கப்பல் என்பதே பிரமிப்பான விஷயம்தான். அதன் பிரமாண்டத்தைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. அதிலும் இதுபோன்ற கப்பல்களை பிரமாண்ட வடிவத்தில் மிகப் பெரியதாக விஸ்வரூபமாக வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள் ஜப்பான்காரர்கள் தான்.
1965-ல் இவர்களால் கடலில் மிதக்க விடப்பட்ட 'டோக்கியோ மாரு' என்ற எண்ணெய் கப்பல்தான் அன்றைய உலகில் மிகப் பெரியதாகும். அதைவிட பெரிய கப்பலை 1979 வரை வேறு யாரும் தயாரிக்கவில்லை. அந்த கப்பலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் எண்ணெய்யை நிரப்ப முடியும்.
இது அன்றைய உலகில் பெரிய பயணிகள் கப்பலான 'குயின் எலிசபெத்'தை விட இரண்டு மடங்கு பெரியது. ஈபிள் டவரை இதன் மேல் தளத்தில் படுக்கை வசத்தில் கிடத்தி விடலாம்.
இந்த கப்பல் 140 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இது ஒரு சாதனை. கப்பலின் விலை அன்றைய நிலவரப்படி 7 கோடி ரூபாயாகும். இன்றைக்கும் உலகில் கட்டப்படும் மொத்த கப்பல்களில் 43 சதவிகிதம் ஜப்பான் தான் கட்டுகிறது. கப்பல் கட்டும் தொழிலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்வீடனை விட ஐந்து மடங்கு அதிகமான கப்பலை ஜப்பான் உருவாக்குகிறது. கப்பல் கட்டும் விஷயத்தில் மற்ற நாடு எதுவும் நெருங்கக் கூட முடியாத நிலையில் ஜப்பான் இருக்கிறது.
ஜப்பான் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து கப்பல்களை கட்டி முடித்து விடுகிறது. இவ்வளவு விரைவாக கப்பலைக் கட்டும் திறமை உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லை. இத்தனைக்கும் ஜப்பான் 1950 வரை கப்பல் கட்டும் தொழிலில் மிக சாதாரண நிலையிலே இருந்தது. அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நவீன தொழில் நுட்பத்தை புகுத்தி கப்பல் கட்டத் தொடங்கியது.
இதில் விஷேசம் என்னவென்றால், கப்பலுக்கு தேவையான எந்த மூலப்பொருளும் ஜப்பானில் கிடைப்பதில்லை. சிறியப் பொருளில் இருந்து மிகப் பெரிய பொருள் வரை எல்லாவற்றையும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே ஆகவேண்டிய நிலை. இறக்குமதி செய்துதான் கப்பலை கட்டுகிறது. இதில் என்னவொரு ஆச்சரியம் என்றால் மூலப் பொருள்களை கையில் வைத்திருக்கிற நாடுகளைக் காட்டிலும் குறைவான விலையில் கப்பல்களை ஜப்பான் கட்டி தருவதுதான்.
75 ஆயிரம் டன் எடையுள்ள இரண்டு கப்பல்களை கட்டுவதைக் காட்டிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் கொண்ட ஒரே கப்பலை கட்டுவதில் பாதி செலவை குறைக்க முடியும் என்கிறார்கள் ஜப்பானியர்கள். பிரமாண்டமான கப்பல்கள் உருவாக இதுவும் ஒரு காரணம்.
அவர்கள் கப்பலை குறைந்த வட்டியில் கடனுக்கும் கொடுக்கிறார்கள். மொத்த தொகையில் 20 சதவிதத்தை மட்டும் முன் பணமாக கட்டினால் போதும். மீதித் தொகையை 5.5 சதவித வட்டியில் 8 வருடங்களில் செலுத்தும் விதமாக கடன் கொடுக்கிறார்கள்.
அவர்கள் கப்பலை குறைந்த வட்டியில் கடனுக்கும் கொடுக்கிறார்கள். மொத்த தொகையில் 20 சதவிதத்தை மட்டும் முன் பணமாக கட்டினால் போதும். மீதித் தொகையை 5.5 சதவித வட்டியில் 8 வருடங்களில் செலுத்தும் விதமாக கடன் கொடுக்கிறார்கள்.
மிகப் பெரிய கப்பலை கட்டினாலும் இவற்றை ஆழம் குறைந்த கடல்களில் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. உலகின் பல இடங்களில் கடலின் ஆழம் பெரிய கப்பல்களுக்கு சாதகமாக இல்லை. சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் ஆகியவை இந்த கப்பல்களுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாத ஜப்பான் தொடர்ந்து பெரிய கப்பல்களை கட்டி கொண்டே இருக்கிறது.
எம்.எஸ்.சி. ஆஸ்கார் |
ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ் |
ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ் |
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது கப்பல்களைப்பற்றிப் படிக்க!
பதிலளிநீக்குதன்னிடம் எந்த வித மூலப்பொருளும் இல்லாமல் அவற்றை வெளியிலிருந்து இறக்குமதி செய்து கப்பல் கட்டும் சாதனையில் உச்சத்திலிருக்கும் ஜப்பான் நாட்டைப்பார்த்து மற்ற நாடுகள் மட்டுமல்ல, மக்களும் முன்னேற நல்லதொரு வழியாக இதனை பின்பற்ற வேண்டும்!!
உலகின் மிகப்பெரிய சரக்குக்கப்பலும் பயணிகள் கப்பலும் எந்த நாட்டைச் சேர்ந்தவை?
சரக்குக் கப்பல் சுவிட்சர்லாந்துக்கு சொந்தமானது. பயணிகள் கப்பல் அமெரிக்காவுக்கு சொந்தமானது.
நீக்குவருகைக்கு நன்றி சகோ!
ஆஹா.... மிகவும் சுவராஸ்யமாய் கப்பல் கட்டுமானப்பணி குறித்தும் கப்பல் குறித்து அழகான பகிர்வு.
பதிலளிநீக்குபடங்கள் அழகு... வியப்பாய்...
நன்றி நண்பரே!
நீக்குகப்பல் கணக்காக மிகப்பெரிய ஏராளமான தாராளமான தகவல்களை அளித்து, பிரமிக்க வைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குஒரே நேரத்தில் 36000 கார்களை ஏற்றிச்செல்லக்கூடிய கப்பல் எம்.எஸ்.சி. ஆஸ்கார் !!!!!!
ஆஹா .... கற்பனை செய்தாலே மனதுக்கு மிகவும் வியப்போ வியப்பாக உள்ளது. :)
உழைப்புக்கு அஞ்சாத ஜப்பானியர்களை நினைத்தால் மிகவும் பெருமையாகவும், கொஞ்சம் பொறாமையாகவும்கூட உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குகப்பல் பற்றிய செய்தியை கடலளவு தந்தது போல் இருந்தது
பதிலளிநீக்குபிரமிக்க வைத்த பதிவு! வாழ்த்துகள் நண்பரே!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!
நீக்குகடலில் மிதக்கும் சிறு தீவுகள்
பதிலளிநீக்குவியப்பாக இருக்கிறது நண்பரே
நன்றி
தம +1
உண்மையில் நகரும் தீவுகள்தான்.
நீக்குமூலப்பொருள் எதுவும் இல்லாமல் வெளியிலிருந்து தருவித்து ஒரு பொருளை குறைந்த விலையில் உற்பத்தி செய்கிறார்கள் என்றால் அது ஜப்பானியர்களின் திறமையும் நாட்டை முன்னெடுத்து செல்ல உழைக்கும் அவர்களது நேர்மையுமே காரணம். ஒரு உலகப்போர் எந்த அளவுக்கு ஒரு நாட்டை மாற்றமுடியும் என்பதற்கு ஜப்பானே எடுத்துக்காட்டு. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஉலகப்போரில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்டு அடங்கியவர்கள்தானே அவர்கள். ஆனாலும் பிரமிக்க வைப்பவர்கள்தான்.
நீக்குவருகைக்கு நன்றி அய்யா!
அவர்களின் உழைப்பு என்றுமே வியப்பு தான்...
பதிலளிநீக்குவியப்பான உழைப்புதான்.
நீக்குநம்மூரில் சைக்கிளை வாடகைக்கு விடுவது போல்இவர்கள் கப்பல் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள்..பலே தொழில்தான்...
பதிலளிநீக்குகடனுக்கு விடுகிறார்கள்.
நீக்குஅடேங்கப்பா...சுவாரஸ்யமான பதிவு.
பதிலளிநீக்குஜப்பானைப் பற்றி ஆச்சர்யப்பட இன்னுமொரு செய்தி இது!
தம +1
நன்றி நண்பரே!
நீக்குஅருமையான பகிர்வு சகோ,
பதிலளிநீக்குவியப்பாக இருக்கு,,
நன்றி சகோ!
நீக்குஇதில் ஐந்தாவது கப்பல் எங்களுடையது போலவே இருக்கின்றது நண்பரே
பதிலளிநீக்குஅப்படியா ஜி, உங்க கப்பல்ல ஒருதடவ உலகத்த சுத்திக் காட்டுங்க ஜி!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குபெரிய பெரிய கப்பல்களைக் கட்டி கடனாகக் கொடுப்பதிலும், பிரமாண்டமான கப்பல்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ஜப்பான்காரர்கள் என்பதை அறிகின்ற பொழுது அவர்களை நினைத்து மிகுந்த பெருமைப்பட வேண்டியுள்ளது.
பிரமிக்க வைக்கும் கப்பல்கள்!
நன்றி.
த.ம.9
உண்மைதான் அய்யா!
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி அய்யா!
ஒரு சில தெரிந்திருந்தாலும் உங்கள் தகவல்கள் அருமை. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி ..
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குமூலப்பொருட்கள் இல்லையென்றால் என்ன எங்களிடம் மூளை வளம் ஜாஸ்தி என நிருபிக்கும் மக்களின் ஜப்பான், சைனா, சிங்கப்பூர், சுவிஸ் போனற நாடுகளை சொல்லலாம்.
பதிலளிநீக்குஇயற்கை வளம் கொழிக்கும் அத்தனையையும் வைத்திருக்கும் நாடுகளை விட பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் ஆள்வோர் இவர்கள். கப்பல் மட்டுமல்ல பல தொழிற்னுட்ப சாதனைகள் கண்டுபிடிப்புக்ளுக்கும் சொந்தக்காரர்கள்.
இவர்களிடம் நாம் கற்க வேண்டியது நிரம்பவே உண்டு. பாராட்டுவோம்,
பகிர்வுக்கு நன்றி சார்.
பாராட்டுவோம்..!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குதகவல் பிரமிக்க வைக்கிறது.. தேடலுக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குதகவல்கள் அருமை...
பதிலளிநீக்குகருத்துரையிடுக