எஸ்யூவிக்கள், பிரிமியம் கார்கள் என அனைத்துத் துறைகளிலும் புதிய புதிய கார்களை அறிமுகப்படுத்தியதும் மாருதியின் வெற்றிக்குக் காரணம். அதுமட்டுமல்லாமல், புதுமையான விற்பனை உத்திகளை உருவாக்குவதிலும், செயல்படுத்தவதிலும் மாருதியின் அனுபவம் மற்ற நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த படிப்பினையாக அமையும் என்றே கூறவேண்டும்.

கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து பிராண்டுகளாக விற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். சாதாரண கார்களை வாங்கும் ஷோரூம்களில் பிரிமியம், எஸ்யூவி கார்களை வாங்க மக்கள் யோசிப்பர் என்கிற அடிப்படையில், நெக்ஸா என்ற பெயரில் கார்கள் விற்பனையிலும் வாங்குபவருக்கு நல்லதொரு அனுபவத்தைத்தரக்கூடிய புதுமையை மாருதி அறிமுகப்படுத்திய பின்னரே அதன் வளர்ச்சி இன்னும் உயர்ந்தது என்று கூறமுடியும்.

அதுமட்டுமல்லாமல், இந்திய கார் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதிய புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்தது, அவற்றிற்கு மிகச்சரியான அளவிலான விலையை நிர்ணயம் செய்தது, குறிப்பிட்ட வாடிக்கையாளர் இலக்கை நோக்கி சிறப்பான உத்திகளுடன் விளம்பரம் செய்தது போன்ற அம்சங்கள் இந்த வெற்றியின் பின்னே உள்ளதையும் மறுக்க இயலாது.

இந்திய சந்தையில் ஒரு நிறுவனம் தொடர்ந்தும் வெற்றிகரமாக செயல்படுவதற்குரிய பின்னணி உத்திகள் அனைத்தையும் மாருதி நிறுவனம் கைவரப்பெற்றுள்ளது கண்கூடு. இது வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கும், புதிதாக தொழில் துவங்க விழையும் தொழில்முனைவோருக்கு தேவையான விற்பனை அனுபவ பாடங்களை வாங்கக்கூடிய ஒரு தங்கச்சுரங்கம் என்றே கூறலாம்.

கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 

* * * * * * * * * *


ஜெயகாந்தனின் புரட்சிமிகு படைப்பான 'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையில் இருந்து உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் பற்றி விரிவான விளக்கம். 

'சில நேரங்களில் சில மனிதர்கள்'




7 கருத்துகள்

  1. மாருதி மாருதி தான்.பராமரிப்பு செலவு
    கம்மி.... சர்வீஸ் நன்றறாக இருப்பதும் காரணம்

    பதிலளிநீக்கு
  2. சிறப்பாக அலசியுள்ளீர்கள்
    தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. மாருதி...
    பராமரிப்புச் செலவு குறைவு...
    நல்ல கட்டுரை...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை