• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், நவம்பர் 17, 2015

  அவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என்று மாற்றியதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் ?

  (எனது நண்பர் நசீர் அஹமத் கூட்டாஞ்சோறு வலைதளத்தில் பகிரும்படி இந்த பதிவை எனக்கு அனுப்பிவைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் ஃபதா என்பவர் இதை எழுதியிருக்கிறார். நமது மக்களில் பெரும்பான்மையினர் கொண்டிருக்கும் ஒரு கருத்தை மாற்றுவதாக இந்த பதிவு இருப்பதால் இங்கு பகிர்கிறேன்.)  

  தாரிக் ஃபதா

  2015, மார்ச் மாதம் டெல்லியின் ஒரு பேச்சின்போது, இந்திய முஸ்லீம்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன் – இந்திய முஸ்லீம்கள் இஸ்லாமிய காலிபேட்டை நிராகரித்து, இஸ்லாமியராக வாழ வேண்டும்
  அந்தப் பயணத்தை ஆரம்பிக்கவேண்டுமென்றால், அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும் டெல்லி அரசாங்கத்திடமும், கொலைகார மொகலாய பேரரசரான அவுரங்கசீப்பின் பெயரால் டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை, அந்த அவுரங்கசீப்பால் தலை கொய்யப்பட்ட கவிஞரும், ஆன்மீகவாதியுமான அவரது சகோதரர் தாரோ ஷிகோ பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுகொண்டேன்.

  பாகிஸ்தானில் பிறந்த இந்திய முஸ்லீமான நான், இந்தியாவுக்கு 2013ஆம் ஆண்டு வந்தபோது, டெல்லியின் மகத்தான சாலைகளில் ஒன்றான சாலைக்கு அவுரங்கசீப் பெயர் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

  தனது அண்ணனைக் கொன்று ஆட்சியை கைப்பற்றிய இவர், தனது தந்தையை சாகும்வரைக்கும் சிறையில் அடைத்தார். ஏராளமான இஸ்லாமியத் தலைவர்களை தூக்கிலிட்டு கொன்றார். அவர் கொன்ற இஸ்லாமிய தலைவர்களில் குஜராத்திய முஸ்லீம்களில் ஒரு பகுதியினரான தாவூதி போஹ்ராக்களின் ஆன்மீக தலைவரும் அடக்கம். பேரரசராக இருந்தபோது, இசை, நடனம், மது ஆகியவற்றை முகலாய பேரரசுக்குள் தடை செய்தார். சிந்து மாகாணம் பஞ்சாப் மாகாணங்களில் இந்து பிராம்மணர்களின் உரைகளைக் கேட்க ஏராளமான முஸ்லீம்கள் கூடுவார்கள். அப்படி முஸ்லீம்களும், இந்துக்களும் ஒரு சேர கூடும் இடங்களான பள்ளிக்கூடங்கள், கோவில்கள் ஆகியவற்றை இடித்துத் தள்ளினார். முஸ்லீமல்லாதவர்கள் முஸ்லீம்களது உடைகளை அணிவதற்குத் தடைவிதித்து அவ்வாறு உடை உடுத்தினால் தண்டனையும் அளித்தார்.

  அவுரங்கசீப்பின் குரூரத்துக்கும், பிறமத வெறுப்புக்கும் உதாரணம் வேண்டுமே என்றால், முஸ்லீம் சூஃபியான சர்மத் கஷானி அவர்களையும், சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான தேக் பகதூரையும் கொன்றது போதும். தனது பேரரசில் இருந்த இந்துக்களை காபிர்கள் என்று கருதினார். அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தினார். ஷியா இஸ்லாமை பின்பற்றிய அரசர்கள் மீது ஜிஹாத் தொடுத்தார். அவரது அப்பாவின் தாத்தாவான பேரரசர் அக்பர் உருவாக்கிய தாராளவாத பன்மைவாத சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாமின் சுவடே இல்லாமல் போகும் அளவுக்கு துடைத்தெறிந்தார்.

  அவுரங்கசீப்புக்கு இணையாக இன்று ஒன்றை சுட்டமுடியுமென்றால் அது ஒஸாமா பின்லாடனோ அல்லது தாலிபானின் முல்லா உமரோ அல்ல. காலிப் எல் பாக்தாதி என்ற இஸ்லாமிய காலிபேட்டின் தலைவரைத்தான் அவுரங்கசீப்புகு இணையாக சொல்லமுடியும்.

  இருப்பினும், பெரும்பான்மையான இந்திய முஸ்லீம்களுக்கு அவுரங்கசீப்பின் குற்றங்கள் தெரியாமல் இருக்கலாம், அல்லது இஸ்லாமின் பெயரால் இந்துக்களையும் சீக்கியர்களையும் அவர்களை சமூகத்தின் கீழ்த்தரமான அடுக்கில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இஸ்லாமின் பெயரால் இந்தியாவை ஆண்ட ஒரே இஸ்லாமிய அரசர் என்ற சந்தோஷ உணர்வு காரணமாக இருக்கலாம்.

  ஆகவே, இந்திய முஸ்லீம்கள் உண்மையிலேயே இஸ்லாமிய காலிபேட் (ஐ.எஸ்.ஐ.எஸ்) அமைப்பை எதிர்க்கவேண்டுமென்றால், இந்த கொலைகாரரின் பெயரை நீக்கி அங்கே இந்து முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு பிரதிநிதியாக இருந்த அவரது சகோதரரின் பெயருக்கு மாற்றவேண்டும் என்று என்னுடைய பேச்சைக் கேட்கவந்தவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.

  அதன் பின்னர் இந்தியாவின் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஜனாதிபதி, நாட்டின் தெற்கு மூலையிலிருந்து வந்த முஸ்லீம், இஸ்லாமில் சிறப்பு மிக்க வாழ்ந்தவர், இஸ்லாமிய காலிபேட்டில் வாழாதவர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் மறைவைப் பற்றிய செய்தி வந்தது.

  ஜூன் 29ஆம் தேதியன்று, ட்விட்டரில், அவுரங்கசீப் சாலையை ஏபிஜே அப்துல் கலாம் சாலையாக மாற்ற இந்தியர்கள் தங்கள் அரசாங்கத்தை கேட்டுகொள்ள வேண்டுமென்று எழுதினேன்.

  அந்த கருத்து சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. பின்னர் டெல்லியின் மக்கள்சபை பிரதிநிதி மஹேஷ் கிரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு மாற்றவேண்டுமென்று கேட்டுகொண்டார்.

  நேற்று, இந்தியாவிலிருந்து என் நண்பர்கள் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, டெல்லி அரசாங்கம் அவுரங்கசீப் சாலையை ஏபிஜே அப்துல்கலாம் சாலையாக மாற்றப்போகிறது என்ற செய்தியை சொன்னார்கள். டொரோண்டோவில் அப்போது காலை 3 மணி. ஆகவே ஒரு நிமிடம் நான் கனவு காண்கிறேனோ என்று யோசித்தேன். நான் எழுந்து என் மனைவியை எழுப்பி இந்த செய்தியை பகிர்ந்துகொண்டேன்.
  அவள் தோளை குலுக்கி “கிழவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்றாள்.

  என்னால் முடிந்த அளவுக்கு பாங்க்ரா நடனத்தையும் லுங்கி டான்ஸையும் சேர்த்து ஆடினேன். நாங்கள் கொண்டுவந்த மாற்றத்தை என்னாலேயே நம்ப முடியவில்லை. (யாரேனும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இப்படி பெயர் மாற்றம் நடக்கும்போது என்னை டெல்லிக்கு அழைத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்)

  மனிதரது பெயரோ, இடத்தின் பெயரோ மாறுவது என்பது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது. சிலவேளைகளில் புதிய எஜமானருக்கு அடிமைத்தனத்தை முரசறைவிக்கும். மற்றும் சில நேரங்களில் முன்னாள் சர்வாதிகாரியின் அடிமைத்தனத்தை தூக்கி எறியும் அடையாளம் இவ்வகையான பெயர் மாற்றம்.

  ஆகவே மால்கம் எக்ஸ் தனது கடைசி பெயரை விட்டுவிட்டு அதன் இடத்தில் எக்ஸ் என்று எடுத்துகொள்வது முன்னால் அடிமை எஜமானர் கொடுத்த பெயரை துறப்பதற்கு அடையாளம். அதே மாதிரி, ஸ்டாலின் உருவாக்கிய அதிபயங்கரங்களை நிராகரிக்க, ஸ்டாலின்கிராட் நகரை ருஷியர்கள் மீண்டும் வோல்காகிராட் என்று மாற்றினார்கள்.

  நான் பிறந்த நாடான பாகிஸ்தானில் பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த பல பெயர்கள் மாற்றப்பட்டன. ஆகவே கராச்சியின் “விக்டோரியா சாலை” எல்பின்ஸ்டோன் சாலை” ஆகிய பெயர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட நாட்டின் அடையாளத்தை மேற்கொள்ள மாற்றப்பட்டன. ஆனால், மாறிய எல்லா பெயர்களும் பழைய தவறுகளை மாற்றமட்டுமே உருவாக்கப்பட்டவை அல்ல.

  கராச்சியின் 1949இல் நான் “லாலா லஜ்பத் ராய் சாலை” என்ற அமைதியான தெருவில் பிறந்தேன். இது அன்றைய இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கியமான தலைவரும், பஞ்சாபி எழுத்தாளரும் அரசியல்வாதியுமான லாலா லஜ்பத் ராயின் பெயரை கொண்டிருந்தது.

  லாகூரில் போலீஸால் தலையில் அடிக்கப்பட்டு 1928இல் இறந்த லாலாஜி அவர்களை பற்றிய எந்த ஒரு விளக்கமும் இந்தியாவுக்கு தேவையில்லை. ஆனால் எந்த இடத்தில் தன்னுயிரை இழந்தாரோ அந்த ஊரில், அவரது சமூக சேவை பற்றியோ அல்லது அவரது தியாகத்தை பற்றியோ தெரியுமா என்பதை விடுங்கள். அவர் யாரென்றே தெரியாது. இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு தன்னை “தூயவர்களின் தேசம்” என்று சொல்லிக் கொள்கிறது. அவர் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக அவர் பெயரை நீக்கியுள்ளது.

  எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ”குருமந்திர்” என்ற இடம் ஏன் பிறகு பெயர் மாற்றப்பட்டு “சபீல் வாலி மசூதி” என்று ஆனது என்று என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

  ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிஸ்டுகள் இந்த பெயர் மாற்றத்தை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். லாலா லஜ்பத் ராயின் பெயர் பாகிஸ்தானில் மாறியது தவறு என்றால், அதே மாதிரியான தவறு தானே அவுரங்க சீப்பின் பெயரை மாற்றுவதும் என்று விமர்சிக்கலாம். அது தவறு.

  இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்டத்தின் அடையாளம் லாலா லஜ்பத் ராய். பன்மைத்தன்மையையும், மதசார்பின்மையையும் போற்றிபாதுகாக்கும் இந்தியாவுக்கு நடந்த அடக்குமுறை, அதன் மீது திணிக்கப்பட்ட அரபிய கலாச்சாரத்தின் அடையாளம் அவுரங்கசீப்.

  ஜெய் ஹிந்த்!  20 கருத்துகள்:

  1. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... எழுத்தின் அளவு (Font size) சிறிது அதிகப்படுத்தலாம்.....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முதல் வருகைக்கு நன்றி, எழுத்தை பெரிது படுத்தினால் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொண்டு நிற்கிறது. படிக்க சிரமமாக இருந்தது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன்.

    நீக்கு
  2. வணக்கம்

   அறியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா...த.ம3
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  3. தாரிக் ஃபதானின் கோணம் சரிதான் என்று படுகிறது :)

   பதிலளிநீக்கு
  4. அறியாத தகவல்கள். திரு தாரிக் ஃபதா அவர்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு

  5. Please read this post:

   http://arumbithazh.blogspot.in/2015/11/blog-post_82.html

   Half-sense, and the other half? Should I tell?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அந்த பதிவையும் படித்தேன். இந்த பதிவு எப்படி ஒரு கருத்தை வலியுறுத்துகிறதோ அப்படியே அதுவும். பதிவை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  6. நண்பரின் கருத்து ஏற்றுக் கொள்ள கூடியதாகத்தான் இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. நண்பர்/சகோ செந்தில், அருமையான ஒரு கட்டுரையைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. மீண்டும் மீண்டும் வாசித்தோம். தாரிக்ஃபதாவின் இரு பக்க கருத்துகளும் சரியென்றே படுகின்றது. மட்டுமல்ல அவர் ஆய்ந்து அடுக்கியுள்ள செய்திகள் அவரது நல்ல நடுநிலையான மனதையும் சொல்லுகின்றது. அவர் இத்தனைத் தைரியமாக எடுத்துரைத்து எழுதியதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நிறைய தகவல்கள்! சரித்திரங்கள் எப்படியெல்லாம் உருமாறுகின்றன இல்லையா?! பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள். தாரிக்ஃபதா அவர்களுக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள். வணக்கங்கள். அருமையான கட்டுரை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஒரு பாகிஸ்தானிய இஸ்லாமியர் எழுதியதால் மட்டுமே இங்கு பதிவிட்டேன். இதற்கு மாற்றாக ஒரு பதிவை நண்பர் செந்தழல் சேது அவரது தளத்தில் வெளியிட்டிருக்கிறார். முடிந்தால் அதையும் படித்து இங்கு கருத்திடுங்கள். அதற்கான லிங்க் காரிகனின் பின்னூட்டத்தில் இருக்கிறது.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

    நீக்கு
   2. வாசிக்கின்றோம் நண்பரே! இணையம் பிரச்சனை பண்ணியதால் அந்தத் தளத்திற்கு அன்று செல்ல முடியாமல் ஆகிவிட்டது....வாசிக்கின்றோம்...கருத்தும் இடுகின்றோம்...இங்கு

    நீக்கு
   3. வாசித்தோம் நண்பரே! எது வரலாறு என்பதே பல சமயங்களில் ஐயப்பாடு வந்துவிடுகின்றது. ஏனென்றால் எல்லா வரலாறுகளிலும் இடைச் செருகல்கள், எழுதுபவர்களின் புனைவுகள், புரிதல்கள் என்று மாறுபட்டு "பாசின்ச் ஆன் சீக்ரெட்" என்ற விளையாட்டைப் போல் உருமாறி வருகின்றன. எல்லா மன்னர்களிடமும் ந்ல்லவையும் உண்டு தீயவையும் உண்டு. மனிதர்கள் தானே எல்லோரும்.

    உங்கள் பின்னூட்டத்தையும் பார்த்தோம். சரியாகச் சொல்லியிருந்தீர்கள் என்பது எங்கள் கருத்து. ஒருவர் எப்போதும் அதே போல்தான் இருப்பார்கள் என்பதில்லையே. நல்லதான மாற்றங்களையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் இல்லையா...தீயதைச் சொல்லும் போது நல்லதையும் சொல்லத்தானே வேண்டும் இல்லையா....

    பெயரை வைத்து நல்ல அரசியல் விளையாட்டுகள் என்பது மட்டும் புரிகின்றது....

    நீக்கு
  8. நல்லதொரு பகிர்வு. கருத்தும் எதிர்மறை கருத்தும் இருப்பது தான்.

   பெயரை வைத்து அரசியல் ஆக்கி விடுவது தான் சரியல்ல......

   பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு.மதங்களை கடந்து மனிதத்தை மதித்த பாகிஸ்தான் சகோதரருக்கு நன்றிகள் பல. ஔரங்கசீப் சாலைக்கு தாரா ஷுகோ வின் பெயரே பொருத்தமானது என்பது என் என்னம். லாலா லஜபதிராய் அவர்களின் பெயரை பாகிஸ்தானில் மாற்றியதை அறிந்து வேதனையுற்றேன். சுதந்திர போராட்ட தியாகிகளை இந்தியா பாகிஸ்தானில் போட்டி போட்டுக்கொண்டு அவமதிப்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. இருநாட்டு சுதந்திர போராளிகளும் பாரத்மாதாகி ஜே, ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், வந்தேமாதரம் என்று தொண்ட தண்ணீர் வற்றிப்போக கத்தியவர்கள் தான் என்பதை எல்லோரும் மறந்துவிட்டார்கள். இருநாடுகளிலும் சுதந்திர தின விழாவில் இருநாட்டு சுதந்திரப் போராளிகளையும் மதம், நாடு என்று பிரிதுப்பாராமல் போற்றப்பட வேண்டும். அதுவே உண்மையான சுதந்திரதினமாக இருக்கும்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்