• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், ஜூன் 25, 2015

  ராமக்கல் மெட்டு - கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்


  குலும்பன், குலும்பி தம்பதி
  ட்ஜெட் சுற்றுலாவுக்கும், ஒரு நாள் பிக்னிக்கிற்கும் ஏற்ற இடம் ராமக்கல் மெட்டு. வருடம் முழுவதும் நடு நடுங்க வைக்கும் குளிர்தான் இதன் சிறப்பு.

  தமிழ்நாடு - கேரளா வன எல்லைக்குள் கேரளா பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த முகடுதான் ராமக்கல் மெட்டு. தேக்கடி, மூணாறு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு தவறாமல் வந்து இந்த குளிரை அனுபவித்துவிட்டு போவார்கள்.

  18 ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில் பயணிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். காபி, மிளகு என நறுமணம் கமழும் மலைப்பயிர்களை ரசித்தப்படி பயணம் செய்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். காற்றாலைகளையும் பார்க்காலாம்


  அங்கு முதலில் நம்மை வரவேற்பது 60 அடி உயர ஆதிவாசி தம்பதிகள் சிலைதான். இம் மலையில் வாழ்ந்த குலும்பன், குலும்பி தம்பதிகளின் சிமெண்ட் சிலைதான் இந்த இடத்தின் ஹைலைட். சிலையை சுற்றியுள்ள பாறைகளில் நின்று கீழே பார்த்தால் ஆகாயத்தில் பறந்து கொண்டே பார்ப்பது போல் இருக்கும்.

  நம் கண்ணெதிரே பாதத்தின் கீழே கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம், கோம்பை ஆகிய ஊர்களைப் பார்த்து ரசிக்கலாம். கேரளாவின் மலைகளின் வனப்பையும் அழகையும் பார்க்க ரசிக்க சிறந்த இடம். 


  தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து 13 கி.மீ. மலை வழிப் பயணம் செய்தால் கம்பம் மெட்டு வருகிறது. அங்கிருந்து 10 கி.மீ. பயணித்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். ராமக்கல் மெட்டில் வீடுகள், கடைகள் உண்டு. இரவில் தாங்கும் விடுதிகள் இல்லை. கம்பம் நகரம் தான் தங்குவதற்கு ஏற்றது.  

  குளிரையும் வேகமாக வீசும் காற்றையும் அனுபவிக்க நினைப்பவர்களுக்கு ராமக்கல் மெட்டு அருமையான இடம்..!!! 
  34 கருத்துகள்:

  1. ராமக்கல் மெட்டு - கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர் - இந்த சுற்றுலாத்தளம் பற்றி இன்றுதான் தங்களின் இந்தப்பதிவு மூலம் அறிந்தேன். படங்களும் செய்திகளும் மிக அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  2. அருமையான இடத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. வாய்ப்பு கிட்டும்போது அவசியம் செல்வோம்.

   பதிலளிநீக்கு
  3. கடந்த மாதம்தான் குடும்பத்துடன் மூணாறு சென்று வந்தேன்
   இவ்விடத்தைப் பார்க்கத் தவறிவிட்டேனே நண்பரே
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
  4. உலகின் பல்வேறு நாடுகளுச் சென்றேன்! ஆனால் உள் நாட்டில் இது போன்ற இடங்களை பார்க்க இயலவில்லையே!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உடல் நலம் ஒத்துழைக்கும் போது பார்த்து விடுங்கள் அய்யா!

    நீக்கு
  5. தனிப்பதிவாக மாவட்ட வாரியாக முக்கியமான சுற்றுலா தலங்களை அனைத்து விபரங்களோடு எழுதினால் பலருக்கும் உதவியாக இருக்குமே?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எழுதிவருகிறேன் நண்பரே,
    அடுத்த வருடம் அது புத்தகமாக வெளிவர இருக்கிறது. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்!

    நீக்கு
  6. குலும்பன், குலும்பி தம்பதியரை விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் பதிவு !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பார்த்து வாருங்கள் பகவான் ஜி. குலும்பனும் குலும்பியும் குழந்தையோடு காத்துக் கிடக்கிறார்கள்.

    நீக்கு
  7. அறியாத ஓர் சுற்றுலா தளம்! படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  8. ஆகான இடம், பார்க்க வேண்டும். தங்கள் பகிர்வு அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

   பதிலளிநீக்கு
  9. ஒரு அருமையான சுற்றுலா தலத்திற்கு சென்றுவந்ததைப் போல் உணர்ந்தேன். தகவலுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் உணர்வுக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  10. ம்ம்ம்ப்பழைய நினைவுகளைக்கிளறி விட்டீர்கள் நண்பரே! புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்....ஆம்! சென்றிருக்கின்றோம்.....அருமையான இடம்...தங்கியது கம்பத்தில்தான்.....

   துளசி பிறந்து வளர்ந்து படித்த ஊர் ராசிங்கபுரம் , கம்பம் அருகில்.....   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களுக்கு மலரும் நினைவுகளை தருவதே எனது வேலையாகிப் போனது. மிக்க மகிழ்ச்சி!

    நீக்கு
  11. புதிய ஓர் இடத்திற்குப் பயணம் செய்து நீங்கள் ரசித்தவற்றை எங்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்

   பதிலளிநீக்கு
  12. வணக்கம்
   ஐயா
   அழகிய இடங்களை இரசித்தோம்... பகிர்வுக்கு நன்றி த.ம 14
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் வாக்கு பதிவுக்கும்...!

    நீக்கு
  13. காணக்கிடைக்காத காட்சிகளை கண் முன் கொண்டு வந்தது தங்கள் பகிர்வு. குலும்பன் குலும்பி புதுமையான பெயர்கள் அவர்களைப்பற்றிய தகவல் எதாவது இருக்கும் என நினைத்தேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. குலும்பன், குலும்பி தம்பதிகள் இங்கு முதன் முதலாக வந்த ஆதிவாசிகள் என்று சொல்லப்படுகிறது. அதைத்தவிர வேறு சிறப்பான தகவல் ஒன்றும் இல்லை.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்