Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு




திருவிழாக்கள் என்றுமே சுற்றுலாவாசிகளை ஈர்ப்பவைதான். அதிலும் தீபாவளி போன்ற ஒரு பெரும் விழா சுற்றுலாவாசிகளை வசீகரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். தீபவாளியும் வசீகரிக்கிறது. இதன் வசீகரிப்பால் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இந்தியா வருகிறார்கள். 

திருவிழா நடைபெறும் இடத்திற்கு சென்று அவர்களின் பழக்க வழக்கங்களை கண்டுகளிப்பது மரபு வழியாக வந்த பழக்கம். அந்த பழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். அது இன்று சுற்றுலாவாக அவதாரம் எடுத்திருக்கிறது.


இந்தியப் பெண்களின் பாரம்பரியப் பழக்கம் தான். இப்படி வெளிநாட்டு பயணிகளை இந்தியா கொண்டு வந்து சேர்க்கிறது. அந்தக் கலையின் பெயர் 'மதுபாணி'. இது ஒரு சுவர்ச் சித்திரம். நம்மூரில் பெண்கள் திருவிழாக்களின் போது வீட்டு வாசலில் பெரிது பெரிதாக கோலம் போட்டு அசத்துவார்களே, அப்படி வட இந்தியப் பெண்கள் சுவர்களில் ஓவியம் வரைந்து அசத்தும் கலைதான் மதுபாணி சித்திரங்கள். 


நமது பெண்கள் கோலம் என்ற அரிய கலையை கிட்டத்தட்ட மறந்து போய்விட்டார்கள். ஆனால், பீஹார் பெண்கள் பாரம்பரியத்தை மறக்கவில்லை. அதை அவர்கள் வெளிநாடு வரை கொண்டு போய்விட்டார்கள். நாம் நமது பாரம்பரியத்தை தொலைத்து நிற்கிறோம். 


சுவரில் சித்திரம் வரையும் கலையானது ஆதி மனிதர்களிடமிருந்து ஆரம்பித்து இன்றளவும் வாழ்ந்து வரும் கலை. தொடக்கத்தில் தகவல் தெரிவிப்பதற்காக தோன்றியதே இந்தக் கலை. இன்று பீஹார் பெண்கள் அதை அழியாமல் வளர்த்து வருகிறார்கள். பீஹாரிலுள்ள மிதியா கிராமத்துப் பெண்கள் தங்களது முன்னோர்களின் பழக்கமான சித்திரம் தீட்டுவதை இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ராமாயணம், மகாபாரதத்தில் வரும் காட்சிகளையே சித்திரமாக வரைகிறார்கள். 


பொதுவாக தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு தங்கள் வீட்டுச் சுவர்களை இத்தகைய ஓவியங்களால் பெண்கள் அலங்கரிக்கிறார்கள். இதை இறைவழிபாடாக கருதுகிறார்கள். இந்த ஓவியங்களில் இருக்கும் கலை நுணுக்கங்கள் வியப்பளிக்கிறது. அதிலும் ஜித்வர்பூர் மற்றும் ரண்டி கிராமங்களில் வரையப்படும் மதுபாணி ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.


இந்த ஓவியங்கள் இயற்கை வண்ணங்களை பயன்படுத்தியே வரையப்படுகின்றன. செயற்கை வண்ணங்களை உபயோகிப்பதில்லை. சுவரில் நன்றாக ஒட்டவேண்டும் என்பதற்காக மரப்பிசினும், வண்ணங்கள் எல்லாம் வெள்ளாட்டுப் பாலில் கலந்தும் வரையப்படுகின்றன. அதனால்தான் இந்த ஓவியங்கள் பழமை மாறாமல் மிளிர்கின்றன. 


மதுபாணி மற்றும் மிதிலா வகை சித்திரங்கள் எப்போது வரையத் தொடங்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆரம்பத்தில் சுவரில் மட்டும் வரையப்பட்ட இந்த சித்திரங்கள் பலரும் காணவேண்டும் என்பதற்காக திரைச்சீலைகளில் வரையப்பட்டது. ஆனாலும் வெளிநாட்டினர் இவற்றைப் பார்பதற்காக இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


தீபாவளியன்று அனைத்து விட்டு சுவர்களிலும் இந்த ஓவியங்கள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு அழகில் மிளிர்வது கண்கொள்ளக்  காட்சி. நீங்களும் ஒருமுறை இந்த கிராமங்களுக்கு போய்ப்பாருங்களேன்.










அனைவருக்கும் 
இனிய
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்!



51 கருத்துகள்

  1. நண்பரே !

    தாங்கள் எனக்கு செய்த வலைச்சர பெருமைக்கு மூன்று மாதங்கள் கழித்து நன்றி கூற வருகிறேன்... மன்னிக்கவும் !

    மிக அருமையான முறையில் வலைச்சரத்தை தொகுத்தளித்து, சிறப்பானவர்களை மேலும் சிறப்பு செய்து, அதில் என்னையும் சேர்த்து பெருமைபடுத்தியமைக்கு நன்றி !

    தொடருவோம் !

    பதிலளிநீக்கு
  2. நான் அறியாத கலையை பற்றிய அருமையான பதிவு ! மிக அருமையான படங்கள் !!

    ஆம், நமது பெண்கள் கோலத்தையும் அதுபோல பல கலைகளையும் " நவீனமயமாக்கல் " மாயத்தில் தொலைத்துவிட்டார்கள் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்களுடன் கூடிய அருமையான பதிவு செந்தில் குமார்.

    உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  4. கண்னைக் கவரும் படங்கள் நண்பரே
    இனிய திபாவளி நல் வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  5. புதிய செய்தி இந்தியாவைப்பற்றியே இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை...என்ற வருத்தம் வருகின்றது..

    பதிலளிநீக்கு
  6. படங்களும் தகவலும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. இதுவரை அறியாத விஷயம்
    அருமையாகப் படங்களுடன்
    பதிவாக்கித் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    குர்பானிதான் கேள்விப்பட்டிருக்கிறேன்... இன்று 'மதுபாணி' பற்றி பீஹாரிலுள்ள மிதியா கிராமத்துப் பெண்கள் வரையும் சித்திரம் தீபாவளிக்காக... கண்கவர் இயற்கை வண்ண ஓவியங்கள் கண்டு மகிழ்ந்தேன்.

    ‘தீபாவளி வாழ்த்துகள்’

    த.ம.3

    பதிலளிநீக்கு
  9. ஆஹா....! ரசித்தேன்...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  10. தமிழர்கள் மறந்துபோன விசயம்.. ஓவியத்தின் சிறப்பு பற்றி மிக அழகாக தெரிவித்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  11. அறிந்திராத தகவல்! ஓவியங்கள் அசத்தல்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!
      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  12. இதுவரை அறியாத விடயம் நண்பரே நன்றி
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!
      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  14. மதுபானி சித்திரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதே போன்று ஒரிசாவின் வர்லி சித்திரங்கள். என்றாலும் மதுபானிதான் சுற்றுலாக்காரர்களை கவருகின்றது. அதன் அழகும் நுணுக்கமும், நிறங்களும். சுவரில்லா சித்திரங்களை அங்குக் காண்பது என்பது மிகவும் அரிது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  15. அழகிய படங்கள்.. அருமையான தகவல்கள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  16. மதுபானி ,அவங்க பாணியே தனியாயிருக்குதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  17. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
    தீபாவளி வாழ்த்துகள்.

    மதுபானி ஓவியங்கள் பற்றி ஓவியர் என்ற முறையில் அறிந்திருக்கிறேனே தவிர, இத்தனை விரிவாக இப்போது தான் அறிகிறேன். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! தேர்ந்தெடுத்திருக்கிற படங்களும் அத்தனை அழகு! மிக நுணுக்கமான வேலைத்திறன் பிரமிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  18. ஓவியங்கள் அத்தனையும் அழகு. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  19. மதுரை நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
    "தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு"
    கலை கலாச்சாரத்தை, குறிப்பாக பீஹார் மாநிலத்து பெண்களின் சித்திரக் கலையை சிறப்பித்த மிக சிறப்பான பதிவு.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  20. அழகான படங்கள். அருமையான செய்திகள்.
    மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  21. வணக்கம்
    மனதைகவரும் படங்கள்...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள்!

      நீக்கு
  22. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய தீபாவளி வாழ்த்துகள்! நண்பரே!

      நீக்கு
  23. ஓவியங்கள் அனைத்தும் அருமை. இந்த ஓவியங்களுக்குப் பெயர் மதுபனி [மதுபானி அல்ல] ஓவியங்கள். மிதிலா பாஷை பேசும் பீஹார் மாநில பெண்கள் வரைவார்கள். எனது பக்கத்திலும் இந்த ஓவியங்கள் உண்டு. விருப்பமிருந்தால் படியுங்களேன்.

    http://venkatnagaraj.blogspot.com/2014/03/madhubani.html

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவை பார்த்தேன். மேலும் பல விவரங்கள் அறிட்ந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி! தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  24. மதுபானி ஓவியங்கள் அழகு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ!

    பதிலளிநீக்கு
  25. என்னவொரு கலாரசனை.. பாரம்பரியம் அழியாமல் காத்துவரும் பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்.. அழகான மதுபாணி ஓவியங்களோடு அவற்றைக் குறித்த சிறப்புகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை