Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மருதுபாண்டியர்களின் இறுதிநாள் கோட்டை


ரித்திரத்தின் மிகக் கொடூரமான காலகட்டம் என்று அதை சொல்லலாம். மருதுபாண்டியர்களையும் அவரைச் சார்ந்த 600 பேர்களையும் 214 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு கொன்றது இன்றுதான்.


மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்ட இடம் இந்தக் கோட்டை. இதைப் பற்றி விரிவான கட்டுரையை 'ஹாலிடே நியூஸ்' இதழில் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதினேன். அதை அவர்களின் நினைவு நாளான இன்று வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்காததால் அதை தட்டச்சு செய்து பதிவிட முடியவில்லை. 

அப்போதெல்லாம் நான் எழுதும் கட்டுரைகள் சிலவற்றுக்கு புகைப்படம் மட்டுமல்லாமல் வீடியோவும் எடுத்துவிடுவேன். அந்த வீடியோவை கட்டுரையின் இறுதியில் 'க்யூ.ஆர்.கோடாக' கொடுத்து, ஸ்மார்ட் மொபைல் மூலம் ஸ்கேன் செய்து பார்க்கும் விதமாக செய்துவிடுவோம். இதன் மூலம் மொபைலில் நாங்கள் பார்த்த இடங்களை வாசகர்களும் பார்க்கும் வசதியை செய்து கொடுத்திருந்தோம்.


அப்படி இந்த கட்டுரைக்காக நான் எடுத்த வீடியோவை மட்டும் இங்கு கொடுக்கிறேன். மற்றொரு நாளில் கட்டுரையை வெளியிடுகிறேன். இப்போது மருதுபாண்டியர்களை கைது செய்த சங்கரபதிக் கோட்டை பற்றிய வீடியோ.  

பின்னணிக் குரல்கள் நானும் எனது மகளும்.  



ரெசல்யூசன் மிகக் குறைவாக இருந்தால்தான் மொபைலில் விரைவில் டவுன்லோடாகும் என்று வீடியோ எடிட் செய்பவர் வேறு பார்மேட்டுக்கு மாற்றியதால் வீடியோவின் தரம் சுமாராகத்தான் இருக்கும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். எங்களது குரல்கள் கூட மொபைலில் பதிவு செய்து சேர்த்ததுதான். பாருங்கள் கருத்திடுங்கள். 



33 கருத்துகள்

  1. ஒரு காலத்தில் சிறப்பாக இருந்திருக்கக் கூடிய கோட்டை இன்று சீரழிந்து..

    வீடியோ தெளிவாக இருந்தது. வர்ணனையும்.

    எங்கள் வீட்டில் ஒரு சிறு புத்தகம் இருந்தது. மானம் காத்த மருது பாண்டியர்கள் என்று. சிறு வயதில் படித்திருக்கிறேன். வீர வரலாறு.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. நாங்கள் நடத்துகின்ற மூன்று புத்தகங்களிலுமே வீடியோவாக கொடுக்க வேண்டியவற்றை க்யூ.ஆர். கோடாக கொடுத்து வந்தோம். அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகை தந்து கருத்திட்டதற்கும், வாட்சாபில் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி சேது. தொடர்ந்து கருத்திடுங்கள்.

      நீக்கு
  4. அன்புள்ள S.P. அய்யாவுக்கு,

    மருது பாண்டியர்களையும் அவர்களைச் சார்ந்த 600 பேர்களையும் தூக்கிலடப்பட்ட இன்றைய தினத்தில் அவர்களை நினைவில் நிறுத்திப் போற்ற தாங்கள் தந்த தகவல்கள் பாராட்டும் படியாக இருக்கிறது. ‘ஹாலிடே நியுஸ்’ இதழில் வந்ததைத் தந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எண்ணினேன்.

    ஆனால் ‘சங்கரபதி கோட்டை’ யைக் காணொளியில் கண்டவுடன் அவ்வாறு எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன்.

    கோட்டை கட்டிய விதம் - மருது சகோதர்கள் இளைப்பாறும் இடம் - படைத்தளம் - எப்படி வாழ்ந்தவர்கள் எவ்வளவு இன்னலுக்கு உட்பட்டு உயிர்துறந்திருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது நெஞ்சு கனக்கிறது. தற்பொழுது சுற்றுலாத்தளமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. காரைக்குடி செல்லும் போது அவசியம் பார்க்கத் தூண்டும் செய்தி. வீடியோ காட்சி - தங்கள் மற்றும் தங்கள் மகளின் குரல் வளம் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க வேண்டிய இடம் பீரங்கிகளை வைத்து கோட்டையின் முன் புரத்தை தகர்த்ததுதான் வெள்ளையர்கள் உள்ளே நுழைந்து மறுத்து பாண்டியர்களை கைது செய்திருக்கிறார்கள். அதில் பெரிய மருது தப்பித்துவிடுவார் என்றெண்ணி, கைது செய்த உடனே அவரது காலை உடைத்து விடுகிறார்கள் மிகப் பெரிய கொடூரங்கள் அரங்கேறிய நாள் அது.
      கூடிய விரைவில் கட்டுரையை பதிவிடுகிறேன் அய்யா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  5. பல வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது! வீடியோ தரமும் குரலும் நன்றாகவே உள்ளது! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அன்பு நண்பர் S.P.S அவர்களுக்கு நன்றி. வீடியோ - ஆடியோ பதிவுகள் தெளிவாக இருக்கின்றன. பாராட்டுக்கள். ஸ்மார்ட் மொபைல் போன் வித்தைகள் எனக்கு இன்னும் பழக்கமாகவில்லை; சென்னைக்கு சென்று இருக்கும் எனது மகன் வந்தவுடன், அவரிடம்தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். – பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே! அவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். பலவிதங்களில் உபயோகமாகும்.

      நீக்கு
  7. சிந்திக்க வைக்கும் பதிவு
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  8. தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  9. இந்தக் கோட்டையைப் பலமுறை கடந்திருக்கிறோம். இதில் இப்படி ஒரு வரலாறு புதைந்திருப்பதை இன்றே அறிந்தேன் சகோ..

    படைபற்றி விபரங்கள் கூறும் உங்கள் குரலும். மற்ற தகவல்களை மென்மையாகக் கூறும் உங்கள் மகளின் குரலும் அருமை. வீரர்களின் தியாகம் பற்றி அறிந்தபோது உள்ளம் வருந்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தேவகோட்டை போகும் போது இந்த கோட்டையை பார்த்துவிட்டு செல்லுங்கள். படைகள் பயிற்சி எடுக்கும் மைதானம் சற்று தள்ளியிருக்கும். யானைகள் வருவதற்கு என்று சரிவான பாதை இருக்குகிறது. மிகப் பெரும் படைக்கான ஆயத்தம் அங்கு நடந்திருக்கிறது. இது எதுவும் வெளியில் தெரியாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

      நீக்கு
  10. நண்பரே! இந்த வழியே சிலமுறை சென்றிருந்தபோதும் இந்தக் கோட்டைப் பற்றி அறிந்திருக்காததால் காணும் வாய்ப்பை தவற விட்டேன்.. எத்தனையோ தியாகங்களின் மேல் நாம் சுதந்திரக் காற்றை இன்று சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நெகிழ்ந்து இணைவு கூர்தலே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி. காணொளி நன்றாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே! கட்டாயம் பாருங்கள். புதர் மண்டியிருக்கும் இந்த இடத்தை சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்லும் விதமாக அமைப்பதே அந்த முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

      நீக்கு
  11. காணொளி மூலம் அறியாத தகவலை அறிந்துகொண்டேன். பலதடவை காரைக்குடிக்கும், தேவக்கோட்டைக்கும் சென்றிருக்கிறேன். இது பற்றிமுன்பே தெரிந்திருந்தால் சென்று பாத்திருப்பேன். பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தமுறை அந்த வழியாக போகும்போது பார்த்து வாருங்கள் அய்யா! ஒரு மாபெரும் போராட்டத்தின் புரட்சி விதை இங்கு முடக்கப் பட்ட துயரம் தெரியும். நன்றி அய்யா!

      நீக்கு
  12. சங்கரபதி கோட்டை - பார்க்கும் போதே மனதில் ஒரு கலக்கம். எப்படிப் பட்ட இடத்தினை இப்படி அழிய விட்டுவிட்டோமே.... பராமரிப்பு இல்லாமல் மரங்களின் வேர்கள் இருக்கும் சில சுவடுகளையும் இடித்துக் கொண்டிருக்கிறதே.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டினர் ஒன்றும் இல்லாத விஷயங்களைக்கூட பெரிதுபடுத்தி மேன்மைக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் நாம் வளமான பாரம்பரியத்தை வைத்திருந்தும் கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். வேதனைதான் மிஞ்சுகிறது. வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  13. சங்கரபதி கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இந்த இடம் இப்படி இருப்பதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. இது போன்று செய்திகளாகிவிட்ட விடயங்களை நம்மைப்போன்றவர்கள் தான் வளரும் தலைமுறைக்கு அவ்வப்போது நினைவுபடுத்த வேண்டும் என்பதை அழகான வீடியோ பதிவாக்கி தந்திருக்கும் உங்களுக்கும் உங்க மகளுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை