வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நான் 'தினம் ஒரு தகவல்' என்ற பெயரில் ஒரு வலைத்தளம் நடத்தி வந்தேன். அதில் பார்வையாளர்கள் குறைவாகவே இருந்தனர். நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் பேசியபோது இரண்டு மூன்று தளங்கள் வேண்டாம். எல்லாவற்றையும் ஒரே தளத்தில் பதிவிடுங்கள் என்று கூறினார். அதுவும் நல்ல யோசனையாக இருக்க அதன்படி அந்த தளத்தில் நான் பதிவிட்ட பதிவுகளை மீண்டும் கூட்டாஞ்சோறில் பதிவிடுகிறேன். இனி தினம் ஒரு தகவலில் எழுதும் பதிவுகளும் இந்த தளத்திலே பதிவிட உள்ளேன். நண்பர்கள் தொடர்ந்து வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நமது நண்பர்களில் சிலர் இந்தப் பதிவுகளை ஏற்கனவே அந்த தளத்தில் படித்திருக்கக்கூடும், அவர்கள் பொறுத்தருள்வார்களாக..! இனி பதிவு...
--------------------------------------------------------------------
ஆட்சியை மாற்றிய மாணவர்கள்
மாணவர்கள் நினைத்தால் ஆட்சியை கூட மாற்றமுடியும் என்று உலகுக்கு உணர்த்திய நாடு இந்தியா. இந்த புரட்சி நடந்தது அசாம் மாநிலத்தில்.
1971-இல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான் ‘பங்களாதேஷ்’ என்ற புதிய நாடாக உருவானது. போர் உச்ச கட்டத்தில் இருந்த போது ஏராளமான பங்களாதேஷ் வாசிகள் அசாமில் அகதிகளாக குடியேறினர். குடியேறியவர்கள் போர் முடிந்தும் அவர்களின் தாய்நாட்டிற்கு திரும்பவில்லை.
லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவிலே தங்கிவிட்டதால் மண்ணின் மைந்தர்களான அசாமியர்களுக்கு வேலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டன. அதனால், அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு உருவானதுதான் ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’.
இந்த மாணவர்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடைந்து, ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. அகதிகள் அனைவரும் அடையாளம் கண்டு தாக்கப்பட்டார்கள். சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் 7 ஆண்டுகளாக அனைத்து கல்லூரிகளும் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
மாநில அரசால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்தது. இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே வேளையில் அகதிகளாக வந்திருந்த 30 லட்சம் பேரும் அசாம் மாநில வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர்.
இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டுத்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், மீறி நடத்தினால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அசாம் மாணவர் சங்கம் அறிவித்தது. ஆனால், இதையெல்லாம் இந்திய அரசு காதில் வாங்கவில்லை. ராணுவ அடக்குமுறையோடு தேர்தலை நடத்தியது.
தேர்தலை புறக்கணிக்குமாறு மாணவர் சங்கம் எச்சரிக்கை விட்டது. வெறும் 32 சதவிகித வாக்குகளே பதிவானது. பெரும்பாலான வாக்குசாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தேர்தல் நடந்த 109 தொகுதிகளில் 91 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.
அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைந்தன. தினமும் சராசரியாக 25 பேர் கொல்லப்பட்டனர். 1984-ல் இந்திரா காந்தி மறைவிற்கு பின், பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, அசாம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாணவர் சங்கங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி 10 லட்சம் பேர்களின் வாக்கு பறிக்கப்பட்டது. காங்கிரஸ் பதவி விலகியது.
மீண்டும் 1985-ல் தேர்தல் நடத்தப்பட்டது. 'அசாம் கனபரிஷத் கட்சி', மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 66 பேரில் 65 பேர் திருமணம் ஆகாத இளைஞர்கள். அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
உலகில் வேறு எங்கும் இப்படியொரு புரட்சி நடந்ததில்லை. மாணவர்களின் போராட்டத்தால் ஆட்சியை மாற்றி காட்டியதும் இல்லை.
அசாம் கன பரிஷத் தேர்தல் அரசியலை ஏற்று ஆட்சிக்கு வந்ததும் பரிதாபமாக சீரழிந்து போயின. அதன் பின்னடைவுகளிலிருந்து அசாம் மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
அசாம் கன பரிஷத் தேர்தல் அரசியலை ஏற்று ஆட்சிக்கு வந்ததும் பரிதாபமாக சீரழிந்து போயின. அதன் பின்னடைவுகளிலிருந்து அசாம் மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
அதுவே நமது ஜனநாயகத்தின் வெற்றி
பதிலளிநீக்குஉண்மைதான் அய்யா!
நீக்குநன்றி தோழர்...
பதிலளிநீக்குபல தகவல்கள் இனி அனைவருக்கும் சென்றடையும்...
இந்த மூன்று தளத்தையும் ஒன்றாக்கும் முயற்சியும் தொடர வாழ்த்துகள்...
தங்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும் நண்பரே! ஆனால், மதுரையைப் பற்றி மட்டும் எழுதும் 'நம்ம மதுரை' வலைப்பூவை இதில் பகிர்வது பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை.
நீக்குஏன் நண்பரே? “நம்ம மதுரை“ என்பதை மதுரைக்கு வெளியிலிருக்கும் நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? அல்லது ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சந்தேகமா? நம்ம வலைச்சித்தர் வலைப்பக்க அனுபவத்தோடு சொன்னால் அதில் ஒரு பொருளிருக்கும். ஒன்று படுத்தி வளர்க்கலாம் என்பதே என் கருத்தும். வளர்க. நாங்களும் தொடர்வோம் நன்றி
நீக்குஎன் தவறுதான் அய்யா, 'யாதும் ஊரே.. யாவரும் கேளீர்..' என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நம் பூட்டன் சொல்லிவிட்டான். நான்தான் உள்ளூர் தகவல் என்று தவறுதலாக எடைபோட்டுவிட்டேன். இனி 2,500 வருடங்கள் பழமையான மதுரை மாநகரைப் பற்றிய தகவலும் இதில் இடம் பெறும்.
நீக்குநண்பரே எல்லா தளங்களையும் ஒன்றாக்குங்கள்...அதுதான் எங்களுக்கும் எளிதாக இருக்கும் ஹஹ எல்லாம் சுயநலம்தான் ம்ம் என்ன செய்ய..
நீக்குநாங்கள் உங்களது தினம் ஒரு தகவல் தளம் அறிந்ததும் சொல்லலாம் என்று நினைத்தோம்...யாழ்பாவாணன் கூட நிறைய தளங்கள் வைத்திருந்தால் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தார்...டிடி யின் வழிநடத்தலில்...உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைத்து ஏதோ ஒரு தயக்கம் விட்டுவிட்டோம்...
எல்லாவற்றையும் ஒன்றாக்கி விட்டேன். அதனால் சற்று சுவாரஸ்யம் குறையுமோ என்ற அச்சமும் இருக்கிறது. பார்ப்போம்!
நீக்குதமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்!
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குதாங்கள் வேறொரு வலைப் பூவில் எழுதி வந்ததை அறியாது இருந்திருக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குஇவ்வலைப் பூவிலே யே தொட்ர்ந்து எழுதுங்கள்
நன்றி
தம +1
அப்படித்தான் முடிவெடுத்துள்ளேன் நண்பரே!
நீக்குசாதனை செய்தவர்கள் இப்போது எங்கே போனார்களோ தெரியவில்லை :)
பதிலளிநீக்குஅதுவொரு வேதனைதான் நண்பரே! பெரும் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றியவர்களும் பின்னாளில் ஊழல் வாதிகளாக மாறிப்போனார்கள். அரசியலே அப்படித்தான் போல எப்படிப்பட்டவர்களையும் மாற்றிவிடும் என்பது உண்மைதான் போலும்.
நீக்குஅந்தச் செய்தியைக் காணவில்லையே என்றுதான் நானும் நினைத்தேன். முடியுமானால் பிற்சேர்க்கையாக முந்திய தகவல்களின் இன்றைய நிலைபற்றியும் (புதிதாகச் சேர்த்தது மாதிரியும் ஆச்சு!) எழுதலாம். ஆனால் அதன் இணைப்பாக இருக்கலாமே அன்றி அதற்குள்ளேயே இருக்கலாகாது. மற்றபடி தங்கள் முடிவுதான்
நீக்குஇணைத்துவிட்டேன் அய்யா!
நீக்குதகவலுக்கு நன்றி! நண்பரே....
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் நன்றி!
நீக்கு1980களின் இடையில் நடைபெற்ற இந்நிகழ்வினை அப்போது நான் ஆர்வமாகப் படித்தேன். கல்லூரிப்படிப்பு முடிந்து பணியில்சேர்ந்த நேரம். அக்காலகட்டத்தில் பெரும் தாக்கத்தை இந்நிகழ்வு உண்டாக்கியது. அந்நாள்களை எனக்கு நினைவூட்டின இப்பதிவு. நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குஅறிவை வளப்படுத்தும் தங்களின் தினம் ஒரு தகவலைத் தொடர்கிறேன் நண்பரே!
பதிலளிநீக்குநன்றி
ஓனர் - 1
பதிலளிநீக்குகம்பெனி - 3
தமிழ் மணம் 9
ஸூப்பர் ஐடியா நண்பரே... வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குமாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் - ஓர் எடுத்துக்காட்டு.
த.ம.9
உண்மை அய்யா!
நீக்குஎன்னாது.. தினம் ஒரு தகவலா? இது எப்படி சாத்தியம்? பாரட்டுக்கள்.
பதிலளிநீக்குஆமாம் அய்யா, தினம் ஒரு தகவல்தான். இது தினத்தந்தி நாளிதழில் 12 வருடங்களுக்கும் மேலாக தினமும் நான் எழுதிவருவது. இதுவரை 4,200 தகவல்களுக்கு மேல் எழுதிவிட்டேன். இப்போதும் தொடர்ந்து எழுதுகிறேன். அந்த தகவல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து தான் 'நம்பமுடியாத உண்மைகள்' என்ற எனது முதல் புத்தகத்தை தினத்தந்தியே வெளியிட்டிருக்கிறது. வலைப்பூவின் மேலே அந்த நூலின் படம் இருக்கிறது பாருங்கள்!
நீக்குவருகைக்கு நன்றி அய்யா!
செந்தில் குமார், கலக்குங்கள். நண்பர் தனப்பால் நல்லதுதான் சொல்வார்.
பதிலளிநீக்குகோ
உண்மைதான். தங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குநினைவலைகளில் எங்கோ மறைந்து கிடந்த நெல்லிப்படுகொலையும் மகந்தாவும் நினைவுக்கு வருகிறார்கள். மறுபடியும் அத்தனையையும் விபரமாக படிக்கவும் பல செய்திகளையும் அறிந்து கொள்ளவும் ஒரு அருமையான பதிவிட்டமைக்கு நன்றி! ' தினம் ஒரு தகவலை' தொடருங்கள்!!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி, தொடர்கிறேன்!
நீக்குவணக்கம்..சார்.மாணவர்களுக்கு தகளது சக்தியை உணராதவாறு திரையுலகு பார்த்துக்கொள்கின்றது..உணர ஆரம்பிக்கும் போது வெற்றியே பெறும் ...வாழ்த்துகள் நன்றி
பதிலளிநீக்குஉண்மைதான், சினிமா சும்மா போகும் பெண்ணை வம்பு செய்து காதலிக்கவும், டாஸ்மாக்கில் தண்ணியடிப்பதை பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொள்ளவும்தான் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.
நீக்குசினிமா உலகில் பெரும்பகுதியினர் குடிகாரர்கள். குடியை சினிமாவில் காட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பணம் தருகின்றன. அதனால் இளைஞர்கள், பெண்கள் என்று எல்லோரையும் குடிகாரர்களாக மாற்றும் வேலையை திரைத்துறை சரியாக செய்து வருகிறது.
இன்றும் மாணவர்களுக்கு சக்தி இருக்கிறது ஆனால் அது மழுங்க அடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது
பதிலளிநீக்குஉண்மைதான், மதுரைத் தமிழனே!
நீக்குமாணவர்களை சரியான முறையில் வழிநடத்தினால் சாத்தியமாகும். நல்லதொரு பகிர்வுங்க சகோ.
பதிலளிநீக்குவலைதளங்களை இணைப்பது சிறப்பான ஒன்று! ஒரே தளத்தில் சிறப்பான கவனம் கொள்ள முடியும். தினமும் ஒரு தகவல் வியக்க வைக்கும் ஒன்று! உழைப்பும் தேடுதலும் நிறைய தேவைப்படும். 12 வருடமாகதொடர்ந்து எழுதுவது சாதனைதான் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குமாணவர்கள் நடத்திய ஒரு அவசியமான, நியாயமான போராட்டம். தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குகல்லூரியில் படித்த போது இந்தத்தேர்தல் நிகழ்ந்து அப்போது அஸ்ஸாம் மாணவர் சங்கம் பற்றி அறிந்தது....அப்போதும் சரி இப்போதும் சரி அங்கு கல்லூரிகள் பள்ளிகள் 7 ஆண்டுகள் மூடி இருந்தன என்பது வேதனை அளித்தது என்னதான் போராட்டம் என்றாலும்...ஆனால் அப்படிப்பட்ட போராட்டம் வெற்றியடையவில்லையே...ஆட்சிக்கு வந்து காணாமல் போனார்களே...ஊழலினால் ...மட்டுமல்ல மாணவர்கள் என்பதால் இன்னும் அவர்கள் நேர்மையாக அல்லவா இருந்திருக்க வேண்டும்....அப்படிப் பார்க்கும் போது அவர்கள் செய்த புரட்சி தோல்வியே வரலாற்றில் இடம் பெற்றிருந்தாலும்....போராட்டம் நல்ல கருத்ஹ்டு உள்ளதாக இல்லாமல் போனது. இதைக் குறித்து அந்தக் காலத்திலெயே வருத்தம் உண்டு...இதை நல்ல புரட்சியாக ஏனோ மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
பதிலளிநீக்குதொடக்கத்தில் நல்லதற்குத்தான் ஆரம்பித்தார்கள். பின்னாளில் விலைபோய் விட்டார்கள். பெரும் தோல்வி என்பது வேதனைதான்.
நீக்குபோராட்டம் நடத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் பின்னால் ஊழலில் சிக்கி மறைந்துபோன நிகழ்வுகள் அஸ்ஸாமில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் உண்டு. அஸ்ஸாம் போராட்டம் பற்றி அறியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குபெரும்பாலான போராட்டங்கள் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன என்பது உண்மையே! வருகைக்கு நன்றி அய்யா!
நீக்குமூன்று வெவ்வேறு தளங்கள் வைத்துக் கொண்டு அதில் பதிவுகள் எழுதுவது சற்றே சிரமமான வேலை. மூன்றும் அனைவரையும் சென்று சேர வேண்டுமெனில் நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு தான் நல்லது. இங்கேயே தொடர்ந்து எழுதுங்கள்....
பதிலளிநீக்குநல்லதொரு இயக்கமாக வளர்ந்த அசாம் கணபரிஷத் மொத்தமாய் அழிந்து போனது..... என்றாலும் மாணவர் சமுதாயம் நினைத்தால் நல்லதை நடத்தி முடிக்கமுடியும் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.
முதலில் சற்று குழப்பம் இருந்தது. இப்போது மூன்று தளங்களையும் இங்கே பதிவிட முடிவு செய்துவிட்டேன். கருத்துக்கு நன்றி.
நீக்குமாணவர்களால் முடியும் என்று நிருபித்தார்கள். ஆட்சிக்கு வந்தாலும் நல்லாட்சி தருவோம் என்று நிருபிக்காமல் போனதுதான் வேதனை.
வணக்கம். இப்போது தான் முதன் முறையாக் வருகிறேன்...இனி வருவேன்...நல்ல பதிவு...நன்றிhttp://swthiumkavithaium.blogspot.com/
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள். நானும் தொடர்கிறேன்.
நீக்குகருத்துரையிடுக