Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தரங்கம்பாடி: கடற்கரையில் கொண்டாட்டம்


'பங்களா ஆன் த பீச்'

ரித்திரப் புகழ்பெற்ற தரங்கம்பாடி, ஹனிமூனுக்கும் பெயர் பெற்றது. கி.பி.1680 முதல் 1845 வரை டேனீஷ் கிழக்கிந்தியா கம்பெனியின் தலைமையிடமாக திகழ்ந்த இடம், வரலாற்று சிறப்பு மிக்கது. டேனீஷ் கோட்டை சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். அதன் அருகிலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் இரண்டு தேவாலயங்கள், ஒரு ரெஸ்ட்டாரண்ட், ஒரு கைவினைப் பொருட்கள் விற்கும் இடம் ஆகியவை உள்ளன.


இங்கு இருந்த டேனிஷ் அரசின் கலெக்டர் பங்களா தற்போது 'பங்களா ஆன் த பீச்' என்ற பெயரில் ஹோட்டல்களாக இயங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் கட்டடக்கலை அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இந்த ஹோட்டலில் தங்கி எதிரே மின்னும் கடல் அலைகளைப் பார்ப்பது தனி சுகம். அதிலும் மனதுக்குப் பிடித்த துணையோடு கை கோர்த்தபடி பார்ப்பது பரவசமான அனுபவம்.  


மாலை நேரத்தில் இந்தக் கடற்கரையில் உள்ளூர் மக்கள் வந்து செல்வது மனதைக் கவரும் அம்சம். அதிலும் வண்ண வண்ண சேலைகளில் அந்தப் பெண்கள் குழந்தைகளுடன் வருவதும் பார்க்க ஆனந்தம் தரும். இவற்றையெல்லாம் பார்த்தப்படி சமையல் செய்யலாம். இல்லையென்றால் துணையோடு ரசிக்கலாம். ஹனிமூன் ஜோடிக்கு ஏற்ற இடம் இது.

எப்படி போவது?
சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் பாண்டிச்சேரியில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் தரங்கம்பாடி உள்ளது.

எங்கு தங்குவது?
நீம்ரானா ஹோட்டல் குழுமம் இங்குள்ள 'பங்களா ஆன் த பீச்' ஹோட்டலை நடத்தி வருகிறது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.4,450.




35 கருத்துகள்

  1. நன்றி நண்பரே இதோ பதிவு செய்யப் போகிறேன் விபரங்கள் குறித்துக்கொண்டேன் தகவலுக்கு நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலைக் கண்டதும் உடனே பதிவு செய்து, கருத்தும் சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  2. மீண்டும் ஒரு சுற்றுலா ...!

    கிளம்பிவிட்டோம் உங்களுடன் கைகோர்த்து.
    த ம 3
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல ரம்யமான இடம் நன்றி! அறியத் தந்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நண்பரே! பள்ளி சுற்றுலா மூலம் இந்த இடங்களுக்கு போயிருக்கேன்! ஆனால் இந்த ஒட்டல் ரெஸ்டாடன்ட் இருந்தா என்பது ஞாபகமில்லை! அழகான இடம்! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது மீண்டும் ஒருமுறை பார்த்து வாருங்கள். இருப்பது தெரியும்.!

      நீக்கு
  5. போக யோசனையா இருக்கு ,கடைசி படத்தில், முறிந்து விழும் நிலையில் உள்ள தாங்கு கட்டையைப் பார்த்தால் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தைரியமா போயிட்டு வாங்க ஜி, நாங்கெல்லாம் இருக்கோமில்லா..!

      நீக்கு
    2. நீங்க இங்கே இருப்பீங்க ,நான் இருப்பேனா :)

      நீக்கு
    3. பயப்படாதீங்க தைரியமா போயிட்டுவாங்க. கண்டிப்பா இருப்பீங்க..!

      நீக்கு
  6. அருமையான இடமாகத் தெரிகிறது. தகவல் பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  7. அழகான சுற்றுலா தளம் , இரண்டாவது படம் நிஜ புகைப்படமா?

    பதிலளிநீக்கு
  8. பள்ளிச் சுற்றுலாவிற்காக தரங்கம்பாடி சென்ற போது பார்த்திருக்கிறேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  9. தரங்கம்பாடி என்றதும் கோட்டையைத் தேடினேன். காணவில்லையே. தங்களின் பயணம் வித்தியாசமானதுதான். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோட்டையைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன் அய்யா! ஆனால் என்னிடம் அதிகமான வரலாற்று தகவல்களை எதிர்பார்த்து விடாதீர்கள். எனக்கு தங்களின் அளவுக்கு வரலாறு தெரியாது.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  10. அழகான இடம். எப்போதும் போல தங்கள் பகிர்வின் வழி தொடர்கிறோம் பயணத்தை.

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பதிவே எனகுப் போதும்!

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு சுற்றுலாத் தளம் அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ஆஹா .. இந்த விஷயத்தை எப்படி மறந்துவிட்டேன். என் கண்கள் கடல் நீரை முதல்முறையாக சந்தித்த இடம் அல்லவா, தரங்கம் பாடி. அந்த நிகழ்ச்சியை வைத்து ஒரு தொடர்கதையே எழுதி இருக்கலாமே. இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தங்கள் பதிவிற்கு நன்றி.
    தரங்கம்பாடிக்கு அன்கேமுறை சென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்கதை எழுதுங்கள் அய்யா, படிக்க காத்திருக்கிறோம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  14. பதில்கள்
    1. ஹெரிடேஜ் ஹோட்டல்களில் எல்லாம் இப்படிதான் கட்டணம் இருக்கும்.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை