• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, அக்டோபர் 09, 2015

  புதுக்கோட்ட அம்புட்டு தூரமாவா இருக்கு..?!


  புதுக்கோட்டையில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருப்பது முதியவர்களுக்கும் பெண்களுக்கும் சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அங்கு மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் தினசரி வந்து போகிறது. 

  சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16713) இரவு 11.45 -க்கு புதுக்கோட்டை வந்து சேருகிறது. இதே எக்ஸ்பிரஸ் மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வ.எ.16714) ஆக நள்ளிரவு 12.30 -க்கு புறப்பட்டு காலை 8.20-க்கு எழும்பூர் சென்று சேருகிறது. 


  அடுத்து பகல் நேர வண்டியான பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எ.12606) சென்னை எழும்பூரில் மதியம் 3.45 மணிக்கு 4-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 10.11 -க்கு புதுக்கோட்டை வந்து சேருகிறது. இதே வண்டி (வ.எ.12605) மறு மார்க்கத்தில் காலை 05.05 -க்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.10-க்கு சென்னை சென்று சேருகிறது. 

  இந்த ரயில்கள் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த ஊர்களில் இருந்து புதுக்கோட்டைக்கு தாரளமாக ரயிலில் வரலாம். 

  இது போக ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வ.எ.16101) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.40-க்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த வண்டி புதுக்கோட்டைக்கு காலை 06.25-க்கு வருகிறது.  

  இதே வண்டி மறுமார்க்கத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எ.16102) ஆக இரவு 9.14-க்கு புறப்பட்டு காலை 6.30-க்கு எழும்பூர் சென்று சேருகிறது. 

  விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சாலை மார்க்கமாக வந்து விடலாம். 

  இனி நமது வலைப்பதிவர்களின் வருகைப் பதிவு பட்டியல் வரிசையில் உள்ள ஊர்களுக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே இருக்கும் தூரம், பயண நேரம் ஆகியவற்றைப் பார்ப்போம்.   அரியலூர் 
  தொலைவு: 110 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 30 நிமிடம்

  ராமநாதபுரம் 
  தொலைவு: 132 கி.மீ.  பயண நேரம்: 2 மணி.40 நிமிடம்

  ஈரோடு
  தொலைவு: 202 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 50 நிமிடம்

  கரூர்
  தொலைவு: 138 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 45 நிமிடம்

  கன்னியாகுமரி 
  தொலைவு: 355 கி.மீ.  பயண நேரம்: 6 மணி 10 நிமிடம்

  காஞ்சிபுரம் 
  தொலைவு: 341 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்

  கிருஷ்ணகிரி 
  தொலைவு: 304 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 15 நிமிடம்

  கோயம்புத்தூர் 
  தொலைவு: 285 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 00 நிமிடம்

  சிவகங்கை 
  தொலைவு: 92 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 45 நிமிடம்

  சென்னை 
  தொலைவு: 384 கி.மீ.  பயண நேரம்: 7 மணி 05 நிமிடம்

  சேலம் 
  தொலைவு: 193 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 45 நிமிடம்

  தஞ்சாவூர் 
  தொலைவு: 61 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 30 நிமிடம்

  திண்டுக்கல் 
  தொலைவு: 114 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 00 நிமிடம்

  திருநெல்வேலி 
  தொலைவு: 272 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்

  திருச்சிராப்பள்ளி 
  தொலைவு: 55 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 10 நிமிடம்

  திருப்பூர் 
  தொலைவு: 225 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்

  திருவண்ணாமலை 
  தொலைவு: 238 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 15 நிமிடம்

  திருவள்ளூர்
  தொலைவு: 380 கி.மீ.  பயண நேரம்: 6 மணி 45 நிமிடம்

  திருவாரூர்
  தொலைவு: 121 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 45 நிமிடம்

  தேனி
  தொலைவு: 195 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 25 நிமிடம்

  நாகப்பட்டினம் 
  தொலைவு: 147 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 35 நிமிடம்

  நாமக்கல் 
  தொலைவு: 141 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 00 நிமிடம்

  பாலக்காடு 
  தொலைவு: 284 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்

  புதுச்சேரி 
  தொலைவு: 254 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்

  பெங்களூர் 
  தொலைவு: 395 கி.மீ.  பயண நேரம்: 7 மணி 10 நிமிடம்

  பெரம்பலூர் 
  தொலைவு: 112 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 10 நிமிடம்

  மதுரை 
  தொலைவு: 110 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 30 நிமிடம்

  விருதுநகர்
  தொலைவு: 163 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 15 நிமிடம்

  வேலூர் 
  தொலைவு: 322 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்


  இங்கே குறிப்பிட்டுள்ள பயண நேரம் கார்களில் வரும் நேரத்தைக் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளது. பொது வாகனங்களில் வரும் போது சாலையின் தன்மை போக்குவரத்து நெரிசலை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எனவே அதற்கேற்றார்ப் போல் திட்டமிட்டு பயணத்தை தொடங்குங்கள்.

  பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!  56 கருத்துகள்:

  1. ஆஹா, மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.

   பதிலளிநீக்கு
  2. ஆஹா அருமை....மிகத்தேவையான பதிவு...விழாக்குழுவிற்காக நீங்களே எழுதியுள்ள பதிவிற்கு மனம் நிறைந்த நன்றி சார்..

   பதிலளிநீக்கு
  3. பயண நேரத்தைக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. ரயில் விவரங்கள் சிறப்புதான். ஆனால் இன் முன்பதிவு செய்ய முடியாது. இடமிருக்காது!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அது உண்மைதான். ரயில் முன்பதிவுக்காக ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது படுகிறது. வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  4. சார்!!! உண்மையிலேயே இந்த பதிவிற்காக புதுகை விழாக்குழுவினர் உங்களுக்கு மிகுந்த நன்றி உடையவர்கள் ஆகிறோம்!! அருமை. மிக்க நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. விழாக்குழுவினரான தங்கள் அனைவரின் உழைப்புக்கு முன் இது ஒன்றும் இல்லை, சகோ!

    நீக்கு
  5. ஆகா
   ஒரு பதிவிற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள்
   வாழ்த்துக்கள் நண்பரே
   புதுகையில் சந்திப்போம்
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நமது நண்பர்களுக்கு சிறிதாவது உதவட்டுமே என்றுதான் இந்த முயற்சி. வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  6. பதிவர் சந்திப்பு பயணத் திட்டமிடுதலுக்கு தேவையான அருமையான தகவல்கள்.

   பதிலளிநீக்கு
  7. வித்தியாசமாக யோசித்து
   பதிவர் விழாவிற்கு வரும் யாவருக்கும் பயன்படும்
   விதத்தில் பதிவிட்டவிதம் அருமை
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  8. புதுக்கோட்டைக்கு வரும் யாவருக்கும் பயன்படும் தகவல்கள். தகவல்களுக்கு நன்றி. எனது உளங்கனிந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு
  9. 7மணி நேரப்பயணமா என்று இருக்கிறது. ஆனாலும் அனைவரையும் சந்திக்கும் ஆவலில் வந்துவிடுகிறேன். எனக்கு பேருந்துப் பயணம் தான் பிடிக்கும் ஆகவே. நன்றிங்க சகோ.

   பதிலளிநீக்கு
  10. நமக்கு பக்கம்தான் ,சந்திப்போம் நண்பரே :)

   பதிலளிநீக்கு
  11. இவ்வளவு சொன்னவரு.. நியூ யார்க்கில் இருந்து வரவழியை சொல்லி இருந்தா நம்ம மதுரை தமிழன் கூட வந்து இருப்பார் இல்ல. அப்படியே.. ஹாலிவுட் ஏரியாவில் இருந்து வழி சொல்லி இருந்தா நான் கூட வந்து இருப்பேன் இல்ல. இப்படி.. கூட இருந்தே எங்களை தள்ளி வச்சிடிங்களே! அருமையான பதிவு , உபயோகமான பதிவு, வாழ்த்துக்கள் !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அட ஆமாஇல்ல. வழி சொல்லாததால் விசுவாசம் அண்ணாச்சியும் மதுரைத் தமிழனும் அமெரிக்காவில் தவியாய் தவிக்கிறார்கள். அப்படியே நாயர் சாயாக் கடையில் ஓரங்கட்டி நில்லுங்கள். கில்லர்ஜி எரோ பிலோனோட வர்றார்.
    வருகைக்கு நன்றி தலைவரே!

    நீக்கு
   2. ஹஹஹஹஹஹ்!! செம செந்தில்!!!! நல்ல பதில் சிரித்து மாளலை...அப்படியே கில்லர்ஜியை எல்லா ஊருக்கும் போய் எல்லாரையும் பிக் அப் அண்ட் ட்ராப் செய்யச் சொல்லி இருக்கலாமோ...துளசி குடும்பத்தினர் போகும் போது பதிவு உறுதியாகததால் (இத்தனைக்கும் 1.1/2 மாதம் முன்பே பதிவு செய்தும்) பதிவு செய்யாத பெட்டியில் கூட்டத்தில் கழிவறை பக்கத்தில் நின்று கொண்டு பயணம் செய்தது போல எத்தனைப் பதிவர்கள் பாவம் எப்படி எல்லாம் பயணித்தார்களோ....

    நீக்கு
   3. முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணிப்பது சிரமமே! அடுத்த பதிவருக்கான தேதியை 4 மாதங்களுக்கு முன்பே அறிவித்தால்தான் முன்பதிவு செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும். செய்வார்கள் என்று நம்புவோம்!

    நீக்கு
  12. ஆஹா எனக்கு கடைசி நேரத்திலாவது பயன்படும் தகவலை தந்தீர்களே நன்றி நண்பரே
   தமிழ் மணம் 100

   பதிலளிநீக்கு
  13. Thiruvarur distance is mentioned wrong. It is not 680kms but around 120 kms and the travelling time would be 2h 42 min. only. Can you check it out and correct it? For cross verification, you can check the distance from Nagapattinam as provided and note that Nagapattinam is only 24 kms away

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, திருவள்ளுருக்கான தொலைவு திருவாரூரில் தவறுதலாக இடம் பெற்றுவிட்டது. சரி செய்துவிட்டேன்.

    நீக்கு
   2. பெயரில்லா அவர்களுக்கு திருவாரூரிலிருந்து புதுக்கோட்டைக்கு கார் என்றால் நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம். பேருந்து என்றால் நேரடியாக கிடையாது. தஞ்சாவூர் வழிதான் அதுவும் 3 மணி நேரம் எல்லாம் இல்லை..4 மணி நேரம் ஆகிவிடுகின்றது..எங்கள் அனுபவம்..அன்று நாங்கள் இருவரும் அப்படித்தான் புதுக்கோட்டைக்குப் பயணித்தோம்.

    நீக்கு
   3. காரில் பயணம் செய்பவர்கள் அதுவும் நேரடியாக இங்கே வருபவர்களுக்கு மட்டுமே இந்த நேரம் சரியாக இருக்கும். பஸ்ஸில் வருபவர்களுக்கும் வேறு பஸ் மாறி வருபவர்களுக்கும் நேரம் கூடுதலாகவே ஆகும். தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    நீக்கு
  14. உபயோகமான தகவல்கள்! பயணத் தொலைவும் நேரமும்தான் என் பயணத்தை தடுத்து நிறுத்திவிட்டன. முந்தைய நாளே கிளம்பவேண்டும் விழா நாளன்று சென்று விழாநாளுக்கு மறுநாள்தான் வர முடியும் என்பதால் மாற்று ஏற்பாடுகள் செய்து விழாவுக்கு வர முடியவில்லை! என் பணி அப்படி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சில வேளைகளில் அப்படித்தான் நமக்கு நேரம் ஒத்து வாராது. நல்லவற்றில் கலந்து கொள்ள முடியாது. நமது நண்பர்கள்தான் விழாவைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்களே அது போதும். வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  15. ஆஹா... சிறப்பான தகவல்கள்...

   (எங்க ஊர் நீடூர்-லிருந்து எவ்வளவு கி.மீ?)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்றி நண்பரே, அடுத்தமுறை உங்கள் ஊரையும் போட்டுவிடலாம்.

    நீக்கு
  16. we wish to publish advertisement with hyper link to our site in your blog.if you have such option,kindly reply with your tariff details.
   kindly send details to: bullsstreettamil@gmail.com

   பதிலளிநீக்கு
  17. நல்ல சேவை! பலருக்கும் பயன் மிகும் பதிவு!
   வாழ்த்துக்கள் சகோதரரே!

   பதிலளிநீக்கு
  18. காலை எட்டு மணீக்கு கிளம்பினால் 11 மணிக்கு தான் வர முடியுமா?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆமாம் நண்பரே, நாமெல்லாம் காலை 5 மணிக்கு பஸ் ஏறினால்தான் 8 மணிக்கெல்லாம் அங்கு செல்லமுடியும். இல்லையென்றால் நமக்கு டிபன் கிடைக்காது.

    நீக்கு
  19. பிரமாதம் செந்தில் அ\வர்களே!
   நாம் நாளை சந்திப்போம். இந்த தருணத்தில் நம் தலைவரைப் பற்றி சில வரிகள்...

   முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

   புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

   முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மை நண்பரே, அய்யா முத்து நிலவன் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களின் அயராத உழைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. நாளை சந்திப்போம்!

    நீக்கு
  20. வாழ்த்துகள் செந்தில்குமார்!சிறப்பான கட்டுரைக்கு சிறப்பான பரிசு!

   பதிலளிநீக்கு
  21. நேரிலேயே சந்தித்துவிட்டோமே....மிகவும் மகிழ்வடைந்தோம். என்ன உங்களுடன் நிறைய நேரம் பேசாமல் வந்துவிட்டோம்...உங்களுடன் மட்டுமல்ல நண்பர் ஜோதிஜியுடனும்....கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் போல்...

   இந்தத் தகவல்கள் இன்னும் முன்னதாகவே வந்திருக்கலாம் என்றாலும் மிகவும் அவசியமான தகவலே...உங்களைச் சந்தித்த பிறகு இந்தப் பதிவுக்கு பதில்....ஹஹஹ்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எனக்கும் தங்கள் இருவருடனும் பேசமுடியவில்லையே என்ற குறை இருக்கிறது. அடுத்த முறை முதல் நாளே சென்று விடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அடுத்த முறை இத்தகைய தகவலையும் முன்பே சொல்லிவிடுகிறேன்.

    நீக்கு
  22. தங்களுக்கு எங்கள் மனம் கனிந்த வாழ்த்துகள்! நடுவர் குழுவில் இருந்தமையால் கட்டுரையை வாசிக்கவில்லை அப்போது....இப்போதுதான்..வாசிக்கப் போகின்றோம்...

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்