Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கொள்ளிவாய்ப் பிசாசு அறையுமா..?



நான் தினம் ஒரு தகவலில் எழுதியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வாயில் நுரையுடன் ரத்தம் கக்கி திடீரென்று மரணமடைபவர்களை பற்றி  கிராமப்புரத்தில் ஒரு கதை சொல்வார்கள், "கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்து விட்டது. அதனால்தான் வாயில் ரத்தம் கக்கி செத்துவிட்டான்" என்று. உண்மையில் கொள்ளிவாய்ப் பிசாசு அறையுமா...! வெறும் காற்றாக சித்தரிக்கப்படும் ஆவியான கொள்ளிவாய்ப் பிசாசுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? என்று மருத்துவத் துறையினரிடம் கேட்டால், "அதெல்லாம் சும்மா...! முதலில் கொள்ளிவாய் பிசாசு என்ற ஒரு ஜந்து உலகில் இல்லை" என்கிறார்கள். வாயில் நுரை கக்கி சாவது எல்லாம் உடலில் ஏற்படும் கோளாறால்தான் என்று உண்மையைச்  சொல்கிறார்கள்.


ஹார்ட் பெய்லியர் என்ற இதயத்தின் செயல் திறன் குறைவதால் ஏற்படும் பாதிப்பே இந்த கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்த கதை. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வேயில் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் ஹார்ட் பெய்லியர் என்ற நோய்க்கு ஆட்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் 10 சதவீதம் பேருக்கு இந்த நோய் இருக்கிறது.

சரி,ஹார்ட் பெய்லியர் என்றால் என்ன? ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். புதிதாக ஒரு கார் வாங்குகிறோம். ஆரம்பத்தில் அது காடு, மேடு, மலை என்று எளிதாகப் பயணிக்கும். அதுவே பல ஆண்டுகள் ஓடி பழைய கார் ஆனா பின்பு என்ஜினின் சக்தி குறைந்த பின்பு மலைப்பகுதியில் ஏற திணறும். இப்படித்தான் இதயமும் வயது ஆக ஆக உடலின் எல்லா பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்ப முடியாமல் திணறுகிறது. இந்த திணறலைத்தான் ஹார்ட் பெய்லியர் என்கிறார்கள்.

இதயம் என்பது ஒரு பம்பிங் மோட்டார் போல செயல்படுகிறது. நுரையீரலில் இருந்து வரும் ரத்தத்தை பம்ப் செய்யும் மோட்டார்தான் இதயம். இதயத்திலிருந்து ரத்தக்குழாய்கள் மூலம் உடல் முழுக்க ரத்தம் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதயம் என்ற பம்பின் செயல்திறன் குறைந்து, அது வேலை செய்வது தடைப்பட்டால் என்னவாகும்? ரத்தம் நுரையீரலிலேயே தேங்கிக்கிடக்கும். தொடர்ந்து ரத்தம் நுரையீரலில் தேங்கும் போது அங்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. அந்த அழுத்தம் தாங்காமல் சிறு ரத்த குழாய்கள் வெடிக்க  நேருகிறது. இதெல்லாம் ஆரம்பநிலைதான், இதை சரி செய்து விடலாம். இவற்றில் எல்லாம் அசட்டையாக இருந்தால் இறுதிகட்ட நிலைதான் வாயில் ரத்தம் கக்கி இறப்பது.

ஹார்ட் பெய்லியர் உள்ளது என்பதை இரண்டு முக்கிய அறிகுறிகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். உடல் சோர்வடைவது, மூச்சு வாங்குவது. இந்த அறிகுறிகளை அசட்டை செய்தால் விளைவுகள் மோசமாகும். ஹார்ட் பெயிலியரின்போது உடல் பாகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் சப்ளை செய்யப்படாததால் உடல் சோர்வடைகிறது. சின்ன வேலை செய்தால் கூட மூச்சு வாங்குகிறது. இந்த அறிகுறிக்குப் பின்பும் கூட விபரீதம் புரியாமல் மெத்தனமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த அவர்களை 'அக்யூட் பல்மொனரி எடிமா' என்ற மோசமான கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். வாயில் நுரையுடன் சில சமயங்களில் ரத்தமும் சேர்ந்து வரலாம். இதைத்தான் கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்துவிட்டதாக கூறுகிறார்கள். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் தீவிர சிகிச்சை மூலம் காப்பாற்றி விடலாம். கொள்ளிவைப் பிசாசு அறைந்து விட்டது என்று சோகமாக இருந்தால் உயிர் பிரிந்துவிடும் அபாயமும் உண்டு. 

கொள்ளிவாய் பிசாசு எப்போதும் யாரையும் கொன்றதில்லை என்பதே உண்மை.

* * * * *





36 கருத்துகள்

  1. கொள்ளிவாய்ப்பிசாசு இதுதானா? நல்ல விளக்கம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கொள்ளிவாய்ப்பிசாசு தொடர்பாக சற்றொப்ப நீங்கள் சொன்ன கருத்தை என் நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். விழிப்புணர்வுப்பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. கொஞ்சம் திகிலான பதிவு என்று நினைத்து வந்தேன். கடைசியில் பிசாசை இதயத்தோடு இணைத்துவிட்டீர்களே? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் எழுதியதற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான, பயனுள்ள தகவல்கள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  5. அழகான விளக்கம் பயனுள்ள பதிவு நன்றி பாராட்டுக்கள் !!!

    நன்றி!!!

    பதிலளிநீக்கு
  6. எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  7. நண்பரே நல்லதொரு பகிர்வு...இந்த மருத்துவ உண்மை அறிந்தது என்றாலும் தாங்கள் மிக அழகாக எழுதியுள்ளீர்கள். நாங்களும் சில பேய் அடித்தது, சாமி வருவது என்று சொல்லப்படும் விசயங்களைக் குறித்து எழுதுவதாக இருக்கின்றோம்.....மருத்துவ குறிப்புகளுடன்...அது சைக்கியாட்ரி,நியூரோ சைக்கியாட்ரி சம்பந்தப்பட்டு வரும் ஒன்று....இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்கவில்லை அதனால் பதிவு அப்படியே உள்ளது....இப்போது இட்டுள்ள ஆவியுலக அனுபவத்தின் தொடர்ச்சியாக அதை எழுதலாம் என்ற ஒரு எண்ணம்...அப்போது தங்களது இந்தப் பதிவின் சுட்டியையும் குறிப்பிடுவோம்...

    மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமாக சுட்டிக்காட்டி எழுதுங்கள். காத்திருக்கிறேன்.!

      நீக்கு
  8. வணக்கம்,
    நல்ல பகிர்வு, தெரிந்துக்கோள்ள வேண்டிய தகவல்.
    இந்த கொள்ளிவாய்பிசாசுப் பற்றி கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் தான் தெரிந்துக்கொண்டேன்.
    கிராமப்பகுதிகளில் இன்றும் இக்கதை உண்டு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கொள்ளி வாய் பிசாசு பற்றி நான் வேறு மாதிரி கேள்விப்பட்டிருக்கிறேன். மீத்தேன் வாயு (Methene) அல்லது கொள்ளிவளி வாயு, சதுப்பு நிலங்களில் இரவு நேரங்களில் வெளிப்படும்போது திடீர் என்று ஒரு தீப்பந்தம் எரிவது போல் இருக்கும். இந்த வாயு எரிவதை மக்கள் கண்டு பயந்து இதனைக் கொள்ளிவாய்ப் பிசாசு என அழைப்பது உண்டு. இந்த பயத்தில் சுரம் கண்டு படுத்தவர்களும் உண்டு, இறந்தவர்களும் உண்டு.
    இருப்பினும் இதயம் இயங்கா நிலைக்கான காரணத்தை விளக்கியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மீத்தேன் வாயு போலவே பாஸ்பரசும் சில சமயங்களில் தானாக பற்றிக்கொண்டு எரிவதை பார்த்து கிராமங்களில் கொள்ளிவாய் பிசாசு என்பார்கள். இங்கு நான் எழுதியிருப்பது கொள்ளிவாய் பிசாசு அறைவது பற்றி. இதுவும் கிராமங்களில் நிலவும் ஒரு கட்டுக்கதைதான்.

      நீக்கு
  10. நல்ல விளக்கம் நண்பரே கொள்ளிவாய் பிசாசுக்கு இதயம் உண்டா என்று கேட்க நினைத்தேன் பிசாசே இல்லை என்று சொல்லுவதால் நோ கொஸ்ட்டீன் நண்பரே...
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை! எளிமையாக புரியும்படி பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. உடல் நலம் பேணுதல் முக்கியம் என்ற கருத்தினை அழகாகச் சொன்னீர்கள்...!

    பதிலளிநீக்கு
  13. அனைவரும் தெரிந்துவைத்திருக்கவேண்டிய அவசயமான தகவல்கள் சிறப்பாக பகிர்ந்திருக்கிங்க.

    பதிலளிநீக்கு
  14. கொள்ளி வாய் பிசாசு பற்றிய விழிப்புணர்வு.. பகிர்வு.. அருமை... .

    பதிலளிநீக்கு
  15. இதயம் செயலிழப்பு பற்றிய தகவல்களை சுருக்கமாக சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை