• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், ஏப்ரல் 05, 2016

  இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே மனிதர்

  சுடோமு யாமகுச்சி
  ந்த உலகம் தோன்றிய காலங்களில் இருந்து இன்று வரை இரண்டே இரண்டு அணுகுண்டுகள்தான் உலகில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அந்த இரண்டு அணுகுண்டும் வீசப்பட்ட இடம் ஜப்பான். அந்த இரண்டையும் தாங்கிக்கொண்ட நாடும் ஜப்பான் தான். அந்த நாட்டைப் போலவே இந்த இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரு நபர் இருக்கிறார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி.

  1916-ல் பிறந்த இவர். நாகசாகி நகரில் உள்ள 'மிட்சுபிசி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்'  நிறுவனத்தில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப்பார்த்து வந்தார். 1945-ம் ஆண்டு அந்த நிறுவனம் ஹிரோஷிமாவில் இருக்கும் தனது துணை நிறுவன வேலை விஷயமாக யாமகுச்சியை அங்கு  அனுப்பிவைத்தது.

  அணுகுண்டு வீச்சுக்கு முன்பு யாமகுச்சி
  ஹிரோஷிமோ சென்ற யாமகுச்சி அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தனது சொந்த ஊரான நாகசாகிக்கு திரும்ப தயாரானார். தன்னுடன் பணியாற்றும் அகிரா இவனாகா, குனியோஷி சடோ ஆகிய இருவருடன் புறப்பட்டார். 

  வெகுதூரம் நடந்து வந்தபின் தான் தனது பயணச்சீட்டை அந்த நிறுவனத்திலேயே வைத்துவிட்டது நினைவுக்கு வந்தது. உடனே நினைவுக்கு வர யாமகுச்சி மட்டும் தனது பணியிடம் வந்து, பயணசீட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். 

  அப்போது காலை 8.15 மணி. 


  ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்க போர் விமானம் 'லிட்டில் பாய்' என்ற உலகின் முதல் அணுகுண்டை வீசியது. அந்த இடத்திற்கும் யாமகுச்சி இருந்த இடத்திற்கும் 3 கி.மீ. தொலைவு இருந்தது. இருந்தபோதும் அணுகுண்டு ஏற்படுத்திய இடிபோன்ற சத்தம் அவரின் இடது காது ஜவ்வை கிழித்து விட்டது. ரத்தமாக கொட்டியது. தற்காலிக பார்வை இழப்பும் ஏற்பட்டது. அதோடு உடலின் இடது பக்கம் தீப்பிடித்து எரிந்தது. உடனே உணர்விழந்து மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இது நடந்தது 1945 ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி. 

  இரண்டு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்ட யாமகுச்சி உடல் கொஞ்சம் தேறியது. மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் இருந்ததாலும், யாமகுச்சியை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தாலும், அவரை அவரது சொந்த ஊரான நாகசாகிக்கு மருத்துவர்கள் மாற்றினார்கள்.  

  மறுநாள் காலை 11 மணி.

  அவர் தனது மேலதிகாரியிடம் ஹிரோஷிமா குண்டுவீச்சில் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க போர் விமானம் 'பேட் மேன்' என்ற இரண்டாவது அணுகுண்டை வீசியது. இதுவும் யாமகுச்சி இருந்த இடத்தில் இருந்து சரியாய் 3 கி.மீ. தொலைவில் நிகழ்ந்தது. ஆனால் இந்த முறை எந்தவித காயமும் இல்லாமல் யாமகுச்சி தப்பிவிட்டார். ஆனால் அந்த கொடுமையான சத்தம் அவர் காதை மீண்டும் பதம் பார்த்து, அவரை ஒரு வாரத்திற்கு காய்ச்சலில் படுக்க வைத்துவிட்டது.  

  நெருப்பு வடுக்கள்
  இப்படி உலகிலே இரண்டு அணுகுண்டு வெடிப்பிலும் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரே துரதிர்ஷ்டசாலி மனிதர் இவர் ஒருவர்தான். 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானிய அரசு 'இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர்' என்று இவரை கவுரவித்தது. அதன்பின் நாடு முழுவதும் தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழாக்கள் நடந்தன.  

  2010, ஜனவரி 4-ல் தனது 93-வது வயதில் கிட்னி மற்றும் வயிற்றுப் புற்றுநோயால் யாமகுச்சி மரணமடைந்தார். உண்மையில் இரண்டு அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்த ஆச்சரியமான மனிதர்தான் சுடோமு யாமகுச்சி.


  20 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு.

   இற்று என்னமோ திருநாளாக தமிழ்மணம் ஒரு கிளிக்கில் வாக்களித்து விட்டது!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  2. மிகவும் ஆச்சர்யமான தகவல்கள். நெருப்பு வடுக்களைப் பார்க்கவே நடுங்க வைக்கிறது நம்மை. பகிர்வுக்கு நன்றிகள்.

   நேற்று இந்தப்பதிவு வெளியிட்டவுடனேயே படித்து விட்டேன். பின்னூட்டமிட பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. ஏதேதோ ரோபோ பிரச்சனைகள் இருந்தன.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தற்போது சில வலைப்பக்கங்கள் இப்படித்தான் கருத்திட முடியாமல் இருக்கிறது. சிலவற்றில் சில நேரங்களில் கருத்துப் பெட்டியே மறைந்து விடுகிறது. அதனால் பின்னூட்டம் இட முடிவதில்லை. அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  3. வியப்பாகவும்,ஆச்சரியமாகவும் இருக்கிறது. எல்லாம் அவன் செயல் அல்லவா...இரண்டிலும் தப்பித்து வாழ்ந்தது.
   தம 3

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அவனுடைய செயலேதான். வருகைக்கும் வாக்குக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  4. ஜப்பானில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பதை மட்டுமே படித்தும், வாசித்தும் வந்த நிலையில் தாங்கள் எழுதி இருக்கும் இந்தத் தகவல் மூலமாக புதியதொரு செய்தியை அறிந்து கொள்ள முடிந்தது.

   பதிலளிநீக்கு
  5. சுடோகு சிந்திக்க வைக்கும் , இரு முறை உயிர் பிழைத்த சுடோமு வியப்பளிக்க வைத்தார் :)

   பதிலளிநீக்கு
  6. சகோ! அருமையான பதிவு. ஜப்பான் பற்றி நிறைய தகவல்கள் அறிந்திருந்தாலும் (மகன் செய்த ப்ராஜக்ட் மற்றும் அவன் கற்ற கராத்தே ஸ்டைல் ஒக்கினாவா கொஜுரியோ - அந்த ஸ்டைல் க்ரான்ட் மாஸ்டர்களில் ஒருவரான கோஜென் யமாகுச்சி க்ரான்ட் மாஸ்டரும் என்பதாலும்...அவரது நேரடி மாணவரான கார்னல் வாட்சனிடம் மகன் கற்றுக் கொண்டதாலும்.....இன்னும் சில....) ஆனால், இந்தத் தகவல் இப்போதுதான் அறிகின்றேன். கூடுதல் ஒரு தகவல் அறிய முடிந்தது. மிக்க நன்றி சகோ. பல அருமையான தகவல்களைத் தருகின்றீர்கள்...மிக்க நன்றி...
   நேற்று கருத்திட முடியவில்லை. இப்போதுதான் முடிந்தது...

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தகவல் பெட்டகமான தங்களுக்கும் என்னால் ஒரு தகவல் தெரிவிக்க முடிந்தது மகிழ்ச்சியே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  7. சுடோமு யாமகுச்சி அதிசயமான மனிதர்தான் பகிர்வுக்கு நன்றி நண்பரே
   த.ம.வ.போ.

   பதிலளிநீக்கு
  8. 3 கி.மீ தூரத்தில் வெடித்ததே இவ்வளவு பாதிப்பென்றால், அருகில் வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே பயமாயிருக்கிறது. கொத்துக்கொத்தாக லட்சக்கணக்கில் மக்கள் மாண்டிருப்பார்கள். இரண்டு அணுகுண்டு விபத்திலிருந்தும் ஜப்பான் மீண்டெழுந்தது தான் ஆச்சரியம். இரண்டு நிகழ்வுகளிலும் தப்பித்த ஒரே மனிதர் பற்றிய செய்தியை இன்று தான் அறிந்தேன். அறியாத புது தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. என்னைக்கவர்ந்த பதிவுகள் -2 ல் கூட்டாஞ்சோறு பற்றி எழுதியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்க்க அழைக்கின்றேன். http://unjal.blogspot.com/2016/03/2.html

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்னும் அருகில் இருந்திருந்தால் உயுருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை. கொடூரமான தாக்குதல்தான். தங்கள் பதிவில் எனது வலைப்பதிவு பற்றி தெரிவித்ததில் மகிழ்ச்சி. மிக்க நன்றி!

    நீக்கு
  9. இது போன்ற தகவல்களைத் தங்களால் தான் தர இயலும். பாராட்டுக்கள்!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்