Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இறக்கும் இந்திய குழந்தைகள்




ந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொருத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கை பார்க்கும் போது சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த இளமை இந்தியாவின் குழந்தைகள் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை. 

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான 'சேவ் த சில்ரன்' கூறுகிறது. இந்த மோசமான நிலை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வங்காள தேசம் மற்றும் நம்மை விட மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளை விட குழந்தைகள் மரணம் அடையும் விகிதம் இந்தியாவில் மிக அதிகம்.

ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட 3.8 குழந்தைகள் ஒவ்வொரு நிமிடமும் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான். 


உண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன் நமது குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது மிக அதிக அளவு. 

ஐ.நா.வின் கணக்கீடுகள் படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. பெருமளவில் போலியோ தடுப்பு மருந்துகள் தரப்பட்டாலும் போலியோவால் பாதிக்கப்படுபவர்களில் 33 சதவீதத்தினர் இந்தியாவில்தான் உள்ளனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது. 

2008 தகவலின்படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ சுத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கபடுவதாலும், பொறுப்புணர்வு குறைந்த அரசுமே இதற்கு காரணம் என்கிறது 'சேவ் த சில்ரன்' அமைப்பு. 


இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.

இதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் இளமையான மக்கள் தொகை இந்தியாவுக்கு சாதமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் இந்தியா உள்ளது.

22 கருத்துகள்

  1. நண்பரே! மிக மிக வேதனையான விஷயம். வருங்கால பாரத சிற்பிகள்!!! என்று நாம் பெருமையாகச் சொல்லும் குழந்தைகள் கவனிக்கப்படாமல் போவது, வறுமையில் வாடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம். இதுஒரு புறம் இருக்க, வறுமையில் வாடும் இச்சிறுவர்கள் மும்பைப் பகுதிகளில் ரயில்வே ட்ராக்குகளில் மக்களால் தூர எறியப்படும் உணவை எடுத்துச் சாப்பிடுகின்றார்கள். பசியை மறக்க வேண்டி பெட்ரோல் வாசனையை முகர்ந்து முகர்ந்து ஒரு வித மயக்க நிலைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளுகின்றனர். ஒரு சிலர் போதைக்கும், குடிக்கும் உட்படுத்திக் கொள்ளுகின்றனர்....இதனாலும் இறப்பு விகிதம் அதிகமாகின்றது...வருங்காலச் சிற்பிகள்! நாங்கள் மக்களி தொகை பற்றி மால்துசியன் தியரியையும் இணைத்து எழுத முற்பட்டு சில தகவல்கள் சேகரிக்க முனைந்த போது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன. அதில் குழந்தைகள் பற்றியும். உங்கள் அளவிற்கு புள்ளிவிவரம் சேகரிக்கவில்லை. ஆனால் ஒரு பதிவு எழுத முனைந்து வருகின்றோம். அப்போது நீங்கள் இதற்கு முன் எழுதிய மக்கள் தொகை பற்றிய பதிவையும் இந்தப் பதிவையும் சுட்டிட விழைகின்றோம் உங்கள் அனுமதியுடன்...

    பதிவு அருமை ஆனால் வேதனையான செய்தி இல்லையா நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக மிகுந்த வேதனையான செய்திதான். தங்கள் பதிவுக்கு எனது பதிவுகளை தாரளமாக பயன்படுத்திக் கொள்ளாம்.
      வழக்கம் போல் அருமையான பின்னூட்டம்.
      வருகைக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு
  2. "பொறுப்புணர்வு இல்லாத" என்று சொல்ல வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது அரசு தனது மக்களை குடிமக்களாக நினைத்தால் தானே பொறுப்பாக இருப்பதற்கு வெள்ளையன் எப்படி மக்களை அடிமையாக நினைத்தானோ அதேபோல்தான் இப்போதைய ஆட்சியாளர்களும் மக்களை நினைக்கிறார்கள்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. சிந்திக்வைக்கும் சிறந்த பதிவு
    ஓட்டு வேண்டி நாற்காலியில் குந்தும் தலைவர்கள்
    ஓட்டுப் போட்ட மக்களின் பிள்ளைகளைக் கணக்கில் எடுக்காதது
    இந்த நிலைமைக்கு இட்டுச் செல்கிறது.

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  4. 33 சதவீதம் போலியோவால் பாதிப்பா?
    குழந்தைகளையே காப்பாற்ற முடியாத நிலையில் இந்தியா வேதனை தரும் தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை மட்டும் காத்துக்கொள்கிரார்கள். மக்களை கண்டுகொள்வதில்லை.

      நீக்கு
  5. கிராமங்களில் 58%இறப்பு என்பது அதிர்ச்சியளிக்கிறது!! சரியான வழிகாட்டுதல் இன்றியும் அருகில் மருத்துவமனை வசதிகள் இல்லாததும் கூட ஒரு பிரச்சினை!!
    நன்றி!!

    பதிலளிநீக்கு
  6. நகரங்களில் போலியோ ஒழிப்புக்கான முயற்சி சுறுசுறுப்பாகவே இருக்கிறது;கிராமங்களில் அது போல இருக்கிறதா எனத் தெரியவில்லை.மக்களின் அறியாமை முற்றிலும் அகற்றப்பட்டால் ஒழிய விடிவு காலம் பிறக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலும் மழைக் கிராமங்களில் நிலைமை படு மோசம். வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு

  7. //2008 தகவலின் படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். //

    இந்தியாவில் உள்ள ரோட்டரி சங்கங்களின் முழு முயற்சியால் இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள். தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை.

    இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதிற்கு கீழே இருந்தும் மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக 5 விழுக்கடுக்கும் கீழே நிதி ஒதுக்கப்படுவது வேதனையான தகவல். அரசு இலவசங்களுக்கு ஒதுக்கும் நிதியை குழந்தைகள் நலதித் திட்டத்திற்கு ஒதுக்கலாம்.ஆனால் குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லையே? என் செய்ய?

    விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் உண்மை குழந்தைகளுக்கும் வாக்குரிமை இருந்தால் ஒருவேளை இந்த அரசியல்வாதிகள் அவர்களை கண்டிருப்பார்கள்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. மிகவும் வேதனையான பதிவு நண்பரே

    இதற்கெல்லாம் நாமும் ஒரு காரணமே என்ற குற்ற உணர்வுதான் எனக்கு வருகிறது
    ஆம் நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கத் தெரியாமை இதே இந்தியாவில்தானே ஒரு இரவு தங்குவதற்க்கு 50 லட்சம் கொடுத்து செலவு செய்யும் கோமாண்களும் வாழ்கின்றார்கள்
    இந்தியா ஏழை நாடு என்று சொல்லவே முடியாது ஆனால் நல்ல மனிதர்கள் குறைந்த நாடு என்று சொல்லலாம் நிறைய எழுதலாம் என்று நினைக்கிறேன் நேரமில்லை சாரி
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டில் நல்ல ஆட்சியாளர்களே இல்லை என்பதே உண்மை. இருக்கும் கொள்ளைகாரனில் எவன் குறைவாக கொள்ளையடிக்கிறான் என்பதும், யார் அதிக இலவசம் தருகிறார்கள் என்பதும் தான் அரசியல் வியாதிகளை தேர்ந்தெடுக்க வைக்கிறது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
    2. ஹும் சாக்கடையில் எந்தச் சாக்கடை நல்லது என்பது போல்....

      நீக்கு
  9. பதில்கள்
    1. நாட்டின் நிலைமை நமக்கு வேதனையாக இருக்கிறது. அரசியல் வாதிகள் கோடிகோடியாக சேர்ப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை