Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பின்லேடனின் பாலியல் அடிமை..!

சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சைக்குரியதுதான். அதிலும் கோலா பூஃப் என்ற கறுப்பினப் பெண் எழுதிய 'டைரி ஆஃப் லாஸ்ட் கேர்ள்' ஏகப்பட்ட அதிர்வலைகளை உலகுக்கு தந்த புத்தகம். அப்படியென்ன அந்த புத்தகத்தில் இருந்தது..?

கோலா பூப்
மொராக்கோ நாட்டில் உள்ள மராக்கேஷ் என்ற ஊரில் ஒரு உணவு விடுதியில் ஒருநாள் கோலா தனது நண்பனோடு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாள். அந்நாட்டு பெண்களின் இயல்பான கவர்ச்சியைவிட கோலாவுக்கு மிக அதிகமாகவே கவர்ச்சியை இயற்கை கொடுத்திருந்தது. அந்த கவர்ச்சி எத்தகைய ஆணையும் கிறங்கிப் போக வைத்துவிடும். 

அப்போது ஒருவன் கோலா அருகே வந்தான். "உங்களை அவர் கூப்பிடுகிறார்." என்றான். அவனை முறைத்துப் பார்த்த அவள், கோபமாக, "என்னைக் கூப்பிட அவர் யார்?" என்றாள். "ஸாரி கேர்ள்! அவர் கூப்பிட்டு நீங்கள் போகாவிட்டால் உங்கள் உயிர் மட்டுமல்ல.. உங்கள் நண்பனின் உயிரும் உங்களிடம் இல்லை." என்றான், அழைந்தவன்.

அதற்குள் ஏழெட்டுப் பேர் அவளின் ஆண் நண்பனை ரவுண்ட் கட்டி, பலவந்தமாக இழுத்துக்கொண்டு போனார்கள். கோலாவுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென்று கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்து விட்டது. இதுவே அமெரிக்காவாக இருந்தால் நடப்பதே வேறு. உடனே போலீஸ் வந்துவிடும். மொராக்கோ அப்படியல்ல. அங்கு வசதியானவர்களும் தாதாக்களும் வைத்ததே சட்டம். 

அந்த உயரமான நபர் கோலாவிடம், "இன்று முதல் நீ என் செக்ஸ் அடிமை" என்று சொல்லி, அன்றிரவே அவளுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார். கோலா நிலைக்குலைந்து போனாள்.

ஓரிரு நாட்கள் சென்றபின் பெரிய அரண்மனைக்கு அவளை அழைத்துச் சென்றார்கள். குளியல் அறைக்கூட தங்கத்தில் ஜொலித்தது. அங்கு 6 மாதம் சிறை வைக்கப்பட்டாள். அந்த 6 மாதமும் சொல்லமுடியாத அளவுக்கு பாலியல் கொடுமைகளை அனுபவித்தாள் கோலா.

ஒசாமா பின்லேடன்
ஒருநாள் சூடான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் வந்தார். அவருக்கு கோலா விருந்தாக்கப்பட்டாள். அந்த நபருக்கு கோலாவைப் பிடித்துப் போய்விட்டது. உடனே அவர் கோலாவை தன்னுடனே அழைத்துச் சென்றுவிட்டார். 

அவளின் அந்த கோடீஸ்வர எஜமானர் ஒரு சேடிஸ்ட். அதேசமயம் பல நேரங்களில் ஒரு சிறுவனைப் போல் நடந்து கொண்டார். சில சமயங்களில் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் காதலன் போல் வாஞ்சையோடு கொஞ்சுவார். விலை உயர்ந்த வைர மாலையை அணிவிப்பார். விசித்திரமான அந்த மனிதரை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினாள் கோலா. 

என்னதான் வைரங்களைக் கொட்டிக்கொடுத்தாலும் ஒரு செக்ஸ் அடிமையாக தன் வாழ்வை தொடர கோலா விரும்பவில்லை. ஒரு நாள் தனது எஜமானர் நல்ல மூடில் இருந்த போது, "என்னை விட்டுவிடுங்கள் நான் மீண்டும் அமெரிக்கா பொய் விடுகிறேன்." என்று கெஞ்சினாள். அந்த எஜமானருக்கு ஏராளமான மனைவிகள் இருந்தனர். தவிர, ஒரு பிரெஞ்ச் பெண்ணின் மீது வேறு அப்போது அவர் தீவிரமான காதலில் ஈடுபட்டிருந்தார். 

இப்படி பல சாதகங்கள் கோலாவுக்கு சாதகமாக இருந்ததால் அவளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். கூடவே 20,000 அமெரிக்க டாலர் பணம் கொடுத்து, அவளுக்கு அவ்வப்போது படுக்கை அறை திருப்திக்காக பரிசாக கொடுத்த நகைகள், வைரங்கள் அத்தனையும் எடுத்துச் செல்லவும் அனுமதித்தார்.


இதெல்லாம் நடந்தது 1996-ல் அப்போது கோடீஸ்வரராக மட்டுமே அறியப்பட்டிருந்த அந்த எஜமானர் பின்னாளில் உலகமே பயப்படும் மனிதராக மாறுகிறார். அந்த எஜமானர்தான் ஒசாமா பின்லேடன். 

"நானும் ஒசாமாவும் பல போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். இப்போது என்னிடம் ஒன்று கூட இல்லை. அந்த ஆள் இவ்வளவு பெரிய தீவிரவாதியாக மாறுவார் என்பது அப்போது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் பத்திரப்படுத்தியிருப்பேன்." என்கிறாள் கோலா பூஃப். 

புத்தகம் வெளிவந்த பின் கோலா பூஃப் உயிருக்கு பலமுறை குறிவைக்கப்பட்டது. பதிப்பகத்தில் குண்டு வீசப்பட்டது. இப்போதும் கூட ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்போடுதான் அமெரிக்காவில் நடமாடி வருகிறார் கோலா பூஃப்.  



28 கருத்துகள்

  1. தங்களின் இந்தப்பதிவின் மூலம் புதுமையான பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  2. கோலா பூவ் பற்றிய தகவல்கள் உங்க பதிவின் மூலம் இப்போது தெரிந்து கொண்டேன். ஒசமா பின்லேடன் தனது கொள்கை வழி பெண் அடிமைகள் வைத்திருப்பார் என்று எதிர்பார்த்ததே. வெளிப்படையாகவே 5 மனைவிகள் அவருக்கு இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் ஒரு பெண் பித்தராகவும் இருந்ததாக கூறுகிறார்கள்.

      நீக்கு
  3. வணக்கம் நண்பரே...

    அறியாத தகவல்கள் அடங்கிய இந்த பதிவில் அனைவரும் யோசிக்க வேண்டிய ஒரு செய்தியும் அடங்கியுள்ளது...

    மதத்தின் பெயரில் தீவிரவாதம் வளர்க்கும் ஒசாமா போன்றவர்கள் அந்த மதம் போதிக்கும் வாழ்க்கையிலிருந்து எந்த அளவுக்கு விலகி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும், மதம் என்பது இவர்களின் மன்னிக்க முடியாத செயல்பாடுகளை நியாயப்படுத்த போர்த்திக்கொண்ட போர்வை மட்டுமே என்பதை உணர வேண்டும்.

    நல்லதொரு பதிவு நண்பரே... தொடருவோம்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்கள்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. புதிய தகவல். இதுவரை அறியாதது. சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. ஒசாமா அப்படிப்பட்டவன் என்பது எங்கோ வாசித்ததுண்டு அது இப்போது சரிதையாக வெளிவந்திருக்கிறது போலும்...

    பதிலளிநீக்கு
  5. இதுவரை கேள்விப்படாத தகவலாக இருக்கின்றது நண்பரே இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்கு போய் வந்தோம் நான் அறியவில்லை தகவலுக்கு நன்றி
    தமிழ் மணம் பிறகு வருகிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரும் என்றால் யார் நண்பரே, பின்லேடன் உங்கள் கல்லூரித் தோழரா..!
      சும்மா..!!

      நீக்கு
  6. கோலா பூப் பெண் அழகியா ,பார்த்தால் அப்படி தெரியவில்லையே !பின் லேடன் பார்வையே வித்தியாசம்தான் போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை சொன்ன பகவான்ஜீயின் நகைசுவையை,வெகுவாக ரசித்தேன்.

      நீக்கு
    2. கோலாவை அழகி என்று எங்குமே சொல்லவில்லையே. கவர்ச்சி என்றுதான் வருகிறது. பெண் பித்தர்களுக்கு ஒரு குணம் இருக்கிறது. அவர்களுக்கு அழகான பெண்கள் தேவையில்லை. விதவிதமான வித்தியாசமான வடிவத்தில் பெண்கள் தேவை. கோலாவைப் பொருத்தவரை லேடன் மயங்கியது அவளின் பெருத்த மார்பகங்களைக் கண்டுதான். அதுதான் அவளை செக்ஸ் அடிமை ஆக்கியது.

      நீக்கு
    3. நண்பர் வேகநரியின் மீள் வருகைக்கும் நன்றி!

      நீக்கு
  7. வணக்கம் நண்பரே! தங்களை 'வளரி'விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி!
    ஒசாமா மதத் தீவிரவாதி தெரியும்!பெண்கள் விடயத்திலும் தீவிரவாதி என்பது புதிய செய்தி!
    என் 'எண்ணப்பறவை'க்கு தங்களை வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. நூல் முழுக்கவே கற்பனையாக இருபதற்கு வாய்ப்பு இருக்கிறது ..
    தம
    ஹை ஏழு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். ஆனாலும், பின்லேடனின் பின்புலத்தைப் பார்க்கும்போது முற்றிலும் கற்பனை என்று ஒதுக்கிவிடவும் முடியாது.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  9. புதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. தெரியாத புதுத் தகவல்கள்! பெண் பித்தர்களிடம் மாட்டும் பெண்களின் கதி மிகவும் பரிதாபத்துக்குரியது. பாதிக்கப்பட்ட கோலா பூப் தன் வேதனைகளைத் தைரியமாக வெளியிட்டிருப்பதற்குப் பாராட்டப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை