Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சீஸர் வழியில் ஸ்டிக்கர் அரசாங்கம்..!

ரித்திரத்தில் மிக முக்கிய நாயகர்களில் ஒருவர் ஜுலியஸ் சீஸர். இவருக்கு எப்போதும் தன்னைப் பற்றி பெருமையாக பேசவேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய 25-வது வயதில் பல நாடுகளுக்கு சென்று அவற்றின் சட்ட திட்டங்களையும் கலைகளையும் தெரிந்துவர சீஸர் நினைத்தார். அதற்காக கி.மு.75-ம் ஆண்டில் கடல் பயணத்தை மேற்கொண்டார். 


அப்போது எதிர்பாரதாவிதமாக கடல் கொள்ளையர்களிடம் அவர் சென்ற கப்பல் மாட்டிக்கொண்டது. அப்படி மாட்டிக்கொண்டதும் கடற்கொள்ளையர்கள் ஒவ்வொருவரையும் விடுதலை செய்ய அவர்களது நாட்டிற்கு தகவல் அனுப்பினர். அதன்படி 20 தங்க காசுகளை கொடுத்தால் உங்கள் நாட்டு குடிமக்களை விடுதலை செய்து விடுகிறோம் என்று தகவல் அனுப்பினர். 

இதைக் கேட்ட சீஸர் கடுங்கோபம் கொண்டார். "என்னை கேவலப் படுத்தாதீர்கள்..! நான் வெறும் 20 தங்க காசுகள் மதிப்புதான் பெறுவேனா. நீங்கள் கூடுதலாக கேளுங்கள். குறைந்த பட்சம் 50 தங்க காசுகளாவது கேளுங்கள். அதுதான் எனக்கு கவுரவம்." என்றார். இதைக் கேட்ட கொள்ளையர்கள் மிக அலட்சியமாக சீஸரைப் பார்த்து சிரித்தார்கள். "இப்படி சிரிக்காதீர்கள் இது என் கோபத்தை தூண்டுகிறது. உங்கள் அனைவரின் கழுத்தையும் அறுத்து கொல்ல என்னால் முடியும்." என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தனர். 


சீஸருடன் வந்த சக பயணி ஒருவர் சீஸரைப் பார்த்து "நீ ஏன் உன்னையே இப்படி பெருமையாக பேசிக்கொள்கிறாய்? அது உனக்கு ஆபத்தாகக் கூட முடியும்." என்றார். அதற்கு சீஸர் "நான் யார் என்பதை நான்தான் சொல்லவேண்டும். எனக்காக பிறர் சொல்லமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியவற்றை தான் நான் கடைப் பிடித்து வருகிறேன்." என்றார் ஆக்ரோஷத்துடன்.  

இப்படியே 38 நாட்கள் கைதியாக இருந்து மீண்டு வந்தார். வந்ததும் முதல் வேலையாக வீரம் மிக்க ஆட்களை திரட்டிக்கொண்டு கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு தான் சொன்னபடியே அத்தனை பேரின் கழுத்தையும் அறுத்துக் கொன்றார். இந்த வெற்றியை ஏகப்பட்ட பணத்தை செலவழித்து பெரும் கொண்டாட்டமாக கொண்டாடினார். 


அப்போது "ஏன் இப்படி பெருமை கொண்டு சுய தம்பட்டம் அரசு செலவில் அடித்துக் கொள்கிறீர்கள்?" என்று அமைச்சர் ஒருவர் கேட்க, "உன்னுடைய தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே!" என்று கூறினார். சீஸர் கடைசி வரை அப்படியே வாழ்ந்தார். 

இப்போது புரிகிறதா ஸ்டிக்கர் ஒட்டுவது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று..!


20 கருத்துகள்

  1. சீஸர் சொன்னதும் செய்ததும்தான் சரி. அவரைப் பின்பற்றுவோர் அவரைப்போலவே ஜெயிக்கப்போவதும் உறுதியே. இதில் சந்தேகம் வேறு உள்ளதா .... என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. சீஸர் சுயதம்பட்டம் அடிப்பதற்காக அரசு செலவு செய்ததை அம்மா ஆட்சியோடு ஒப்பிடலாம். ஆனால் அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டபட்டது இன்னொருவர்கள் அன்பளிப்பாக கொடுத்த பொருட்களின் மேல் அல்லவா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. சர்வாதிகாரியான சீஸரை உத்தமன் போல படம் காட்டிவிட்டார்கள். வெற்றி பெற்றவர்களெல்லாம் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்ற பொது எதிர்பார்ப்பின் விளைவு. புனைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட..! இதுவும் கூட பொருத்தமாகத்தான் இருக்கிறது. வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. ஹா.... ஹா.... ஹா... இப்படியும் சொல்லலாமோ!

    பதிலளிநீக்கு

  5. ஓ. ஸ்டிக்கர் ஓட்டுவது இதற்காகத்தானா? உண்மையை உடைத்து சொன்னமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. உண்மையான தகுதி என்னவென்று சீக்கிரம் தெரிந்து விடும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பவும் வரும் என்றுதான் உளவுத் தகவல் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

      நீக்கு
  7. ஹஹஹஹஹஹ் செம!!! சீஸரும் ஸ்டிக்கரும் நு கிமு வை கிபி யுடன் முடிச்சுப் போட்டு அசத்திட்டீங்க செந்தில்....சரிதான்!!! ஸ்டிக்கர் மட்டுமில்ல தாத்தாவும் படம் போட்டுக்கிட்டாரே!!! ஆட்சியில் இருப்பவர்கள்/அரசியல்வாதிகள் என்றாலே சுயதம்பட்டம்தானோ??!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தாதானே தொடக்கமே, அதை தீவிரமாக்கியவர் அம்மையார்.
      வருகைக்கு நன்றி துளசி சார்!

      நீக்கு
  8. கதை பொருத்தமாக வருகிறது என்றாலும் நண்பர். திரு. வேகநரி அவர்களின் கருத்தும் சரியானதே....
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
    த.ம.வ.போ.

    நண்பரே முதலில் வந்து கருத்துரை போட்ட நினைவு தங்களுக்கு எழுதி வைத்த கருத்தை வேறு யாருக்கோ போட்டு விட்டேன் போலயே.. ஐயய்யோ....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் நண்பரே,
      பின்னூட்டம் நமது நண்பர்களில் யாராவது ஒருவருக்குதான் போயிருக்கும். பரவாயில்லை.
      வருகைக்கு நன்றி !

      நீக்கு
  9. நன்றாக புரிந்தது..ஸ்டிக்கர் ஒட்டுவதின் மகிமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிமை புரிந்து வாக்களித்த நண்பருக்கு நன்றிகள்!

      நீக்கு
  10. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப காலமாக தங்கள் பதிவு வரவில்லையே என்று நினைத்தேன். மீண்டும் வந்ததற்கு நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை