Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இனி பெண்கள் 'அதற்கு' கவலைப் படவேண்டியதில்லை

வெளியூர் பயணம் என்றாலே பெண்கள் கூச்சத்தோடு நெளிவார்கள்.
பயணம் செய்யும் பெண்களுக்கும் சரி...! பாத்ரூம் வசதியில்லாத கடைகளில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கும் சரி..! இருக்கும் மிகப் பெரிய தொந்தரவு இயற்கை உபதைதான். இதற்கு பயந்து பல பெண்கள் வெளியில் சென்றால் தண்ணீர் கூட குடிப்பதில்லை.


தேவையான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் நீர் பற்றாக்குறையும் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்குவதால் சிறுநீர்ப்பாதையில் தொற்று நோயும் ஏற்படுகிறது.

பெண்களின் இந்த அடக்க முடியா பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டது. 'ஈவா டிண்டர்' என்ற ஜெர்மானியப் பெண் அதை கண்டுபிடித்துள்ளார். அதற்கு 'பாக்கெட் யூரினல்' என்று பெயர். இதை டயபர் போல அணிந்து கொள்ள வேண்டும்.

இது சிறுநீரை ஜெல்லாக மாற்றி சேர்த்து வைக்கிறது. பெண்ணின் பிறப்புறுப்பில் இது கச்சிதமாக ஒட்டிக்கொள்கிறது. இதில் இருக்கும் 'பாலிமர் கிரிஸ்டல்' சிறுநீர் வெளியேறும் வேகத்தை விட 30 மடங்கு விரைவாக உறிஞ்சி சிறுநீரை கெட்டியான ஜெல்லாக மாற்றிவிடும்.

ஒருமுறைக்கு 300 மில்லியில் இருந்து 500 மில்லி வரை சிறுநீர் வெளியேறுகிறது. இதன் கொள்ளளவு ஒரு லிட்டர். தேங்கிய சிறுநீர் வெளியே கசிந்து விடுமோ என்ற பயமும் தேவையில்லை. துர்நாற்றம் வருமோ என்ற கவலையும் இதில் இல்லை.

ஒரு லிட்டர் நீர் உறிஞ்சப்பட்ட ஜெல் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் அளவில் தான் இருக்கும். 52 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

நிற்கும்போது, அமரும்போது, படுக்கும்போது என்று எல்லா சூழ்நிலையிலும் இதை அணிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போது மட்டும் இதை அணிய வேண்டாம் என்று இதை தயாரிக்கும் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இதை உபயோகிப்பது போலவே அழிப்பதும் சுலபம். குப்பைதொட்டியில் போட்டுவிடலாம். சுற்றுசூழல் பதிப்பு ஏற்படாது.

சரி, ஆண்களுக்கு எதுவும் இல்லையா? என்ற கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆண்களுக்கும் இது உள்ளது. பெண்களுக்கு 'லேடி பேக்' என்றும், ஆண்களுக்கு 'ரோடு பேக்' என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இது பெண்களின் பயணத்தை இனிமையாக்குகிறது என்று இப்போதே பெண்கள் சொல்ல தொடங்கி விட்டார்கள். 



1 கருத்துகள்

  1. இன்னும் என்னென்ன தான் கண்டுபிடிப்பார்களோ? ஆச்சரியமான தகவல்கள் சகோ.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை