சனி, நவம்பர் 07, 2015

வலைப்பதிவில் முதலாம் ஆண்டு

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

ல்லாமே நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. விளையாட்டாக பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ இன்று உலகம் முழுக்க எனக்கு நண்பர்களை பெற்றுத்தந்துள்ளது. பிரான்சிலிருந்து புதுவை வேலு பேசுகிறார். அமெரிக்காவிலிருந்து விசு பேசுகிறார். இத்தனைக்கும் எனது மொபைல் எண் இதுவரை யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. இப்போது தெரிவதற்கு வலைப்பதிவர் கையேடுதான் காரணம்.

இந்த ஒரு வருடத்தில் 150 பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றை படிக்க ஒரு லட்சத்து 60 ஆயிரம் முறை வந்து போயிருக்கிறார்கள் முகம் தெரியாத நண்பர்கள். எனது பதிவுகளில் பின்னூட்டம் இடுபவர்கள் குறைவாக இருந்தாலும் வாசிப்பவர்கள் அதிகம் என்பதை இந்த வருகைப் பதிவு காட்டிக்கொண்டிருக்கிறது.

எனது பதிவுகளில் அதிகப் பார்வைப் பெற்றது 'மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு'தான். இதுவரை அந்த ஒரு பதிவை மட்டும் 18 ஆயிரம் பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள். இப்போதும் கூட தினமும் 10 பேர் அந்த பதிவை படிக்கிறார்கள். மற்ற பதிவுகள் இதன் அருகில் கூட நெருங்க முடிவதில்லை. ஏனென்றால் இரண்டாம் இடத்தில் இருக்கும் பதிவு 3500 பார்வைகளைத்தான் பெற்றிருக்கிறது.

இந்த முதல் வருடம் எனக்கு பல மகிழ்ச்சியான தருணங்களை தந்திருக்கிறது. அதில் ஒன்று தமிழ்மணத்தில் சில நாட்கள் 7-ம் இடத்தில் இருந்தது. அதைவிட பெரியமகிழ்ச்சி பதிவர் சந்திப்பு விழாவில் பல பதிவுலக நண்பர்களை சந்தித்தது. கட்டுரைப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றது.

நிறைய எழுத ஆசைதான் நேரமின்மையால் இத்துடன் முடிக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசியோடு இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். வழக்கம் போல ஆதரவு தாருங்கள்..!!

என்றென்றும் அன்புடன்,
எஸ்.பி.செந்தில் குமார்


50 கருத்துகள்:

 1. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்...!!

  எனது வலைப்பூவில் இன்று: விண்டோஸ்10 | ஷார்ட்கட் கீஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே,
   தங்களின் தளத்திற்கும் வருகிறேன்.

   நீக்கு
 2. வாழ்த்துகள். சலிப்பில்லாமல் ஒரு கடமை போல எழுதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடமை போல்தான் செய்கிறேன். வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 3. முதுமொழி தமிழொடு
  முத்திரை பதித்தோர்!
  நித்திரை யிலும் நினைவிலாடும்,
  நிர்மல கமலம் போல்....
  எண்ணிய எண்ணமெல்லாம்
  புண்ணியப் புலனாய் பெருகி,
  மண்ணில் சிறந்தே வாழ்க
  மதுரை நண்பரே!

  இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும்
  தங்களது தளம் மேலும் பல்வேறு வகை
  சிறப்புகள் அனைத்தும் பெற்று வாழிய வாழியவே!

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையில் வாழ்த்து சொல்லிய பிரான்ஸ் நண்பருக்கு நன்றிகள் பல.

   நீக்கு
 4. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாசித்து அனுபவிக்கக் காத்திருக்கிறோம். பின்னூட்டமிட, எங்களுக்கும் நேரமின்மையே. காரணம்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாசித்து அனுபவிக்கக் காத்திருக்கிறோம். பின்னூட்டமிட, எங்களுக்கும் நேரமின்மையே. காரணம்.

  பதிலளிநீக்கு
 6. வலைத்தளம் அனுபவம் ஒர் ஆண்டுகளாக இருந்தாலும் பல ஆண்டு எழுத்துலக அனுபவத்தால் உங்கள் பதிவுகள் மிளிர்கின்றன.தொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள். கருத்துகளின் எண்ணிக்கையை பற்றி கவலைக் கொள்ளாதீர்கள். பல பேருக்கு அதை இட நேரம் இருப்பதில்லை. வருபவர்களின் எண்ணிக்கை மட்டுமே உங்களின் பதிவின் தரத்தை சுட்டிக்காட்டும் அதாவது வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக உங்களின் பதிவுகள் தரம் வாய்ந்தைவைகளாக இருக்கின்றன என்பதாக அர்த்தம் அதனால்தான் வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது நுற்றுக்கு நூறு உண்மையே, வருகை தந்து, கருத்திட்டு வாழ்த்திய மதுரை தமிழருக்கு நன்றிகள் பல.

   நீக்கு
 7. தங்கள் வலைத்தளத்தின் ஓராண்டு நிறைவுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றாக எழுதுங்கள். நல்லதையே எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. நன்றி அய்யா!

   நீக்கு
 8. வாழ்த்துக்கள் நண்பரே
  தொடரட்டும் தங்களின் வலையுலக எழுத்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
   தொடர்கிறேன்.

   நீக்கு
 9. செந்தில் குமார்,

  இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் தொய்வில்லா பயணம்.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோ அவர்களே!

   நீக்கு
 10. அன்புள்ள அய்யா,

  முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில்... இன்னும் சிறக்க வாழ்த்துகள்!

  த.ம.5

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் நண்பரே! தங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  நான் இதுவரை கைபேசியில் 60பதிவு எழுதிவிட்டேன் நீங்கள் இன்னும் ஒன்றுக்கூட. வரவில்லை நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வலைப்பக்கத்தை எனது பதிவுப் பட்டியலில் இணைக்காமல் போய்விட்டேன். அதனால் தங்கள் பதிவு பற்றி தெரியவில்லை. இனி தொடர்கிறேன். தங்கள் தளத்திலும் இணைந்து விட்டேன்.
   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 12. வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் பணியை...

  பதிலளிநீக்கு
 13. ’கூட்டாஞ்சோறு’ – வலைத்தளதின் இரண்டாம் ஆண்டு தொடக்கம். நண்பருக்கு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 14. தரமான பதிவாகவும்
  அனைவரும் விரும்பிப் படிக்கும் பதிவாகவும்
  பயனுள்ள பதிவுகளாகவே அனைத்துப் பதிவுகளும்
  இருப்பது தங்கள் தளத்தின் பலம்
  அவ்வாறே தொடர்ந்து தொடர மனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்து மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது அய்யா!

   நீக்கு
 15. வலையுலகில் வெற்றிகரமாக முதல் ஆண்டை நிறைவு செய்து, இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 16. வாழ்த்துகள்! வாழ்த்துகள்! மனமார்ந்த வாழ்த்துகள்!
  எங்கள் ஆதரவு என்றுமே எப்போதும் உண்டு! தொடர்ந்து எழுதி கலக்குங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் ஆதரவுக்கும் துல்லியமான பின்னூட்டத்துக்கும் என்றும் ரசிகன் நான். வாழ்த்துக்களுக்கு நன்றி!

   நீக்கு
 17. உங்களின் எழுத்துக்கள் இன்னும் பல லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்க்கும்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 18. வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி
  தமிழ் மணம் 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 19. ஒரு வயதுக் குழந்தையின் உற்சாக வளர்ச்சிக்கு வாழ்த்துகள் நண்பரே! நமது நண்பர் மதுரைத் தமிழன் சொன்னதுபோல, ஏற்கெனவே எழுத்துலக அனுபவம் எதை,எப்படி எழுதுவது என்ற தெளிவை உங்களுக்குத் தந்திருப்பதால் இந்த வெற்றி வசப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்திலும் கண்கணை உறுத்தாக வடிவமைப்பு, அனைவருடனும் இனிது பழகும் உங்கள் இனிய தொடர்புகள் இன்னும் இன்னும் சிறக்கவும், இரண்டாம் ஆண்டில் இன்னும் பலலட்சம் வாசகரைப் பெறவும் இதய வாழ்த்துகள், தொடருங்கள்.தொடர்வோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் ஊக்கம் தரும் வாழ்த்துக்களும் எனக்கு மேலும் உற்சாகத்தை வழங்குகிறது அய்யா!
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   தொடர்வோம் அய்யா!

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!

   நீக்கு
 21. வாழ்த்துக்கள் நண்பரே. மென்மேலும் பல வருடங்கள் வாழ வாழ்த்துக்கள். கருத்துக்கள் வரவில்லையே என்ற ஏக்கம் எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அது ஒரு தர்காலிகனமாக இருந்த ஏக்கம் தான். படிப்பவர்களின் எண்ணிக்கை ஒன்று அதிகரிக்கும் போதும் உற்சாகமே.
  எழுதும் வரை எழுதுவோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து எழுதுவோம்!

   நீக்கு
 22. மனம் நிறைந்த வாழ்த்துகள் செந்தில்குமார். மேலும் பல பதிவுகளை எழுதுங்கள். நேரம் கிடைகும்போது எழுதுவோம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து எழுதுவோம்!

   நீக்கு
 23. வணக்கம்

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...