நதிகளை இணைக்க முடியும் என்று ஒரு சாராரும் இணைக்கவே முடியாது என்று ஒரு சாராரும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நான் இணைக்க முடியும் என்று ஆறு முறை பத்திரிகையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அவற்றை பிறகு பதிவிடுகிறேன். இப்போது டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் நதிநீர் இணைப்பைப் பற்றி மதுரையில் பேசிய பேச்சை காணொளியாக பதிவிடுகிறேன்.
உங்களின் கருத்துக்களையும் கூறுங்கள்.
நதி நீர்இணைப்பு பற்றி
பதிலளிநீக்குநதி நீர் - கனவுத் திட்டமா?
http://deviyar-illam.blogspot.com/2011/12/blog-post_18.html
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும்
http://deviyar-illam.blogspot.com/2011/12/blog-post_19.html
தங்களின் இரண்டு பதிவுகளையும் வாசித்தேன். பிரம்மபுத்ராவில் சீனா அணைகட்டுவது மேலோட்டமாகத்தான் தெரியும். தங்கள் பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொண்டேன். முடியும் என்பதை அவர்கள் தொடர்ந்து நிருபித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். நாம்தான் யோசித்துக்கொண்டே இருக்கிறோம்.
நீக்குபகிர்ந்தமைக்கு நன்றி ஜோதிஜி!
தமிழ் மணம் 5 பிறகு வருவேன் நண்பரே....
பதிலளிநீக்குவாருங்கள் நண்பரே!
நீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குநதிகளை இணைத்தால் நாடு முழுதும் நிலத்தடி நீர் வளமும், விவசாயம் சார்ந்த தொழில்களும், நீர் வழிப் போக்குவரத்து மற்றும் மீன் வளமும் உயரும் என்பது எல்லோரும் அறிந்த பொதுவான கருத்துக்கள். ஆனால் முயற்சிகளை முன்னெடுப்பார் யாருமில்லை. ஆந்திராவில் மட்டும் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைத்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
'இந்தியாவிலேயே தமிழகம்தான் நதி நீர் இணைப்புக்கு முன்னோடி , இதோ நாங்கள் நதி நீர் இணைப்பை தாமிரபரணியில் 'வெள்ள வடிகால் திட்டம்" மூலம் ஆரம்பிக்கிறோம்,' என்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கப்பட்ட தாமிரபரணி -கருமேனி ஆறு - நம்பி ஆறு இணைப்பு திட்டத்தில் பாதி அளவிற்கும் மேல் வேலை முடிந்திருந்தும் மாநில அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் முடக்கப் பட்டுள்ளது.
நதி நீர் இணைப்பு குறித்த எனது பதிவு.
நதி நீர் இணைப்பு - தமிழகத்தை முந்தியது ஆந்திரம் - http://rajasabai.blogspot.my/2015/09/blog-post_16.html
தங்களது பத்திரிக்கை பதிவுகளையும் அனைவரும் அறிய பகிருங்கள். நம்மால் ஆன முயற்சிகளை தொடர்ந்து மேலெடுப்போம்.
ஆந்திராவில் கோதாவரி கிருஷ்ணா நதிகள் இணைப்பு பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். தமிழகத்தில் தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு பாதியில் நிற்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
நீக்குஇந்தியாவிலேயே முதல் நதிநீர் இணைப்பு என்றால் அது முல்லை பெரியாறு நதிகளை வைகையின் மூல நதிகளோடு இணைத்ததுதான். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கேரளா வழியாக பாய்ந்து அரபிக் கடலில் சென்று கலக்கும் நதியை கிழக்குப் பக்கம் திருப்பி, வைகையோடு இணைத்த பெருமை கர்னல் பென்னி குக்குவிற்கே உள்ளது. இதுஒரு மாபெரும் சாதனை இதைப் பற்றியும் எழுதியுள்ளேன். விரைவில் பதிவிடுகிறேன்.
வருகைக்கு நன்றி நண்பரே!
முடியாது என்பதே ஒரு விதை நோய் தான் மிக நாசூக்காக புரியவைத்திருக்கிறார். தங்கள் கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகூடிய விரைவில் பதிவிடுகிறேன் சகோ!
நீக்குகலாம் அய்யாவின் நெற்றியடி பேச்சை ரசிக்கத் தந்தமைக்கு நன்றி :)
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி ஜி!
நீக்குகலாம் அய்யாவின் நெற்றியடி பேச்சை ரசிக்கத் தந்தமைக்கு நன்றி :)
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி ஜி!
நீக்குசிந்திக்க வேண்டிய உரை. அண்மையில் கோதாவரி கிருஷ்ணா இணைப்பை குறுகிய காலத்தில் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்திருக்கிறார். இதற்கு தொலை நோக்குப் பார்வையும் , அரசியல் பொறுப்புணர்வும் தேவை.
பதிலளிநீக்குஅரசாங்கங்கள் மனது வைத்தால் முடியும். நம் அரசியல்வாதிகளுக்கு கொள்ளையடிக்கவே நேரம் போதவில்லை. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குநதிகள் இணைப்புச் சாத்தியத்தை வெகு நேர்த்தியாக திட்டமிட்டு சொன்ன அய்யா கலாமின் பேச்சுக்கு ஆளும் தலைவர்கள் செவிசாய்த்து நடைமுறைப்படுத்த... ஆவன செய்ய முன்வர வேண்டும். இலவசங்களைத் முற்றிலுமாகத் தவிர்த்து நாடும் நாட்டு மக்களும் முன்னேற அரசுகள் முன்வந்தால் விரைவில் நாடு வல்லரசாகும். கலாமை இழந்து விட்டோம்... அவரின் கருத்துகளை...கனவுகளை நனவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம். கானொணி கண்டு அவரின் திடமான திட்டங்களைக் எண்ணி வியந்து போனேன்.
நன்றி.
த.ம. 9
மதுரையில் ஏ.சி.காமராஜ் என்ற பொறியாளர் உருவாக்கியுள்ள தேசியநீர்வழிச் சாலை என்ற திட்டம் தான் இதுவரை நதிநீர் இணைப்பு திட்டத்திலே உன்னதமான திட்டம். அந்த திட்டத்தைப் பற்றிதான் கலாம் அவர்கள் இங்கு பேசியுள்ளார். கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது இதைப் பற்றி பல மாநில முதல்வர்களிடம் பேசியிருக்கிறார். அதன் முதற்கட்டமாக ஆந்திராவின் கோதாவரி-கிருஷ்ணா தமிழகத்தின் தென் பெண்ணை நதிகளை இணைப்பது என்று முடிவானது. ஏனோ அந்த திட்டம் கிடப்பில் கிடக்கிறது.
நீக்குகோதாவரி நதியில் இருந்து வீணாக கடலில் சென்று கலக்கும் நதிநீர் மட்டுமே தமிழகத்தின் முழு நீர் தேவைக்கும் போதுமானது என்றால் அது எவ்வளவு பெரிய நதி என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.
வருகைக்கு நன்றி அய்யா!
முதலில் நன்றி கலாம் அவர்களின் அருமையான பேச்சை இங்கு பகிர்ந்தமைக்கு.
பதிலளிநீக்குஅடுத்து தலைப்பிற்குப் போகும் முன் ஒன்று கவனித்தீர்களா? அந்த அவையில் பின் ட்ராப் சைலன்ஸ். ஒரு பேச்சாளர் பேசுகின்றார் என்றால் பொதுவாக அவையோர் மத்தியில் பல சமயங்களில் சிறு சிறு சல சலப்பு பேச்சுகள் என்று இருக்கும். கலாம் அவர்களின் உரைகளின் காணொளிகள் பெரும்பானையானவற்றைக் கண்டதுண்டு. ஒவ்வொன்றிலும் நான் கவனித்தது இதைத்தான்...மக்கள் அவருக்கு எத்தனை மரியாதை கொடுத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது புல்லரிக்கின்றது. அவர் மக்களின் மனதில் விதைத்து விதையாய் இருக்கின்றார். வருவார் விருட்சமாய்.
இப்பொது தலைப்பிற்கு. முடியும்!!
கீதா: பல வருடங்களுக்கு முன் என் நினைவு சரியாக இருந்தால் 1975 என்று நினைக்கின்றேன் இந்திராகாந்தி அவர்களின் ஆட்சியில் கார்லன்ட் ப்ளான் என்று நதி நீர் இணைப்பு பற்றி அடிக்கல் நாட்டியதாக நினைவு. அதாவது ப்ரம்மபுத்துரா விலிருந்து அப்படியெ கீழே வந்து கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி வரை வந்து பின்னர் அப்படியே ஒரு யு டர்ன் அடித்து கேரளா நதிகளுடன் இணைத்து நர்மதா தப்தி, பியாஸ் என்று நீங்கள் வரைந்து பார்த்தீர்கள் என்றால் மாலை வடிவில்...
அதே வருடத்தில் தான் ஜப்பானில் கடலுக்கடியில் டனல் ரோடு போடத் தொடங்கி இரு தீவுகளுக்கு இடையில், 10 வருடங்களில் முடித்துத் தொடங்கிவிட்டார்கள். பத்து வருடம் கழிந்தும் இங்கு அந்த அடிக்கல் அப்படியே.
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் பேசப்பட்டு, தமிழ் நாட்டிலும் தாமிரபரணி இணைப்பு தொடங்கி அதுவும் அவ்வாறே விடப்பட்டு....
எப்போது நல்ல திட்டங்களில் பொதுமக்கள் நலன் கருதி அரசியல் கலக்காமல் பொது நோக்குடன் செயல்படும் காலம் வருமோ அப்போதுதான் இந்தக் கனவு நிறைவேறும்.
முடியாது என்ற வார்த்தை அகராதியில் இருக்கக் கூடாது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்...
அற்புதமான எடுத்துக்காட்டுடன் அருமையான கருத்துரை. முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. ஆனால் முடியாது என்ற நோய்தான் பலரிடம் பரவியிருக்கிறது. கூடிய விரைவில் விரிவாக பதிவிடுகிறேன். அப்போது மேலும் விவாதிப்போம்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பர்களே!
ஆம் நீங்கல் ஒரு பதிலில் கூறியிருப்பது போல முல்லை பெரியாறு வைகை மூலத்துடன் இணைப்பு....பென்னி குவிக் பற்றி எழுதியிருந்தோம் ..எங்கள் தளத்திலும்....அவர் செய்த அரிய சாதனை.....அந்த அணையும் அதுவும் தனது சொத்தை விற்று அந்தப் பணத்தில்....என்று வரலாறு செல்கின்றது....
நீக்குமிக்க நன்றி நண்பரே! உங்கள் பதிவை எதிர்நோக்கி....
முல்லை பெரியார் பிரச்சனை வந்த போது அதைப்பற்றி ஐந்து வாரங்கள ஒரு மினி தொடரை எழுதினேன். அதை விரைவில் பதிவிடுகிறேன். தங்களின் பதிவையும் படித்து கருத்திடுகிறேன். நன்றி நண்பர்களே!
நீக்குஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே நிரந்தர வருமானம் பார்க்க நீங்கள் விருப்பம் உள்ளவரா ? இனி கவலையை விடுங்கள் உடனே கீழேயுள்ள இணையத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி அதன் மூலம் மாதம் Rs10000 என்ற சுலபமான இலக்கை அடையும் யுக்திகளை பெற்று கொள்ளுங்கள்...
பதிலளிநீக்குஎன்றும் உங்கள் தேவைக்கு எங்கள் சேவை ....
உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்
வணக்கம்
பதிலளிநீக்குமனிதனால் முடியாதது.. ஏதும் இல்லை... கலாமின் உரையை கேட்டு மகிழ்ந்தேன்
த.ம 11
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தாங்கள் அறிவித்த போட்டியைப்பற்றி ஏற்கனவே அறிந்து கொண்டேன். கவிதைப் பற்றி எனக்கு தெரியாததால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. கட்டுரைப் போன்ற போட்டிகள என்றால் கட்டாயம் கலந்துகொள்கிறேன்.
நீக்குநன்றி நண்பரே!
மிகப்பல நல்ல திட்டங்களும் முடியாது என்கிற தடையை உடைத்துதான் மேலெழும்புகின்றன.
பதிலளிநீக்குநதிநீர் இணைப்புத் திட்டம் குறித்த கலாம் அவர்களின் கனவு நிறைவேற வேண்டும்.
தாமத்திற்குப் பொறுத்திடுங்கள்.
நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குகருத்துரையிடுக