Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

உலகின் மிகப்பெரிய தேவாலயம்

லகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயமே. இதன் விதானம் 138 மீட்டர் உயரம் கொண்டது. விதானம் என்பது தலைகீழாக கவிழ்க்கப்பட்ட ஒரு கிண்ணம் போன்ற தோற்றமுடைய கூரை. 

என்ஜினீயர்கள், மின்சார வேலைப்பார்பவர்கள், விதானத்தில் மேலே ஏறுபவர்கள் என்று இந்த விதானத்திற்கு மட்டும் நிரந்தரமாக 70 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் விதானத்தின் மேல் ஏறி தேவைப்படும்போது ஜன்னல்களை திறக்க வேண்டும், மூட வேண்டும், பழுது பார்க்க வேண்டும், விளக்குகளை பொருத்த வேண்டும். திருவிழா நாட்களில் 5 ஆயிரம் விளக்குகளும், 1,000 தீபங்களும் கொண்டு இந்த விதானம் அலங்கரிக்கப்படுகிறது. 



ஆலயத்தின் முன்புறம் ஒரு லட்சம் பேர் கூடுவதற்கேற்ப மிகப்பெரிய முற்றம் ஒன்று இருக்கிறது. மக்களை ஆசீர்வதிப்பதற்காக போப் ஆண்டவர் பால்கனியில் காட்சி அளிக்கும் போது முற்றம் நிரம்பி வழியும். இந்த பால்கனியில் இருந்து பார்த்தால் நாட்டின் அனைத்துப் பகுதியும் தெளிவாக பார்க்க முடியும்.

இந்த ஆலயம் செயின்ட் பீட்டர் இறந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கட்டி முடிக்க 150 ஆண்டுகளுக்கு மேலானது. 1453-ம் ஆண்டு தொடங்கி 1609-ல் முடிவடைந்தது.

நான்காம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் மரத்தால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் கழித்து அழியத் தொடங்கியது. அந்த சமயத்தில் மறுபடியும் பிரம்மாண்டமான ஒரு தேவாலயமாக கட்டத் தொடங்கினார்கள். ஆலயத்தின் உள்ளே 43 ஆயிரம் பேர் மண்டியிட்டு இறைவனை பிரார்த்திக்க முடியும். திருவிழா நேரங்களில் ஆலயத்தில் இருக்கும் மிகப்பெரிய 800 தூண்களும் அலங்கரிக்கப்படும். 

இந்த தேவாலயத்தில் போப்பாண்டவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த சமாதிகளுக்கு 24 மணி நேரமும் பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் வழிபடுவதற்கென்றெ 27 இடங்கள் இருக்கின்றன. பைபிள் பல மொழிகளில் இங்கு வாசிக்கப்படுகிறது. ஆலயப் பொக்கிஷத்தில் ஆபரணங்களும், தங்கச் சிலுவைகளும் உலகத்திலுள்ள எல்லா வகையான நாணயங்களும் பதக்கங்களும் இருக்கின்றன. இவற்றை மட்டும் பார்பதற்கே பலநாட்கள் செலவிட வேண்டும். கலைக்கூடங்கள், நூலகங்கள், புராதனச் சேகரிப்பு பொக்கிஷங்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அத்தாட்சி அடையாள அட்டைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த அட்டைகள் இருந்தால் மட்டுமே பொக்கிஷ அறைகளுக்குள் நுழைய முடியும்.


பல கிலோமீட்டர் தொலைவுக்கு நின்று பார்த்தாலும் இந்த ஆலயம் நன்றாக தெரியும். ஆலயத்தின் மேல் பக்கத்தில் பொன் தகடுகள் பதிக்கப்பட்டு பளபளக்கின்றன. உச்சியில் பளிங்கு எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மைக்கேல் ஏஞ்சலோ என்ற உன்னத கலைஞனின் ஓவியப் படைப்புகள் விதானத்தை அலங்கரிக்கிறது. விதானத்தின் வடிவமைப்பும் ஏஞ்சலோவின் கற்பனைபடியே வடிவமைக்கப்பட்டது.

ஆதாமின் உயிர்ப்பு
ஆலயத்தை காவல் காப்பதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து 100 காவலாளிகள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் சீருடை அணிந்து இறகு சொருகப்பட்ட தொப்பியுடனும், ஈட்டியுடனும் நிற்கிறார்கள். 

காவலாளிகள்
மதகுருமார்கள் கருஞ்சிவப்பு ஆடையை அணிந்து இருப்பார்கள். போப்பாண்டவர் தங்க வேலைப்பாடுகளால் ஆன மூன்று முடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட குல்லாவை அணிந்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். அவரை உயர்ந்த பீடத்திற்கு தூக்கிச்செல்வார்கள். அவர் தனது கையை உயர்த்தி மக்களை ஆசீர்வாதம் செய்யும் பொது 'வைவாஇல் பா(ப)பா!' என்ற கோஷம் மைக்கேல் ஏஞ்சலோ விதானத்தை நிரப்பும். அந்த கோஷத்திற்கு 'போப்பாண்டவர் நீடூழி வாழ்க!' என்று பொருள்.

மதகுருமார்கள்
இது மிகப்பெரிய தேவாலயம் ஆகும். மிக உயரமான கிருஸ்துவ ஆலயம் எதுவென்றால் அது ஜெர்மனியில் உல்ம் என்ற நகரில் இருக்கிறது. 1377-ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் 188.7 மீட்டர் உயரம் கொண்டது. ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர்கள் பிரார்த்தனை நடத்த முடியும்.

மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம்

19 கருத்துகள்

  1. பழமையான ஆலயத்தை பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! தகவல்கள் வியக்க வைத்தன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. அழகான தேவாலயத்தைப் பற்றிய உங்கள் விவரணம் அருமை!

    இத்தலி போய் ரோம் போய் வாட்டிக வரை சென்று வந்த நீங்கள் அப்படியே வெனிஸ் போய் ஊர் முழுவதையும் படகிலேயே சுற்றிப் பார்த்து எங்களுக்கும் சொல்லியிருக்கலாமே. ஹஹஹ் (எப்படிப்பட்ட ஆசை பாருங்கள்!!) கில்லர்ஜியிடம் சொல்லியிருந்தால் உங்கள் செலவுகளைப் பார்த்துக் கொள்வார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி படகில் துண்டு போட்டு இடம் பிடித்து வைத்திருப்பாதால் அடுத்த பயணம் அதுதான்.
      வருகைக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு
  3. பழமையான மிகப்பெரிய செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! அங்கு போகமுடியாவிட்டாலும் இங்கிருந்து அதை அறிந்துகொள்ள உதவியமைக்கு நானறி!

    பதிலளிநீக்கு
  4. செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் பிரமாண்டம்...!

    பதிலளிநீக்கு
  5. நேரில் பார்த்ததுப் போல வர்ணனை அருமை

    பதிலளிநீக்கு
  6. செய்திகளும் விளக்கப்படங்களும் அருமை செந்தில்குமார்.

    அந்த ஆலயத்தையும் போப் ஆண்டவரின் அரண்மனையையும் ரோமாபுரியின் பல இடங்களையும் சுற்றி பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றதை குறித்து என்னுடைய இரண்டு பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். அவை எந்த பதிவுகள் என்பதை நீங்களே கண்டுபிடித்து வாசித்துவிட்டு வாருங்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டுபிடித்து வாசிக்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. இங்கே சினிமா படப் பிடிப்புக்கு அனுமதி இல்லையோ ?அதனால்தான் ,இயக்குனர் சங்கர் இன்னும் விட்டு வைத்திருக்காரோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமதி இருக்கிறது. வெளியில் மட்டும் எடுக்கலாம். அதற்கும் நிறைய விதிமுறைகள் உண்டு.

      நீக்கு
  8. தேவாலயத்தைப் பற்றிய அரிய தகவல்கள் நன்றி நண்பரே
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்

    தேவாலயத்தை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு... அரிய தகவல் பகிர்வுக்கு நன்றி த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. அருமையான படங்கள் மற்றும் சிறப்பான தகவல்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை