உலகின் மிகப் பழமையான மொழி, முதல் மொழி என்று எதை நீங்கள் Google-ல் தேடினால் அதில் வந்து நிற்கும் மொழி தமிழ் என்பதுதான். ஆனாலும் அந்த தமிழ் மொழியை Google கண்டுகொள்ளவேயில்லை. நீங்கள் தமிழ் வலைப்பதிவராகவோ அல்லது இணையதளம் நடத்துபவராக இருந்தால் உங்களுக்கான வருமானத்தை விளம்பரம் மூலம் தரும் நிறுவனம் Google AdSense தான். இவ்வளவு காலம் இந்த நிறுவனத்திற்கு நீங்கள் உங்கள் இணையதளத்திற்கு விளம்பரம் வரவேண்டி விண்ணப்பித்தால் unsupported language என்றுதான் வரும். இதனால் தமிழ் இனையதளங்கள் வருமானம் ஈட்டமுடியாத நிலையிலே இருந்தன.
கிட்டத்தட்ட உலகத் தமிழர்களின் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் Google நிறுவனத்திற்கு வைத்தும், Email கண்டுபிடித்தது ஒரு தமிழனாக இருந்தும், Google -ன் CEO -வாக ஒரு தமிழரான சுந்தர் பிச்சை பொறுப்பேற்றும் நிலைமை மாறாமலே இருந்தது. இந்தநிலையில் நேற்று முன் தினம் Google -ளிடம் இருந்து ஒரு மகிழ்ச்சியான திடீர் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு Google செவிசாய்த்திருக்கிறது.
மகிழ்ச்சியான இந்த அறிவிப்பு கீழே.
இவ்வளவுகாலம் unsupported language என்று இருந்த நிலைமை மாற்றி தமிழ் மொழியை supported language -ஆக அங்கீகரித்திருக்கிறது. இதன் மூலம் மூன்று இந்திய மொழிகள் விளம்பர வருமானத்திற்கு தகுதி பெற்ற மொழிகளாக இருக்கின்றன. அவைகள் இந்தி, பெங்காலி மற்றும் தமிழ். Google AdSense அங்கீகரித்திருக்கும் மொழிகள் பட்டியல் கீழே.
இந்த அங்கீகாரத்திற்கு பெரும் முயற்சி எடுத்தவர்கள் இலங்கை தமிழர்களே! அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
இப்போது தமிழ் இணையதளங்கள் நடத்தி வருபவர்கள் விளம்பரத்திற்கு விண்ணப்பிக்கலாம். பரிசீலனை முடிந்த பின் விளம்பர வருமானம் கிடைக்கும். கூடிய விரைவில் தமிழ் வலைப்பதிவர்களும் இந்த வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இனி வலைப்பதிவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவார்கள். அவர்களின் நீண்டநாள் கனவு வெகு அருகில்..!
ஆகா
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குஅருமை... நீண்ட நாள் எதிர்பார்த்தது...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குஈழத் தமிழர்க்கு தமிழும் தமிழர்களும் என்றென்றும் நன்றியுடையவர்கள்! குருதி சிந்தி இவர்கள் அகதிகளாய் வெளிநாடு சென்று தங்கள் உயிரை மட்டுமல்ல, உயிரினும் மேலான தமிழையல்லோ இவர்கள் வாழவைத்தார்கள்! கூகுளுக்கும் தமிழர்கள் தலை வணங்குகிறோம் ❤️
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குஎன் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். மகிழ்ச்சியான செய்திப் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குமுயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற பாடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குஈழத்து தமிழர்க்கு நன்றி சொல்வோம்...அருமையான செய்தி..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
நீக்குநல்ல செய்தி. நன்றி
பதிலளிநீக்குஅப்படியென்றால் நம் வலைப்பூவிற்கு கூகிள் விளம்பர வருமானத்திற்கு பதிவு செய்யலாமா?
பதிலளிநீக்குகருத்துரையிடுக