• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், டிசம்பர் 01, 2015

  மதுவை மறப்போம்..! மனைவியை மகிழ்விப்போம்..!


  காலம் மாறிவிட்டது.. பெண்கள் மாறிவிட்டார்கள்.. என்ற கோஷம் இப்போது அதிகமாக கேட்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக ஒரு சர்வே வந்துள்ளது. 

  முன்பெல்லாம் இரவு நேர இன்பத்திற்கு தடை போடுபவர்கள் பெண்களாகத்தான் இருந்தார்கள். 'தலைவலி தாங்கல..!', 'வயிற்றுவலி உயிர் போகுது..!', 'வீட்டு வேல ஜாஸ்தி..!', 'குழந்தை முழிச்சிக்கும்..!' இப்படி ஏகப்பட்ட சப்பைக்கட்டு காரணங்களை இதற்காகவே வைத்திருப்பார்கள். இப்படி பெண்கள் வலுக்கட்டாயமாக உறவை மறுத்ததற்கு வளர்ந்த சூழ்நிலையும் ஒரு காரணமாக இருந்தது. செக்ஸுக்கு 'நோ' சொல்லும் பெண்கள்தான் உத்தமமானவர்கள் என்று திரும்ப திரும்ப போதிக்கப்பட்டிருந்தது. 

  இப்போது அப்படியில்லை. பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. சம உரிமை வாய்த்திருக்கிறது. இந்த உயர்வு பெண்களின் மனநிலையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இன்றைய பெண்கள் தயக்கத்தை உதறிவிட்டு உறவை உரிமையாக கேட்கும் நிலைக்கு முன்னேறிவிட்டார்கள். அப்படி ஆசையோடு நெருங்கும் பெண்ணுக்கு இப்போது தடைபோடுபவர்கள் ஆண்கள்..!


  இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்லைன் பார்மஸியான 'யூகே மெடிக்ஸ்'தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதில் 'இன்னைக்கு வேணாம்டா செல்லம்..!' என்று விரக தாபத்தோடு நெருங்கும் பெண்களை தள்ளியிருக்க சொல்பவர்கள் ஆண்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது. 

  தற்போதைய சூழ்நிலையில் ஆண்களே உடலுறவை மறுக்கிறார்கள். உறவை மறுக்கும் பட்டியலில் பெண்கள் 32 சதவீதம் என்றால், ஆண்கள் 62 சதவீதமாக உள்ளனர். இந்த ஆண்களில் 45 சதவீதம் பேர் மிகவும் சோர்வாக இருப்பதாக காரணம் சொல்கிறார்கள். 39 சதவீதம் பேர் 'வேலை ரொம்ப அதிகம்' என்கிறார்கள். 38 சதவீதம் பேர் 'தலைவலி' என்கிறார்கள். 29 சதவீதம் பேர் 'வயிறு நிறைய சாப்பிட்டு விட்டேன்' என்கிறார்கள். 24 சதவீதம் பேர் 'டி.வி. பார்க்க வேண்டும்' என்று முந்தைய பெண்களைப் போல சப்பையான காரணங்களை சொல்கிறார்கள். 


  இப்படி ஆண்கள் உறவைக் கண்டு பயந்து ஓடுவதற்கு காரணம் ஆண்மைக்குறைவு அதிகரித்து வருவதுதான் என்கிறது சர்வே. இன்றைய சூழலில் ஐந்தில் ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை ஏற்படுவதில் பிரச்சனை இருக்கிறது என்கிறது. நான்கில் ஒரு ஆணுக்கு நீண்ட நேர உறவு முடியாமல் போகிறது. 

  போதிய தூக்கமின்மை, வேலையின் அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்கள் உறவின் மீது வெறுப்பை ஏற்படுத்துகின்றன என்றாலும் புகைபிடித்தலும், மது பழக்கமும் ஆணை செயல்பட முடியாமல் செய்து விடுகின்றன. 

  செக்ஸில் புதிய புத்துணர்வு பெற்றிருக்கும் பெண்ணுக்கு சரியான தீனிப்போட முடியாத அளவுக்கு ஆண் மதுப் பழக்கத்தால் தன்னைக் கெடுத்துக் கொண்டுள்ளான் என்ற அதிர்ச்சியையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மனைவியை மகிழ்ச்சியாய் வைத்திருக்க நினைப்பவர்கள் மதுப் பழக்கத்தையும் சிகரெட் பிடிப்பதையும் நிறுத்தினாலே போதும். பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று மேலும் தெரிவிக்கிறது. 

  மதுவை மறப்போம்..! மனைவியை மகிழ்விப்போம்..! என்பதோடு அந்த சர்வே முடிகிறது.    24 கருத்துகள்:

  1. இந்த சர்வே இந்த கால இளைய வயதுடையவர்களிடம் இருந்துதான் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.... & இந்த சர்வே அமெரிக்காவிற்கு பொருந்தாது என நினைக்கிறேன். காரணம் இங்கு வயதானவர்களும் மதுவை குடிப்பவர்களும் ஆரோக்கியமான உறவை மேற்கொண்டுதான் வருகிறார்கள்.

   மேலும் இந்த கால இளைஞர்களின் உணவு பழக்கம் சரி இல்லாததாலும் சரியான உடற்பயிற்சி இல்லாததாலும் சுகர் போன்ற வியாதிகளினாலும் இந்த இயலாமை ஏற்படுகின்றது

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆமாம், இது இளைஞர்களுக்கான சர்வேதான். ஆண்மைக்குறைவுக்கு மது மட்டுமல்லாது வேறு பல காரணங்கள் இருந்த போதும், மது மிக முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. இது மருத்துவ ரீதியாகவே நிரூபிக்கப்பட்டது. விதிவிலக்காக இருப்பதை எப்போதுமே விஞ்ஞானம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதுபோல் ஒரு சிலர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதற்காக மது நல்லது என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் மது அருந்தாமல் இருந்தால் இன்னும் சிறந்த ஆரோக்கியமாகவும். உறவில் மேலும் இன்னும் உத்வேகத்துடன் ஈடுபடுவார்கள் என்பதுதான் மருத்துவ உண்மை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  2. நான் இந்தியாவிற்கு வருகை தரும் போது சாக்லேட் மற்றும் வாசனை திரவியங்களை அங்குள்ள நண்பர்களுக்கு முடிந்த வரையில் வாங்கி செல்வேன் ஆனால் கடந்த முறை வந்த போது அங்குள்ள நண்பர்கள் ( பதிவர் நண்பர்கள் அல்ல) சொன்னது அட போப்பாப்பா யாருக்கு உங்க ஊரு சாக்லேட் வேணும் வயகரா வாங்கி வரக் கூடாதா எனக் கேட்கிறார்கள் இதுதான் இந்தியாவில் உள்ள உண்மை நிலமை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மைதான் நண்பரே, ஆண்மைக்குறைவு அதிகரித்திருக்கிறது என்பது 100-க்கு 100 உண்மை. அதே அளவுக்கு பெண்மைக்குறைவும் அதிகரித்திருக்கிறது. அது பெண்களுக்கே தெரியாது. அதைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  3. தமிழ்நாடு போகிற போக்கில், மதுவை மறப்போம் கணவனை மகிழ்விப்போம் என்ற நிலைக்கு மாறாமல் இருந்தால் சரி :)
   தொடர்கிறேன் நண்பரே!
   தம எப்போதுமே!

   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பெண்கள் புதிதாக சம உரிமை என்ற பெயரில் அந்த மெல்லக் கொல்லும் விஷத்தை அருந்த தொடங்கியிருப்பது பெரும் கேடு.

    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  4. இது அடுத்த தலைமுறையினருக்கு பெறும் பாதிப்பை உண்டு செய்யும் இதை அரசுதான் கவனத்தில் கொள்ளவேண்டும் பயனஉள்ள தகவல் நண்பரே...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மது மிகப் பெரிய கெடுதல் நண்பரே, மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்ததுதான் அரசு சம்பாதிக்க வேண்டுமா? அதிலும் விற்பனை இலக்கு வேறு நிர்ணயித்திருக்கிறார்கள். வரும் தலைமுறை உண்மையில் பலிகிடாதான்..! அதில் சந்தேகமில்லை.

    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  5. நம்ம நாட்டில் தான் கற்பழிப்புக்கள் அதிகமாயிருப்பதும் அதிலும் மதுவெறியில் தான் என்பதுக்குமான் காரனங்களும் ஏன் எனும் சர்வேயும் எடுக்க வேண்டுமே!

   இனி வரும் காலத்தில் ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்றவற்றிற்கு மது, புகைத்தல் மட்டுமல்ல இயற்கை, நம் உணவுகள் என பல காரணங்கள் ஆகலாம்.

   பகிர்வுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கற்பழிப்பு அதிகம் நடப்பது நம் நாட்டில் இல்லை சகோ! ஒரு டெல்லி கற்பழிப்பை வைத்து இந்தியாதான் கற்பழிப்பு தலைநகரம் என்றெல்லாம் பேசுகிறார்கள். மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா எவ்வளவோ தேவலை.

    கற்பழிப்பில் முதலிடம் தென் ஆப்பிரிக்கா, இரண்டாமிடம் ஸ்வீடன், மூன்று அமெரிக்கா, நாலு இங்கிலாந்து, ஐந்தாவதுதான் இந்தியா. நம்மைவிட முன்னேறிய நாடுகள்தான் இதிலும் முன்னணியில் இருக்கின்றன. இதுதான் உண்மை.

    நீங்கள் சொன்னது போல் மற்ற காரணங்களும் உண்டு.

    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
   2. ஆமாம் அல்லவா நான் தெனாபிரிக்க நாடுகள் குறித்து மறந்தே போனேன்.

    என்னை நிஷா என்றே அழைக்கலாம்

    நீக்கு
  6. நல்ல பதிவு.
   இது உண்மையும்கூட. இன்று திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாத தம்பதியிடம் பரிசோதனை செய்யப்படும்போது ஆண்களிடம் அதிகமாக குறை இருப்பதும் தெரியவருகிறது. மேலும் தற்போது முகநூல் மற்றும் வாட்சப் போன்ற விசயங்களுக்கு ஆண்கள் முன்னுரிமை கொடுத்து, பெண்களை எரிச்சலடைய வைப்பதும் ஒரு காரணமாக உள்ளது. தற்போது அதிகமான கள்ள உறவுகள் நிலவ ஒரே காரணம் ஆண்கள் தன் மனைவியிடம் நல்ல கணவனாக இல்லாதிருத்தல்தான்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மைதான் அண்ணா,
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  7. இந்த சர்வே நம்ம நாட்டிற்கு மிகவும் பொருத்தமுடையதாக இருக்கின்றது இல்லையா நண்பரே/சகோ...

   ஏனென்றால் மேலை நாடுகளில் இந்தப் பிரச்சனைகள் அவ்வளவாக இருப்பதாகத் தெரியவில்லை. என்றாலும் இப்போதையதலைமுறையினரிடம் தான் இது அதிகம்...உணவுப்பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாறியதாலும்...(இளைஞர்கள் அதிகம் இணையத்தில் குறிப்பாகச் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதும் ஒரு காரணம் ..) மது ..,, நம் நாட்டில்தான் இப்படி....

   நல்ல பதிவு நண்பரே!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மேலை நாடுகளில் மது அருந்துவது ஒரு பழக்கமாக மட்டுமே இருக்கிறது. அவர்கள் யாரும் மதுவுக்கு அடிமை ஆவதில்லை. நமது மக்களில் பெரும்பாலானோர் மது மட்டுமே வாழ்க்கை என்றிருக்கிறார்கள். வெளிநாடுகளில் குடித்துவிட்டு சாலையோரம் கிடப்பதை யாரும் பார்க்க முடியாது. இங்கு அது சர்வ சாதாரணம். நம்மவர்களில் பலருக்கு மதுவை நிதானமகாக அருந்தக் கூட தெரியவில்லை என்பதுதான் உண்மை.

    நீக்கு
  8. இந்நிலை மாற மதுவை ஒழிப்போம் மதுக்கடையை மூட போராடுவோம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மதுவை அரசு ஒழிப்பதாக தெரியவில்லை. மக்கள் அதன் தீமைகளை உணர்ந்து விலக வேண்டும். சினிமாவில் மதுவை கொண்டாட்டமாக காட்டுவதை நிறுத்தி, அதில் ஏற்படும் கெடுதல்களை சொல்லவேண்டும். இதில் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

    நீக்கு
  9. சர்வே இங்கே நடந்தாலும் இங்கேயும் இதே நிலைமைதான் :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இது உலகம் முழுவதும் இணையத்தில் நடந்த சர்வேதான். அதனால் இங்குள்ளவர்களின் மனநிலையும் அதில் இருக்கும்.

    நீக்கு
  10. வணக்கம்
   சரியயன தகவல் புள்ளி விபரங்களுடன்.. தாங்கள் சொல்வது உண்மைதான்...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்