• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், நவம்பர் 11, 2015

  பரவசம் தரும் பாம்புக் கணவாய்  பாம்புக் கணவாய் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே. இது எங்கிருக்கிறது? என்று கேட்பவர்கள் தென்னாப்பிரிக்கா போகவேண்டும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய கணவாய் இதுதான். பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதால் இந்த கணவாய்க்கு இப்படியொரு பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இதற்கு 'பிளைட் ஆற்றுக் கணவாய்' என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. 

  பிளைட் ஆற்றுக் கணவாய்
  பிளைட் என்ற டச்சு சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள். இந்த இடத்தை பார்க்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கி வழிவதால், இதற்கு 'ஹேப்பி ரிவர் கேன்யன்' என்று மற்றொரு பெயரும் உண்டு. 

  ஹேப்பி ரிவர் கேன்யன்
  இம்புமலங்கா பள்ளத்தாக்கில் இருக்கும் இந்த கணவாய் 25 கி.மீ. நீளம் கொண்டது. 2,461 அடி ஆழம் கொண்டது. சிவப்பு மணற்கற்களால் ஆன இந்த கணவாய் அழகின் இருப்பிடம்.   


  உலகில் இருக்கும் வேறு எந்த கணவாயையும் இதனுடன் ஒப்பிட முடியாது. பசுமை போர்த்திய இந்த அழகு கணவாயில் அழுகின்ற முகத்தின் தோற்றம் கொண்ட பாறை ஒன்று இருக்கிறது. 

  காடிஷி டுபா அருவி
  இந்த பள்ளத்தாக்கில் 660 அடி உயரம் கொண்ட 'காடிஷி டுபா' அருவி உள்ளது. இதுதான் உலகின் இரண்டாவது உயரமான அருவி. இங்கிருக்கும் வனப்பகுதியில் சுற்றி வருவதற்காக 'காடிஷி ட்ரெய்ல்' என்ற பயணத் திட்டமும் உண்டு. 

  காடிஷி ட்ரெய்ல்
  இந்த கணவாயின் உயரமான இடம் 'மரியெப்ஸ்காப்'. கடல் மட்டத்திலிருந்து 6,378 அடி உயரத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் பலவளையான மீன்கள், பறவைகள், அதிகமான குரங்கு வகைகள் உட்பட ஏராளமான பாலூட்டிகள் இருக்கின்றன. 

  மரியெப்ஸ்காப்
  இங்கு மலையேற்றம், பலூனிங், பாராகிளைடிங் போன்ற சாகஸ விளையாட்டுகளும் உண்டு.  இந்தக் கணவாயில் ஏகப்பட்ட அருவிகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்த்துச் செல்லும் இடங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்தக் கணவாயை சுற்றியுள்ள 'ட்ரகன்கென்ஸ்பெர்க்' செங்குத்து சரிவும் கண்ணைப் பறிக்கும் அழகு கொண்டது. சிறப்பான போக்குவரத்தும் மற்ற வசதிகளும் இந்த பகுதியை மறக்க முடியாத அழகு சொர்க்கமாக மாற்றுகிறது.

  பாராகிளைடிங்
  எப்படி போவது?

  தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகருக்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவைகள் உள்ளன. 13 மணி நேர பயணம். 7,101 கி.மீ. தொலைவு. ரூ.49,797 கட்டணம்.

  படங்கள் : இணையம்  45 கருத்துகள்:

  1. அருமையான பதிவு நண்பரே பழைய நினைவுகளை மீட்டி விட்டீர்கள் நான் ஒருமுறை போய் இருக்கின்றேன் (கனவில்)
   தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நிஜத்திலே போகும் தில் இருக்கும்போது எதற்கு ஜி கனவிலே போகிறீர்கள். விரைவில் நீங்கள் அங்கு பொய் வந்த பயண மற்றும் அனுபவக் கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

    நீக்கு
  2. ஆஹா பார்க்கும் போதே போக வேண்டும் போல் உள்ளது கில்லர்ஜி சகோ போல கனவிலாவது போய்வர வேண்டும் ..அவசியம்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நிஜத்திலேயே சென்று வாருங்கள்! அதற்கான வாய்ப்பு விரைவில் கிட்ட ஆண்டவனை வேண்டுவோம்!
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  3. நிச்சயம் பார்க்கிறேன் ,ஏதாவது ஒரு சினிமா படத்தில் :)

   பதிலளிநீக்கு
  4. டிக்கெட் எடுக்காமல் தங்களாலேயே பார்த்துவிட்டேன் நண்பரே
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அப்போ டிக்கெட் கட்டணத்தை எனக்கு அனுப்பி வையுங்கள்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  5. தலைப்பைப் பார்த்து ஏதோ புதுவகை கடலுயிரோ, கணவாயினத்தில் ஒன்றோ என வந்து பார்த்தேன்.
   அழகான படங்களுடன் தகவல். இவற்றை தமிழில் பள்ளத்தாக்கு எனவும் குறிப்பிடுவார்களே!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பள்ளத்தாக்கு என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  6. அன்புள்ள அய்யா,

   தென்னாப்பிரிக்காவில் உள்ள 'பிளைட் ஆற்றுக் கணவாய்' பற்றி மிகமிக அழகிய படத்துடன் அசத்தலாக காட்டியிருப்பது மிக்க மகிழ்ச்சி.

   காட்டுங்கள்... போய் பார்க்கிறோம்... எங்கு என்றால் தங்களின் தளத்திற்குச் சென்றுதான்!

   நன்றி.
   த.ம.5

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  7. பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா!

    நீக்கு
  8. மின்சாரம் வந்தவுடன் உங்கள் பதிவு தான்....

   பிரமிப்பு தோழர்...

   பதிலளிநீக்கு
  9. பிரமிக்க வைக்கும் இடங்கள். உங்கள் பதிவின் மூலம் நானும் பார்த்து ரசித்தேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  10. படங்களை பார்க்கும் போதெ மெய்சிலிர்க்கச் செய்யும் ஆச்சரிய உணர்வு !

   இவற்றையெல்லாம் பார்க்கும்போதுதான் தன்னை உயர்வாக காட்ட, இயற்கையை சிதைக்கும் மனிதைன் " சிறுமை " புரிகிறது !

   நன்றி
   சாமானியன்

   எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
   http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
   தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மனிதன் இயற்கையை சிதைத்த அளவுக்கு இயற்கை பேரிடர்கள் கூட உலகை சிதைக்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  11. எவ்வித சிரமமும் இன்றி எங்களை அழைத்துச் சென்ற வகையில் உங்களுக்கு நன்றிகள் பல.

   பதிலளிநீக்கு
  12. பாம்பு கணவாய் பார்க்க அழகாய் இருக்கிறது. அதே நேரத்தில் அதனுடைய பிரமாண்டம் பயத்தை தருகிறது. தகவலுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  13. கனவு கூட என்னால போக முடியாது போலிருக்கே......

   பதிலளிநீக்கு
  14. அழகு ஆக்ரமித்துள்ள அருமையான சுற்றுலாத் தலம்! பகிர்வினுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  15. மிக மிக அழகான இடம்! பார்க்கவே ரம்மியமாக இருக்கின்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

   கீதா: இங்கு ஒரு அணைக்கட்டும் உண்டு. ப்ளைடர் ரிவர் டேம் (BlyderRiver Dam) நீங்கள் கொடுத்திருக்கும் பாரா க்ளைடிங்க் படம் இருக்கின்றது இல்லையா..அதில் நடுவில் இருக்கும் அந்தப் பகுதிக்கு வலது பக்கம் பார்த்தீர்க்ள் என்றால் அதில் தெரியும் மூன்று பாறைகள் அவற்றை 3 ரோண்டவல்ஸ் என்கின்றார்கள். ஏனென்றால் அந்தப்பகுதியில் நிறைய ரோண்டவல்ஸ் இருப்பதால்-அதாவது சிலிண்டர் வடிவத்தில் சுவர்கள் கற்களாலும், சாணத்தினாலும் கலந்து வட்ட வடிவ சிலிண்டர் போன்று கட்டி மேற் கூரை கூம்பு வடிவத்தில் காய்ந்த புற்களினால் வடிவமைக்கப்படுவது . பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். சரி இத்துடன் இங்கு முடித்துக் கொள்கின்றேன்..

   நல்ல தகவல்களுடன் அழகான மனதைக் கவரும் இடத்தைப் பற்றிய பதிவு சகோ....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எப்போதுமே நான் எழுதாமல் விட்ட தகவல்களை கண்டுபிடித்து சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பதை இந்த பின்னூட்டத்திலும் காணமுடிகிறது. வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  16. அங்கே நிற்பது போல் நடப்பது போல் பெண்கள் படம் பிரமாதம்.(உங்கள் படங்களிலாவது அவர்கள் தனியே அங்கெல்லாம் போய் வரட்டும்..வாழ்த்துக்கள்.அருமையான பதிவு நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மதுரையில் எல்லாம் பெண்கள் தனியாகத்தான் போகிறார்கள். பாதுகாப்பற்ற இடத்தில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் செல்வதும் ஆபத்துதான். இந்த உண்மையைத்தான் பெண்கள் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். என்ன செய்ய?
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  17. பதில்கள்
   1. ஆம், நண்பரே! இது படக் கட்டுரைதான். பயணக் கட்டுரை இனிமேல்தான்.

    நீக்கு
  18. பார்த்தாலே பரவசப்படுத்தும் படங்களுடன் புதியதொரு சுற்றுலாத்தளம் பற்றி அறிய மகிழ்ச்சி.. நன்றி செந்தில்.

   பதிலளிநீக்கு
  19. அன்பின் நண்பரே ஒரு தொடர் பதிவுக்காய் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன் ...இணைக அன்புடன் அதற்கான இணைப்புhttp://killergee.blogspot.in/2015/11/1.html

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆஹா, கில்லர்ஜியிடம் இருந்து தப்பித்துக் கொண்டேன். உங்களிடம் மாட்டிக்கொண்டேன். மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் மீண்டும் வலைப்பக்கம் வந்தேன். என்னையும் கடவுளைக் காண வைத்துவிட்டீர்கள். விரைவில் ஆசைகளை பதிவிடுகிறேன்.

    நீக்கு
  20. தொடர் பதிவிற்கு அன்புடன் அழைக்கின்றேன்...

   இணைப்பு : http://naanselva.blogspot.com/2015/11/Kadavulai-Kanden-Chain-Post.html

   நன்றி...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மற்ற நண்பர்களின் ஆசைகளை தெரிந்து கொண்டு வருகிறேன்.

    நீக்கு
  21. வணக்கம்

   அறியாத புதிய புதிய இடங்கள் பதிவை பார்த்தபோது பிரமித்து விட்டேன்... தங்களின் தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம+1
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்