சுற்றுலாவிற்கென்றே உலகம் முழுவதும் ஏராளமான இடங்கள் உள்ளன. சில நகரங்களில் வெறும் சுற்றுலா மட்டும்தான் பிரதான தொழில். இப்படி உலகம் முழுவதும் நிறைந்து இருக்கும் சுற்றுலா நகரங்களை ஆய்வு செய்து அவற்றில் சிறந்த நகரங்களை 'டிராவல் + ப்ளஷர்' இதழ் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 5 இடங்களை பிடித்த நகரங்கள் இங்கே.
1. கியோட்டோ - ஜப்பான்
பத்தாயிரம் மடங்களின் நகரம்
சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பிடித்த நகரமாக முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் உள்ள கியோட்டோ தான். கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேலாக ஜப்பானின் தலைநகரமாக இருந்த நகரம். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகள் பட்டியலில் இந்த நகரமும் இடம் பிடித்துள்ளது. இங்குள்ள 17 இடங்கள் மற்றும் மடங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் மடங்கள் கொண்ட நகரம் என்ற பெயரும் கியோட்டோவுக்கு உண்டு.
இங்கு கொண்டாடப்படும் ஒவ்வொரு திருவிழாவும் ஆயிரம் வருடங்கள் பழமையானது. பாரம்பரியம், வரலாறு, ஆன்மிகம், அமைதி, கலை போன்றவற்றால் சுற்றுலா பிரியர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது கியோட்டோ.
2. சார்லஸ்டன் - அமெரிக்கா
நண்பேன்டா நகரம்
வட அமெரிக்காவில் உள்ள ஐந்தாவது பெரிய நகரம் சார்லஸ்டன். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள துறைமுக நகரமான இது தென் கரோலினா மாகாணத்தில் உள்ளது. வளமையான சரித்திரம், அசர வைக்கும் கட்டடங்கள், சுவையான உணவகங்கள், பண்பான மக்கள் என்று இந்த நகருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் எக்கச்சக்கம். அதனால்தான் சுற்றுலாவாசிகள் இதை மிக நட்பான நகரம் என்று புகழ்கிறார்கள்.
அருங்காட்சியகம் |
3. ஃப்ளோரன்ஸ் - இத்தாலி
கலைப்பொக்கிஷங்களின் நகரம்
திரும்பிய பக்கமெல்லாம் அருங்காட்சியகங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும். அதிலும் எல்லாம் பழமை மாற்றாத பாரம்பரியத்திற்கு சொந்தம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும். உலகிலேயே கலைப்பொக்கிஷங்களை அதிகமாக கொண்டுள்ள நகரம் இதுதான்.
சரித்திர காலத்திலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திலும் சிறந்த நகரம். 1982-ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஃப்ளோரன்ஸ் நகரை சேர்த்தது. பழமை மட்டுமல்லாது உலகிற்கு ஃபேஷனை அறிமுகப்படுத்துவதிலும் இந்த நகரம்தான் முதன்மையாக உள்ளது.
4. சியம் ரீப் - கம்போடியா
பாரம்பரியத்தின் உறைவிடம்
கம்போடிய நாட்டின் மிக முக்கிய நகரம் சியம் ரீப். இந்த நகரை பாரம்பரியத்தின் உறைவிடம் என்று கொண்டாடுகிறார்கள் சுற்றுலாவாசிகள். இங்குள்ள அங்கோர்வாட் கோயில் இரண்டாம் சூரியவர்மனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இதுதான் உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத்தலமாக இருக்கிறது. 1992-ல் இது யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றது. சியம் ரீப் வளர்ந்து வரும் ஒரு நவீன நகரமாகும். இங்கு பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
5. இஸ்தான்புல் - துருக்கி
வேகமாக வளரும் வரலாற்று நகரம்
ஐரோப்பாவில் மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்களைக் கொண்ட நகரம் இஸ்தான்புல். மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்று. சுற்றுலா செல்பவர்கள் அதிகம் வருகைதரும் நகரங்களில் இஸ்தான்புல் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நகரில் பழமை மிக்க 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், 49 தேவாலயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.
மேலே குறிப்பிட்ட இந்த நகரங்களைத் தவிர, 6-வது இடத்தில் ரோம், 7-வது இடத்தில் ஸ்வில், 8-வது இடத்தில் பார்ஸிலோனா, 9-வது இடத்தில் மெக்ஸிகோ, 10-வது இடத்தில் நியூ ஆர்லியன்ஸ் போன்ற நகரங்கள் உள்ளன. இதில் சியம் ரீப், ஸ்வில், மெக்ஸிகோ, நியூ ஆர்லியன்ஸ் ஆகிய நகரங்கள் முதன் முதலாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஹா! அருமையான இடங்களும் அழகான படங்களும் அழகோ அழகு
பதிலளிநீக்குநன்றி நண்பரே!!!
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
நீக்குஇணைத்தில் நானும் படித்தேன். உங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்து ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குபுத்தகம் வாசித்தேன் அனைத்தும் தகவல்களும் அருமை
பதிலளிநீக்குபுத்தகம் வாசித்து விமர்சித்த நண்பருக்கு பல கோடி நன்றிகள்!
நீக்குஅருமையான படங்களுடன் சிறப்பான தகவல்கள்.. நன்றி தோழர்...
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
நீக்குஅனைத்தும் அருமை. அங்கார்வாட் மனதில் நின்றது.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!
நீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குஅருமை
தங்கள் வலையின் வழியாகவே
சிறந்த சுற்றுலா தலங்களைப் பார்த்த ஓர் உணர்வு
நன்றி நண்பரே
தம =1
//சுற்றுலாவிற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.//
நீக்குபாராட்டுக்கு நன்றி நண்பரே!
நேரில் பார்க்க இயலாவிட்டாலும் தங்களின் வலைத்தளம் மூலம் உலகின் சிறந்த அழகிய சுற்றுலாத் தலங்களை பற்றி அறிய முடிந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி அய்யா!
நீக்குஆஹா! ஒவ்வொரு படமும் காணவே எத்தனை ஆனந்தமாக இருக்கிறது. தங்கள் பகிர்வின் மூலமாக அந்த இடங்களைப்பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்வே.
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி சகோ!
நீக்குநல்ல அழகான இடங்கள்
பதிலளிநீக்குதங்கள் பகிர்வு அருமை
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!
நீக்குஇங்கெல்லாம் நான் எங்கே போகப் போகிறேன்? படங்களைப் பார்த்து ரசித்தேன். விவரங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.
பதிலளிநீக்குநம்மை போன்றவர்களுக்கு உலகில் இப்படியெல்லாம் இடங்கள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஒரு தகவல்தான் இது.
நீக்குசிறப்பான நகரங்களை அறிந்து கொண்டேன்! படங்கள் அசத்தல்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குஅருமையான பகிர்வு சகோதரரே!
பதிலளிநீக்குதாமதமானாலும் நானும் வந்து சேர்ந்து கொண்டேன்..:)
அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!
நீக்குஜோரான பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குதம +
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஆஹா அருமையான படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றனவே.....வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்...நன்றி
பதிலளிநீக்குவாருங்கள் சகோ! முதல் முறையாக எனது பதிவுக்கு வருகைதரும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
நீக்குதங்களின் பாராட்டுக்கு நன்றி!
வலைப்பதிவர் விழாவுக்கு கட்டாயம் வருவேன். அழைப்புக்கும் நன்றி!
நல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஎல்லாமே போய் வந்த இடமாக இருக்கின்றதே நண்பரே
பதிலளிநீக்குஇருப்பினும் மீண்டும் ரசித்தேன்
தமிழ் மணம் 12
தாங்கள் போகாத இடத்தை இனிதான் பூமியில் உருவாக்க வேண்டும் நண்பரே! அதுவரை பார்த்த இடங்களையே மீண்டும் ஒருமுறை பார்த்து ரசியுங்கள்.
நீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஆஹா! மீண்டும் இங்கு வாசித்தாயிற்று,,,நாங்கள் இப்படி உலா வந்த போது இந்த நகரங்களைச் சுற்றிப் பார்த்தோம்....அருமை....எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது ...
பதிலளிநீக்குகீதா: எனது உறவினர்கள் சார்லட்டனில் இருக்கின்றார்கள் அவர்கள் சொன்னதும் உலா வந்தோம் அவ்வளவுதான்...
இப்படி எல்லாம் போட்டு "ஹும்" என்று பெருமூச்சு விட வைத்திருக்கின்றீர்கள்!!!!!! அருமையான பதிவு...
நன்றி.. நன்றி.. நன்றி.. நண்பர்களே!
நீக்குஅழகான படங்கள். அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குசென்று பார்க்க வேண்டிய இடங்களில் முதலிடம் இரண்டாம் சூர்யவர்மன் தலைமையிலான பழந்தமிழர் படையால் கட்டப்பட்டு உலகசாதனை வழிபாட்டு தல வரலாற்றில் உன்னதமாய் தலைநிமிர்ந்து நிற்கும் அங்கோர்வாட் ஆகும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குதுருக்கி-இஸ்தம்புல் சென்றுள்ளேன். திரும்பிய பக்கமெல்லாம் மசூதிகள், அழகுதான். ஆனால் சில சுற்றுலாத்தலங்கள் அருகிலுள்ள நீரோடைகள் தூர் வாராமல் , கூவத்தை விட நாற்றம் சகிக்க முடியாது.
பதிலளிநீக்குஇந்தக் கொடுமை பல சுற்றுலா தளங்களில் இருப்பது ஒரு சாபக்கேடுதான்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
கருத்துரையிடுக