அது நாகர்கோயிலில் நடைபெற்ற இலக்கிய கூட்டம். என் நண்பர் ஒருவர் என்னையும் அழைத்திருந்தார். எனக்கு பேசத்தெரியாததால் வழக்கம்போல் பார்வையாளனாக கலந்துக் கொண்டேன். அங்கு பல விவாதங்கள் நடந்தன. இலக்கிய சொற்பொழிவுகள் அரங்கேறின. அப்போது ஒரு எழுத்தாளர் சொன்ன தகவல் இன்னும் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. அது பாரதியார் பற்றிய தகவல். நாம் இத்தனை காலம் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்த ஒரு நம்பிக்கையின் மீது வீழ்ந்த அடி.
எழுத்தாளரும் கவிஞருமான அவர் சிங்கப்பூர் தமிழர்கள் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கிறார். அவர் தங்கியிருந்த ஓட்டலில் இவரைப் போலவே விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மற்றொருவரை சந்தித்திருக்கிறார். அவரிடம் நமது எழுத்தாளர் கொஞ்சம் தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசியிருக்கிறார். அதற்கு அந்த பெரியவர், "எனக்கும் தமிழ் தெரியும். உங்களுக்கும் தமிழ் தெரியும். அப்படிருந்தும் ஏன் இடையிடையே ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். ஆங்கில சொற்கள் கலக்காமல் பேசுங்களேன். நன்றாக இருக்கும்." என்று கூறியிருக்கிறார். இதனால் இயல்பாகவே அவர் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. தினமும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
மூன்று நாட்கள் அந்த ஓட்டலில் இருந்ததில் அவரிடம் மிக நெருங்கிப் பழகிவிட்டார் நமது எழுத்தாளர். அந்த நெருக்கத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அந்த நபர் சுப்ரமணிய பாரதியின் தம்பி மகன். பாரதியைப் பற்றி பல அறியப்படாத தகவல்களை அவர் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்றுதான் மேலே நான் சொல்லப் போவதாக சொன்ன தகவலும்.
பாரதியார் கண்ணம்மா என்ற பெயரில் கண்ணனை பற்றி பாடியதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கண்ணம்மா என்ற பெயரில் ஒரு பெண் இருந்ததாகவும். அந்தப் பெண்ணைத்தான் பாரதியார் பாடியதாகவும், அந்தப் பெண் ஒரு விதவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பாரதியின் வீட்டுக்கு எதிரேதான் அந்தப் பெண் இருந்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஐந்து அண்ணன்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பாரதியாரை மிரட்டியிருக்கிறார்கள். கண்ணம்மா என்ற பெயரில் பாடல் எழுதக்கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறார்கள். பாரதிதான் அஞ்சாநெஞ்சனாயிற்றே இந்த மிரட்டலை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கண்ணம்மா பெயரில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
பொறுமையின் எல்லையை கடந்த சகோதரர்கள் ஒரு கட்டத்தில் பாரதியாரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் இதற்கு முதல் நாள்தான் கோயில் யானை வேறு பாரதியாரை கீழே தள்ளிவிட்டிருக்கிறது. பாரதிக்கு பலத்த காயம்தான், யானை தள்ளியதால் அல்ல, சகோதரர்கள் அடித்ததால். ஒருசில நாட்களில் பாரதியார் இறந்து விடுகிறார். அவர் மரணத்துக்கு காரணம் யானை அல்ல. என்று மீண்டும் அழுத்தமாக அவர் கூறியதாக எழுத்தாளர் கூறினார். இதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் பாரதி சார்ந்த குடும்பத்தினரே கூறும் போது அதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை.
அப்போதிருந்த எனக்கு இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் இதை விளக்கினால் நன்றாக இருக்கும். விளக்குவார்களா..!!!
வணக்கம் நண்பரே கண்ணம்மா விடயம் அவருடைய கற்பனைக்காதலி என்றுதான் நான் அறிந்திருக்கின்றேன் மற்ற விடயங்கள் புதிதாக இருக்கிறது
பதிலளிநீக்குதமிழ் மணம் இணைப்புடன் 1
கண்ணம்மா என்ற பெண்ணாக கண்ணனை வடித்து அதில் பாடல் புனைந்ததாக சொல்வார்கள். ஆனால் இந்த எழுத்தாளர் புது குண்டை அல்லவா தூக்கிப் போடுகிறார்.
நீக்குதிடுக்கிட வைக்கிறது. மருத்துவர்களோ பாரதி வீட்டாரோ காயங்களை பார்த்திருக்கக் கூடுமே?
பதிலளிநீக்குஇருக்கலாம். அந்த சூழல் நமக்கு தெரியவில்லை.
நீக்குஇது யாருக்கும் எந்த விதத்திலும் பயன் தராத ஒரு தகவல். பொய்யாக இருந்தாலும், உண்மையாக இருந்தாலும், இதனால் பாரதியின் மீது எந்த களங்கமும் இல்லை. வெறும் சேறு வீச மட்டுமே உபயோகப் படும்!
பதிலளிநீக்குதேவையில்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்க வேண்டுமா?
இதை நான் வழிமொழிகிறேன்.
நீக்குபாரதியார் மீது பள்ளிப் பருவத்தில் இருந்தே மிகப் பெரிய காதல். அதனால் தான் இந்த செய்தி என்னை பாதித்தது. மற்றபடி பாரதியாருக்கு யாரும் களங்கம் கற்பிக்க முடியாது.
நீக்குஇந்தச் செய்தியினால் பாரதி பெயருக்கு களங்கம் உண்டாவது புரியவில்லையே?!
நீக்குநான் இதைப் படித்த போது உண்மையில் அவர் மீதிருந்த மதிப்பு குறையவேயில்லை. கண்ணம்மா என்பது கண்ணனைப் பற்றியது என்பதும் எனக்குத் தெரியாது. காதலி கண்ணம்மா என்பது manifestation of conceptual endearment என்றே எண்ணியிருந்தேன். பெருங்கவிகள் இப்படி ஒரு imaginary heroவை முன்வைத்து யாப்பது இலக்கியத்தில் இயல்பாகப் பார்க்கலாம். அப்படி உண்மையில் ஒரு நபர் turned out to be his muse என்றால் அற்புதம். களங்கம் இல்லை. கண்ணம்மா பாடல்களுக்கிப் புத்துயிர் வந்தாற்போல் நினைக்கிறேன்.
பாரதி என்றத் தனிப்பட்ட மனிதருக்கு இப்படி அடி உதை காயங்கள் ஏற்பட்டு அதனால் அவர் மரணத்தின் காரணம் குழப்படியாகும் பட்சத்தில் இதை விசாரிக்க முயல்வதில் என்ன தவறு? இது அவதூறு என்பதாவது உறுதியாகுமே?
நானும் அப்பாதுரை அய்யாவை வழிமொழிகிறேன்! கவிஞர்களின் உலகம் வேறு, வாழ்க்கை வேறு!! அதை இப்படி தனித்துவத்தோடு தான் கையாளவேண்டும்!
நீக்குசிலைகளுக்கு ஒரு மாடல் இருப்பதைப்போல , கண்ணம்மா என ஒரு பெண் இருந்திருந்தால் அவர் பாரதியின் பாடல்களுக்கு ஒரு இன்ஸ்பிரேசன். அவ்ளோ தான். அதை கண்டிபிடிப்பதால் பாரதிக்கு களங்கம் வரும் என்பதே அவரை சாதாரணர் ஆக்கும் செயல்! இதனால் அந்த பெண்ணுக்கும் களங்கம் இல்லை, பாரதிக்கும் களங்கம் இல்லை என்றே தோன்றுகிறது. உடனே காதுகளை மூடிக்கொண்டு அபசாரம் , அபசாரம் பாரதி அப்படிப்பட்டவராக இருக்கமுடியாது என ஏதேதோ கற்பனை செய்பவர்களுக்கும், அந்த கண்ணம்மா(அப்படி ஒருவர் இருந்திருந்தால்) அவர்களுது அண்ணன்களுக்கும் வித்யாசமே இல்லை. நீங்க கையைக்கொடுங்க அப்பாதுரை சார்! கவலைய விடுங்க செந்தில் சார்!
நீக்குமரணச் சடங்கிலே கலந்து கொண்டது 16 அல்லது 24 பேர். என்பதால் தட்டிக் கேட்காமலும் விட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குஉண்மையாக இருக்கக் கூடாதென்றில்லை. ஆனால் ஒளி வட்டம் கொடுத்தாகிவிட்டது. இனி இவற்றையெல்லாம் வடிகட்டி தருவார்கள். பருகி ஆனந்தப்படவேண்டியதே!
50 வருடத்தில்- இன்றைய பிரபலங்களுக்கும் ஒளி வட்டம் இருக்கும், அப்போதும் நம் தலைமுறைகள் குழம்பும்.http://www.nambalki.com/2015/09/blog-post_12.html- இதையும் படிக்கவும்
தங்களின் வாதம் உண்மையே. இன்று நாம் கொண்டாடும் பாரதியை அன்று யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இது பாரதிக்கு மட்டுமல்ல எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும். வாழும் காலத்தில் கண்டுகொள்ளாமல் இறந்தப் பின் போற்றுவது பெரும் படைப்பாளிகளின் சாபமாகவே இருந்திருக்கிறது.
நீக்குமுடிந்ததை அலசி எந்த பயனும் இல்லை தோழர்...
பதிலளிநீக்குஉண்மைதான். அவர்மீது கொண்ட அன்பினால் இந்த தகவலை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோழரே! அவ்வளவுதான்!
நீக்குமுடியாததை எப்படி அலசுவது தனபாலன்?
நீக்குதவறான தகவல் என்றே எண்ணுகின்றேன் ஐயா
பதிலளிநீக்குயானை தள்ளிவிட்டதால் பாரதியார் இறந்ததாக கூறுவதே தவறு ஐயா
யானை தள்ளிவிட்ட பின்னரும், பாரதியார் சற்றேறக்குறைய பத்து மாதங்கள்
உயிரோடு இருந்திருக்கிறார், கட்டுரை எழுதியிருக்கிறார், பாடல்கள் இயற்றி இருக்கிறார், ஒரு நாடகம் கூட எழுதியிருக்கிறார், நாடகத்தின் பெயர் கூட கோயில் யானை என்று படித்த நினைவு
நன்றி நண்பரே
தம +1
யானை தள்ளியதாக கூறுவதே உண்மையில்லை என்றுதான் அந்த உறவினரும் சொல்லியிருக்கிறார். பொதுவாக நாம் மதிப்பவர்களைப் பற்றி ஒரு அவதூறு என்றால் நம்மால் அதை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்த பதிவே!
நீக்குயானைத் தாக்கிய பிறகு அவர் நீண்ட நாட்கள் உயிரோடு இருந்ததாகத்தான் நானும் படித்திருக்கிறேன். இந்தச் செய்தி உண்மையோ, பொய்யோ, இப்போது 10 பைசாவுக்கு உதவாது!!! பாரதியாரின் தங்கை மகன்? பெயர்? இதுவரை வெளிச்சத்துக்கு வராத பெயர்? பாரதியாரின் பேரனின் மனைவி வருடா வருடம் சங்கீத சீசனில் பார்ப்பதுண்டு. எல்லோரிடமும் குறைகளும் இருக்கும். நிறைகளும் இருக்கும். மிகை நாடி மிக்கக் கொள வேண்டியதுதான்! யதுகிரி அம்மாள், சகுந்தலா பாரதி போன்றோர் புத்தகம் எழுதி இருக்கிறார்கள். செல்லம்மா பாரதியின் உரை வானொலி வடிவம் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் உறவில் யாரும்...?
பதிலளிநீக்குஅந்த எழுத்தாளர் அவரின் பெயர் உறவின் முறை போன்ற எல்லாவற்றையும் விலாவாரியகத்தான் சொன்னார். நான்தான் எதையும் குறிப்பெடுக்க வில்லை. அதனால்தான் விரிவான தகவலை கூறமுடியவில்லை.
நீக்குகண்ணம்மா என்ற எதிர்வீட்டுப் பெண்ணைப் ப்ற்றிப் பாடுவது களங்கமா? குறையா? எப்படி ஸ்ரீராம்?
நீக்குபுதிய செய்தியைக் கூறியிருக்கின்றீர்கள். சற்றே யோசிக்க வேண்டியுள்ளது. உரிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இதனை உறுதிப்படுத்த வாய்ப்புண்டு.
பதிலளிநீக்குதங்களின் பதில்தான் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. மற்ற நண்பர்கள் இதை ஏதோ குற்றம் போல் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பத்திரிக்கையாளனுக்கும் ஆய்வாளருக்கும் உள்ள ஒற்றுமை இதுதான். நாம் அதிகமாக மெனக்கெடும் ஒரு விஷயம் ஒரு பைசாவுக்குக் கூட பிரயோஜனமில்லாமல் இருக்கும். ஆனால் அதற்காக நம் தேடுதலை நிறுத்திவிடுவதில்லையே!
நீக்குஇந்த தகவல் பொய் என்றே கருதுகிறேன்.
பதிலளிநீக்குபொய்யாகவே இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும்!
நீக்குபொய்யாக இருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குபொய்யாகவே இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும்!
நீக்குஇந்தச் செய்தியில் ஒரு குற்றமும் இல்லை என்ற உங்கள் நம்பிக்கையைத் தெரிவித்துவிட்டு எதற்குப் பொய்யாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? :-)
நீக்குஉண்மையாக இருந்தாலும் ஒரு தவறுமில்லை.
விதவைக்கு வாழ்வு தருவதில் ஒரு குற்றமும் இல்லை. ஆனாலும் மாகவியைப்பற்றி இப்படித்தான் இருந்தார் வாழ்ந்தார் என்று படித்து பழகிய மனதுக்கு திடீரென இப்படி ஒரு தகவல் கேட்க நேர்ந்தால் அது பொய்யாகவே இருக்க வேண்டும் என்றும் நினைக்கத்தோன்றிது அவ்வளவே அப்பாதுரை சார். வேறொன்றுமில்லை.
நீக்குநூல் விமர்சனம் சிறப்பு விமர்சனத்தில் குறிப்பிட்டிருப்பது போல அனைவரையும் கவரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ!
நீக்குஇதைப் பற்றி பேசி ஆக வேண்டியது ஒன்றுமில்லை,,,,,
பதிலளிநீக்குஇருந்தாலும் இல்லாவிட்டாலும் இப்ப என்ன செய்ய முடியும்,
இவைகளை விலகியேப் போவோம்.
மிக்க நன்றி சகோ!
நீக்குபாரதியின் தம்பி மகன் பெயர் வயது அவர் பாரதி காலத்தில் இருந்தாரா என்பன போன்றசெய்திகள் இல்லாதபோது நம்பமுடியவில்லை. இப்போது அது பற்றி பேசி என்ன பயன். என் தளத்டில் ஒரு கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் வாசிக்கவும் கலந்து கொள்ளவும் அழைப்பு.
பதிலளிநீக்குஅவர் குறிப்பிட்டார் அய்யா!
நீக்குஅன்று நான்தான் குறிப்பெடுக்கும் முன்னேற்பாட்டோடு போகவில்லை. கூட்ட நெரிசலில் அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
தாங்கள் அறிவித்த போட்டி விவரங்களைப் பார்க்கிறேன். இயன்ற வரை கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். நன்றி அய்யா!
ஒருவர் போனபின்பு புறங்கூறுவது போல ஆகிவிடும் இத்தகைய செய்திகள்!
பதிலளிநீக்குவேண்டாமே இதில் உண்மை பொய் ஆராச்சி!
தமிழ்மொழியை வளர்த்த, ஓங்கச் செய்த உயர்ந்த உள்ளத்தினர்!
இது புறங்கூறுவது இல்லை சகோ! அதிக மதிப்பதினால் ஏற்பட்ட வேதனையால் விடை தேட முயற்சிக்கிறேன்.
நீக்குகதையை நிஜமாக்க சாட்சியை தேடிஅலையிற மாதிரிதான் இதுவும்....
பதிலளிநீக்குஅப்படியும் கூட இருக்கலாம்.
நீக்குநண்பரே! வரலாறு என்பது இப்படித்தான் ஜோடிக்கப்பட்டு, புனையப்பட்டு எழுதப்படுகின்றது. பாரதி என்பவர் ஒரு கற்பனைக் கலைஞன். கற்பனை உலகில் வாழ்ந்தவர் என்று கூடச் சொல்லலாம். உங்களுக்கும் தெரிந்திருக்கும், பெரும்பாலான கலைஞர்கள் யதார்த்த உலகை விட்டு வெளியில் சென்றுதான் அவர்களுக்கான ஒரு உலகில் வாழ்வது என்பது. அதனால் தானே பாரதியை எக்சென்ட்ரிக் என்றும் கூடச் சொல்லுவதுண்டு...அதாவது வீட்டிற்கு சமைப்பதற்கு வைத்திருக்கும் அரிசியைக் கூட பறவைகளுக்கு வாரி வழங்குதல் என்று இன்னும் பல சொல்லப்படும் சம்பவங்கள் ....எனவே ஒரு கலைஞன், கவிஞர் என்ற பார்வையில் மட்டும் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு கலைஞனும் புகழ் வெளிச்சத்திற்கு வரும் போது அவனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றொரு புறம் எழுமே. காந்தியிலிருந்து, நேருவிலிருந்து, ஏன் இப்போதைய கமல் வரை....ஏன் உலக மேதைகள் அறிவியலாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அவ்வப்போது சொல்லப்படும்...
பதிலளிநீக்குயானை அவரைத் தள்ளிய பிறகு கூட அவர் வாழ்ந்திருந்தார். பல படைப்புகளும் படைத்தார். அவரது குடும்பத்தார் கூட அறியாது இருப்பாரா என்ன...ராஜ்குமார் பாரதி அவரது பேரன் கர்நாடக இசை வித்வான். எல்லோரும் மனிதர்களே. குறை, நிறைகள் உண்டு. யாரும் 100% பெர்ஃபெக்ட் கிடையாதே...எனவே இதை நாம் மறப்போமே...இல்லையா நண்பரே!
கூகுளில் கூட ஒரு புள்ளிவிவரம் சொல்லுவது என்னவென்றால், வெளிச்சத்தில் இருக்கும் மனிதரைப் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கையை, அவரைப்பற்றிய பரபரப்பான செய்திகளை அறிவதில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகமாம். அந்தத் தேடல்கள் தான் அதிகமாம். இதுதான் மனிதனின் பொதுவான சைக்காலஜி....மறப்போம் நண்பரே!
உண்மைதான் நண்பர்களே!
நீக்குபாரதியார் ஒரு தீர்க்கதரிசி. அவரே 'எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.' என்று சிவசக்தியை நோக்கிப் பாடுகிறார். பாரதி மீது கொண்ட அபிமானத்திற்காகவே எட்டையபுரம், செல்லம்மாவின் வீடு இருக்கும் கடையம் எல்லாம் போய் வந்திருக்கிறேன். பலரிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் கேள்விப்படாத ஒரு தகவல் இப்போது கேள்விப் பட்டது வியப்பாக இருக்கிறது. அந்த வியப்பில் இருந்து நம் நண்பர்களின் உதவியால் மீளமுடியுமா என்று பார்க்கிறேன்.
மற்றபடி தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை ஊடுருவி பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை. பாரதியார் ஒரு விதவை பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க நினைத்ததே அன்றைக்கு பெரும் புரட்சிதான். பழமை விரும்பிகள் அவரை அடித்த போதுகூட பெண் விடுதலைப் பற்றி பெரும் கவிதை பாடிக் கொண்டிருந்திருப்பான். யார் கண்டது.
'நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.'
பாரதியின் கவிதைதான் நெஞ்சில் உதிக்கிறது.
நண்பரே!!!! தங்களைக் குறிப்பிடவில்லை! அது....தனிப்பட்ட ஒருவரின்....." நீங்கள் ஒரு பத்திரிகையாளர். எனவே தாங்கள் அறிந்ததைக் குறிப்பிடுவதில் தவறு இல்லையே நண்பரே! அதைப் பற்றி நண்பர்களின் கருத்தை அறிவதிலும் தவறு இல்லை.....நாங்கள் குறிப்பிட்டது பொதுவில் நண்பரே அதில் நாங்களும் அடக்கம்.....நீங்க வேற.....அந்த சாமியார் அதான் "நித்தி" அவர் பற்றி பரபரப்பான செய்தி வந்ததும், நெட்டில் அவரைக் குறித்து தகவல்கள் நிறைய தெரிந்து கொள்ள முனைந்தோம்....ஹஹஹஹ்ஹ அது போல முன்பு ஒரு முறை ஒரு பதிவு எழுத ஒரு சாமியார் பற்றி தகவல் திரட்டினோம்....
நீக்குநீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரியே...நல்லதோர் வீணை செய்தே.....சுடர்மிகும் அறிவு....ம்ம்
கடையம் எல்லாம் போய் வந்தது ஆஹா என சொல்ல வைக்கிறது!!!
நீங்கள் கார்த்திக் புகழேந்தியின் (எஃ எம் புகழ்) பதிவுகள் பார்த்தீர்களா நண்பரே! முடிந்தால் நேரம் கிடைத்தால் பாருங்கள் ...உரையாடல்கள் சில குறிப்பிட்டுள்ளார்...
http://writterpugal.blogspot.in/2015/09/blog-post.html
http://writterpugal.blogspot.in/2015/09/blog-post_11.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+blogspot/yzUUP+(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+)
காலம் கடந்து வரும் செய்தியில் எத்தனைவிகிதம் நிஜம் என்பதை காலம்தான் ஆய்வு செய்ய வேண்டும் சகோ.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் வணக்கம்,
பதிலளிநீக்குநான், நல்ல வேலை புகழ் ஒரு தனியார் கடன் கடன் பெர்ரி வெள்ளை இருக்கிறேன்
நீங்கள் ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் இருந்து அவசர கடன் வேண்டும் என்றால் இன்று விண்ணப்பிக்க,
பிறகு நல்ல நிலைமைகள் மற்றும் தொழில் உறவுகள் உங்களுக்கு
நாங்கள் வங்கிகள் கடன் வழங்கலாம் என எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
மலிவு வட்டி 3% விகிதம் மற்றும் நமக்கு உங்கள் வேலை
ஒரு நல்ல அனுபவம் இருக்கும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு
எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்: Perrywhitefirms@outlook.com அல்லது
+2348136145452
முற்றிலும் கேள்விப்படாத ஒன்று..குழப்பமாக உள்ளது! தெரியாதவொன்றைக் கேள்விப்படும்போது வியப்பே மிஞ்சுகிறது.
பதிலளிநீக்குகருத்துரையிடுக