புதன், நவம்பர் 06, 2019

இந்த சிவாலயம் ஓர் ஆன்மிக அற்புதம்
வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்,

கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக கூடடஞ்சோறில் எந்தவொரு பதிவும் எழுதவில்லை. இதற்கு நான் காரணமில்லை. தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம். இதனால் வலை நண்பர்களின் பதிவுக்குக்கூட கருத்திட முடியவில்லை.  இந்தக் கோளாறை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நமது வலை சித்தரும் நிறைய வழிமுறைகளை சொல்லிப்பார்த்தார். ஒன்றுமே எடுபடவில்லை.

நேற்று நமது நண்பர் நீச்சல்காரனிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன முறையில் செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை. பின்னர் எனது வலைப்பக்கத்தில் இருந்த சில plugin-களை update செய்தவுடன் எல்லாமே சரியாகிவிட்டது.'தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும்' என்பார்களே அதுபோல எனது வலைப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறால் வலைப்பூவில் எந்த ஒரு செயலையும் செய்யமுடியவில்லை. இப்போது கோளாறு சரியானத்தில் நிம்மதி.

இனி தொடர்ந்து எழுத முயல்கிறேன். வலைப்பூவுக்கு என்று தனியாக பதிவு எழுதுகிறேனோ இல்லையோ..! எனது யூடியூப் காணொளிகளும் வலைப்பக்க இணைப்புகளும் கண்டிப்பாக இதில் இடம்பெறும்.

வழக்கம்போல தங்களின் ஆதரவு எனக்கு வேண்டும்.

நன்றி.

அன்புடன்
எஸ்.பி.செந்தில் குமார்

========================================================== 

எனது வலைப்பக்கமான 'தகவல் 360d'-ல் வெளியான பதிவை இங்கு தருகிறேன்.

முருடேஸ்வர்
உலகின் மிக உயரமான இரண்டாவது சிவன் 

கர்நாடகா மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு ஆன்மிக அற்புதம் இந்த சிவாலயம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கட்டிப்போடும் ஓர் ஆலயம். ஆன்மிகத்தையும் இயற்கையையும் ஒரு சேர கண்டு கழிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


சென்னையிலிருந்தது இங்கு நேரடி ரயில் சேவை கிடையாது. மங்களூர் வரை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் சென்று அங்கிருந்து முருடேஸ்வர ரயில் நிலையத்திற்கு பாசஞ்சர் ரயில்களில் செல்லலாம். தினசரி காலை 5.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மட்கோவன் பாசஞ்சர் வெஸ்ட் கோஸ்ட் எக்சிபிரசுக்கு சிறந்த இணைப்பு ரயில். வழிநெடுக இயற்கை காட்சிகள் கண்ணைப் பறிக்கும். குகைகள் வழியாக ரயில்கள் செல்வது குழந்தைகளை குதூகலப்படுத்தும். இந்தியாவின் மிக அழகான ரயில் பாதை இது. மங்களூரு மும்பை கொங்கன் ரயில்வே தடத்தில் பகல் நேரத்தில் இயற்கையை ரசித்துக்கொண்டே பயணிப்பது ஓர் அற்புதமான அனுபவம்.

வழியெல்லாம் பச்சை பசுமை, கடல், நதி, மலை, மழை... நிஜமாவே கொங்கன் ரயில்வேயில் பகல் நேர ரயில் பயணங்கள் அதிலும் மழைக்கால பயணங்கள்நம் ஆன்மாவை முழுசா சுத்திகரிச்சிரும். அனுபவிச்சு பார்த்தா தான் அந்த சுகம் புரியும். எத்தனை பெரிய கவலை இருந்தாலும் மறந்து மனசு லேசாயிரும்.

தொடர்ந்து வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்...


8 கருத்துகள்:

 1. மீண்டும் வலையுலகை கலக்க வரும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் வருகைக்கும் பேராதரவுக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 3. தொடர்ந்து இங்கு பயணிக்கவும்...

  நேற்று இட்ட எனது கருத்துரை...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
   தொடர்ந்து பயணிக்கிறேன்..!

   நீக்கு
 4. வாங்க வாங்க நண்பரே/ சகோ..மீண்டும் வந்தமைக்கு மகிழ்ச்சி....தொடர்ந்து எழுதுங்க..

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 5. அருமையான கோயில்...நான் சென்றிருக்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை எழில் சூழ்ந்த அட்டகாசமான இடம்.
   தங்கள் வருகைக்கு நன்றி துளசி சார்!

   நீக்கு

இத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்

பாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...