Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

அடக்கக் கூடாத சிறுநீர்


சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள். பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள். இது ஆபத்தானது. 


பொதுவாக மனிதனுடைய சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 350 முதல் 500 மி.லி. வரைதான் இருக்கும். இந்த பை நிறையத் தொடங்கினால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.  எப்போதுமே இத்தகைய எண்ணம் வந்ததும் சிறுநீர் கழித்து விடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சிறுநீரை அடக்கி வைக்ககூடாது. 

ஒரு நாளில் காலை தொடங்கி இரவு வரை 5 முதல் 7 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். மூன்று மணி நேரத்துக்கு மேல் சிறுநீரை தேங்க விடக்கூடாது. சிறுநீர் பையின் கொள்ளளவை மீறி சிறுநீர் தேங்குவதால் நிறைய விளைவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. 

சிறுநீர்ப்பை அதிகமாக விரிவடைவதால் சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தும் கொடுக்க வேண்டிய திசுக்கள் காலப்போக்கில் பாதிப்படைந்து பலவீனமும் அடைந்து விடும். இந்த திசுக்கள் தான் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்ததுமே அதை வெளியேற்ற தூண்டுகிறது. இத்தகைய திசுக்கள் பாதிப்படைவதால் சிறுநீர்ப்பை செயலிழந்து போகும். அதனால், சிறுநீர் முழுவதுமாக வெளியேற்ற படாமல் உள்ளே தேங்கிவிடும் நிலை ஏற்படும்.

இப்படி உள்ளே சிறுநீர் தேங்குவதால் அடிக்கடி சிறுநீர்ப்பாதையில்  அடைப்பு ஏற்படும். சிறுநீர்ப்பையில் கல் உருவாக வைப்பு உள்ளது. நாட்கள் செல்ல செல்ல சிறுநீரகங்கள் வீக்கமடைந்து செயல் இழந்து போகும் வாய்ப்பும் உண்டு. 

அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும் சிறுநீர் கழித்து முடிந்ததும் அது சகஜ நிலைக்கு வந்து விடும். சிறுநீரை கட்டுப்படுத்தாமல் அவ்வப்போது வெளியேற்றுவதுதான் ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நல்லது. 

சிறுநீர் வரும் என்ற பயத்தினால் வெளியில் செல்லும் பெண்கள் பலர் குறைவாக நீர் அருந்துகிறார்கள். இது அடக்குவதைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரகங்களில் கற்களை உருவாக்கிவிடும். அதனால் அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்! அடக்கி வைக்காமல் சிறுநீரை வெளியேற்றுங்கள்! அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. 


32 கருத்துகள்

  1. பதில்கள்
    1. மின்னல் வேகத்தில் உடனே வருகை தந்து கருத்திட்ட நண்பருக்கு நன்றிகள்!

      நீக்கு
  2. avasiyamaana pathivu sir.
    anaivarum therinjukka vendiyathu.

    pathivirkku nandri sir.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுக்கு வருகை தந்து கருத்துமிட்ட மகேஷுக்கு நன்றிகள்!

      நீக்கு
  3. வணக்கம் நண்பரே இது அறிந்த விடயமே இருப்பினும் கூடுதல் தகவல் அறிந்தேன் நன்றி
    எங்களுக்கு ''உச்சா'' விடயம் படிக்க வெற்றி-பாக்கு தேவையில்லை சொன்னபடி சரியாக வந்துடுவோம் நாங்களெல்லாம் தேவகோட்டைகாரங்கே... வாக்கு தவறமாட்டோம்
    தமிழ் மணம் தொடந்து விழும் திடீர் திடீரென.... நண்பர் டி.டி முந்தி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, உங்களைப்போல் என்னால் பின்னூட்டம் இடமுடியவில்லை. பதிவுகூட புதிதாக எழுத முடியவில்லை. ஏற்கனவே நான் எழுதியதையே இங்கு பதிவிடுகிறேன். வேலைப்பளு ஒரு காரணம் என்றால் இணையத்திலும் பிரச்சனை. சுத்திக்கொண்டே இருக்கிறது. அதனால் மறுமொழி கூட அளிக்க முடியவில்லை.

      நீக்கு
  4. நீங்கள் தந்த இந்த தகவலை முன்பே தினத்தந்தியில் படித்து பலருக்கு இதைப்பற்றி சொல்லியிருக்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இது தினத்தந்தியில் நான் எழுதிய தகவல்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயமாக, பெண்கள்தான் இந்தப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கிறார்கள்.
      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. மிக நல்ல அவசியமான பதிவு நண்பரே! ஆண்களுக்குக் கவலையில்லை பிரயாணங்களின் போது. பெண்களுக்குத்தான் மிக மிகக் கஷ்டமான ஒன்று. அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

    கீதா: உண்மைதான் சகோ. பெண்களின் சார்பாக இதை இங்கு பதிய விரும்புகின்றேன். எங்களைப் போன்றவர்களுக்குத்தான் மிகவும் கஷ்டமான ஒன்று. முக்கியமாக பிரயாணத்தின் போது. சிறுநீரைத் தேங்கவிடக் கூடாது என்பது மிகமிகச் சரிதான் என்றாலும், நம் ஊரில் இன்னும் அந்த அளவிற்குச் சுகாதாரமான பொதுக் கழிவறைகள் இல்லை எனலாம். அதுவும் சமீபகாலமாகக் கட்டப்படுபவைகள் மேற்கத்திய முறைப்படியான கழிவறைகள். அதில் தவறு இல்லை. பல பெண்களுக்கும் தற்போது மூட்டுப் பிரச்சனைகள் (இதைத் தவிர்க்கலாம் ஆனால் நம் வாழ்க்கை முறை மாறியதால் ஏற்பட்ட விளைவுகள், பெண்களின் உடல்நல அலட்சியம் என்று இதற்குப் பல காரணங்கள் உண்டு அதை இங்கு விவரிக்கவில்லை) காரணமாக மேலைநாட்டு முறைகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டியதாகிப் போனது. நம் இந்திய முறையான கழித்தல் மிக மிக நல்லதொரு விஷயம் என்பது மறக்கப்பட்டு வருகின்றது என்பது வேதனை. அது ஒரு ஆசனமும் கூட. சரி அதைப்பற்றியும் இங்கு வேண்டாம். நம்மூர் பொதுக் கழிப்பறைகள் சுகாதாரமில்லாததாலும் அங்கு உள்ள தண்ணீர் சுத்தமாக இல்லாததாலும், வரும் உயிரழப்புகள், சிறுநீரகப் பிரச்சனைகள் சமீபத்தில் சற்றுக் கூடுதலாகி உள்ளதாகத் தெரிகின்றது. ஆனால் பல வெளியில் தெரிவதில்லை. இதைப் பற்றி இங்கு சொன்னால் பின்னூட்டம் பதிவு போன்று ஆகிவிடும் என்பதால் பெண்களுக்கான பொதுசுகாதாரம் என்று நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் பாதிக் கட்டுரையில் எழுதுகின்றேன். உங்கள் சுட்டியுடன்.

    நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு

    மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக ஆழமாக யோசித்திருக்கிறீர்கள். எல்லாமே உண்மைதான். கால்களை 90 டிகிரிக்கு மேல் மடக்கமுடியாத முடக்கத்தைதான் மேற்கத்திய கலாசாரம் நமக்கு தந்திருக்கிறது. வீட்டுக்குள் டைனிங் டேபிள் வந்த பின் தரையில் அமர்ந்து சாப்பிடும் முறை காணாமல் போனது. அது ஒரு நல்ல ஆசனம். குழந்தைப் பிறப்பை சுலபமாக்கும் ஆசனம்.
      அதேபோல்தான் கழிவறையும். இந்திய முறையில் கால்கள் நன்றாக மடிந்தன. மேற்கத்திய முறையில் 90 டிகிரிக்கு கால்களை மடக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் நாம் பெற்றது மூட்டு பலவீனத்தைத்தான். மீண்டும் நமது பாரம்பரிய முறைக்கு திரும்பினால்தான் ஆரோக்கியத்தை மீட்க முடியும்.
      வருகைக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு
  7. அந்தக்காலத்தில் சொல்வார்கள்”ஆத்திரத்தை அடக்கினாலும்............. அடக்கக் கூடாது” என்று!
    நல்லாச் சொன்னீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிந்துதான் சொல்லியிருக்கிறார்கள்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  8. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  9. அவசியமான பதிவு... சில ஆசிரியர்கள் மாணவர்களை அனுமதிப்பதில்லை... அவர்களின் கவனத்திற்கு இதை கொண்டுசெல்ல வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணமைதான் பல பள்ளிகளில் மாணவர்கள் சிறுநீர் கழிப்பது பெரும் குற்றம் போல் பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் மனநிலை மாற வேண்டும்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  10. அவசியமான தகவல்!
    சுருக்கமாகவே சொல்லிவிட்டீர்கள்!!
    .
    .

    பதிலளிநீக்கு
  11. அருமையான எச்சரிக்கைப் பதிவு. ஆண்களைவிட பெண்கள் அதிகம்சிரமப்படவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதே உண்மை. பின் விளைவுகளை உணர்த்திய விதம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  12. நல்லதொரு பதிவு....இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாதே....,,,,,நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், ஆனால் பெண்கள் பலர் வீடு வந்து சேரும் வரை அடக்கியே வருகிறார்கள். பொது கழிப்பறைகளை அதிகப்படுத்த வேண்டும். அதை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  13. பயனுள்ள தகவல் குறிப்பாக பெண்களுக்கு பகிர்வுக்கு நன்றி....
    Prabha

    பதிலளிநீக்கு
  14. கால சூழல் சரியில்லாத காரணத்தால்,,,,
    உண்மை தான் சகோ, பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  15. இன்று காலை
    பிசியான சாலை ஒன்றில் தன் கடையின் முன்பே அதன் உரிமையாளர் இந்தப் பணியைச் செய்து கொண்டிருந்தார்.

    யார் குறித்தும் கவலை இல்லாமல்..

    இந்த விசயம்தான் ஆண்களின் சங்கடத்தை குறைக்கிறது..


    பெண்களின் சிறுநீர்ப் பை ஆண்களின் சிர்நீர்பையை விட ஐந்து மடங்கு வலிமையானது என்றாலும் அவர்களின் அவஸ்த்தை கொடூரமானதுதான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை