Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இந்த விஷத்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்..!

வாட்சப்பில் வந்த தகவல் நல்லதாக இருந்ததால் இங்கு பகிர்கிறேன். பதிவெழுத நேரம் இல்லாததும் ஒரு காரணம்தான். 


ஐயா தயவு செய்து இந்த விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உண்ணாதீர்கள், மன்னிக்கவும் யாரும் உண்ணவேண்டாம் மன்னிக்கவும்! sugar disease is a slow poison இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?


இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிலிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.





1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.


2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.


40 கருத்துகள்

  1. அடப்பாவிகளா எதைத்தான் சாப்பிடுவது ச்சே உணவு உண்ணக்கூட பயந்து வாழ்ந்தால் எதற்காகத்தான் இந்த உயிர்.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவுக்குதான் அதிகம் பயப்பட வேண்டி இருக்கிறது நண்பரே!

      நீக்கு
  2. அருமையான விழிப்புணர்வு பதிவு! முன்பே நானும் இதைப்பற்றி விரிவாகப்படித்திருக்கிறேன். என்றாலும் தெளிவாக, விரிவாக அனித்தும் எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படித்ததைத்தான் பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  3. பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  4. நல்ல விழிப்புணர்வு பதிவு .தேங்காய்ப் பவுடருக்கும் இது மாதிரி யான நிலை என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்.மிக்க நன்றி பதிவுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் பவுடர் பற்றி எனக்கு தெரியவில்லை சகோ!

      நீக்கு
  5. வெள்ளையான சர்க்கரை என்று விளம்பரப்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட ஜீனியை தொடவே கூடாது என்றும் அதற்கு சாதாரண பழுப்பேறிய (அழுக்கான?) தெரு முனை கடைகளில் விற்கப்படும் ஜீனி அவ்வளவு மோசமில்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்ற நம்மூர் வகையறாக்கள் மிக நல்லது. இதே போல பணங் கல்கண்டு பல மருத்துவ குணங்கள் கொண்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே, கடைசியில் நமது பாரம்பரியம்தான் சரியென்று படுகிறது. கோல்கட் பற்பசை அறிமுகப்படுத்தும் போது கரியும் உப்பும் வேப்பங்குச்சி வைத்த பல் தேய்க்கிறீர்கள். அதெல்லாம் பல்லுக்கு கெடுதி என்று கூறி நம்மை ஒட்டுமொத்தமாக பேஸ்டுக்கு மாற்றினார்கள். இப்போது என்னவென்றால் உங்கள் பேஸ்டில் உப்பிருக்கா, வேம்பிருக்கா என்று திரும்ப நம்மையே கேட்கிறார்கள்.

      நீக்கு
  6. நமது நாட்டில் இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிலும் எதோ ஒரு ரசாயன பொருள் கலக்கிறார்கள். தடை செய்ய வேண்டிய அரசாங்கமும் அமைதியா இருக்கு.
    பத்திரிக்கை தொடர்பான துறையில் நீங்கள் இருப்பதால் நேரம் கிடைக்கும்போதுதொடர்ந்து இதுபோன்ற
    செய்திகளை பற்றி எழுதவும் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய அரசியல்வாதியை எப்போதுமே நம்பாதீர்கள். அவர்கள் நம்மை அடகுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள்.

      நீக்கு
  7. ரசாயனப் பொருட்கள் கலக்கப்படாத
    உணவுப் பொருட்களே இல்லை என்று ஆகிவிடும் போலிருக்கிறதே நண்பரே
    நன்றி
    தம=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே அப்படி ஆகிவிட்டது. மண்ணில் இருந்து விளையும் பொருட்களிலும் உரம், பூச்சிக்கொல்லி என்று ரசாயனம் நம் உடல் திங்க காத்துக் கொண்டிருக்கிறது.

      நீக்கு
  8. நம் உணவே ரசாயனம் ஆகிவிட்டதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. வழக்கமாக பழைய சோற்றினை நான் விரும்பி உண்பதுண்டு. தற்போது பழையதும் சாப்பிட முன்போல் நன்றாக இல்லை. நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

    பதிலளிநீக்கு
  9. Intha sarkarai pol inum 2 porul patri m.facebook.com/pasumai.puradchi/photos/a.265090303618030.62285.264772266983167/689506954509694/?type=1&refid=17&_ft_=top_level_post_id.986292364738811&__tn__=E suganesh80.blogspot.ru/2014/05/blog-post_4061.html

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு.. நன்றி... எனது வட்டத்தில் பகிர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. மருத்துவர்கள் தவிர்க்கவேண்டிய வெண்மை நிறம் கொண்ட உணவுப்பொருட்களில் சர்க்கரையையும் ஒன்று என்கிறார்கள். மற்றவை இரண்டும் பாலும் உப்பும் என்பது தெரிந்ததே. நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு. தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அரிசி முதற்கொண்டு வெண்மை உணவை தவிர்க்க வேண்டும் என்பதுதான் மருத்துவ உலகின் புது மொழி.

      நீக்கு
  12. சும்மா அனைத்துக்கும் வெற்றுப் பீதிகளை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.ரசயானம் இல்லாத உணவுப் பொருள் எங்கே இருக்கிறது? நமையும் தீமையும் அனைத்திலும் உள்ளது. சர்க்கரையை பொதுவாக குறைவாகப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். எதுவாக இருந்தாலும் அளவோடு இருந்தால்தான் நல்லதுதான் . கீரை உடலுக்கு நல்லது என்பார்கள். கீரையையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதுவும் நல்லதல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆய்வின் முடிவு நண்பரே, ரசாயனம் கலக்காத உணவு கிடைப்பதில்லை. அதனால்தான் நமது ஆரோக்கியம் கேட்டுக் கொண்டே வருகிறது. 40-க்கு மேல் தலைகாட்டிய சர்க்கரை நோய் இப்போது 10 வயது குழந்தைகளுக்கே வருகிறது. இயற்கையான விவசாயமே சிறந்தது. அதை நோக்கி இன்றைய விவசாயம் செல்வது ஆரோக்கியமான விஷயம்!
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  13. வணக்கம் சகோ,
    அருமையான பகிர்வு, நான் ஏற்கனவே இது பற்றி படித்தது உண்டு, உண்மைதான் வெள்ளையா இருக்கும் எல்லாம் ஆபத்து என்று, தாங்கள் கடைசியில் சொன்ன கருத்தும் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நான் சுகர் பிரி என்று சொல்லப் படுவதையே பயன் படுத்துகிறேன் !அது எப்படி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலும் பிரச்னை இருக்கிறது அய்யா, இன்னொரு முறை அதைப் பற்றி பதிவிடுகிறேன்.

      நீக்கு
  15. இதைப்பற்றி நானும் எங்கோ படித்திருக்கிறேன்! நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  16. பயனுள்ள பதிவு
    சிறந்த உளநல வழிகாட்டல்
    தொடருங்கள்

    தொண்ணூறு விழுக்காடு வாழ்ந்தோமா?
    https://mhcd7.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  17. Sugar must be taken in small quantities, agreed. But going into the processing details and say it is poisonous is ridiculous. Any chemical process involves many intermediate steps with chemicals. But people must understand the end product is the purified one. It will not contain all the reagents used in the process. Why scare everyone? Absolutely ridiculous.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக கேலிக்குரிய விஷயம் இல்லை நண்பரே! இதையெல்லாம் பொய் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்வது அறிவுடமையாகாது. இயற்கையாக கிடைக்கும் ரசாயனங்கள் மட்டுமே உடலுக்கு நல்லது. மனிதன் இரண்டு மூன்று கெமிக்கல்களை கலந்து புதிதாக உருவாக்கும் கெமிக்கல் எல்லாமே கெடுதல்தான்.

      நீக்கு
  18. சர்க்கரை நோய் வந்தபிறகும் சர்க்கரையை கைவிட முடியலை ,அந்த அளவுக்கு அஸ்காவுக்கு நாம் அடிமை ஆயிட்டோம் :)

    பதிலளிநீக்கு
  19. துணி துவைக்க நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க.... எறும்பு மொய்க்காம இருந்தா சரி.

    பதிலளிநீக்கு
  20. உண்மைதான் நண்பரே! நாங்கள் இருவருமே மிகவும் இனிமையானவர்கள்! ஹஹஹ...நல்லதொரு பதிவு நண்பரே!

    ம்ம்ம் இந்த ப்ராசஸ் பற்றி தெரிந்ததால்....அதுவும் சுகர் பராசசில் விலங்குகளின் எலும்புகள் கூட உபயோகிக்கப்படுகின்றன.....சுகர் ப்ராசஸ் ஆலைகளின் அருகில் ஒரு கெட்ட நாற்றம் வீசும் நீங்களும் அதை உணர்ந்திருப்பீர்கள்...அந்த மொலாசஸ் பிரிக்கப்படும் துர்நாற்றமே சொல்லிவிடும் அந்த கெமிக்கல் வாயு எவ்வளவு மோசமானது என்று.......கூடியவரை உபயோகிப்பது இல்லை...

    கீதா: நாங்கள் எங்கள் வீட்டில் நாட்டுச் சர்க்கரை, பனன்சர்க்கரை, ப்ரௌன் சுகர்தான் உபயோகப்படுத்துகின்றோம். வசதி உள்ளவர்கள் டெமரரா சுகர் எனப்படும் ரா சுகர் - ப்ரௌன் சுகரை உபயோகப்படுத்தலாம். நல்ல சுகர் அது...கெமிக்கல் கலக்கப்படாதது. கரும்பை அழுத்தி அதன் ஜூசை எடுத்து ஸ்டீம் செய்து கெட்டி பாகாக்கி,தண்ணீர் வற்றச்செய்து கனமான சர்க்கரை கிரிஸ்டல்களாக்குவது....இப்படித் தயாரிக்கப்படுவதில் எவ்வளவு சதவிகிதம் மொலாசஸ் இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி அதன் நிறம் மாறி வேறு வேறு பெயர்களில் வருகின்றது. டெமராரா அதிக அளவு மொலாசஸ் உடையது....இப்போதெல்லாம் நார்மல் வெள்ளை சுகரிலேயே கொஞ்சம் மொலாசஸ் கலந்து ப்ரௌன் சுகர் என்று விற்கப்படுகின்றது. கழுவினால் இளித்துவிடும்.....இப்போது ப்ரௌன் சுகர் நாச்சுரல் சுகர் என்று மக்கள் இயற்கைப் பொருள்களுக்கு மாறத் தொடங்கி அதற்கான டிமான்ட் அதிகமாவதால் வியாபாரிகள் பணம் பெருக்க ஏமாற்றத் தொடங்கி உள்ளார்கள்.....இப்படி வெள்ளையை ப்ரௌனாக மாற்றி.....ஏமாற்றுதல்.....
    சட்டைக் காலர் அழுக்கிற்கு வெள்ளைச் சுகர் பயன்பாடு அறிந்ததே......கோக் பானத்தை வாங்கி ஆசிட் போல உபயோகிக்கலாம் என்று டாய்லெட்டைச் சுத்தம் செய்ய உபயோகிக்கலாம் என்பது போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் துளசி சார், கீதா மேம்!
      வழக்கம் போல் விரிவான பின்னூட்டம், ஏராளமான விளக்கங்களுடன்..!
      நீங்கள் சொல்வது உண்மைதான் நாயின் எலும்புத்தூள் வெண்மைக்காக சேர்க்கப் படுவதாக சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும், உடல் நலத்துக்கு கெடுதி என்பது மட்டும் உண்மை.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை