உலகில் இருக்கும் அனைத்து கடவுள்களையும் விட மிக அதிகமான சொத்தும் தங்க நகைகளையும் வைத்திருப்பவர் நம்ம திருப்பதி வெங்கடாஜலபதிதான். இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. தேசம் முழுவதும் பல இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் மதிப்பு இது.
இதுபோக தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் திருப்பதி வந்து போகிறார்கள். அவர்கள் தரும் காணிக்கை மட்டும் தினமும் 2.35 கோடி சேருகிறது. இதில் சாதனை அளவும் உண்டு 2012 ஏப்ரல் 1-ம் தேதி ஒரு நாளில் மட்டும் 5.73 கோடி குவிந்தது. மேலும் வாரத்துக்கு 12 கிலோ தங்கம் உண்டியலில் காணிக்கையாக விழுகிறது. உலக கோடீஸ்வரர்கள் உண்டியலுக்குள் வைரங்களை கொட்டிவிட்டு போகிறார்கள்.
இப்படி கொட்டிய வைரங்களும் தங்கமும் சேர்ந்து 1,000 டன்களுக்கு மேல் வந்துவிட்டது. அதை வங்கியில் டெபாசிட் செய்தால் அவர்கள் வேறு அதற்கு வட்டியாக ஆண்டுக்கு 225 கோடி ரூபாய் தருகிறார்கள்.
அமைச்சர் ஒருவர் வைரக்கற்கள் பதித்த தங்க கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தார். அதன் மதிப்பு ரூ.45 கோடி. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் வரும் காணிக்கை ஒவ்வொன்றும் மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.
திருப்பதியில் முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான் உண்டியலை மாற்றுவார்கள். இப்போது தினமும் 10 தடவைக்கு மேல் மாற்றுகிறார்கள். ஆனாலும் நிரம்பி வழியும் காணிக்கையை கட்டுபடுத்த முடியவில்லை.
உலகம் முழுவதும் உள்ள பல கம்பெனிகளுக்கு வெங்கடாஜலபதி முதல் போடாத பார்ட்னர். முதல் போடாவிட்டாலும் லாபத்தின் பங்கு பைசா குறையாமல் வெங்கிக்கு வந்துவிடும்.
மேலும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியிலும் எக்கச்சக்க வருமானம் பார்த்து விடுகிறார். வருடத்துக்கு 40 கோடி ரூபாயை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமக்கு மொட்டை என்றாலும் வெங்கிக்கு லாபம்தான்.
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலின் நாயகனான ஏழுமலையான் அணிந்திருக்கும் கிரீடம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவரயரால் கொடுக்கப்பட்டது. முகலாய மன்னர் ஷாஜகான் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட தங்கச்சங்கிலி ஒன்றை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். திருப்பதி கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் பேருக்கு அதிகம்.
உலக கோடீஸ்வரனை தரிசித்து வந்தால் நாமும் கோடீஸ்வரனாகலாம் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
போய்கொண்டே இருக்கிறார்கள்,,,
பதிலளிநீக்குஉண்மைதானே, நல்ல பகிர்வு, நன்றி.
முதல் வருகைக்கு நன்றி சகோ!
நீக்குmakkalukku korikkaikal athikarikka athikarikkaa perumaalukum kodikal athikarikkum.
பதிலளிநீக்குtiruppatiyil iruppathu perumaale kidaiyaathunu oru vainava periyavar solli irunthaar--viraivil athaip patri eluthukiren.
உண்மைதான் கோரிக்கைகளும் பிரச்சனைகளும் கூட கூட கோவிலுக்கு வரும் பக்த்தர்களின் எண்ணிக்கையை கூட்டும்தான்.
நீக்குநானும் நீங்கள் சொன்ன கருத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். பதிவு எழுதுங்கள் அதன் மூலம் விரிவாக தெரிந்து கொள்கிறேன்.
என் தாத்தா அங்கு இருப்பது முருகன் என்று ஏழு காரணங்கள் சொல்லி கேட்டுள்ளேன்
நீக்குமுதலில் திருப்பதிச் சாமி கிடையாது.....அங்கு முருகன் தான் இருந்தார். நானும் மகேஷும் இதைப் பற்றிப் பேசியிருக்கின்றோம். வைணவர் ஒருவர் எழுதிய புத்தகம் பற்றியும் பேசினார். பதிவு அவர் எழுதுங்கள் என்று சொன்னதும் அவரும் தான் எழுதுவதாக உள்ளேன் என்றும் சொன்னார்...நாங்களும் ஒரு பதிவில் இதைப் பற்றிச் சொல்லியிருந்தாலும் முழுவதும் எழுதவில்லை .....ஹப்பா எனக்கு ஒரு பதிவு மிச்சம்...அந்தப் புத்தகத்தை எனக்கும் வாசிப்பதற்குத் தருகின்றேன் என்று சொல்லியிருந்தார் மகேஷ்.....இனி ஓவர் டு மகேஷ் அவரிடமிருந்து பதிவு...
நீக்குஇரண்டாமிடம் எனப் படித்த நினைவு - வாடிகன் சிட்டியில் வரும் காணிக்கைகள் தான் உலகில் முதலிடம்.......
பதிலளிநீக்குபிரச்சனைகள் - பணம் இல்லாதவர்களுக்கும், அதிகமாக இருப்பவர்களுக்கும் ! அதனால் தானே இங்கே சேர்ந்து கொண்டிருக்கிறது.
இதை நான் எழுதிய 2013-ல் திருப்பதி தான் முதலிடத்தில் இருந்தது. அதற்கு முன்பு வாடிகன் இருந்தது. இந்த பதிவில் கூட ஆஸ்தியில்தான் முதலிடம் என்று கூறியுள்ளேன்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
முற்றிலும் உண்மை!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அய்யா!
நீக்குவணக்கம் நண்பரே!
பதிலளிநீக்குசென்றிருக்கிறேன் என்றாலும் வழக்கம் போலவே உங்கள் பாணியிலான பதிவு என்பதால் ஆர்வத்துடன் தொடர்ந்து கூடுதல் தகவல்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.
த ம +
நன்றி.
அனைத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குபல பேருக்கு சோறு போடும் பெருமாள் வாழ்க ,வாழ்க :)
பதிலளிநீக்குவாழ்கவே..!
நீக்குசெம காசுதான்!
பதிலளிநீக்குதம +1
செமதான்..!
நீக்குயப்பா பெருமாளே...!
பதிலளிநீக்குஆள உடப்பா!!
இந்த மழையிலும்
வாக்காளர்களை மறக்காத
'அரசி'யலாளர்களையும்
மக்களை (மன்னிக்க) என் போன்ற
மக்குகளையும் எப்படியாவது
இவர்களிடமிருந்து
காப்பாற்றி விடப்பா!!!
ஆமா பெருமாளே மக்களை காப்பாத்து..!
நீக்கு"திருப்பதி சென்று திரும்பி வந்தால்- ஓர்
பதிலளிநீக்குதிருப்பம் நேருமடா உன் விருப்பம் கூடுமடா!"
சீர்காழி பாடிய பாடலைப் போன்றே!
திருப்பதி பற்றிய.....
உமது பதிவை படித்தபோது,
மீண்டும் உமது புதிய பதிவை நோக்கி வரவேண்டும் என்ற எண்ணம் கூடுகிறது.
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வாருங்கள் நண்பரே!
நீக்குஅடக் கடவுளே.....
பதிலளிநீக்குஅப்படிதான் சொல்லத் தோன்றுகிறது.
நீக்குவித்தியாசமான கடவுள். கோயில். பக்திக்கும் அப்பால் ஏதோ ஓர் வித்தியாசமான உணர்வு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகண்டிப்பாக..!
நீக்குஅனைத்தும் ஒரு நம்பிக்கை தான்...
பதிலளிநீக்குஉண்மைதான்..!
நீக்குஉலகில் பணக்கார கடவுள்
பதிலளிநீக்குதிருப்பதி அல்ல
ஸ்ரீ பத்மநாத சுவாமிதான்
அவரின் முழுமையான சொத்து விபரம் இதுவரை கணக்கிடப்படவில்லை
கணக்கிட்ட சொத்துக்களும் சந்தை விலையில் இல்லை
இருந்தும் சந்தை விலையில்லாத பகுதி சொத்துக்களே உலகின் பணக்கார கடவுள் ஆக்கி உள்ளது
பணக்கார சாமி என்றால் அது பத்மநாப சாமிதான். இங்கு நிலத்தின் மூலம் கணக்கிடப்பட்ட சொத்தைத்தான் ஆஸ்தி என்று சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் திருப்பதிதான் அதிக சொத்துக்கு சொந்தக்காரர்.
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குமதராஸா தாரைவார்த்துக் கொடுத்தப் பணக்காரச் சாமி... ஏழைகளிடம் வாங்கிக் குவிக்கிறது...! வாழ்க எம்மான்...!
த.ம.9
ஏழைகளை விட பணக்காரர்கள்தான் அதிகம் கொட்டுகிறார்கள். அய்யா!
நீக்குதிருப்பதி வெங்கடாசலபதி கோவில் பற்றி தெரிந்த தகவலோடு, தெரியாத தகவல்கள் பலவற்றையும் பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குமிக நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களது பதிவைப் பார்க்கிறேன். துல்லியமான மதிப்பீடு. மிக்க நன்றி தோழர்
பதிலளிநீக்குவாருங்கள் தோழரே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குகோவில் பற்றிப் பல செய்திகள் தெரிந்து கொண்டேன்
பதிலளிநீக்குமகிழ்ச்சி அய்யா!
நீக்குதிருப்பதி பற்றி சுவாரசிய தகவல்கள் நன்றி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் நன்றி நண்பரே!
நீக்குஎன் பணம் பணம் உன் பணம் பணம்....
பதிலளிநீக்குயப்பா யப்பா மலையப்பா
கண்ணுல காசக் காட்டப்பா
ஏழுமலை மாதவா...
ஏழைங்க கண்ணுல காட்டப்பா...
காசு மேல காசு வந்து மலை மேல கொட்டுகின்றது
இங்க ராசலச்சுமி வாசக்கதவத் தட்டவே மாட்டேங்குது...
இப்படித்தான் பாடத் தோன்றுகின்றது.....எத்தனை ஏழைகள் வ்றுமையிலும், கல்வி கிடைக்காமலும் வாடுகின்றனர்....இந்தியா ஏழை நாடா? வெட்கக் கேடு...மானக் கேடு...திருப்பதில பணம் இருந்து என்ன பயன்? அது யாருக்கு? பல மடாதிபதிகளும், மடங்களும், காவிக்காரர்களும் பணக்காரர்கள்.....இவர்களும் அரசியல்வாதிகள்தான். அரசியலோடு சம்பந்தம் இருக்கின்றாதே...கோயில்களிலும் தான் பணம்....மக்களிடம் இல்லை...
இந்தியா ஏழை நாடு....!!!!
கீதா: நான் பணக்கார சாமியெல்லாம் கும்பிடுவதில்லை சகோ...
பணக்காரர்கள் தங்களின் கருப்பு பணத்தை கொட்டும் இடமாகவும் கோயில்கள் இருக்கின்றன என்பதும் உண்மைதான்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பர்களே!
திருப்பதி பற்றி இன்னும் கொஞ்சம் செய்திகள் -- http://dharumi.blogspot.in/2014/03/6.html
பதிலளிநீக்குபடித்தேன் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அய்யா!
நீக்குகருத்துரையிடுக