Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சோரியாசிஸ் விடை தெரியா நோய்..!


சோரியாசிஸ் என்ற வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் கேள்விபட்டிருக்கலாம். இந்த சோரியாசிஸ் வர என்னகாரணம் என்பதை  இன்று வரை ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒன்றும் பிடிபடவில்லை. சோரியாசிஸை தமிழில் 'காளான் சான்படை' என்று அழைக்கிறார்கள்.

சோரியாசிஸ்
சோரியாசிஸில் நிறைய வகைகள் உண்டு. இருந்தாலும் பொதுவாக சொல்வது இது வந்தால் தோல் சிவந்து தடித்துப் போவதுடன், தாக்கிய இடத்தில் வெள்ளித் தகடுகள் போல செதில் செதிலாக உதிர்ந்து வரும். இதை பெயர்த்து எடுத்தால் ஒரு சின்னத்துளியாக ரத்தம் எட்டிப் பார்க்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும் இது வரலாம். பிறப்புறுப்புகளில் வந்துவிட்டால் உடலுறவு கொள்வது சிரமம். மீறி ஈடுபட்டால் துணைக்கு மிகுந்த வேதனையை தரும். 

இதற்கு வைத்தியம் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்துவிட்டு தானாக மறைந்து குணமாகி விடும். குணமான பின் சோரியாசிஸ் வந்து போன சுவடு கூட தெரியாது.

நோய் வந்து போன சுவடே இல்லை
 ஆனாலும் குணமாகிவிட்டது என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள முடியாது. இது குணமாவதே மறுபடியும் வருவதற்குத்தான். வெயில் காலத்தில் இது ஒருவரை தாக்கினால் அடுத்த வெயில் காலத்துக்கு மீண்டும் வந்துவிடும். குளிர்காலம் என்றால் மீண்டும் அடுத்த குளிரில் தவறாமல் ஆஜராகிவிடும். இதை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் எவ்வளவோ முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதுவரை பலன் கிடைக்கவில்லை.

 எப்படி வருகிறது என்பதற்கு விடை கிடைத்தால்தானே குணப்படுத்தும் வழியும் கிடைக்கும். வருவதற்கு காரணம் பூச்சிகளா? வைரஸ்ஸா? பாக்டீரியாவா? சாப்பிடும் உணவா? பரம்பரை நோயா? எதுவும் பிடிபடவில்லை, ஆராய்ச்சியாளர்களுக்கு.

சோரியாசிஸால் அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை. இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உள் உறுப்புகளும் பாதிக்கப்படுவதில்லை. உலகத்தில் இந்த நோய் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது. உலகம் முழுவதும் இருக்கிறது. இருந்தாலும் ஏனோ நீக்ரோக்கள், செவ்விந்தியர்கள், ஜப்பானியர்களை அதிகமாக தாக்குவதில்லை. உலக மக்களில் 2 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு உள்ளது. உலகில் எந்த நாடும் இந்த நோய்க்கு தப்பவில்லை. ஸ்வீடனில் இது அதிக அளவில் இருக்கிறது

சோரியாடிக் ஆர்த்ரிடீஸ்
சோரியாசிஸில் 'சோரியாடிக் ஆர்த்ரிடீஸ்' என்று ஒருவகை உண்டு. இது வந்தால் உள்ளங்கை, உள்ளங்கால் விரல்கள் கோணிக்கொள்ளும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சோரியாசிஸ் சரியானாதும் விரல்களின் கோணலும் சரியாகிவிடும்.

இந்த நோய் தொற்று நோயல்ல. உடலுறவு மூலமும் பரவக் கூடியதும் அல்ல. ஆனால், மரபு ரீதியாக வாரிசுகளுக்கு தொடர வாய்ப்பிருக்கிறது. சில சமயம் இது மூன்றாவது நான்காவது தலைமுறையையும் விட்டுவைப்பதில்லை. சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு இந்த நோய் வந்திருந்தால், அவர்கள் கருத்த நிறம் கொண்டவர்களை மணந்து கொண்டால் வாரிசுகளுக்கு இந்த நோய் வராது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 

பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை
சோரியாசிஸ் உடலுக்கு எந்தவித வேதனையையும் கொடுப்பதில்லை. உடலின் வெளித்தோற்றம் பாதிக்கப்பட்டு மற்றவர்களின் அருவருக்கதக்க வகையான பார்வைகள் இவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. யோகா, தியானம் போன்றவற்றால் நோயை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள். 

சோரியாசிஸ் நோய் ரோடு போட பயன்படுத்தப்படும் தாரை மூலப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்து மூலமே ஓரளவுக்கு குணமாகிறது. விடை தெரியா ஒரு சில நோய்களில் இதுவும் ஒன்று!



25 கருத்துகள்

  1. விடை தெரியா நோய்க்கு விஞ்ஞானிகள் கூடிய விரைவில் அதை அறவே ஒழிக்கும் மருந்தை கண்டுபிடிப்பார்கள் என நம்புவோம். தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கைக் கொள்வோம். தங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. பதில்கள்
    1. உண்மையில் மிக மர்மமான நோய்தான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. பயமுறுத்தும் விவரங்கள். மருந்தில்லை என்று சொன்னாலும் இதற்கு (ப்)சோர்லின் என்றொரு ஆயின்ட்மென்ட் தருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருந்து என்று கொடுக்கப்படுகிறது. அதில் முழுமையான குணம் கிடைப்பதில்லை. கட்டுப்படுத்த மட்டுமே செய்கிறது.
      தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. தங்களது தளம் இப்பொழுது திறப்பதற்க்கு தாமதமாகிறதே எனக்கு மட்டும்தானா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பரே சற்று தாமதமாகத்தான் திறந்தது. நண்பர் டிடியின் ஆலோசனைப்படி சரி செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. இப்படியும் நோய்களா? பயமாகத்தான் உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நோய்கள் நம்மை பயமுறுத்துகின்றன. என்ன செய்வது? எல்லாம் இயற்கை கொடுத்தது.
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  6. எப்படியெல்லாம் நோய்கள்...
    படங்களே பயமுறுத்துகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் பயமுறுத்தும் நோய்தான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    ‘சோரியாசிஸ்’ பல தகவல்களை உண்மைகளை அறிந்து கொள்ளச் செய்தீர்கள்.

    நன்றி.
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..!

      நீக்கு
  8. நல்ல பகிர்வு,
    தலைப் பொடுகும் இவ்வகை தானே சகோ, தொந்தரவு உண்டு தான்,,
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொடுகு வேறு இது வேறு. ஆனால் இதன் ஆரம்பம் தலையில் பொடுகுபொல் உருவாகும். பின் பெரிதாக மாற்றம் கொள்ளும். கேசத்தை சுத்தமாக வைத்திருந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். ஒருமுறை வந்துவிட்டால் சோரியாசிஸில் இருந்து தப்பிப்பது கடினமே.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  9. சகோ சோரியாசிஸ் எனது கசினுக்கு (பெண்) வந்திருந்து...மிகவும் பாவம் கொஞ்சம் அவதியும் பட்டார். ஆனால் இப்போது அவர் நன்றாகக் குணமடைந்து கல்யாணமும் ஆகிவிட்டது. எந்த ஆங்கில மருந்திற்கும் குணம் இல்லை...அடக்கித்தான் வைக்கும் ஓரளவிற்கு. அவர் அக்குப்ரெஷர் பயின்று தன்னைக் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இப்போது அவரது தோல் முன்பு போல் இல்லை. ட்ரைனெஸ் இருந்தாலும் சோரியாஸிஸ் இல்லை....அதனாலேயே அவர்கள் ஊட்டியிலிருந்து தெற்கே உள்ள ஊரில் குடிபெயர்ந்துவிட்டனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்று மருத்துவத்தில் குணமாவதாக சொல்கிறார்கள். தங்கள் மூலம் அது உண்மை என்று தெரிந்தது. எப்படியோ குணமானால் நல்லதுதான்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  10. சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.

    வணக்கம் நண்பர்களே.....
    நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன சித்தர் கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 90 நாட்களில் குணமடைந்தது. எந்தவித பத்தியமும் இல்லாமல்.

    சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும்.....
    9566750595

    பதிலளிநீக்கு
  11. சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.

    வணக்கம் நண்பர்களே.....
    நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன சித்தர் கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 90 நாட்களில் குணமடைந்தது. எந்தவித பத்தியமும் இல்லாமல்.

    சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும்.....
    9566750595

    பதிலளிநீக்கு
  12. #காளாஞ்சகப்படை #Psoriasis (சொரியாசிஸ்) மற்றும் அனைத்து வகையான #தோல்நோய்களும் முற்றிலும் 100% தீர்ந்து வாழ்நாள் முழுக்க “தோல் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்” என்னும் நிலையை 120 நாட்களில் அடையலாம். உணவுஅறமும் & மருந்தும் கிடைக்கும்.

    விபரங்களுக்கு கீழ்கண்ட வலைப்பக்கங்களை படியுங்கள்.

    https://skin-disesis.blogspot.com/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை