பரபரப்பான இந்த உலகில் இருந்து விலகி, விளைநிலங்களுக்கு நடுவே… கறவை மாடுகளுக்கு மத்தியில்…வித்தியாசமாக விடுமுறையை கழிக்க நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, சுர்ஜீவன். அழகான தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட ஓலைக்குடிசை வீடுகள் நமக்காகவே காத்திருக்கின்றன.
வெறுமனே பண்ணை வீட்டில் தங்குவதோடு இந்த பயணம் முடிந்து விடாது… நம்மூர் மாட்டு வண்டிகள் போல் ஒட்டகங்கள் பூட்டிய வண்டிகளில் வலம் வரலாம். விவசாய வேலைகளை பார்வையிடலாம். பாறைகள் மீது ஏறலாம். 'பாராகிளைடிங்' பண்ணலாம். இப்படிப்பட்ட சாகஸங்களும் இங்குண்டு.
மேலும் பண்ணையில் விளையும், ஃப்ரெஷ் காய்கறி, வாசனைப் பொருட்களோடு தயாரான ரொட்டிகளையும் சாதத்தையும் சாப்பிட்டு மகிழலாம்.
போக்குவரத்து நெரிசலும், மக்கள் கூட்டமும் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று நினைப்பவர்கள் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள குர்கான் நகருக்கு சென்று வரலாம். நாட்டிலேயே சிறந்த ஷாப்பிங் மால்கள் இங்கு இருக்கின்றன. இந்தப் பண்ணை வீடுகளில் தங்க குளிர்காலமே சிறந்தது.
எப்படி போவது?
ஹரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் மானேஸர் என்ற ஊரில் இந்த பண்ணை வீடுகள் இருக்கின்றன. சாலை வழியாக 6 மணி நேரத்தில் சென்று சேரலாம்.
எங்கு தங்குவது?
சுர்ஜீவன் பண்ணை வீடுகள் தங்குவதற்கு ஏற்ற இடம். ஒருநாள் இரவு தங்க ரூ.5,000-ல் இருந்து கட்டணம் பெறப்படுகிறது.
ஆஹா புகைப்படங்களே பசுமையாக இருக்கின்றதே... நல்ல பதிவு நண்பரே...
பதிலளிநீக்குஅரேபிய பாலைவனங்களையே பார்த்துப் பழகிய தங்களுக்காகத்தான் இந்த பசுமையான பண்ணை வீடுகள்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
அழகான படங்கள். பண்ணை வீடுகளை படங்களாகவே பார்த்துவிடுகிறோம்.
பதிலளிநீக்குநேரில் இன்னும் அழகாக இருக்கும். பார்த்து வாருங்கள்!
நீக்குவருகைக்கு நன்றி!
அழகான படங்கள்...அருமையான பண்ணை வீடு...கீதா பார்த்திருக்கிறார் ..ஆனால் தங்கவில்லை....சமீபத்தில் டெல்லி, குர்காவ்ன் சென்று வந்தாரே....ஆனால் பதிவில் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி....
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி துளசி சார்!
நீக்குகீதா மேம் போகாத இடம் உலகில் இல்லை என்பதால் கட்டாயம் இங்கும் போயிருப்பார். கேட்டுப் பார்ப்போம்.
எளிமையான வீட்டில் தங்க இவ்வளவு செலவு செய்யணுமா ?மிடில் கிளாசுக்கு இதெல்லாம் ஒத்து வராது:)
பதிலளிநீக்குஇப்ப எளிமைக்குதான் அதிகம் செலவு செய்யணும் ஜி! கதர் ஆடை எளிமைதான். ஆனால் அதை பராமரிக்க நிறைய செலவு செய்தாக வேண்டும். அதனால் தான் அதை அரசியல்வாதிகள் உபயோகிக்கிறார்கள். நம்மைப் போன்ற ஏழைகள் ஆடம்பரமான உடைகளை உடுத்துகிறோம்.
நீக்குசுர்ஜீவன் ஃபார்ம் ஹௌஸ், பிக்னிக் ஸ்பாட். குர்காவனிலிருந்து 20 கிலோமீட்டர். இது குழுவாகச் சென்றால் கொஞ்சம் கட்டணம் குறைவு. நாங்கள் 6 பேர் என்பதால் ஒரு ஆளுக்கு 1050 என்று நினைவு. எனவே உள்ளே செல்லவில்லை. நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அங்கு இருந்த போர்டில் தகவல்களைப் பார்க்க முடிந்தது. என் தங்கை குடும்பத்தினர் அங்கு சென்று வந்த புகைப்படங்கள் பார்த்தும் தெரிந்து கொண்டேன். முன்னரே ரிசர்வ் செய்ய வேண்டும். அது கிராமத்து அமைப்பு என்றுதான் சொல்லுகின்றார்கள். ஒட்டக சவாரி உண்டு. நீங்கள் சொல்லி இருக்கும் பாரா க்ளைடிங்க் உண்டு.
பதிலளிநீக்குதண்ணீர் விளையாட்டுகள், கிராமத்து விளையாட்டுகள், இப்போதைய விளையாட்டுகளான டென்னிஸ், கால்பந்து, பூபந்து, கூடைப்பந்து எல்லாம் போன்ற கேம்ஸ் உண்டு. காரம்போர்ட், பாம்புக்கட்டம், ஜூடோ, போன்ற வை. தபலா வாசித்தல், நடனம், பாட்டு என்றும் உண்டு குழந்தைகளுக்கு நிறைய விளையாட்டுகள், சாகசங்கள் என்று பல. சாப்பாடும் காலை, மதியம், மாலை ஸ்னாக்ஸ் டீ வரை அங்கேயே. நல்ல தரமான சாப்பாடு. ஒரு நாள் என்றும் போய் வரலாம். காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை. அவர்களது தளம் வழி பதிவு செய்துகொள்ளலாம்...
நல்ல பகிர்வு நண்பரே!
துளசி சார் கேட்டுக்கிட்டீங்களா..! நான் சொல்றப்போ நம்பாம இருந்தீங்க. இப்பவாவது தெரிஞ்சுக்கோங்க! கீதா மேம் போகாத இடத்த இந்த பூமியில் இனிதான் உருவாக்க வேண்டும்.
நீக்குவருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி!
ஐயோ செந்தில் நான் அங்கு உள்ளே செல்லவில்லை நண்பரே! அறிந்து கொண்டவைதான்...
நீக்குஉலகில் கால் படாத இடம் என்றால் அது சகோதரி துளசி கோபால்அவர்களது தான் ....அவர்களது கட்டுரைகளை, வெங்கட்ஜியின் (இந்தியாவில் இவரது கால் படாத இடம் இல்லை எனலாம் ) கட்டுரைகளை, உங்கள் கட்டுரைகள் உட்பட விரும்பிப் படிப்போம் நாங்கள் இருவருமே...
நன்றி அது வேடிக்கைக்காக சொன்னது. பதில் தந்ததற்கு நன்றி!
நீக்குஹஹஹ் ஒகே ஓகே சகோ...
நீக்குசிரிப்புக்கும் நன்றி!
நீக்குகீதா என்று எழுத விடுபட்டுவிட்டது நண்பரே...
பதிலளிநீக்குநீங்கள் பெயரை எழுதாவிட்டாலும் எங்களுக்கு தெரியும்!
நீக்குகண்டிப்பா கஞ்சிக்கு சாகும் விவசாயி-கட்டியருக்க முடியாது......????
பதிலளிநீக்குகண்டிப்பா, விவசாயி என்னைக்கு வசதியாக இருந்திருக்கான்.
நீக்குஎப்போது போவோம்...? சொல்லுங்கள்...
பதிலளிநீக்குகீதா மேம்மிடம் கேட்போம்!
நீக்குஉலகம் முழுவதும் தெரிந்தவர் அவர்தான்.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குபண்ணைக்காரன் குடியிருக்கும் குடிலில் பண்ணைக்காரன் தங்க... தங்கக்காசு வேணும்! கிராமத்தில் மண்சட்டியில் கூழ்கிண்டிக் குடிப்பதை வித்தியாசமாய்...வினோதமாய் குடிக்கும் நடுத்தர அல்லது வசதிபடைத்த முதலாளிகள்!
‘வேலையில் இருப்போருக்கு சும்மா இருப்பதே சுகம்
வேலையில் இல்லாதோருக்கு சும்மா இருப்பதே சோகம்’ -கவிஞர் மு.மேத்தா.
பண்ணை வீடு பார்ப்பதற்கு எழிலாகத்தான் இருக்கிறது. ஏழைகள் தங்கும் இடத்தில் ஏழைகள் போல் பணக்காரர்கள் தங்கி மகிழலாம்.
நன்றி.
த.ம.9
அருமை அய்யா!
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பார்க்கும்போதே மனம் அமைதியடைகிறதே!”காணி நிலம் வேண்டும் பராசக்தி!”
பதிலளிநீக்குஇப்படி ஒரு சூழலில்தான் அப்படியொரு கவிதையை புனைந்திருப்பானோ பாரதி..!
நீக்குதூரம்தான் நண்பரே!
பதிலளிநீக்குஇருப்பினும் உங்கள் பதிவின் பொறியில் மாட்டித் தப்பிக்க இயலாத எலியாகி இருக்கிறேன்.
செல்வேன்.
நன்றி.
த ம 11
சென்று வந்து கவிதை பாடுங்கள். மரபுக் கவிஞரே!
நீக்குபண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!
நீக்குதெரிந்து கொண்டேன், நானும்!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீக்குஅழகான பண்ணை வீடு.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீக்குஅருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீக்குஇந்த மாதிரியெல்லாம் டூர் அடிக்கனும்னு ஆசைதான். இருக்கட்டும் .. கொஞ்ச நாள் கழித்து நீங்க சொன்ன ஊர்களுக்கு எல்லாம் போரேன்.. ஆனா ..தகவல்களுக்கு மிக்க நன்றி..
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குதங்கள் வருகைக்கும் நன்றி நண்பரே!
பதிலளிநீக்குநல்லதோர் இடம். ஒரு முறை குழுவாகச் செல்ல ஏற்பாடு செய்து போக முடியாது போனது! :) விரைவில் செல்ல வேண்டும்.
பதிலளிநீக்குசென்று வாருங்கள் நண்பரே!
நீக்குஎப்போதாவது போய் விட வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டிய பதிவு...அருமை. நன்றிhttp://swthiumkavithaium.blogspot.com/...( தொடர்கிறேன்.)
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குபண்ணை வீடு பார்க்கவே குளு குளு என்றிருக்கிறது. தமிழ் நாட்டில் அரசு தரப்பில் இப்படி பண்ணை வீடுகள் அமைத்தால் சுற்றுலாப்பயணிகள் வநது குவிவார்களே! சுற்றுலாத்துறை வருவாயும் பெருகும். ஆனால் நம் அரசியல்வாதிகள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள். படங்களை வெகுவாக ரசித்தேன். நன்றி செந்தில்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குகருத்துரையிடுக