Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நான்காம் ஆண்டில் 'கூட்டாஞ்சோறு'


ந்த ஆண்டு கொஞ்சம் வலைபூவை விட்டு சற்று தூரமாக இருந்த ஆண்டாக சொல்லலாம். இந்த ஆண்டு முழுவதுமே அவ்வப்போதுதான் கூட்டாஞ்சோறுக்கு வரமுடிந்தது. அதற்கு காரணம் நான் புதிதாக ஆரம்பித்திருக்கும் யூ-டுயூப் சேனல்தான். அதன் மீது அதிக கவனம் செலுத்தியதால் வலைப்பக்கம் வரமுடியவில்லை. 


இப்போது கூட கூட்டாஞ்சோறு பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வடக்கு கர்நாடகா பகுதியில் சுற்றுலாவில் இருந்தேன். அதனால் அன்று பதிவு போடமுடியவில்லை. 10 நாட்கள் சுற்றுலா முடிந்து வந்ததும் இந்தப் பதிவை எழுதுகிறேன். 

வலைப்பூவுக்கு அதிகமாக வரமுடியாவிட்டாலும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நிறைய சங்கதிகள் இருக்கிறது. மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுதானே மேலும் மகிழ்ச்சியைத் தரும். 

முதல் மகிழ்ச்சி எனது மகள் ஆனந்த விகடன் பத்திரிகையில் நிருபராக பணியில் சேர்ந்தது. குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி. சேர்ந்த நான்கு மாதத்தில் அனந்த விகடன் வார இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறாள். விகடன் தீபாவளி மலரில் 11 கட்டுரைகளை எழுதியிருக்கிறாள். இதுபோக விகடன்.காம் இணைய தளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறாள். 


இரண்டாவது மகிழ்ச்சி எனது மகன் இந்திய விமானப் படையின் மருத்துவப் பிரிவில் பணிக்கு சேர்ந்திருப்பது. தற்போது பயிற்சி எடுத்து வருகிறான். 18 மாத நீண்ட பயிற்சிக்குப்பின் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தலாம். 
மூன்றாவது மகிழ்ச்சி எதுவுமே தெரியாமல் நான் ஆரம்பித்த எஸ்பிஎஸ் மீடியா  என்ற யூடுயூப் சேனலின் வளர்ச்சி. இதை பற்றி தனியாக ஒரு பதிவே எழுதாயிருப்பதால், இங்கு அதை பற்றி அதிகம் சொல்லப்போவதில்லை. 


மகிழ்ச்சி என்று ஒன்றிருந்தால் துயரம் என்ற ஒன்றும் இருக்குமல்லவா! அப்படி சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட துயரம் என்பது நான் நடத்தி வந்த டிராவல்ஸ் நெக்ஸ்ட்.காம் என்ற இணையதளம் வைரஸ் தாக்குதலால் முடக்கப்பட்டுவிட்டது என்பதுதான். அதில் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா தகவல்கள், கட்டுரைகள், நண்பர்களின் அனுபவ கட்டுரைகள் எல்லாம் இருந்தன. அத்தனை உழைப்பும் ஒரு நொடியில் காணாமல் போனது. மீண்டும் அதை புதுப்பிப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. இணைய தளத்தை வேண்டுமானால் மீட்கலாம். அதில் இருக்கும் பதிவுகளை மீட்பது சிரமமே என்று சொல்கிறார்கள். ஒரு வருடத்திற்கு மேலாக உழைத்த உழைப்பு வீணானதில் வருத்தமே. 

மற்றபடி நண்பர்களின் பதிவுகளை அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து விடுவேன். இந்த வருடத்தில் கூட்டாஞ்சோறுக்கு அதிக கவனம் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். நண்பர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை தந்து உற்சாகப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 

தொடர்ந்து ஒன்றாக பயணிப்போம்.

என்றென்றும் அன்புடன்,
எஸ்.பி.செந்தில் குமார் 




15 கருத்துகள்

  1. மகளுக்கு வாழ்த்துகள். எந்த துறையாயினும் நீங்கள் ஈடுபட்டு செய்யும் பாணி மிகவும் சிறப்பாக உள்ளதை நாங்கள் காண்கிறோம். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  2. நாலாவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள் சார்.
    மகளுக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள்.
    இறுதியில் சொன்னது மிகுந்த வேதனையைக் கொடுத்தது.
    உங்கள் உழைப்பு வீண் போகாது... கண்டிப்பாக மீட்டெடுக்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்தும் நம்பிக்கையான கூற்றும் எனக்கு மேலும் மனவலிமையை சேர்க்கிறது. மிக்க நன்றி குமார்!

      நீக்கு
  3. நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும், பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களது ’கூட்டாஞ்சோறு’ வலைத்தளத்திற்கு முதற்கண் எனது வாழ்த்துகள். வலையுலகில் நீங்கள் வந்தும் ஏழு ஆண்டுகள் ஓடியுள்ளதையும் அறிந்து கொண்டேன்.

    உங்கள் பிள்ளைகள் பெற்றோரின் கனவுகளை நனவாக்கும் வண்ணம் நல்ல நிலைமைக்கு தங்களை உயர்த்திக் கொண்டமைக்கும் வாழ்த்துகள்.

    வைரஸ் தாக்குதலால் முடக்கப்பட்ட டிராவல்ஸ் நெக்ஸ்ட்.காம் என்ற தளத்தில் அழிந்துபோன, உங்கள் பதிவுகளை, Google's cache உதவியுடன் கண்டெடுக்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் வலைப்பக்கமும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள். மீண்டும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே,
      தாங்கள் 2010-ல் எனது வலைப்பூ தொடங்கப்பட்டதை வைத்து 7 வருடங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்போது அதை ஆரம்பித்ததோடு சரி. அதில் பதிவு போடுவதற்கோ அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விவரமோ தெரியாததால் அப்படியே ஒரு பதிவு கூட வெளியிடாமல் வெறுமனே வைத்திருந்தேன். 2014-ம் ஆண்டு தான் முதன் முதலாக பதிவு வெளியிட்டேன். அதனால் அதனையே வலைப்பூ தொடங்கிய நாளாக எடுத்துக்கொண்டேன்.

      கிட்டத்தட்ட இதே கதைதான் யூடுயூப் சேனலிலும் நடந்தது. 2013-ம் ஆண்டே யூடுயூப்பில் வீடியோ போடத்தொடங்கி விட்டேன். எனது தனிப்பட்ட வீடியோக்களை சேமித்து வைக்கும் இடமாகவே யூடுயூப்பை வைத்திருந்தேன். ஆனால் அதை ஒரு சேனல் போல் நடத்த முடியும் என்ற விவரம் 2016 டிசம்பரில் தான் தெரிய வந்தது. ஜனவரி 2017-ல் என்னுடைய தனிப்பட்ட வீடியோக்களை நீக்கிவிட்டு, சில வீடியோக்களை மட்டும் வைத்துக்கொண்டு சேனல் ஆரம்பித்தேன். அதனால் சேனலும் 4 வருடங்கள் ஆனதாக காட்டும். ஆனால் அது செயலாக செயல்படத் தொடங்கி இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை என்பதுதான் உண்மை.

      தங்கள் கூறிய முறையில் வலைத்தள சேமிப்பு இருக்கிறதா என்று முயற்சித்துப் பார்க்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  5. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் குடும்பத்தில் இருக்கும் மும்மூர்த்திகளுக்கும்....

    தொடரட்டும் தங்களது சீரிய தொண்டு. வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் முய்ற்சிகளுக்கும் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் . நீங்கள் இணையத்தில் பதிவதை மிரர் காப்பிகளாக ஆன்லைலில் பல உள்ள பல இலவச ஸ்டோரேச்சில் சேமித்து வைத்திருக்கலாம். இனிவருங்காலங்களிலலவது அப்படி செய்ய முயற்சி செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே! தங்களது ஆலோசனையை இனி கடைப்பிடிக்கிறேன்!

      நீக்கு
  7. உங்களுக்கும்,மகள்,மகனுக்கும் இதயபூர்வமான நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  8. தங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே!/சகோ! மேலும் மேலும் வளர்ந்திடவும் வாழ்த்துகள்.

    தங்களின் வெற்றிப்பய்ணத்துடன் தங்கள் குழந்தைகளின் வெற்றிப்பயணமும் தொடர்ந்திட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை