Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நான் அறியாத டிடி..!


லைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிமையானவராக, தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் பிதாமகராக இருக்கும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் பற்றி எனக்கு கொஞ்சமாகத்தான் தெரியும். அவர் ஒரு தேர்ந்த கவிஞர் என்பது இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது.


சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களின் வலைப்பதிவில் டிடி எழுதிய 'ஒவ்வொரு பூக்களுமே ..' பாடலை படித்த போது அசந்துப் போய்விட்டேன். என்னவொரு சந்தம்..! பொருத்தமான வார்த்தைகள்..! திக்குமுக்காடிப் போய்விட்டேன். பாடலை முழுவதுமாக பாடிப் பார்த்தேன். எந்தவொரு இடத்திலும் சொற்கள் இடிக்கவில்லை. மிக நேர்த்தியான கவிஞனால் மட்டுமே இப்படி ஒன்றை இயற்றமுடியும். நீங்களும் இதை பாடிப்பாருங்களேன்..!



ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது...
"என்ன இந்த வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக் கூடாது...

எந்த வலைப்பூ பதிவில்
கருத்தில்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் கருத்தெல்லாம்
மாறி போகும் மாயங்கள்...!

கருத்து தாங்கும் பதிவுகள் தானே
முன்னணி பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...

யாருக்கில்லை போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!

மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...

லட்சம் பதிவுகள் கண்ணோடு...
லட்சியங்கள் நெஞ்சோடு...
நம்மை வெல்ல யாருமில்லை...
உறுதியோடு போராடு...!

பதிவரே... உன் மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை மறுமொழி
எல்லாமே நட்பாகும்...

பதிவுகள் இன்றி வலைப்பூவா...?
நேரம் ஏனில்லை என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில் சிறகடிக்கும்...

மனமே ஒ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!


                                                                                                - திண்டுக்கல் தனபாலன்


தங்களின் அனுமதி பெறாமல் பகிர்ந்தமைக்கு மன்னியுங்கள் நண்பரே! 



35 கருத்துகள்

  1. அடடே ஊர் சுற்றுகிறதே பாடல்...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் சகோதரரே!

    அசத்தியிருக்கிறார் டி டி..!

    மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    த ம+1

    பதிலளிநீக்கு
  3. இந்த பாடலை முகநூலில் பார்த்து மகிழ்ந்தேன்!
    உடனடியாக இப்பொழுது தங்களது தளத்தில் பதிவாக படிக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி!
    சிறப்பிலும் சிறப்பு நண்பரே!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் நண்பரே
    நானும் படித்து அசந்துதான் போய்விட்டேன்
    வலைச் சித்தர் என்னும் பட்டத்துடன்
    வலைக் கவி என்னும் சிறப்புமிகு பட்டத்தையும்
    வழங்கலாம் என்றே நினைக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  5. நான் அறிந்த டி.டி என்பதால்
    கூடுதலாக இரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா அவர் கவிஞர் என்று.

      நீக்கு
  6. ungal valaippathivn valiyaakathan padithen. pakirvikku nandri sir.

    dd sar vazthukkal. paaraataa vaarthaikale illai.
    kavithaiyai paadi paarthen piramaatham.

    பதிலளிநீக்கு
  7. DD க்கு இப்படியும் ஒரு முகம் இருப்பதை நானும் இப்போதான் நானும் அறிந்தேன் :)

    பதிலளிநீக்கு
  8. தோழரே... ஏதோ அவசர அவசமாக எழுதியது...

    நன்றி... மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரமாக எழுதியதே இப்படி என்றால், ஆறஅமர எழுதியிருந்தால், இன்னும் அருமையாக இருந்திருக்கும். அற்புதமான பாடல் தந்ததற்கு நன்றி!

      நீக்கு
  9. ஆம் சகோ,
    பாடிப் பார்த்தேன் நல்லா இருக்கு,
    அருமை, வாழ்த்துக்கள்
    நல்ல பகிர்வு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பாடலை எழுதிய வலைச்சித்தர் திண்டுக்கல்லாருக்கும் அதை பகிர்ந்த தங்களுக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  11. ஆமாங்க அருமையா வந்திருக்கு. இன்று அவரின் இந்த முகத்தையும் பார்த்தேன். பாராட்டுக்கள் சகோவிற்கு. பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  12. திண்டுக்கல் திரு.தனபாலனுக்கு பல்சுவை வலைஞர் என்று பட்டம் கொடுக்கலாம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கும் தகுதியானவர்தான் அவர். வருகைக்கு நன்றி!

      நீக்கு
  13. அருமை அருமை!!! டிடியின் அறியாத முகம் !!! அட! போட வைத்து ஆச்சரியமாகிவிட்டது....!!! டிடி வாழ்த்துகள்! அதைப் பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  14. ஆம்! மிகவும் சிறப்பாக எழுதி அசத்திவிட்டார் டி.டி! இனி இது போன்ற கவிதைகளையும் அவர் தளத்தில் பார்க்கலாமோ?

    பதிலளிநீக்கு
  15. இவ்வளவு பணிச்சுமைக்கிடையேயும் திரு திண்டுக்கல் தனபாலன் அசத்திவிட்டார். அவசரமாக எழுதியது என்று கூறுகிறார். இருந்தாலும் அருமையாகவே உள்ளது. அவர் இத்துறையிலும் இனி தடம் பதிக்கலாம். அவருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது கவிதையை ஒரு பதிவாகத் தந்த நண்பருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை