உலகப் பொருளாதாரத்தின் பைபிள் என்று சொல்லக்கூடிய ‘டாஸ்கேபிட்டல்‘ அதாவது மூலதனம் என்ற புத்தகத்தை எழுதிய காரல் மார்க்ஸ் மறக்க முடியாத ஒரு மேதை. இவருடைய நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ்.
இவர்கள் இருவரையும் நட்புக்கு சிறந்த உதாரணமாக சரித்திரம் குறிப்பிடும். மார்க்ஸ் இறந்த போது ஏங்கல்ஸ் ஆற்றிய உரையே அதற்கு சாட்சி.
இவர்கள் இருவரையும் நட்புக்கு சிறந்த உதாரணமாக சரித்திரம் குறிப்பிடும். மார்க்ஸ் இறந்த போது ஏங்கல்ஸ் ஆற்றிய உரையே அதற்கு சாட்சி.
டார்வின் எவ்வாறு பரிணாம வளர்ச்சி விதியை கண்டடைந்தரோ அதுபோல் மார்க்ஸூம் மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை கண்டடைந்தான்.
அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன் உண்ண உணவு, உடுத்த உடை, குடிக்க நீர், இருக்க இடம் ஆகியவற்றை மானுடம் பெற வேண்டும் என்று இவன் உலகுக்கு சொன்னது எளிய உண்மைதான். ஆனால் அதோடு முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும், அது யாருக்கு பணிந்து செல்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வதில் தான் இவனுக்கு விருப்பம்.
முதலாளித்துவ சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்து விட்டு பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் அமர வைக்க அரும்பாடுபட்டான். போராட்டம் எனும் ஆயுதம் கொண்டு தன் இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தான்.
எத்தனை பேர் வேண்டுமானாலும் இவன் மீது குற்றம் சுமத்தலாம். பழி போடலாம். ஆனால் அவன் பாட்டாளிகளை நேசித்தான். உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்தான். மார்க்ஸ் பிறக்கும் போது யூதனாக பிறந்தான். புரட்சிக்காரனாக வளர்ந்தான். போராளியாக இவன் பெயர் நிலைத்து இருக்கும். அவன் எழுத்துக்களும் அப்படி தான்.”
இப்படி தனது நண்பனுக்காக ஏங்கல்ஸ் ஓர் உணர்ச்சிப்பூர்வ உரையாற்றினர்.
உலக பொருளாதாரத்தின் சூத்திரம் சொல்லும் புகழ்பெற்ற 'டாஸ் கேபிட்டல்' புத்தகம் இன்று பல பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த புத்தகத்தை தன் உயிரினும் மேலான நண்பர் ஏங்கல்ஸூக்கு அர்ப்பணித்திருந்தார், மார்க்ஸ்.
நட்பிலும் சரி, மார்க்ஸ் - ஜெனி காதலிலும் சரி, தொழிலாளர்கள் வாழ்விலும் சரி சரித்திரம் படைத்த மாமனிதர் காரல் மார்க்ஸ்!!
நல்ல தகவல்கள் தந்தீர் நண்பரே நன்றி
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
முதல் வருகைக்கும் முதல் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குமூன்று துறைகளிலும்
பதிலளிநீக்குநட்பு, காதல், பாட்டாளி வர்க்கம்
முழு நிலவாய் முத்திரை பதித்து விட்டு நீங்காத நித்திரைக்கு சென்று விட்ட
கார்ல் மார்க்ஸ் சிறப்பினை போற்றுவோம்.
நன்றி!
த ம +
நட்புடன், புதுவை வேலு
கட்டாயம். வருகைக்கும் கவிதைக்கும் நன்றி!
நீக்குஉலகப் பொருளாதாரத்தின் பைபிள் என்று சொல்லக்கூடிய‘டாஸ்கேபிட்டல்‘ அதாவது மூலதனம் என்ற புத்தகத்தை எழுதிய காரல் மார்க்ஸ்
பதிலளிநீக்கு#மதவாதிகள் மற்றும் ஏகாதிபத்திய நிலவுடமைக்கார்களால் அழைக்கப்பட்ட அல்லது சித்தரிக்கப்பட்ட வர்ணனை உலகப் பொருளாதாரத்தின் பைபிள் என்று சொல்லக்கூடிய‘டாஸ்கேபிட்டல்‘ என்பதாகும்.
அப்படி அழைக்கப்பெற்றால் அல்லது சித்தரிக்கப்பட்டால் கம்யூனிஸம் மற்றும் சோஷியஸ சித்தாந்தம் "மதம்" ஆக்கப்பட்டு அதனையும் வலதுசாரியமாக வளர்த்தெடுக்க முயற்ச்சித்தார்கள் . ஆகவே அதை நாம் புறக்கணித்து எழுதுவது அவசியமாகப்படுகிறது.
நட்பு,காதல், இவற்றோடு கம்யூனிஸ சோஷியலிஸம் நல்ல வரலாற்றுப்பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.
அது ஒரு ஒப்பிட்டுக்காக சொல்வது தோழரே, அதற்காக மதம் என்று தோண்டி துருவி பார்க்க வேண்டாம். இயல்பாக இருப்போம்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
ஆமாம் நண்பரே தங்கள் பகிர்வை படிக்கும் போது மூண்டும் படிக்க வேண்டும் என்கிற ஆவலை தருகிறது! ஏற்கனவே படித்துள்ளேன்! நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
நீக்குநல்லதொரு பதிவு நண்பரே! பொருளாதாரத்தின் அடிப்படையைச் சொல்லிய அவரது தத்துவங்களை நம் நாடு கம்யூனிசமும் இல்லை...சோசியலிஸ்டிக் டெமொக்ரெடிக் ரிபப்லிக் என்று பின்பற்றி வந்தாலும் அரசியல் பிரிவினர் அதிலும் இரு சாரிகளாகப் பிரிந்து...எந்த வித தத்துவத்தையும் பின்பற்றாமல் எங்கேயோ கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். அதனால் இப்போது நமது நாட்டை எந்தவித கோட்பாட்டிற்குள்ளும் அடக்க முடியவில்லை. அதனால் தான் தத்தளித்தல்...
பதிலளிநீக்குகீதா: டாஸ்காப்பிடல் பைபிள் ஆஃப் எக்கனாமிக்ஸ்....டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு அ பெக்கர். என்ற தத்துவத்தின் அடிப்படையிலான கொள்கைகள் மார்க்ஸினுடையது. ஆம் உண்மைதானே! ஏழ்மையும், வறுமையும், பட்டினியும் இருக்கும் போது டெக்நாலஜி வளர்ச்சி பற்றிப் பேசினால்??!! முதலில் அதை நீக்கிவிட்டு போதித்து அவர்களையும் அதில் இயங்க வைக்க வேண்டும். அந்தக் கம்யூனிச தத்துவங்கள் மார்க்ஸுக்கு அறிமுகப்படுத்தியவரே எங்கல்ஸ்தானே. அவரது உதவி இல்லாதிருந்திருந்தால் மார்க்ஸினால் புத்தகம் எழுதியிருக்க முடியாது. வறுமையில் வாடியவர். மார்க்ஸின் நூல்களுக்கும் எங்கல்ஸ் உதவியுள்ளார். மார்க்சின் மறைவுக்குப் பிறகு அவரது குறிப்புகளைப் புத்தகமாகக் கொண்டுவந்தவர் எங்கல்ஸ்தான். கார்ல் மார்க்ஸ் வெறுக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டு பல இன்னல்களைச் சந்தித்தவர். பொருகளுக்கும் மனிதருக்கும் இடையே உள்ள உறவை முதலாளித்தத்துவத்திற்கு எதிராக வெளிப்படுத்தியவர் மார்க்ஸ்தானே. ஃப்ரெடரிக் எங்கல்ஸ், மார்க்ஸ் இருவரின் தத்துவங்களையும் மிகவும் விரும்பிப் படித்தவள். தேர்வுக்காக என்றில்லாமல்.
மிக்க நன்றி சகோ...
கீதா.
மார்க்ஸ் வாழ்க்கையைப் படிக்கும்போது மனம் கனத்துப் போனது. என்னவொரு கொடிய வறுமை..! வறுமைக்கு பலியான குழந்தைகள்..! அதிலும் உயிர் துடிப்போடு ஒரு காதல்..! விட்டுகொடுக்காத நட்பு..! பிரமித்துப் போனேன்.
நீக்குமார்க்சின் அறிவு மட்டுமல்ல உலகப்புகழ்பெற்றது! அவரது ஜென்னியுடனான ஏழாண்டுக் காதலும் பின்னர் இருவரையும் துரத்தித்துரத்தியடித்த வறுமையும், அதோடு என்ன நடந்தும் பிரியாத இணையற்ற நட்பும்தான்! அருமையாக எழுதியமைக்கு நன்றி நண்பரே. இதுபற்றிய எனது பதிவு ஒன்றைப் படிக்கத் தங்களை அழைக்கிறேன் - “கம்பனும் காரல் மார்க்சும்” -http://valarumkavithai.blogspot.com/2014/03/blog-post_18.html இதில் கடைசியாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நட்பை ராம-அனுமன் நட்புடன் ஒப்பிட்டிருப்பேன். உவமை சரிதானா தெரியாது, ஆனால் அந்தச் சூழல் இரண்டும் அற்புதமானது அருமையான நினைவுகளைக் கிளர்த்திய பதிவுக்கு நன்றி நண்பரே.
நீக்குகட்டாயம் படித்து கருத்திடுகிறேன் அய்யா!
நீக்குவருகைக்கு நன்றி!
காரல் மார்க்ஸ் பற்றி தெரியும் ஆனால் அவரது நண்பரான பிரடெரிக் ஏங்கல்ஸ் பற்றிய தகவல் புதியது. பகிர்ந்தமைக்கு நானறி!
பதிலளிநீக்குஏங்கல்ஸ் இல்லாமல் மார்க்ஸ் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மார்க்ஸ் வாழ்வோடு ஒன்றியவர்.
நீக்குநட்புக்கேது எல்லை?
பதிலளிநீக்குதம +1
உண்மை, உண்மை.
நீக்குசிறந்ததோர் நட்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் நன்றி!
நீக்குநடபின் பெருந்தக்க யாவுள
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு நண்பரே
நன்றி
தம +1
தங்கள் வருகைக்கும் நன்றி!
நீக்குஆகா...! அருமை தகவல் தோழர்...
பதிலளிநீக்குநன்றி...
தங்கள் வருகைக்கும் நன்றி!
நீக்குநட்புக்கு இலக்கணம் கண்டவர்கள் இருவரும்... நன்றி! நண்பரே...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் நன்றி!
நீக்குநண்பரே,
பதிலளிநீக்குஒரு பக்கம் ஆபிரகாமிய மதங்கள் என்ற யூத கிருஸ்துவ இஸ்லாம் மதங்கள் . மறுபக்கம் அதே யூதனின் கடவுள் மறுப்புக் கோட்பாட்டில் பிறந்த காம்யூனிசம். இரண்டையும் கொண்டாடும் அல்லது வசைபாடும் நாம்தான் புத்திசாலிகளா அல்லது முட்டாள்களா என்று தெரியவில்லை.
எல்லாவற்றிலும் நல்லவையும் உண்டு, தீயவையும் உண்டு. நாம்தான் நல்லவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எங்கோ படித்திருக்கிறேன்.
நீக்குநல்ல தகவற் பகிர்வு சகோதரரே!
பதிலளிநீக்குநன்றியுடன் வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி சகோ!
நீக்குநண்பனின் நல்ல குணங்களை பாராட்டியும் அவற்றை பறை சாற்றியும் பேசும் நண்பர்களை இப்போது காண்பது அரிது.
பதிலளிநீக்குலண்டன் ஹை கேட் கல்லறையில் இளைப்பாறும் கார்ல் மார்க்ஸ் ஐ பற்றி சில நிமிடங்கள் நினைவு கூற வைத்த உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி, செந்தில் குமார்.
வாழ்த்துக்கள்.
கோ
தங்கள வருகைக்கும் நன்றி!
நீக்குபாட்டாளி மக்கள் புரட்சி வரலாற்றில் காரல் மார்க்ஸ் ஒரு ‘மூலதனம்’
பதிலளிநீக்குத.ம.11
தங்கள வருகைக்கு நன்றி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅன்பின் அடையாளம் இருவரும்... அவர்களை பற்றி சொல்லிய தகவல் சிறப்பு த.ம 11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள வருகைக்கு நன்றி!
நீக்குசே பீடல் பற்றி படித்துள்ளேன். தங்கள் பதிவு மூலமாக மார்க்ஸ் ஏங்கல்ஸ் பற்றி அறிந்தேன். பல புதிய விஷயங்கள். நன்றி.
பதிலளிநீக்குதங்கள வருகைக்கு நன்றி!
நீக்குதங்கள வருகைக்கும் நன்றி!
பதிலளிநீக்குநட்பை சிறப்பிக்கும் வரிகள்! அருமையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குஅந்த உண்மையான நட்புதான் உலக சரித்திரத்தையே மாற்றி அமைத்தது !
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குகருத்துரையிடுக